என் மலர்
கிசுகிசு
தமிழில் ஒரு படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை, தற்போது பட வாய்ப்புக்காக தவம் எடுத்து வருகிறாராம்.
பெரிய முதலாளி வீடு மூலம் மிகவும் பிரபலமான நடிகை, வெளியே வந்த பிறகு காதல் கதையில் நடித்து மிகவும் பிரபலமானாராம். அதன்பிறகு முன்னணி நடிகர் ஒருவர் படத்தில் மட்டும் நடித்து வருகிறாராம். கைவசம் எந்த படமும் இல்லையாம். இதற்காக பல புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடுகிறாராம்.
மேலும் தவம் செய்வது, யோகா செய்வது, விளையாடுவது போன்ற புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறாராம். இதைப் பார்த்த பலரும் படம் வாய்ப்புக்கு நடிகை தவம் செய்கிறாரோ என்று பேசி வருகிறார்களாம்.
கதாநாயகியான முதல் படத்திலேயே பேரும் புகழும் பெற்ற நடிகை, தற்போது நடிப்பே வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறாராம்.
படங்களில் ஒரு சில காட்சிகள், பின்னாடி ஓரமாக நிற்கும் காட்சிகளில் நடித்த அருவியான நடிகை, ஒரு படத்தில் கதாநாயகியாக நடித்து பேரும் புகழும் பெற்றாராம். அந்த படம் வந்து சில வருடங்கள் ஆகி விட்டதாம். இதன் பிறகு என்ன படத்தில் நடிகை நடிப்பார் என்று பலரும் காத்துக் கொண்டிருந்தார்களாம்.
ஆனால், நடிகையோ எந்த படத்திலும் நடிக்காமல் ஒதுங்கி இருந்தாராம். பல கதைகளை கேட்டு கேட்டு வெறுத்து போய் இருக்கிறாராம் நடிகை. எந்த கதையை தேர்வு செய்வது தெரியாமல் குழம்பி போயிருக்கிறாராம். இதனால், இனிமேல் நடிப்பே வேண்டாம் என்று முடிவு வந்துவிட்டாராம்.
தமிழில் பல படங்களில் நடித்து பெயர் பெற்ற நடிகை, தற்போது பட வாய்ப்புக்காக கவர்ச்சி புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டிருக்கிறாராம்.
தமிழில் பல படங்களில் நடித்து பெயர் பெற்ற பிரியமான நடிகைக்கு தற்போது பட வாய்ப்புகள் இல்லையாம். சிறப்பு தோற்றம், இரண்டாவது கதாநாயகி வேடம் என்று அழைக்கிறார்களாம். நடிகையும் வாய்ப்பு இல்லாததால் ஒரு சில படங்களில் நடித்தார்.
தற்போது அதுவும் இல்லாமல் போய் விட்டதாம். இதனால், கவர்ச்சி புகைப்படங்களை எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் பரவ விட்டிருக்கிறாராம். இப்படியாவது நடிகைக்கு பட வாய்ப்பு கிடைக்குமா என்று பொருந்து இருந்துதான் பார்க்கணுமாம்.
பிரபல நடிகை மீண்டும் கர்ப்பமானதால் சினிமாவுக்கு முழுக்கு போட்டு, சில மாதங்கள் ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளாராம்.
புன்னகைக்கு பெயர்போன நடிகை, தமிழின் முன்னணி கதாநாயகியாக இருக்கும்போதே நடிகர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டாராம். திருமணத்துக்கு பின் குழந்தை பிறந்ததால் சில ஆண்டுகள் நடிப்புக்கு முழுக்கு போட்டாராம். இதனால் அந்த நடிகை சினிமாவில் மார்க்கெட் இழந்தாராம்.
பின்னர் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்த அந்த நடிகை, ஒருசில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறாராம். இந்நிலையில் அந்த நடிகை மீண்டும் கர்ப்பமாகி இருப்பதாக செய்திகள் பரவுகிறதாம். இதனால் ஓய்வெடுக்க முடிவு செய்த நடிகை, மீண்டும் நடிப்புக்கு முழுக்கு போட உள்ளாராம்.
சம்பள பாக்கி தராவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என தனியார் தொலைகாட்சி நிர்வாகத்தினரை நடிகை மிரட்டியுள்ளாராம்.
