என் மலர்
கிசுகிசு
முன்னணி நடிகர் படத்தில் நடிக்க ஆசைப்பட்டு, அந்த படத்தின் இயக்குனருக்கு நடிகை ஒருவர் தூது அனுப்பி வருகிறாராம்.
வீரமான நடிகர் கடைசியாக நடித்த அதே கூட்டணி மீண்டும் இணைந்து புதிய படத்தை உருவாக்கி வருகிறார்களாம். இந்த படத்தில் நடிக்க நையாண்டியான நடிகை மிகவும் ஆர்வமாக இருக்கிறாராம். அவருடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று நடிகையின் தீராத ஆசையாம்.
முந்தைய படத்தில் இருந்தே நடிகை முயற்சி செய்து வருகிறாராம். ஆனால், இயக்குனர் கண்டுக்கொள்ள வில்லையாம். இந்த முறை எப்படியாவது நடித்து விட வேண்டும் என்று இயக்குனருக்கு தூது அனுப்பி வருகிறாராம்.
முன்னணி நடிகையாக இருப்பவர் தன்னுடைய பாதுகாவலர்களின் சம்பளத்தை தயாரிப்பாளர் தலையில் கட்டியிருக்கிறாராம்.
தமிழில் முன்னணி நடிகையாக இருப்பவர் தனது பழைய காதலர்களால் ஆபத்து நேரலாம் என்று பயப்படுகிறாராம். இதுபற்றி அவர் உதவியாளர்களிடம் சொல்ல-அதை உதவியாளர்கள் தயாரிப்பாளர்களிடம் சொல்ல-ஐந்தெழுத்து நடிகைக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை தயாரிப்பாளர்கள் செய்து இருக்கிறார்களாம்.
அதன்படி, அந்த நடிகை பாதுகாவலர்களுடன்தான் படப்பிடிப்புக்கு வருகிறாராம். அந்த பாதுகாவலர்களுக்கு பகல் உணவை (அசைவ அயிட்டங்களுடன்) தயாரிப்பாளர் தன் செலவில் இலவசமாக வழங்குவதுடன், ஒரு வீரருக்கு ரூ.10 ஆயிரம் வீதம் 6 பேருக்கு தினமும் ரூ.60 ஆயிரத்தை தயாரிப்பாளர்தான் கொடுக்கிறாராம்!
பிரபல நடிகரின் புதிய படத்தில் ஹீரோயினாக நடிக்க நடிகை ஒருவர் கோடிக்கணக்கில் சம்பளம் வேண்டும் என்று கறாராக சொல்லிவிட்டாராம்.
ஒரு புதிய படத்தில், பிசியான நடிகருடன் ஜோடி சேரும் வாய்ப்பு, வரலாற்று பட நாயகிக்கு வந்ததாம். அந்த படத்தில் நடிக்க அவர் முதலில் ரூ.2 கோடி சம்பளம் கேட்டாராம். தயாரிப்பாளர் பேரம் பேசிய பின், அவர் ஒரு கோடிக்கு இறங்கி வந்தாராம்.
தயாரிப்பாளர் அவ்வளவு சம்பளத்துக்கு கட்டுபடி ஆகாது என்று கூறி, “ரூ.50 லட்சம் தருகிறேன்” என்றாராம். “ஒரு கோடி கொடுத்தால் நடிக்கிறேன்...இல்லையென்றால் படத்தில் இருந்து விலகிக் கொள்கிறேன்” என்று வரலாற்று பட நாயகி கறாராக கூறிவிட்டாராம். அதிர்ந்து போன தயாரிப்பாளர், அவருக்கு ஒரு கோடி சம்பளம் கொடுக்க சம்மதித்து இருக்கிறாராம்!
தெலுங்கில் பிரபலமான நடிகை, தற்போது தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடிக்க இருக்கும் நிலையில், சம்பள விஷயத்தில் பிடிவாதம் பிடிக்கிறாராம்.
தெலுங்கில் வெளியான ஒரே படத்தின் மூலம் புகழ்பெற்ற மந்தமான நடிகை, அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருக்கு பல படங்களில் இருந்து அழைப்பு வந்து கொண்டிருக்கிறதாம். இதனால் திடீரென கிடைத்த வெற்றியை தலைமேல் ஏற்றிக்கொள்ளும் சில நடிகைகள் சிக்கிக்கொள்ளும் சர்ச்சைகளில் நடிகையும் தற்போது சிக்கி வருகிறாராம்.
தமிழில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் நிலையில், தெலுங்கு நடிகர் ஒருவருடன் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தாராம். ஆனால் சம்பள விவகாரத்தில் உடன்பாடு ஏற்படாததால் இந்த படத்தில் இருந்து அதிரடியாக விலகி கொண்டாராம்.
