என் மலர்tooltip icon

    கிசுகிசு

    தமிழில் முன்னணி நடிகராக திகழும் பிரபலம் ஒருவர், சம்பளம் வாங்கிட்டு தான் நடிப்பேன் என தயாரிப்பாளர்களிடம் கறாராக சொல்லிவிட்டாராம்.
    மூன்றெழுத்து பெயர் கொண்ட நடிகர் நடித்து வந்த பல படங்கள் தோல்வியை தழுவியதால், சில தயாரிப்பாளர்கள் அவரிடம் பேசியபடி சம்பளம் கொடுக்காமல் டிமிக்கி கொடுத்தனராம். ஆனால் சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான நான்கெழுத்து படம் கோடிகளில் செஞ்சுரி அடித்து வசூல் மழை பொழிந்ததாம்.

    இதனால் தெம்பான அந்த நடிகர், இனி என்னை யார் ஒப்பந்தம் செய்ய வந்தாலும் முன்பணம் தரும்போதே முழு சம்பளத்தையும் தந்தாக வேண்டும் என்று கண்டிஷன் போடுகிறாராம். இதனால் அந்த நடிகரை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் தயங்குகிறார்களாம்.  
    தமிழில் சில படங்களில் நடித்து பிரபல நடிகை, அழகு, திறமை இருந்தும், முன்னணி நடிகையாக வரமுடிய வில்லை என்று வருத்தப்பட்டு வருகிறாராம்.
    தமிழில் வாட்டர் பறவையாக மிகவும் புகழ் பெற்ற நடிகை, நல்ல அழகு, நடிப்பு திறமை இருக்கிறது என்று பலரும் பாராட்டி இருக்கிறார்களாம். படப்பிடிப்பின்போது இவர் தனி ‘கேரவன்’ கேட்பதில்லையாம். பாதுகாப்புக்காக தடி தடியாக பாதுகாவலர்களை கேட்பதில்லையாம். அவர்களுக்கு சம்பளம் கொடுங்கள் என்று தயாரிப்பாளர்களை வற்புறுத்துவதில்லையாம். 

    இப்படி இருந்தும் நடிகைக்கு இன்னும் நட்சத்திர அந்தஸ்து கிடைக்கவில்லையாம். முன்னணி கதாநாயகியாக வர முடியவில்லையாம். பலர் பாராட்டி என்ன புரோஜனம் என்று வருத்தப்பட்டு வருகிறாராம் நடிகை.
    தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ள நடிகை, தற்போது பட வாய்ப்புக்காக அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம்.
    அழகு, திறமை இருந்தும் நார்த் மெட்ராஸ் நடிகை வாய்ப்பில்லாமல் திண்டாடி வருகிறாராம். பட வாய்ப்புகள் வந்து குவிய வேண்டுமானால் என்ன செய்யலாம்? என்று நண்பர்களுடன் அந்த நடிகை ஆலோசனை நடத்தினாராம். 

    அதன்பிறகு பிரபல நாயகர்களுக்கும், பெரிய பட அதிபர்கள் மற்றும் டைரக்டர்களுக்கும் வீட்டிலேயே விருந்து கொடுக்கும் முடிவுக்கு வந்து இருக்கிறாராம். இதையடுத்து வாய்ப்புகள் குவியும் என்ற நம்பிக்கையுடன் அந்த நடிகை காத்திருக்கிறாராம்.
    எந்த கேள்வி வேண்டுமானாலும் கேளுங்க... அந்த கேள்வி மட்டும் கேட்காதீங்க... என்று பிரபல நடிகை பலரிடம் சொல்லி வருகிறாராம்.
    தமிழ், தெலுங்கில் மிகவும் பிரபலமான நடிகை, தெலுங்கு நடிகரை காதல் திருமணம் செய்துக் கொண்டாராம். திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை விட்டுவிடுவார் என்று பலரும் எதிர்பார்த்தார்களாம். ஆனால், நடிகையோ நடிப்பதை விடாமல் தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தம் ஆகி வருகிறாராம்.

    திருமணம் ஆகி 2 வருடங்களுக்கு மேல் ஆகியும் நடிகையிடம் பலர் எப்போது உங்களுக்கு குழந்தை பிறக்கும் என்று கேட்கிறார்களாம். இதனால் கடுப்பான நடிகை, எந்த கேள்வி வேண்டுமானாலும் கேளுங்க... அந்த கேள்வி மட்டும் கேட்காதீங்க... என்று சொல்லுகிறாராம்.

