என் மலர்tooltip icon

    கிசுகிசு

    தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ள நடிகை, தற்போது டிரெண்டிங் இயக்குனர்களை டார்கெட் வைத்துள்ளாராம்.
    தனது சுயசரிதை புத்தகத்தை வெளியிட முடியாமல் திண்டாடும் நார்த் மெட்ராஸ் நடிகை தற்போது வாய்ப்பில்லாமல் தவிக்கிறாராம். மார்க்கெட் கவிழ்ந்துவிட்டதால், தற்போதைய டிரெண்டில் இருக்கும் இயக்குனர்களை டார்கெட் வைத்துள்ளாராம்.  

    தன்னை சந்திக்க வருவோருக்கு காபி, டீ கொடுத்து உபசரிப்பதற்கு பதிலாக சோம பானங்களைத்தான் கொடுக்கிறாராம். இதனால் அம்மணியை மரியாதை நிமித்தமாக சந்திக்க செல்வோர் கூட வெளியில் வரும்போது, போதையில் தட்டுத் தடுமாறி தான் வெளியே வருகின்றனராம்.
    முதல் படத்தின் மூலம் பிரபலமாகி புகழின் உச்சிக்கு சென்ற நடிகை, தற்போது பட வாய்ப்புக்காக கொள்கையை மாற்றி இருக்கிறாராம்.
    முதல் படத்தில் நோயாளியாக நடித்து பிரபலமான நடிகை, பலருடைய பாராட்டால் புகழின் உச்சிக்கு சென்றாராம். அதன் பிறகு பல கதைகளை கேட்ட நடிகை எதில் நடிப்பது என்று தெரியாமல் நிராகரித்தாராம். இதனால், பல பட வாய்ப்புகள் அவருக்கு பறிபோனதாம். 

    ஒரு வழியாக தற்போது ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆகி நடித்து வருகிறாராம். இந்நிலையில், மற்ற நடிகைகள் போல் இருந்தால் தான் பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று தனது கொள்கையை மாற்றி இருக்கிறாராம். அதனால் கவர்ச்சியாக போட்டோ ஷூட் ஒன்றை எடுத்து சமூக வலைத்தளத்தில் வாய்ப்புக்காக பரப்பி வருகிறாராம்.
    கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என திரையுலகில் கொடி கட்டி பறந்த பிரபல நடிகை தொடர் தோல்வியால் முடிவை மாற்றியிருக்கிறாராம்.
    கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என திரையுலகில் கொடி கட்டி பறந்த தீரமான நடிகைக்கு சமீபத்திய படங்கள் சரியாக போகவில்லையாம். தற்போது அந்த நடிகை பெரிய பட்ஜெட் இயக்குனரின் படத்திலும் நடித்து வருகிறாராம். இந்த படத்தின் வெற்றியை எதிர்பார்த்து காத்திருக்கிறாராம்.

    அடுத்து அவருக்கு வேறு படங்களுக்கான அழைப்புகள் வராததால், தனது பழைய பிசினஸைக் கவனிக்கலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம். மேலும் அந்த நடிகையை பிரபல வில்லன் நடிகருடன் இணைத்து வைத்து கிசுகிசுக்களும் வருவதால் அம்மணி அப்செட்டில் இருக்கிறாராம்.
    பல படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகர், அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு தற்போது பிரச்சனையில் சிக்கி இருக்கிறாராம்.
    தமிழில் பல படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகர், நண்பர்களுக்காக படங்களில் ஒப்பந்தம் ஆக போய் தற்போது பணத்திற்காக பல படங்களில் கமிட்டாகி வருகிறாராம். காரணம், சொந்த படம் எடுத்து சுட்டதால் இந்த மாற்றம் என்கிறார்களாம். இந்நிலையில், பணத்திற்கு ஆசைப்பட்டு ஆன்லைன் விளம்பரத்தில் நடித்தாராம்.