சமரசம் செய்ய பலர் முயற்சித்தும் நடிகை பிடிவாதமாக ஒரே தொகையில் இருந்தாராம். சம்பள விஷயத்தில் சமரசம் செய்ய முடியாத காரணத்தால் நடிகை இதுபோல் பல படங்களை கோட்டை விட்டுவிட்டார் என்று பலரும் பேசிவருகிறார்களாம்.
கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்துள்ள புதுவரவு நடிகையின் அதிரடி அட்டகாசத்தால் கோலிவுட் இயக்குனர்கள் குழம்பிப் போயுள்ளார்களாம்.
கன்னடத்தில் இருந்து தமிழுக்கு என்ட்ரி ஆகியுள்ள இரண்டு பெயர் கொண்ட நடிகை தல, தளபதியுடன் ஜோடிபோட ரூட் போட்டு வருகிறாராம். குறிப்பாக மேற்படி நடிகர்களின் படங்களில் நடிக்க தன்னை யாருமே தொடர்பு கொள்ளாத போதும், அவர்களின் அடுத்த படத்தில் ’நான் தான் ஜோடி’ என்று தன் சார்பில் இருந்து பரபரப்பு செய்திகளை பரப்பி விடுகிறாராம் அந்த நடிகை.
இதனால் தல, தளபதி படங்களின் இயக்குனர்களே குழம்பிப் போயுள்ளனராம். புதுவரவு நடிகையின் இந்த அதிரடி அட்டகாசத்தால் கோலிவுட்டில் கொடிகட்டி பரக்கும் அம்மணிகள் கடுப்பில் இருக்கிறார்களாம்.
நான்கெழுத்து படம் கொடுத்த தோல்வி பயத்தால் பிரபல நடிகர் திடீரென முடிவை மாற்றியுள்ளாராம்.
மூன்றெழுத்து நடிகர் சமீப காலமாக நடித்த படங்கள் எதுவும் சரிவர ஓடாததால், தனது ஆஸ்தான இயக்குனரின் படத்தில் நடித்தாராம். அவர் பெரிதும் நம்பியிருந்த நான்கெழுத்து படம் சமீபத்தில் வெளியாகி தோல்வியை சந்தித்ததாம். இதனால் அவர் அப்செட்டில் இருக்கிறாராம்.
இதையடுத்து பாலிவுட்டில் வெற்றிபெற்ற படத்தை தமிழில் ரீமேக் செய்து நடிக்கவிருந்த நடிகர், முந்தைய படத்தில் பணிபுரிந்த எழுத்தாளரையே இந்தப் படத்துக்கும் பயன்படுத்தலாம் என நினைத்திருந்தாராம். ஆனால் தோல்வி கொடுத்த பயத்தால் படத்திலிருந்து எழுத்தாளரை நீக்கிவிடலாமா என்ற முடிவில் இருக்கிறதாம் படக்குழு.
பிரபல இயக்குனர் இயக்கும் புதிய படத்தின் நடிகைகள் தேர்வுக்கு முன்னணி நடிகை ஒருவர் அழுத்தம் கொடுத்து வருகிறாராம்.
தமிழில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை, தற்போது பிரபல இயக்குனர் இயக்கும் வரலாற்றுப் படத்தில் நடிக்க இருக்கிறாராம். இப்படத்தில் பல நடிகைகள் நடிக்க இருக்கிறார்களாம். இதற்கான நடிகைகள் தேர்வு சமீபத்தில் நடைபெற்றதாம். இதில் நடிக்கும் மற்ற நடிகைகள் நம்பர் நடிகையை விட மிகவும் இளமை இருந்தார்களாம்.
இதனால், தேர்வு செய்த நடிகைகளை மாற்ற இயக்குனர் முடிவு செய்திருக்கிறாராம். இயக்குனரின் இந்த முடிவுக்கு நடிகை கொடுத்த அழுத்தமே காரணாம். இதனால், நடிகை மீது இளம் நடிகைகள் பலரும் கோபத்தில் இருக்கிறார்களாம்.
பெரிய முதலாளி வீட்டுக்கு சென்று, தற்போது பிரபலமாக இருக்கும் நடிகை பட வாய்ப்பு கிடைக்காததால் ரூட்டை மாற்றி இருக்கிறாராம்.
உலக அழகியின் பெயரைக் கொண்டவர் பெரிய முதலாளி வீட்டிற்கு சென்று மிகவும் பிரபலமானாராம். வெளியே வந்த பிறகு நிறைய புகழ், பட வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பினாராம். புகழ் கிடைத்ததாம், ஆனால், பட வாய்ப்பு கிடைக்க வில்லையாம்.
