என் மலர்
கிசுகிசு
பிரபல நடிகர் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க முன்னணி நடிகைகள் நடிக்க மறுத்து இருக்கிறார்களாம்.
பல இளம் நடிகைகளின் வரவால் முன்னணி நடிகைகளின் மார்க்கெட் சரிந்து வருகிறதாம். முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து நடிகைகள் பிரபல தெலுங்கு நடிகர் நடிக்கும் ஒரு படத்தில் நடிக்க தயங்குகிறார்களாம்.
நடிகர் நடிக்கும் படத்தில் காட்டுப்பகுதிகளில் முழுவதும் படப்பிடிப்பு நடத்த இருக்கிறார்களாம். அங்கு பாதுகாப்பு இருக்காது என்று இனிப்பு கடை நடிகையும், ராசியான நடிகையும் நிராகரித்து விட்டார்களாம்.
தமிழில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் மாஸ் நடிகர் தான் நடித்த படத்தை பார்த்து அதிருப்தி அடைந்துள்ளாராம்.
தமிழில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் நடிகர் அவ்வப்போது அரசியல் பேசி வருகிறாராம். இவர் தற்போது மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படத்தில் நடித்து முடித்துள்ளாராம்.
படத்தை பார்த்த ஹீரோவுக்கு அவ்வளவு திருப்தியாக இல்லையாம். படத்தில் நடித்த பல நட்சத்திரங்களின் கால்ஷீட் குளறுபடி காரணமாக நிறைய டூப் நடிகர்களைப் பயன்படுத்தி படம் எடுத்திருக்கிறாராம் இயக்குனர்.
குடும்ப பாங்காக நடித்து வந்த நடிகைக்கு தற்போது பட வாய்ப்புகள் குறைந்ததால் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி வருகிறாராம்.
நடிகைகள் சிலர் வெளிநாடுகளில் அரைகுறை ஆடையில் சுற்றும் கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்தி நடிகைகள் மத்தியில் இந்த வழக்கம் அதிகமாக பரவி தென்னிந்திய நடிகைகளையும் தாக்கி உள்ளது. இப்படி கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிடுவது கலாசாரத்துக்கு எதிரானது என்று விமர்சனங்கள் கிளம்பி உள்ளன.
இதுவரை குடும்ப பாங்காக நடித்து வந்த நடிகைக்கு தற்போது பட வாய்ப்புகள் குறைந்துள்ளதாம். இதனை உணர்ந்த அந்த நடிகை கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறாராம். சமீபத்தில் நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்துள்ளாராம்.
பல வெற்றி படங்களை கொடுத்த ஸ்டைலிஷ் இயக்குனர், தற்போது உச்ச நடிகர் ஒருவருக்கு கதை எழுதி வருகிறாராம்.
பல வெற்றி படங்களை கொடுத்து ஸ்டைலிஷ் இயக்குனர் பெயர் பெற்றவர், தான் இயக்கிய படங்கள் எல்லாம் பிரச்சனையில் சிக்கி இருப்பதால் சோகத்தில் இருக்கிறாராம். குறிப்பாக பணம் பிரச்சனையால் இயக்கிய படங்கள் ரிலீசாகாமல் இருக்கிறதாம்.
இந்த நிலையில், அடுத்ததாக உச்ச நடிகரை வைத்து படம் எடுக்க கதை எழுதிக் கொண்கிருக்கிறாராம். மேலும் இந்தப் படத்தில் உச்ச நடிகரின் மகளாக ‘அச்சமில்லாத நடிகை’ நடிப்பார் எனவும் கூறப்படுகிறதாம்.
கோலிவுட், டோலிவுட் என பிசியாக நடித்துவரும் நடிகையின் செயலால் தயாரிப்பாளர்கள் புலம்பி வருகிறார்களாம்
மும்பையில் இருந்து கோடம்பாக்கத்துக்கு இறக்குமதி ஆகி இருக்கும் ‘ராசியான’ நடிகையுடன் உதவியாளர்கள் என்ற பெயரில் படப்பிடிப்புக்கு மூன்று பேர் வருகிறார்களாம். அந்த மூன்று பேர்களுக்கும் தயாரிப்பாளர்கள்தான் சம்பளம் கொடுக்கிறார்கள்.
