என் மலர்
கிசுகிசு
கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகை சம்பள விஷயத்தில் கறார் காட்டுகிறாராம்.
தமிழில் அறிமுகமாகி பட வாய்ப்புகள் சரிவர அமையாததால், டோலிவுட் பக்கம் சென்ற தீரமான நடிகை, அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகை ஆனாராம். இதன்பின்னர் அவருக்கு கோலிவுட் வாய்ப்புகளும் குவியத் தொடங்கியதாம். தற்போது கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என அந்த நடிகை பிசியாக நடித்து வருகிறாராம்.
அந்த நடிகை சம்பள விஷயத்தில் கறார் காட்டுவதாக தயாரிப்பாளர்கள் புலம்புகிறார்களாம். ஆனால் சம்பளம் தர முடியும் முடியாது என்பதை முதலிலேயே சொல்லி விட வேண்டும். பேசியபடி சம்பளத்தை தர மறுத்தால் ஏற்க மாட்டேன் என தீரமான நடிகை கூலாக சொல்லிவிட்டாராம்.
பிரபல நடிகருடன் காதல் கிசுகிசு தொடர்ந்து எழுந்து வந்த நிலையில், அந்த நடிகருடன் நடிக்க மாட்டேன் என இரண்டு பெயர்களை கொண்ட நடிகை முடிவெடுத்துள்ளாராம்.
இரண்டு பெயர்களை கொண்ட நடிகை தெலுங்கில் பிசியாக நடித்து வருகிறாராம். இதுவரை இவர் நடித்த 2 படங்களுமே சக்கை போடு போட்டதாம். அதுவே இவருக்கு இப்போது தலைவலியாக மாறி இருக்கிறதாம். அவர் 2 படங்களுமே டியர் நடிகருடன் நடித்தாராம். இதையடுத்து இருவரும் காதலிப்பதாக பல்வேறு கிசுகிசுக்கள் உலாவரத் தொடங்கியதாம்.
நாளடைவில் எங்கு சென்றாலும் நடிகையிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டதாம். இதனால் கோபமடைந்த நடிகை அடுத்த 2 வருடங்களுக்கு அந்த நடிகருடன் நடிக்க வேண்டாம் என முடிவெடுத்துள்ளாராம். இது டோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறதாம்.
பாலிவுட்டை கலக்கிய நம்ம ஊரு நடிகையின் மகள் நடிக்க அப்பா சொல்லும் சம்பளம் இயக்குனர்களை மயங்கி விழவைக்கிறதாம்.
தமிழில் தல, தளபதி, சூப்பர்ஸ்டார், உலகநாயகன் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்த நம்ம ஊரு நடிகை தயாரிப்பாளரை கல்யாணம் செய்த பின்னர் பாலிவுட்டிலும் ஒரு ரவுண்டு வந்தாராம். அந்த நடிகையின் மர்ம மரணம் சினிமா வட்டாரத்தையே கண் கலங்க வைத்ததாம்.
பாலிவுட்டை கலக்கிய நம்ம ஊரு நடிகையின் மகளும் தற்போது அங்கே களத்தில் இறங்கி இருக்கிறாராம். அவரை தமிழில் அறிமுகப்படுத்த பல இயக்குனர்கள் வரிசைகட்டுகிறார்களாம். ஆனால் மகள் நடிக்க அப்பா சொல்லும் சம்பளம்தான் மயங்கி விழவைக்கிறதாம்.
தமிழில் முன்னணி இயக்குனர் என்று பெயர் பெற்றவர், தற்போது பிரச்சனையில் சிக்கி இருப்பதால் தனது ரூட்டை மாற்றி இருக்கிறாராம்.
பல வெற்றி படங்களை கொடுத்து ஸ்டைலிஷ் இயக்குனர் பெயர் பெற்றவர், தான் இயக்கிய படங்கள் எல்லாம் பிரச்சனையில் சிக்கி இருக்கிறதாம். குறிப்பாக பணம் பிரச்சனையால் இயக்கிய படங்கள் ரிலீசாகாமல் இருக்கிறதாம். இதனால் இயக்குனர் புதிய முடிவு ஒன்றை எடுத்திருக்கிறாராம்.