இரண்டு மூன்று படங்களில் நடித்தும் அந்த படங்கள் சில பிரச்சனைகளால், படப்பிடிப்பு பாதியில் நிற்கிறதாம். இதனால், வருத்தமடைந்த நடிகை ரூட்டை மாற்றி, கவர்ச்சி போட்டோஷூட் எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகிறாராம். அங்கு சென்றும் உபயோகமில்லை, கவர்ச்சிதான் கைகொடுக்கும் என்று தற்போது நம்புகிறாராம்.
தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டு, படப்பிடிப்புக்கு செல்லாமல் இருக்கிறாராம் பிரபல நடிகை.
தெலுங்கில் மிகவும் பிரபலமான நடிகை, சமீபத்தில் குரங்குடன் ஒரு படத்திலும், இசையமைப்பாளர் கதாநாயகனாக நடித்த படத்திலும் நடித்திருந்தாராம். இந்த படங்கள் சரியாக போக வில்லையாம். இருந்தாலும் நடிகை கைவசம் தமிழ், தெலுங்கு படங்கள் வைத்திருக்கிறாராம்.
ஆனால், அந்த படங்களின் படப்பிடிப்பு செல்லாமல் இருக்கிறாராம் நடிகை. காரணத்தை விசாரித்தால், நடிகை பாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறாராம். இதனால், தான் பெரிய நடிகை ஆகிவிட்டதாக நினைப்பு வந்துவிட்டதாக பலரும் கூறுகிறார்களாம். படக்குழுவினர் இது தொடர்பாக புகார் கொடுக்க இருக்கிறார்களாம்.
தமிழில் நல்ல நடிகை என்று பெயர் வாங்கியவர், தற்போது போட்டோஷூட் நடத்தி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறாராம்.
முதல் படத்திலேயே நல்ல நடிகை என பெயர் வாங்கியவர், குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகிறாராம். பெரிய முதலாளி வீட்டில் முந்தைய சீசனில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானாராம். தற்போது நடிகைக்கு பட வாய்ப்பு இல்லாமல், சிறு வேடங்களில் நடித்து வருகிறாராம்.
இந்நிலையில் சக நடிகைகளை போல கவர்ச்சி போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளாராம். அந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியாகி விட்டார்களாம். பட வாய்ப்புக்காக நடிகை இப்படி செய்கிறாரா இல்லை கவர்ச்சிக்கு மாறுகிறாரா என்று பலரும் பேசி வருகிறார்களாம்.
காமெடியனாக அறிமுகமாகி தற்போது பல படங்களில் ஹீரோவாக நடித்து வரும் நடிகர் நடிகைக்கு சிபாரிசு செய்துள்ளாராம்.
காமெடியனாக அறிமுகமான நடிகர் தற்போது கதாநாயகனாக உருவெடுத்துள்ளாராம். முன்னணி நடிகர்களுடன் காமெடி வேடங்களில் நடிக்க பல அழைப்புகள் வந்தாலும், அதனை ஏற்க மறுக்கிறாராம். ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ள அந்த நடிகர், அடுத்ததாக நடிக்கும் படத்திற்கு ஹீரோயின் தேர்வு நடைபெற்று வந்ததாம்.
இந்த செய்தியை அறிந்த ஹீரோ, ஏற்கனவே தன்னுடன் நடித்த ஹீரோயினை சிபாரிசு செய்தாராம். இயக்குனரும் அதற்கு ஓகே சொல்லி இருக்கிறாராம். இதற்கு முன்னர் நடித்த படத்தில் அந்த நடிகையுடன் கெமிஸ்டிரி செட் ஆனதால் அதே ஹீரோயினை சிபாரிசு செய்ததாக ஹீரோ தரப்பு தெரிவிக்கிறதாம்.
கவர்ச்சி படத்தில் நடித்து மிகவும் பிரலமான நடிகை, தற்போது அந்த படத்தில் ஏன் நடித்தேனோ என்று வருத்தப்பட்டு புலம்பி வருகிறாராம்.
அடல்ஸ் படத்தில் அறிமுகமான நடிகை, பெரிய முதலாளி வீட்டின் மூலம் மிகவும் பிரபலமானாராம். இவர் படங்களில் படுகவர்ச்சியாக நடித்து வருவதால், நிஜவாழ்க்கையிலும் அவர் அப்படித்தான் இருப்பார் என்று கருதி, சிலர் நடிகையிடம் எல்லை மீறினார்களாம்.
அதற்கு நடிகை எதிர்ப்பு தெரிவித்தாராம். அவர்களின் எல்லை மீறலுக்கு, நடிகை நடித்த அந்த அடல்ஸ் படம்தான் காரணமாம். அந்த படத்தில் ஏன் நடித்தோம்? என்று இப்போது நான் வருத்தப்பட்டு புலம்பி வருகிறாராம் நடிகை.