ஒரு உதவியாளருக்கு ரூ.30 ஆயிரம் வீதம் மூன்று பேருக்கு ரூ.90 ஆயிரம் தயாரிப்பாளர்களிடம் கறந்து விடுகிறாராம், அந்த நடிகை. நடிகையின் இந்த செயலால் தயாரிப்பாளர்கள் புலம்பி வருகிறார்களாம்.
பிரபல நடிகை ஒருவர் கவர்ச்சியாக நடித்ததற்கு அவருடைய காதல் நடிகர் எதிர்ப்பு தெரிவித்துள்ளாராம்.
மணிரத்னம் பட தலைப்பை பெயராக கொண்ட நடிகை ஒரு தெலுங்கு படத்தில் படுகவர்ச்சியாக நடித்து இருக்கிறாராம். அந்த படத்தின் பாடல் காட்சியில் கவர்ச்சியின் உச்சத்துக்கே போய் இருக்கிறாராம்.
இதுபற்றி அறிந்த அவருடைய காதல் நடிகர், “இந்த அளவுக்கு ஏன் கவர்ச்சியாக நடித்தாய்?” என்று கேட்டு தகராறு செய்தாராம். “இனிமேல் இப்படி கவர்ச்சியாக நடித்தால் உன்னுடன் பேச மாட்டேன்” என்று எச்சரிக்கையும் விடுத்தாராம்.
பிரபல நடிகை நடித்த படங்கள் ரிலீஸாவதில் சிக்கல்கள் ஏற்படுவதால் அவர் பரிகாரம் செய்ய கோயில்களைத் தேடி செல்கிறாராம்.
தமிழ் திரையுலகில் 10 ஆண்டுகளுக்கு மேல் முன்னணி நாயகியாக வலம் வருகிறாராம் மூன்றெழுத்து நடிகை. ஏற்கனவே தயாரிப்பாளர் ஒருவருடன் அந்த நடிகை நெருங்கி பழகி வந்தாராம். சில பிரச்சனைகளால் அவரை பிரிந்துவிட்டாராம். இதனால் மனமுடைந்த அந்த நடிகை தற்போது நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறாராம்.
அவர் அரை டஜன் படங்களை கைவசம் வைத்துள்ளாராம். அந்த நடிகை நடித்த படங்கள் ரிலீஸாவதில், தற்போது பல சிக்கல்கள் ஏற்படுகின்றனவாம். இதனால், அப்செட்டில் இருக்கும் நடிகை, பரிகாரம் செய்ய தன் அம்மாவுடன் சேர்ந்து கோயில்களைத் தேடி சென்று கொண்டிருக்கிறாராம்.
தமிழ் சினிமாவில் முதல் படத்திலேயே பலருடைய கவனத்தை ஈர்த்த நடிகை, தற்போது வாய்ப்புக்காக படுக்கையறை புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறாராம்.
தமிழ் சினிமாவில் வெளியான மேகமான திரைப்படம் மூலம் அறிமுகமான நடிகைக்கு, அதன் பின் வெளியான இரண்டு, மூன்று படங்களுக்குப் பிறகு எந்த பெரிய படமும் கிடைக்க வில்லையாம்.
சிரிப்பு மூலம் மிகவும் பிரபலமானாலும், இவரால் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம்பெற முடியவில்லையாம். அதன் பிறகு வாய்ப்புகள் எதுவம் சரியாக அமையாததால் கவர்ச்சி பக்கம் தாவினாராம். இந்நிலையில் தற்போது தனது படுக்கையறையில் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறாராம். இது எல்லாம் வாய்ப்புக்காக என்று பலரும் பேசி வருகிறார்களாம்.
தமிழில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விழா மேடைகளில் சொல்வதை செயலில் காட்டாமல் இருக்கிறாராம்.
தமிழில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தற்போது தன்னுடைய பட விழாவின் மேடைகளில் அரசியல் வசனங்கள் பேசி வருகிறாராம். மேலும் சமூக அக்கறையுடன் செய்திகளைப் பகிர்ந்து கொள்கிறாராம். ஆனால், அதற்கு மாறாக அவரது ரசிகர்கள் நடந்து கொள்கிறார்களாம்.
சமீபத்தில் நடைபெற்ற அவருடைய பட நிகழ்ச்சி காரணமாக அவசரத்துக்கு ஆம்புலன்ஸ் கூட அந்த வழியில் செல்ல முடியவில்லையாம்.