    தொடர்ந்து பெரிய இயக்குநர்களின் படங்களில் நடித்தாலும், சரியாக படம் போகாததால் முன்னணி நடிகர் திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
    தொடர்ந்து பெரிய இயக்குநர்களின் படங்களில் நடித்தாலும், படங்கள் சரியாகப் போகாததற்கு என்ன காரணம் என அலசியிருக்கிறாராம் வெளிச்ச நடிகர். 'நாங்கள் சொல்லும் கதையில் உங்கள் டீமின் தலையீடு அதிகம் இருப்பதுதான் காரணம்' எனப் பலரும் சொல்லியிருக்கிறார்களாம். 

    இதனால், அடுத்து நடிக்கப்போகும் படத்தில் கதை மட்டும் கேட்டுவிட்டு மாற்றங்கள் எதுவும் சொல்லாமல் இயக்குநர்களின் விருப்பத்துக்கே விட்டுவிட்டாராம் நடிகர்.
    தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் மிகவும் பிரபலமான நடிகையை ஒரு பாடலுக்கு நடனம் ஆட கேட்டதற்கு, வழியில்லாமல் ஒப்புக் கொண்டிருக்கிறாராம்.
    தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் மிகவும் பிரபலமான நடிகை, கதையின் நாயகி, கதாநாயகி என நடித்து வருகிறாராம். இந்நிலையில், கன்னடத்தில் வெளியான படத்தில் ஒரு சிறப்பு பாடலுக்கு படுகவர்ச்சியாக நடனமாடி இருந்தாராம். இதற்கு பிறகு நடிகையை ஒரு பாடலுக்கு நடனம் ஆட பலரும் கேட்டார்களாம். ஆனால், நடிகை மறுத்துவிட்டாராம்.

    இந்நிலையில், தெலுங்கில் உச்ச நடிகர் நடித்து வரும் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட கேட்டார்களாம். உச்ச நடிகர் என்பதால் வழியில்லாமல் ஒப்புக் கொண்டு நடனமாடியுள்ளாராம். மீண்டும் பலர் ஒரு பாடலுக்கு நடனம் ஆட கேட்பார்கள் என்று நடிகை பயந்து வருகிறாராம்.
    தமிழில் சில படங்களில் நடித்து மிகவும் பிரபலமான இளம் நடிகர், நடிகைகளுக்கு விருந்து கொடுத்து மகிழ்கிறாராம்.
    கதாநாயகிகளிடம் கடலை போடும் கதாநாயகர்களில், முதல் இடத்தில் இருக்கிறாராம் சென்னை 28 டீமில் விளையாடியவர். இவர் கடலை போடுவதே தனி ஸ்டைலாம். அவருடைய மென்மையான அணுகுமுறையில், ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தி விடுகிறாராம்.

    அப்படி ஈர்ப்பில் கவிழும் நடிகைகளுக்கு தனது வீட்டில், ‘விருந்து’ கொடுத்து மகிழ்கிறாராம், அந்த நடிகர். இவருடன் நடித்த மற்ற நடிகர்கள் நமக்கு இந்த வாய்ப்பு கிடைக்க வில்லை என்று புலம்புகிறார்களாம்.
    திருமணத்துக்கு பின் சினிமாவில் நடிக்க தடை போடும் முயற்சியில் இறங்கிய காதல் கணவரை நடிகை எச்சரித்துள்ளாராம்.
    மூன்றெழுத்து இளம்நடிகர் ஒருவர் தனது காதலியை அண்மையில் கரம் பிடித்தாராம். திருமணத்துக்கு பின் காதல் மனைவி நடிப்பதற்கு பச்சை கொடி காட்டினாராம். ஆனால் மனைவி மற்ற நடிகர்களுடன் டூயட் பாடுவது அவருக்கு பிடிக்கவில்லையாம். அதனால், மனைவியை மீண்டும் நடிக்க அழைத்த இயக்குனர்களை தொடர்பு கொண்டு, ‘ அவர் இனிமேல் நடிக்க மாட்டார்....’ என சொல்லி வந்த வாய்ப்புகளை திருப்பி அனுப்பி விடுகிறாராம் அந்த நடிகர். 