பிரபல தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ஒன்று சமூக வலைதளத்தில் பேசு பொருளாக மாறியுள்ளாதாம். இதற்கு காரணம் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த போட்டியாளர் சமீபத்தில் தற்கொலைக்கு முயன்றது தானாம். இது நடந்து ஒருவாரம் ஆகியும் அதன் மீதான தாக்கம் குறைந்தபாடில்லை.
தற்போது அந்த நடிகை, சம்பள பாக்கியை தராவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என தனியார் தொலைகாட்சி நிர்வாகத்தினரை மிரட்டியுள்ளாராம். இதனையடுத்து அந்த நடிகை மீது தனியார் தொலைகாட்சி நிர்வாகத்தினர் போலீசிடம் புகார் அளித்துள்ளார்களாம். இந்த விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளதாம்.
பிரபல தெலுங்கு நடிகை, தமிழில் அறிமுகமாகும் படத்தின் தலைப்பை சமூக வலைதளத்தில் கசிய விட்டுள்ளாராம்.
தெலுங்கில் அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்த நடிகை, தற்போது தமிழ் படங்களில் நடித்து வருகிறாராம். தெலுங்கில் ஒருசில படங்களில் நடித்து புகழின் உச்சத்துக்கு சென்ற அந்த நடிகையை, தமிழில் தளபதி நடிகருடன் நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாம். ஆனால் அந்த வாய்ப்பை நூலிலையில் பாலிவுட் நடிகை தட்டி சென்றுவிட்டாராம்.
இருப்பினும் அவர் தற்போது முன்னணி நடிகருடன் ஒரு தமிழ் படத்தில் நடித்து வருகிறாராம். படத்தின் பெயரை வெளியிடாமல் படக்குழு ரகசியம் காத்து வந்ததாம். ஆனால் சில தினங்களுக்கு முன்னர் சமூக வலைதள பக்கத்தில் படத்தின் தலைப்பை நடிகை பதிவிட்டுவிட்டாராம். இதனால் கோபமடைந்த படக்குழு நடிகையை கண்டித்ததாம். இதனையடுத்து நடிகை அந்த பதிவை நீக்கி விட்டாராம்.
பிரபல பாலிவுட் நடிகை தென்னிந்திய மொழிகளில் தான் நடிக்கும் முதல் முதல் படத்திலேயே கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கியுள்ளாராம்.
இந்தி திரையுலகில் பிரபலமான நடிகை, முதன்முறையாக தென்னிந்திய மொழிகளில் நடிக்கும் படம் விரைவில் ரிலீசாக உள்ளதாம். குறிப்பாக பாஸ் நடிகர் நடித்துள்ளதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதாம். இப்படம் சுமார் 300 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாம்.
முதன்முறையாக தென்னிந்திய மொழிகளில் அறிமுகமாகும் நடிகை 7 கோடி சம்பளம் வாங்கியுள்ளாராம். பல ஆண்டுகளாக நடித்து வரும் நடிகைகளே அதிகபட்சம் 3 கோடி தான் வாங்குகிறார்களாம். அறிமுகமான படத்திலேயே 7 கோடி சம்பளம் வாங்குவதை அறிந்த தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகள் தங்களது சம்பளத்தையும் உயர்த்த முடிவெடுத்துள்ளார்களாம்.
வரலாற்று படத்தின் நாயகனும், நாயகியும் மீண்டும் காதலித்து வருவதாக தகவல் பரவுகிறதாம்.
தமிழ், தெலுங்கு மொழிகளில் அதிக வசூல் ஈட்டிய வரலாற்று படத்தின் நாயகனும், நாயகியும் காதலிப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. இருவருக்கும் படப்பிடிப்பில் நெருக்கம் ஏற்பட்டதாகவும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் பேசப்பட்டதாம். ஆனால் சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு காதலை முறித்துக் கொண்டார்களாம்.
இதனிடையே வெளிநாட்டில் வசிக்கும் தொழில் அதிபர் மகளை மணக்க நடிகர் தயாரானதாக தகவல்கள் கசிந்ததாம். இந்த நிலையில் வரலாற்று பட நாயகனும், நாயகியும், அமெரிக்காவில் புதிதாக வீடு வாங்க இருப்பதாகவும், இதற்காக அங்கு வீடு பார்க்கும் வேலையை அவர்கள் தொடங்கி இருப்பதாகவும் செய்திகள் பரவுகிறதாம். இதன் மூலம் இருவருக்கும் மீண்டும் காதல் மலர்ந்துள்ளதாக கூறப்படுகிறதாம்.
தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை, கர்ப்பமாக இருப்பதால் சினிமாவுக்கு முழுக்கு போடுகிறாராம்.
பேபி நடிகை தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறாராம். இவர் இரண்டு மொழி படங்களிலும் பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளாராம். இவர் தற்போது தமிழில் சக்கைப்போடு போட்ட நம்பர் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருகிறாராம்.
பேபி நடிகை கடந்த சில வருடங்களுக்கு முன் பிரபல தெலுங்கு நடிகரை திருமணம் செய்தாராம். ஆனால் திருமணத்துக்கு பிறகும் பேபி நடிகை மார்க்கெட் குறையவில்லையாம். தற்போது சினிமாவை விட்டு தற்காலிகமாக ஒதுங்க பேபி நடிகை முடிவு செய்துள்ளாராம். அவர் கர்ப்பமாக இருப்பதால் தான் இத்தகைய முடிவு எடுத்துள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறதாம்.
பிரபல முன்னணி தமிழ் நடிகரின் படம் பல வருட போராட்டத்துக்கு பின் ஒருவழியாக ரிலீசாக உள்ளதாம்.
ரொமாண்டிக் படங்களுக்கு பெயர்போன இயக்குனர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் அசுர நடிகரை வைத்து படம் இயக்கினாராம். இந்த படமும் ஆக்ஷன் கலந்த காதல் படமாக உருவாகியதாம். இயக்குனரும் இப்படத்தை திட்டமிட்டபடி எடுத்து முடித்துவிட்டாராம். ஆனால் வெளியீட்டின் போது படம் கடன் பிரச்சனையில் சிக்கியதாம்.
இதனால் 3 வருடங்களாக படம் ரிலீசாகாமல் உள்ளதாம். சமீபத்தில் இப்படத்தின் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு, டெப்டம்பர் மாத ரிலீசுக்கு தயாராகி வருவதாக செய்திகள் பரவி வருகிறதாம். இதனை கேட்ட டுவிட்டர் வாசிகள் எந்த வருட டெப்டம்பர் என கேட்டு கிண்டலடித்து வருகிறார்களாம். ஆனால் இதுகுறித்து படக்குழு எந்தவித தகவலும் தெரிவிக்க வில்லையாம்.
மலையாள வாரிசு நடிகருடன் நடிக்க முதலில் சம்மதம் தெரிவித்த நடிகை பின்னர் மறுத்து விட்டாராம்.
மலையாள திரை உலகின் ‘சூப்பர் ஸ்டார்’ நடிகரின் வாரிசு சமீபத்தில் படத்தில் நடிக்க ஒப்பந்தமானாராம். அந்த படத்தில் அனருக்கு ஜோடியாக நடிக்க தேசிய விருது வென்ற நடிகையிடம் பேச்சுவார்த்தை நடந்ததாம். முதலில் அந்த நடிகை சம்மதம் தெரிவித்தாராம்.
பின்னர் ரூ.1 கோடி சம்பளம் கொடுத்தால்தான் நடிப்பேன் என்று நிபந்தனை விதித்தாராம். ஒரு கோடி ரூபாய் சம்பளம் கொடுத்து அவரை நடிக்க வைப்பதா? அல்லது குறைந்த சம்பளத்துக்கு சம்மதிக்கும் வேறு நடிகையை நடிக்க வைக்கலாமா? என்று பட தயாரிப்பாளர் யோசித்து வருகிறாராம்.
எந்த படத்திலும் ஒப்பந்தமாகாமல் மன அழுத்தத்தில் இருந்த நடிகை, எதற்கு அப்படி இருந்தார் என்பதற்கான காரணம் வெளியாகி இருக்கிறதாம்.
நடிகையாகவும், பாடகியாகவும் மிகவும் பிரபலமானவர், சில மாதங்களாக எந்த படத்திலும் கமிட்டாகாமல் இருந்தாராம். மன அழுத்தம், காரணமாக உடல் மற்றும் மனரீதியாக பெரும் பாதிப்பு ஏற்பட்டு, ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொண்டதால் விலகியிருந்ததாக தெரிவித்திருந்தாராம்.
திருமணமான ஒரு நபருடன் உறவு வைத்திருந்ததுதான் இதற்கு காரணம் என்று தற்போது கோலிவுட்டில் பேசி வருகிறாராம். நடிகையோ தற்போது மன அழுத்தத்தில் இருந்து மீண்டு இருப்பதாக நடிகை தரப்பில் கூறுகிறார்களாம்.






