என் மலர்tooltip icon

    கிசுகிசு

    தென்னிந்திய சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை, பாலிவுட் பட வாய்ப்புக்காக தனது சம்பளத்தை குறைத்துள்ளாராம்.
    தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் ஸ்வீட் கடை பெயர் கொண்ட நடிகை ஒருவர் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறாராம். சமீபத்தில் இவர் தமிழில் இரண்டெழுத்து நடிகருடன் நடித்த படம் சக்கை போடு போட்டதாம். இதையடுத்து தனது சம்பளத்தை லட்சத்தில் இருந்து கோடிக்கும் மாற்றினாராம். 

    நீங்கள் இப்படி ஒரேயடியாக சம்பளத்தை உயர்த்தலாமா?’‘ என்று தயாரிப்பாளரும், டைரக்டரும் நியாயம் கேட்டார்களாம். அவர்களிடம், “விருப்பம் இருந்தால் நான் கேட்ட சம்பளத்தை கொடுங்கள்...முடியவில்லை என்றால் இடத்தை காலி செய்யுங்கள்” என்று ஸ்வீட் கடை நடிகை கறாராக கூறிவிட்டாராம்.

    அதே நடிகை தற்போது பாலிவுட் படங்களில் நடிக்க தொடங்கியிருக்கிறாராம். ஆனால் அங்கு மிகவும் குறைவான சம்பளத்தில் தான் நடித்து வருகிறாராம். ஆரம்பத்திலேயே சம்பளத்தை உயர்த்திவிட்டால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வராமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் இப்படி முடிவு எடுத்திருக்கிறாராம்.
    தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர், எம்.ஜி.ஆர். படத்தின் தலைப்பை வைப்பதற்காக போராடி வருகிறாராம்.
    ஒல்லி நடிகர் நடித்துக் கொண்டிருக்கும் புதிய படத்துக்கு, எம்.ஜி.ஆர் படத்தின் பெயரைச் சூட்டவிருக்கிறார்களாம். ஆனால், அதற்கான உரிமையை படக்குழு இன்னும் வாங்கவில்லையாம். எப்படியாவது அந்த பட தலைப்பை பெற்று விட வேண்டும் என்று நடிகர் விடாபிடியாக இருக்கிறாராம்.

    காரணம் சிவமான நடிகர் தன்னுடைய படத்திற்கு எம்.ஜி.ஆர். பட தலைப்பை பெற போராடி தோற்று போனாராம். அந்த வரிசையில் தானும் வந்துவிட கூடாது என்று தீவிர முயற்சியில் இருக்கிறாராம்.
    தோற்றத்தை காரணம் காட்டி தயாரிப்பாளர் வாய்ப்பளிக்க மறுத்துவிட்டதாக பிரபல பாலிவுட் நடிகை புகார் கூறுகிறாராம்.
    இந்தியில் சூப்பர் ஹிட்டான கலர் படத்தின் தமிழ் ரீமேக்கில் மாஸ் நடிகருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை நடித்தாராம். இந்தியை போல் தமிழிலும் படம் சூப்பர் ஹிட் ஆனதாம். அந்த நடிகையிடம் ஏன் இவ்வளவு நாட்கள் தமிழ் படங்களில் நடிக்கவில்லை என தொடர்ந்து நேர்காணல்களில் கேள்வி எழுப்பி வந்தார்களாம். 

    இதற்கு அந்த நடிகை சொன்ன காரணம் அனைவரையும் திக்குமுக்காட வைத்ததாம். பல வருடங்களுக்கு முன்னர் தமிழ் தயாரிப்பாளர் ஒருவர் நடிகையின் தோற்றத்தை காரணம் காட்டி வாய்ப்பளிக்க மறுத்துவிட்டாராம். அந்த நடிகையை நிராகரித்தவர் விருது பெயரை கொண்ட தயாரிப்பாளர் தான் என கிசுகிசுக்கப்படுகிறதாம்.  
    அந்த இயக்குனர் படத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறிய நடிகர் மீது நம்பர் ஒன் நடிகை கடுங்கோபத்தில் இருக்கிறாராம்.
    டாப் ஹீரோயினின் காதல் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க முருகன் நடிகர் ஓ.கே. சொல்லியிருந்தாராம். படத்திற்கான அறிவிப்பும் வெளியானதாம். இந்நிலையில், இயக்குனர் சொன்ன கதை பிடிக்கவில்லை எனச்சொல்லி, அந்த படத்திலிருந்து நடிகர்  விலகியிருக்கிறாராம்.