    கணவரே தன் படங்களுக்கு ஆப்பு வைத்து வரும் செய்தி அறிந்த நடிகை கடுப்பாகிவிட்டாராம்.  இதையடுத்து, சினிமாவில் நடிக்க தடை போட்டால் கோர்ட்டு படியேறி விடுவேன் என்று நடிகரை கடுமையாக எச்சரித்துள்ளார், அம்மணி. இதனால் அந்த நடிகர் பீதியில் கிடக்கிறாராம். 
    பிரபல நடிகை ஒருவர் நகைச்சுவை நடிகருக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்று சொன்னதற்கு நோ நோ என்று சொல்லி விட்டாராம்.
    தமிழில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் நடிகையை பிரபல பட நிறுவனம் சமீபத்தில் சந்தித்து தங்கள் படத்தில் நடிக்க வேண்டும் என்று பேசினார்களாம். நடிகையும் பட இயக்குனரை சந்தித்து கதையை முழுமையாக கேட்டாராம். கதை நன்றாக இருக்கிறது. 

    கதாநாயகன் யார்? என்று இயக்குனரிடம் நடிகை கேட்க, அவர் ஒரு நகைச்சுவை நடிகரின் பெயரை சொன்னாராம். அவ்வளவுதான். நடிகைக்கு கோபம் வந்தது விட்டதாம். “பணம் கொடுத்தால் யாருடன் வேண்டுமானாலும் ஜோடியாக நடிப்பேன் என்று நினைத்தீர்களா? என்று ஆவேசமாக கேட்டு, நடிக்க மறுத்து விட்டாராம்!
    வில்லன் நடிகருக்கு ஒரு படம் செய்து கொடுங்கள் என்று டைரக்டரிடம் ஹீரோ சிபாரிசு செய்து வருகிறாராம்.
    சமீபத்தில் திரைக்கு வந்த இரண்டெழுத்து படம் வசூல் ரீதியிலும், விமர்சன ரீதியிலும் வெற்றி பெற்று இருக்கிறதாம். இந்த படத்தின் கதை முதலில் ஒரு வில்லன் நடிகரிடம் சொல்லப்பட்டதாம். பின்னர் அவர் மாற்றப்பட்டு, தம்பி நடிகர் ஒப்பந்தம் செய்யப்பட்டாராம்.

    படத்தின் வெற்றி, வில்லன் நடிகரை விரக்தி அடைய வைத்து விட்டதாம். நண்பர்களிடம் சொல்லி, சொல்லி வருத்தப்படுகிறாராம். இதை கேள்விப்பட்ட தம்பி நடிகர், “அந்த வில்லன் நடிகருக்கு ஒரு படம் செய்து கொடுங்கள்” என்று டைரக்டரிடம் சிபாரிசு செய்து இருக்கிறாராம்.
    நடிகர் ஒருவரின் படத்திற்காக விமான டிக்கெட் கேன்சல் செய்து கோடிக்கணக்கில் பணத்தை இழந்திருக்கிறதாம் படக்குழு.
    சங்க நடிகர் நடிப்பில் தற்போது அதிரடியாக படம் ஒன்று உருவாகியுள்ளதாம். இதன் படப்பிடிப்பு முழுவதும் வெளிநாட்டில் படமாக்கப்பட்டதாம். இந்த படத்தின் பட்ஜெட் ரூ.50 கோடிக்கும் மேலயாம். ஆனால், இந்த படத்தில் நடித்த கதாபாத்திரங்களுக்காக மூன்று முறை விமான டிக்கெட் புக் செய்து கேன்சல் செய்திருக்கிறார்களாம்.

    இதற்கான செலவு மட்டும் ரூபாய் 2 கோடிக்கும் மேல ஆனதாம். இதுபோல், பல தேவையற்ற செலவுகளை படக்குழுவினர்கள் செய்திருக்கிறார்களாம்.
    தமிழகத்தை சேர்ந்த பன்முகத்திறமை கொண்ட பிரபல நடிகர் புகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி உள்ளாராம்.
    தமிழகத்தில் பிறந்த நடிகர் ஒருவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து தனக்கென திரையுலகில் ஒரு இடத்தை உருவாக்கி வைத்துள்ளாராம். இவர் இயக்கம், தயாரிப்பு, பாடகர், கவிஞர் என பன்முகத்திறமை கொண்டவராம். 

    அந்த நடிகர் சமீபத்தில் தனது பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடினாராம். இந்த பிறந்தநாளையொட்டி குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி கொண்டாராம். அந்த புகைப்படத்தில் நடிகை ஒருவர் இருந்தது தான் சர்ச்சைக்கு காரணமாம். அந்த நடிகருக்கும் நடிகைக்கும் 23 வயது வித்தியாசமாம்.
    ×