    நடிகர் ஆப்-பில் நடித்தது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தாலும், இரண்டு மூன்று பிரிவினர் அவருக்கு எதிராக போர் கொடி தூக்கி இருக்கிறார்களாம். நடிகருக்கு ஏன் இந்த பிரச்சனை, பணத்திற்கு ஆசைப்பட்டு இப்படி பிரச்சனையில் சிக்கிட்டாரே என்று பலரும் பேசி வருகிறார்களாம்.
    தமிழில் பல வெற்றி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை, தற்போது நடிக்கும் புதிய படத்தில் ஜோடியை மாற்ற தகராறு செய்திருக்கிறாராம்.
    ‘தவ’ நடிகரும், ‘பதி’ நடிகரும் ஒரு புதிய படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். அதில், ‘தவ’ நடிகருக்கு ஜோடி, ‘ஷ்கா.’ ‘பதி’ நடிகருக்கு ஜோடி, ‘அங்காடி’ நடிகை. இந்த ஜோடி ஒப்பந்தத்தில், அங்காடி நடிகைக்கு உடன்பாடு இல்லையாம். “என்னை தவ நடிகரின் ஜோடியாக போடுங்கள். இல்லையென்றால் இந்த படமே வேண்டாம்” என்கிறாராம், அங்காடி.

    தவ நடிகரோ, “எனக்கு ஷ்காதான் பொருத்தமாக இருப்பார். எங்க ஜோடி, ராசியான ஜோடி என்று ஏற்கனவே ஒரு படத்தில் நிரூபித்து இருக்கிறோம்” என்று கூறுகிறாராம். “ஜோடியை மாற்றவில்லை என்றால் நடிக்க மாட்டேன்” என்று அங்காடி உறுதியாக சொல்லி விட்டாராம். இவர்கள் சண்டையில் படத்தின் டைரக்டரும், தயாரிப்பாளரும் மாட்டிக்கொண்டு செய்வதறியாமல் விழிக்கிறார்களாம்!
    தமிழில் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி முன்னணி நடிகையாக வலம் வருபவர், போலீஸ் வேடத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம்.
    கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் ஐந்தெழுத்து நடிகையை ஒரு பெரிய நடிகரின் படத்தில், போலீஸ் வேடத்தில் நடிக்கும்படி கேட்டார்களாம். “நான் இனிமேல் போலீஸ் வேடத்தில் நடிப்பதாக இல்லை” என்று நடிக்க மறுத்து விட்டாராம். அவருக்கு பதில் வேறு ஒரு நடிகையை (போலீஸ் வேடத்துக்கு) தேடி வருகிறார்களாம்.

    “என் கை, கால், இடுப்பு மூன்றையும் அசைத்து ஆடினாலே போதும். ரசிக கண்மணிகள் ஆசையுடன் பார்ப்பார்கள். அதற்கு மேல் ‘ரிஸ்க்’ எடுக்க தேவையில்லை” என்கிறாராம், அந்த ஐந்தெழுத்து நடிகை!
    தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து வரும் பிரபல நடிகர் வருத்தத்தில் இருக்கிறாராம்.
    நான்கெழுத்து நடிகரின் இரண்டெழுத்து படம் வெற்றி என்ற செய்தி, மன்னர் நடிகரை வடபோச்சே! என வருத்தத்தில் ஆழ்த்தியிருக்கிறதாம். ஏனேனில், அது அவர் நடிக்க வேண்டிய படமாம். தயாரிப்பு பிரிவுக்கும் அவருக்குமான உரசல்களால் நடிக்க முடியாமல் போனதாக தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறாராம் நடிகர்.

    மன்னர் நடிகரின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படங்கள் எதுவும் சரிவர ஓடாததால், அடுத்த படத்தில் ஹிட் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறாராம். இதனால் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் முனைப்பில் இருக்கிறாராம் அந்த நடிகர். 
    தமிழ் பட உலகில் ஒரு காலகட்டம் வரை முன்னணி கதாநாயகியாக இருந்த நடிகை, தற்போது வாய்ப்பு இல்லாததால் மதுவுக்கு அடிமையாகி இருக்கிறாராம்.
    மும்பையை சேர்ந்த அந்த ‘வால்’ நடிகை ஒரு காலகட்டம் வரை தமிழ் பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தாராம். ஒரு பிரபல டைரக்டரை காதல் திருமணம் செய்து, அதே வேகத்தில் விவாகரத்தும் செய்து கொண்டாராம். 