    இதையறிந்த நடிகை, அந்த நடிகருக்கு ஜோடியாக நடித்து, அவர் வளர்ச்சிக்குத் துணையிருந்தேன். என் காதலர் இயக்கும் படத்துக்கு இப்படியொரு பதிலா என்று நடிகர் மீது கோபத்தில் இருக்கிறாராம் நடிகை.
    நம்பர் நடிகையின் காதலன், முன்னணி நடிகரை வைத்து இயக்க இருந்த படம் டிராப் ஆனதால் தான் அவர் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளாராம்.
    நம்பர் நடிகையின் காதலன் அடுத்தடுத்து வெற்றி படங்களை இயக்கினாலும், பிரபல நடிகரை வைத்து கூட்டமாக இயக்கிய படம் தோல்வி அடைந்ததாம். இதனால் அடுத்து வெற்றிப்படம் கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் லோக்கல் நடிகருக்காக கதையை எழுதினாராம். 

    ஆனால் படத்தின் பட்ஜெட்டை குறைக்க கோரி தயாரிப்பாளர் தரப்பு இயக்குனரிடம் வேண்டுகோள் விடுத்ததாம். ஆனால் அவரோ விடாப்புடியாக பட்ஜெட்டை குறைக்க முடியாது என கூறியதால் தயாரிப்பாளர் தரப்பு படத்தை கைவிட்டதாக செய்திகள் பரவி வருகிறதாம். இதனால் தான் நம்பர் நடிகையின் காதலன் பட தயாரிப்பில் இறங்கிவிட்டாராம். 
    தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் உள்ள நடிகர் அரசியல் படங்களில் நடிக்க மறுத்து வருகிறாராம்.
    உச்ச நடிகரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான பெண்ணிய படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததாம். ரசிகர்களின் வரவேற்பால் உற்சாகத்தில் இருக்கிறாராம் அந்த நடிகர். இனி சமூகக் கருத்துள்ள படங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என அந்த நடிகர் முடிவு செய்திருக்கிறாராம். 

    இந்த வேளையில் அவரிடம் அரசியல் கதையைச் சொல்லியிருக்கிறார் கங்கை மைந்தன். இதனை கேட்ட அந்த நடிகர் நோ பாலிடிக்ஸ் என கூறி மறுத்துவிட்டாராம். ஏற்கனவே சர்ச்சை நடிகரை வைத்து இயக்க இருந்த அரசியல் படம் டிராப் ஆனதால் கங்கை மைந்தன் விரக்தி அடைந்துள்ளாராம்.  
    நடிகர் ஒருவரின் முன்னாள் காதலி 3 பெயர்களை கொண்ட முன்னணி நடிகை என்பதை நெட்டிசன்கள் கண்டு பிடித்துள்ளார்களாம்
    வேட்டையனாக அறியப்படும் நடிகர் தற்போது பெரிய முதலாளி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளாராம். பரபரப்புக்கு பஞ்சமில்லாத இந்த நிகழ்ச்சியில், வேட்டையன் நடிகர் காதல் மன்னனாக வலம் வந்துகொண்டிருக்கிறாராம். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள புதுமுக நடிகையுடன் தற்போது காதல் கிசுகிசுக்கப்பட்டு வருகிறதாம். 

    அந்த நடிகையிடம் தனக்கு ஏற்கனவே காதலி இருந்ததாகவும், தற்போது பிரேக் அப் ஆகிவிட்டதாகவும் கூறினாராம். இதை அறிந்த நெட்டிசன்கள் தீவிர விசாரணையில் இறங்கி ஆராய்ந்ததில், அவரின் முன்னாள் காதலி 3 பெயர்களை கொண்ட முன்னணி நடிகை என்பதை கண்டுபிடித்துள்ளார்களாம். இருவரின் இன்ஸ்டாகிராம் பதிவே இதற்கு சாட்சியாக சொல்கிறார்களாம்.
    தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் தேர்தல் நடிகரின் திருமண நிறுத்தத்துக்கு நடிகையின் பங்கு இருப்பதாக சொல்கிறார்களாம்.
    தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் தேர்தல் நடிகருக்கு தெலுங்கு நடிகையுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாம். விரைவில் திருமணம் நடைபெற இருக்கும் நிலையில், நடிகை தனது சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து நடிகரும் இருக்கும் புகைப்படங்களை நீக்கினாராம்.

    நடிகருக்கு பெண் வீட்டார் நோ சொல்லியிருக்கிறார்களாம். அதனால் தான் நடிகை புகைப்படங்களை நீக்கி விட்டாராம். நடிகரைப் பற்றிய எதிர்மறை விஷயங்கள் எடுத்து சொல்லி, இந்தத் திருமணத்தை நிறுத்தியதில் பழைய ரயில் நடிகைக்கு பங்கு இருப்பதாக சொல்கிறார்களாம்.
    தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் ஒருவர், பல கோடி ரூபாயில் பிளாட் ஒன்றை வாங்கி இருக்கிறாராம்.
    ஒரு பாடல் மூலம் உலகளவில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளர், தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் படங்களுக்கு இசையமைத்து வருகிறாராம். இவர் ஏற்கனவே பல கிசுகிசுக்களில் சிக்கி இருக்கிறாராம். 