அரசியல் தலைவர்கள் இப்படி நடந்துக் கொண்டால் கோபப்படும் நடிகர், அவரது விழாவின் போது ஏற்பட்ட சம்பவத்துக்கு என்ன சொல்வார் என்கிறார்களாம்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஒல்லி நடிகையின் காயத்திற்கு ரசிகர்கள் காரணம் கண்டு பிடித்திருக்கிறார்களாம்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஒல்லி நடிகை, தற்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். இவர் வெளிநாட்டினரை சேர்ந்த ஒருவரை காதலித்து ரகசியமாக திருமணம் செய்துக் கொண்டதாக செய்திகள் வெளியானதாம்.
வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருக்கும் நேரத்தில் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் இருந்து தனது காதலர் புகைப்படத்தை நீக்கினாராம். இதனால் இருவரும் பிரிந்ததாக செய்திகள் பரவியதாம். இதைக் கண்டுக்கொள்ளாத நடிகை கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தாராம்.
அதில் நடிகையின் காலில் காயங்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து அவரிடம் எப்படி காயம் ஏற்பட்டது என்று கேட்க, நடிகை நான் தூக்கத்தில் நடப்பேன், அதனால் ஏற்பட்ட காயம் என்று கூறியிருக்கிறாராம். ஆனால் இதை ஏற்காத ரசிகர்கள், காதலர் இவரை தொந்தரவு செய்திருப்பார் போல என்றும், இருவருக்கும் ஏற்பட்ட சண்டையில் உண்டான காயம் அதனால்தான் இப்படி ஆனது என்று கூறி வருகிறார்களாம்.
திருமணத்துக்கு பின்பும் நடித்துவரும் பிரபல நடிகைக்கு அவரது கணவர் சில நிபந்தனைகள் விதித்து இருக்கிறாராம்.
‘பல்லாவரம் நடிகை’ திருமணத்துக்கு பின்பும் கணவரின் அனுமதியுடன் நடித்து வருகிறாராம். விஷயம் அதுபற்றி அல்ல, படத்துக்கு படம் அவர் கவர்ச்சி உடை அணிகிறாராம். பிரபல கதாநாயகர்களுடன் நெருக்கமாக நடித்து வருகிறாராம். இதுபற்றி அவருடைய கணவரிடம் சில ஆந்திர ஆசாமிகள் போட்டுக் கொடுத்து இருக்கிறார்களாம்.
அதைத்தொடர்ந்து அந்த நட்சத்திர கணவர் தனது மனைவிக்கு 2 கட்டளைகள் விதித்து இருக்கிறாராம். அதில் ஒன்று, “இனிமேல் கவர்ச்சியாக நடிக்க கூடாது. கவர்ச்சி உடையணிந்து வெளிநிகழ்ச்சிகளுக்கு வரக்கூடாது. இந்த இரண்டு நிபந்தனைகளுக்கும் கட்டுப்பட்டால், தொடர்ந்து நடிக்கலாம்” என்று கூறியிருக்கிறாராம். வேறு வழியில்லாமல், கணவரின் நிபந்தனைகளுக்கு ‘பல்லாவரம் நடிகை’ பணிந்து இருக்கிறாராம்!
தமிழில் மிகவும் பிரபலமான நடிகை, அந்த கதாபாத்திரம் என்றால் சம்பளம் குறைப்பேன் என்று கூறியிருக்கிறாராம்.
தமிழில் பல படங்களில் நடித்து மிகவும் பிரபலமான வீரமான நடிகை, தற்போது திடீர் முடிவு ஒன்றை எடுத்திருக்கிறாராம். அதாவது கதாநாயகிக்கு முக்கியத்துவம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் சம்பளத்தை குறைவாக வாங்குவதாக கூறியிருக்கிறாராம்.
நடிகை சம்பளத்தை குறைப்பதை கேட்ட பலரும் நடிகையை அணுக முடிவு செய்திருக்கிறார்களாம். ஆனால், உண்மையான காரணம், நடிகை பட வாய்ப்புகள் குறைந்து விட்டதாம். அதனால்தான் இந்த முடிவு எடுத்திருக்கிறாராம்.