அதாவது, படம் இயக்குவதற்கு பதிலாக நடிக்க ஆரம்பித்திருக்கிறாராம். பிரச்சனையில் சிக்கியதால் தனது ரூட்டை இயக்குனர் மாற்றி இருப்பதாக பலரும் கூறிவருகிறார்களாம்.
பரட்டை தலையுடன் இருக்கும் இரண்டெழுத்து நகைச்சுவை நடிகர் ஒருவர் சம்பாதிக்கிற பணத்தை நிலத்தில் முதலீடு செய்கிறாராம்.
பரட்டை தலையுடன் இருக்கும் இரண்டெழுத்து நகைச்சுவை நடிகர் காட்டில் விடாத அடைமழை பெய்து வருகிறதாம். சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அந்த நடிகர் ஏராளமான புது படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறாராம்.
3 ‘ஷிப்ட்’களில் நடித்து வருகிறாராம். “சம்பாதிக்கிற பணத்தை வேறு எங்கும் முதலீடு செய்யாதே...நிலத்தில் முதலீடு செய்” என்று அவருக்கு நண்பர்கள் யோசனை சொன்னார்களாம். இதை பின்பற்றும் அந்த நடிகர் நிலங்களாக வாங்கி குவிக்கிறாராம்.
மூன்றெழுத்து முன்னணி நடிகை ஒருவர் திருமணம் என்ற வார்த்தையை கேட்டாலே காதுகளை கையினால் மூடிக்கொள்கிறாராம்.
தமிழ் திரையுலகில் 10 ஆண்டுகளுக்கு மேல் முன்னணி நாயகியாக வலம் வருகிறாராம் மூன்றெழுத்து நடிகை. ஏற்கனவே தயாரிப்பாளர் ஒருவருடன் அந்த நடிகை நெருங்கி பழகி வந்தாராம். சில பிரச்சனைகளால் அவரை பிரிந்துவிட்டாராம். இதனால் மனமுடைந்த அந்த நடிகை தற்போது நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறாராம்.
அந்த நடிகை “திருமணம்” என்ற வார்த்தையை கேட்டாலே காதுகளை கையினால் மூடிக்கொள்கிறாராம். அந்த நடிகைக்கு திருமணம் செய்து பார்க்க வேண்டும் என்று தாயார் ஆசைப்படுகிறாராம். அவருடைய ஆசை பற்றி நடிகை கொஞ்சமும் பரிசீலித்து பார்க்காமல், “எனக்கு கல்யாணமே வேண்டாம்” என்று ஒரேயடியாக கையெடுத்து கும்பிடுகிறாராம்.
கோலிவுட்டில் கொண்டாடப்படும் பிரபல இசையமைப்பாளர் ஒருவர் டோலிவுட்டில் டல் அடிக்க வைக்கிறாராம்.
ஒல்லியான இசையமைப்பாளர் ஒருவர் தமிழில் தல, தளபதி, சூப்பர் ஸ்டார், உலக நாயகன் போன்ற உச்ச நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்துள்ளாராம். தமிழில் தவிற்க முடியாத இசையமைப்பாளராக இவர் வலம் வருகிறாராம். அண்மையில் இவர் தெலுங்கு படங்களுக்கும் இசையமைத்து வருகிறாராம்.
அந்த வகையில் சமீபத்தில் இவர் ஈ நடிகரின் படத்திற்கு இசையமைத்தாராம். இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்த போதிலும், படத்தின் இசை குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்க படுகிறதாம். குறிப்பாக பின்னணி இசை மோசமாக உள்ளதாக விமர்சித்து வருகிறார்களாம்.
தமிழில் முன்னணி நடிகராகவும், தேர்தலுக்கு பெயர் பெற்றவருமான நடிகர் தற்போது அரசியலில் குதிக்கும் எண்ணத்தில் இருக்கிறாராம்.
தேர்தலுக்கு பெயர் பெற்ற சங்க நடிகர், தற்போது பணப் பிரச்சனை உட்பட பல பிரச்சனைகளில் சிக்கித்தவிர்த்து வருகிறாராம். ஏற்கனவே நின்ற தேர்தலின் முடிவு இன்னும் வராத நிலையில் இருக்கும்போது, தற்போது நடிகரின் ஆசை அரசியல் பக்கம் திரும்பி இருக்கிறதாம்.