    டைரக்டரை விவாகரத்து செய்த பின், தனக்கு பட வாய்ப்புகள் வந்து குவியும் என்று எதிர்பார்த்தாராம். ஆனால், அது நடக்கவில்லையாம். அதன் விளைவு, அந்த நடிகை மது பழக்கத்துக்கு அடிமையாகி விட்டாராம். போதை அதிகமானால், தனது நிலையை எண்ணி வாய்விட்டு அழுகிறாராம்! 
    தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர், கவர்ச்சியாக நடிப்பேன், ஆனால் அந்த காட்சி நோ என்று கூறிவருகிறாராம்.
    தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் முதன்மையானவராக இருக்கும் வீரமான நடிகை, தனக்கென ஒரு ஸ்டைல் வைத்துள்ளாராம். கம்பீரமான பீரியாடிக் படங்களாக இருக்கட்டும், ஆக்‌ஷன், கூல் கேர்ள், காமெடி என அனைத்து விதமான படங்களிலும் தன்னை நிரூபித்து வருகிறாராம். 

    அடுத்தடுத்து பல படங்களில் தொடர்ந்து நடித்துவரும் நடிகை படங்களை தேர்வு செய்வதில் மிகவும் கவனத்துடன் இருக்கிறாராம். மேலும் எந்த ஒரு மொழிப் படமாக இருப்பினும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முன்னரே, தான் முத்தக்காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று மிகவும் கண்டிப்புடன் கூறிவிடுகிறாராம். 

    இதுவரையில் நடிகை எந்த ஒரு திரைப்படத்திலும் முத்தக்காட்சிகளில் நடித்தது கிடையாதாம். அதை என்றும் நான் மாற்றி கொள்ளப்போவதில்லையாம். இதற்கு ஒப்புதல் அளிக்கும் படங்களில் மட்டுமே நடிப்பேன் என்று கண்டி‌ஷனாக தெரிவித்துள்ளாராம் நடிகை. 
    தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை, தன்னுடைய காதலரை மறக்க முடியாமல் தவித்து வருகிறாராம்.
    தமிழில் தளபதியாருடன் ஜோடி போட்ட நடிகை, வெளிநாட்டு பாய்பிரண்டுடன் காதல் கொண்டிருந்தாராம். இருவரும் லிவிங் டு கெதர் பாணியில் வாழ்ந்தார்களாம். நன்றாக போய் கொண்டிருந்த இவர்களுடைய காதலில் திடீர் என்று விரிசல் ஏற்பட்டு காதலை முறித்துக் கொண்டு இருவரும் பிரிந்தார்களாம். 

    காதல் பிரேக் அப் ஆகி சில மாதங்கள் ஆகியும் சோகத்தில் இருக்கும் நடிகை, பட வாய்ப்புகள் கிடைத்தால் எல்லாம் மறந்து போகும் என்று நினைத்தாராம். ஆனால், எதிர்பார்த்த படி எந்த பட வாய்ப்பும் வரவில்லையாம். இதனால் காதலரை மறக்க முடியாமல் தவித்து வருகிறாராம் நடிகை. 
    பிரபல இசையமைப்பாளர் போட்ட இசையை பிரம்மாண்ட இயக்குனர் கேட்டுவிட்டு மறுத்துவிட்டாராம்.
    பிரம்மாண்ட இயக்குனர் தற்போது உலகநாயகனை வைத்து ஒரு படம் இயக்கி வருகிறாராம். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம். இதற்கு ஒல்லியான இசையமைப்பாளர் இசையமைக்க ஒப்பந்தமானாராம். பட வேலைகள் முடிந்த பிறகுதான் இசையை பற்றி இயக்குனர் கேட்பார் என்று நினைத்தாராம். 

    ஆனால், இயக்குனர் முன்னதாகவே கேட்க அவசரமாக இசை போட்டு கொடுத்தாராம். இதை கேட்ட இயக்குனர் நன்றாகவே இல்லை என்று கூறிவிட்டாராம். கடுப்பான இசையமைப்பாளர் தற்போது மும்முரமாக வேலை பார்க்க ஆரம்பித்திருக்கிறாராம்.
    முதல் படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை, தற்போது வாய்ப்பில்லாததால் புது முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம்.
    முதல் படத்தில் கண்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்து மிகவும் பிரபலமான நடிகை, அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆனாராம். ஆனால், அந்த படங்கள் வெளியாகவில்லையாம். மேலும் புதிய பட வாய்ப்புகளும் நடிகைக்கு கிடைக்க வில்லையாம்.

    நடிகையை யாரும் மறந்து விடக்கூடாது என்பதற்காக புதிய புகைப்படங்களை அடிக்கடி சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகிறாராம். இதைப்பார்த்த சிலர் நடிகைக்கு வாய்ப்பில்லாமல் இப்படி செய்து வருகிறார் என்று பேசி வருகிறார்களாம்.
    ×