    கிசுகிசு

    தற்போது பெரிய நட்சத்திர ஓட்டல் அருகில் உருவாகி வரும் அடுக்குமாடி கட்டிட குடியிருப்பில் ரூ.21 கோடிக்கு ஒரு பிளாட் வாங்கி இருக்கிறாராம். ஏற்கனவே வீட்டை விட்டு தனியாக வசித்து வரும் இசையமைப்பாளர், இந்த ஆடம்பர பிளாட் யாருக்காக வாங்கி இருக்கிறார் என்று பலரும் கிசுகிசுக்கிறார்களாம். 
    தென்னிந்திய சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை தனது சம்பளத்தை ஒரேயடியாக உயர்த்திவிட்டாராம்.
    திருமுருகனின் இன்னொரு பெயரை கொண்ட நடிகருடன், ஸ்வீட் கடை நடிகை ஒரு புதிய படத்தில் ஜோடி சேர இருந்தார். இந்த படத்தில் நடிக்க அவர் ஒரு கோடி ரூபாய் சம்பளம் கேட்டாராம். “ஐம்பது லட்சம் வாங்கி வந்த நீங்கள் இப்படி ஒரேயடியாக சம்பளத்தை உயர்த்தலாமா?’‘ என்று தயாரிப்பாளரும், டைரக்டரும் நியாயம் கேட்டார்களாம். 

    அவர்களிடம், “விருப்பம் இருந்தால் நான் கேட்ட சம்பளத்தை கொடுங்கள்...முடியவில்லை என்றால் இடத்தை காலி செய்யுங்கள்” என்று ஸ்வீட் கடை நடிகை கறாராக கூறிவிட்டாராம். தயாரிப்பாளரும், டைரக்டரும் வேறு கதாநாயகியை நடிக்க வைக்கலாமா? என்று யோசித்து வருகிறார்களாம்.
    சமீபத்தில் திரைக்கு வந்த ‘காலம்’ படம் படுதோல்வி அடைந்ததால் நம்பர் நடிகை திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம்.
    வரிசையாக வெற்றி படங்கள் கொடுத்து வந்த நம்பர் நடிகை, அவர் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த ‘காலம்’ படத்தில் சறுக்கி விட்டாராம். இதோ வருகிறது... அதோ வருகிறது... என்று அந்த படத்தின் ‘ரிலீஸ்’ தேதி பலமுறை தள்ளிப்போடப்பட்டு, ஒருவழியாக சமீபத்தில் திரைக்கு வந்து படுதோல்வி அடைந்து விட்டதாம். இந்த தோல்வியை நம்பர் நடிகையால் ஜீரணிக்க முடியவில்லையாம். 

    அதனால் அவர் ஒரு திடீர் முடிவுக்கு வந்து இருக்கிறாராம். இயக்குனரான தனது இளம் காதலரை மிக விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதே அந்த முடிவாம். இனிமேல் அவர் நடிப்பை விட, சொந்த தயாரிப்பில் கவனம் செலுத்தப் போகிறாராம்.
    முழு சம்பளத்தையும் கொடுத்தால் தான் படப்பிடிப்புக்கே வருவேன் என பிரபல நடிகர் தயாரிப்பாளர்களிடம் கறார் காட்டுகிறாராம்.
    90 களில் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக வலம் வந்த பிரபல நடிகர், ஒருசில படங்களில் மட்டும் நடித்து, புகழின் உச்சத்தில் இருந்த போதே தவிர்க்க முடியாத பிரச்சனைகள் காரணமாக நடிப்புக்கு முழுக்கு போட்டாராம். சில ஆண்டுகள் கழித்து மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்த அந்த நடிகர் ஹீரோ வேடங்களுக்கு பாய் பாய் சொல்லிவிட்டு வில்லனாக களமிறங்கினாராம்.

    குறிப்பாக ஜெயம் நடிகருடன் அவர் நடித்த படத்துக்கு பின் அவருக்கு வில்லன் கதாபாத்திரங்கள் குவியத் தொடங்கியதாம். முன்பெல்லாம் ஒரு படத்தில் நடித்தால், அப்படம் ரிலீசான பின்னர் தனது சம்பளத்தை வாங்கி கொள்ளும் பழக்கம் கொண்ட அந்த நடிகர், தற்போது முழு சம்பளத்தையும் கொடுத்தால் தான் படப்பிடிப்புக்கே வருவேன் என கறார் காட்டுகிறாராம்.
    ×