என் மலர்
சினிமா

கிசுகிசு
பட வாய்ப்பு குறைந்ததால் கவர்ச்சிக்கு தாவும் நடிகை
குடும்ப பாங்காக நடித்து வந்த நடிகைக்கு தற்போது பட வாய்ப்புகள் குறைந்ததால் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி வருகிறாராம்.
நடிகைகள் சிலர் வெளிநாடுகளில் அரைகுறை ஆடையில் சுற்றும் கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்தி நடிகைகள் மத்தியில் இந்த வழக்கம் அதிகமாக பரவி தென்னிந்திய நடிகைகளையும் தாக்கி உள்ளது. இப்படி கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிடுவது கலாசாரத்துக்கு எதிரானது என்று விமர்சனங்கள் கிளம்பி உள்ளன.
இதுவரை குடும்ப பாங்காக நடித்து வந்த நடிகைக்கு தற்போது பட வாய்ப்புகள் குறைந்துள்ளதாம். இதனை உணர்ந்த அந்த நடிகை கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறாராம். சமீபத்தில் நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்துள்ளாராம்.
Next Story