அதாவது ஒரு அரசியல் கட்சியில் இணையும் முடிவில் இருக்கிறாராம் நடிகர். தலைவர் சேரப்போவது மாநிலக் கட்சிகளில் இல்லையாம். தேசிய கட்சியில் தான் சேர இருக்கிறாராம்.
தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர், பணம் தான் முதல், நட்பு இரண்டாவது என்று கூறியிருக்கிறாராம்.
தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் பதி நடிகர், நண்பர்களுக்கு முக்கியத்தும் கொடுத்து பல படங்களில் சம்பளம் குறைவாகவும், சிறப்பு தோற்றத்தில் சம்பளம் வாங்காமலும் நடித்து வந்தாராம்.
ஆனால், நடிகர் தற்போது பல பிரச்சனைகளில் சிக்கி இருப்பதால், பணம் தான் முதல், நட்பு இரண்டாவது என்று கூறி சிறிய வேடம் என்றாலும் பணம் தர வேண்டும் என்று கண்டீசனாக இருக்கிறாராம். நடிகரின் திடீர் முடிவு நண்பர்கள் பலரையும் அதிர்ச்சிகுள்ளாக்கி இருக்கிறதாம்.
பல வருடங்களாக ரிலீசாகாமல் தள்ளிப் போகும் படம் குறித்து படத்தின் ஹீரோ பேச மறுக்கிறாராம்.
பல வருடங்களாக ரிலீஸாகும் என எதிர்பார்கப்பட்ட ஸ்டைலிஷ் இயக்குனரின் திரைப்படம், தேதி குறித்த பிறகும் தள்ளிப் போயிருக்கிறதாம். இந்த நிலையில் படத்தின் ஹீரோ, படம் தள்ளிப்போவது குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லையாம். காரணம், அவருக்குப் பேசப்பட்ட சம்பளம் முழுமையாக வந்து சேராதது தான் என்கிறார்களாம்.
ஹீரோ கொஞ்சமாவது ஆதரவு கொடுத்திருந்தால் படம் ரிலீஸாகியிருக்கும் என்று இயக்குனர் தரப்பில் சொல்கிறார்களாம். அந்த ஹீரோ பட விழா ஒன்றில் பேசும்போது, சிலர் சம்பளம் தராமல் ஏமாற்றுவதாக கூறியிருந்தாராம். இது கோலிவுட் வட்டாரத்தில் பல்வேறு சலசலப்பை ஏற்படுத்தியதாம்.
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் சிலர் வெப் தொடர்களை இயக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்களாம்.
தமிழ் பட உலகில் திருட்டு வி.சி.டி.யை ஒழிக்க முடியாது என்று உறுதியாக தெரிந்து கொண்ட சில டைரக்டர்கள் இப்போது, ‘வெப்’ தொடர்களுக்கு மாறிவிட்டார்களாம். பல்வேறு வெற்றி படங்களை கொடுத்த கங்கை மைந்தன், நடிகையின் காதலன் ஆகியோர் அந்த பட்டியலில் இடம் பிடித்து இருக்கிறார்களாம்.
மேலும் சில முக்கியமான டைரக்டர்கள், ‘வெப்’ தொடர்களை இயக்க தயாராகி வருகிறார்களாம். ‘வெப்’ தொடர்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறதாம். இதேபோல் நடிகர்கள் சிலரும் திரைபடங்களை விட ‘வெப்’ தொடர்களுக்கே முன்னுரிமை அளிக்கிறார்களாம்.
ஒரு நடிகர் படத்தின் இணைந்து நடித்த நடிகை, மீண்டும் அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் இலவசமாக நடிப்பேன் என்று கூறியிருக்கிறாராம்.
குளிர்ச்சியான நடிகை ஒரு படத்தில் ‘சிவ’ நடிகருக்கு தங்கையாக நடித்து இருக்கிறாராம். படப்பிடிப்பின்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறதாம். ‘சிவ’ நடிகரின் அடுத்த படத்திலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால், இலவசமாக நடிக்க தயார் என்று அந்த நடிகை சிரித்துக் கொண்டே சொல்கிறாராம்.
அவருடைய சிரிப்புக்கு அர்த்தம் என்ன? என்று படக்குழுவினர் தலைமுடியை பிய்த்துக் கொள்கிறார்களாம்.






