என் மலர்
கிசுகிசு
கோலிவுட்டில் பல வெற்றிப்படங்கள் கொடுத்த எலைட் இயக்குனர் ஒருவர் இயக்கும் படத்தால் பல படங்கள் தள்ளிப்போகின்றனவாம்.
எலைட் இயக்குனர் இயக்கும் வரலாற்றுப் படத்தில் நடிக்க கேட்டதும் உடனே ஓகே சொல்லி மற்ற படங்களுக்கு கொடுத்த கால்ஷீட்டை இவருக்குக் கொடுத்துள்ளனர், நிறைய நாயகர்கள். இந்தப் படம் முடியும் வரை மற்ற படங்களில் அவர்கள் நடிக்க வாய்ப்பில்லையாம்.
அதனால் இவர்களை வைத்து படமெடுக்க இருந்த இயக்குனர்கள் அப்செட்டில் இருக்கிறார்களாம். சிலர் அதற்குள் வேறு படத்தை எடுக்கலாம் என முடிவெடுத்துவிட்டார்களாம்.
தமிழில் இரண்டு, மூன்று படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை, இந்தி படங்களில் நடிக்க கட்டுப்பாடு விதித்திருக்கிறாராம்.
முன்னணி நடிகர்களின் படங்களிலும், உச்ச நடிகர் படத்திலும் நடித்த நடிகைக்கும் இந்தி வாய்ப்பு வந்துள்ளதாம். இந்தி படமாக இருந்தாலும் ஒரு முக்கிய கட்டுப்பாடு விதித்து தான் நடிக்கிறாராம்.
தமிழ் பெண்களை கிண்டல் பண்ற மாதிரியான காட்சிகள் இருந்தால் நான் நடிக்க மாட்டேன் என கட்டுப்பாடு விதித்து தான் நடிக்க ஒப்பந்தமானாராம். இதைக் கேட்ட இந்தி பட இயக்குனர்கள், இந்த படத்தோட நடிகைக்கு இந்தி பட வாய்ப்பு கிடைக்காது என்று கூறி வருகிறார்களாம்.
தமிழில் ஒன்று இரண்டு படங்களில் நடித்து பிரபலமான நடிகை, ஒரு நடிகருடன் நெருங்கி பழகி நெருக்கடியில் சிக்கி இருக்கிறாராம்.
சின்னத்திரையில் இருந்து பெரியத்திரைக்கு வைத்திருக்கும் நடிகை, பட வாய்ப்புக்காக பலரிடமும் நெருங்கி பழகி வந்தாராம். இதன் விளைவாக குஷியான இயக்குனர், நடிகை மீது ஆசைப்பட்டு தூது அனுப்பினாராம். இதையறிந்த நடிகை, நீங்க எனக்கு அப்பா மாதிரி என்று சொல்லிவிட்டாராம்.
இந்த விஷயத்தை நினைத்து நடிகை மிகவும் வருந்தி வருகிறாராம். மேலும் பட வாய்ப்பு இல்லாவிட்டாலும் பரவாயில்லை, இனிமேல் எந்த நடிகருடனும் நெருங்கி பழக மாட்டேன் என்று முடிவு செய்து விட்டாராம்.
தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர், பிரபல இயக்குனர் ஒருவரை அதிக சம்பளம் கொடுத்து தன்வசமாக்க நினைக்கிறாராம்.
தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர், தற்போது இளம் இயக்குனர் படத்தில் நடித்து வருகிறாராம். இப்படத்திற்குப் பிறகு எந்த இயக்குனர் படத்தில் நடிக்கலாம் என்று யோசனையில் இருக்கிறாராம்.
சமீபத்தில் அசுர வெற்றி கொடுத்த இயக்குனரின் கையில் காமெடி நடிகர் நாயகனாக நடிக்கும் படமும், வெளிச்ச நடிகரின் படமும் இருக்கிறதாம். அதனால், பெரிய சம்பளம் கொடுத்து அந்த இயக்குநரை தன்வசம் இழுக்கப்பார்க்கிறாராம் நடிகர்.
தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் ஒருவர், யாராக இருந்தாலும் எனது கொள்கையை மாற்ற மாட்டேன் என்று திட்ட வட்டமாக சொல்லிவிட்டாராம்.
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிக்கும் படங்களின் விழாக்கள் மற்றும் புரமோஷனுக்கு கலந்துக் கொள்ளாமல் இருப்பதை தனது கொள்கையாக வைத்திருக்கிறாராம். அப்படி இருந்தும் நடிகையின் படங்கள் வெற்றிகரமாக ஓடி விடுகிறதாம்.
உச்ச நட்சத்திரத்திற்கு நடிகை ஜோடியாக நடித்திருக்கும் படத்தின் விழா சமீபத்தில் நடைபெற்றதாம். இதில் கலந்துக் கொள்ள படக்குழுவினர் நடிகையிடம் அணுகினார்களாம். உச்ச நட்சத்திரம் என்பதால் நடிகை விழாவில் கலந்துக் கொள்வார் என்று படக்குழுவினர் எதிர்பார்த்தார்களாம். ஆனால், நடிகையோ யாரா இருந்தாலும் என் கொள்கையை மாற்ற மாட்டேன் என்று சொல்லிவிட்டாராம்.
முன்னணி நடிகைகள் இரண்டு பேருக்கு இடையே ஏற்பட்டிருக்கும் மோதலுக்கு பிரபல முன்னணி நாயகன் காரணமாக இருக்கிறாராம்.
கோடம்பாக்கத்தில், 2 பிரபல கதாநாயகிகள் இடையே சத்தம் இல்லாமல் யுத்தம் நடந்து வருகிறது. அந்த நாயகிகளில் ஒருவர், மூன்றெழுத்து பிரபலம். இன்னொருவர், எல்லை தாண்டிய கேரள வசீகரம். இவர்களின் மோதலுக்கு காரணம், ஒரு முன்னணி நாயகன் என்கிறார்களாம்.
அவருடைய அன்பை பங்கிடுவதில்தான் கதாநாயகிகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறதாம். வெற்றி யாருக்கு? என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடுமாம்.
முன்னணி நடிகையாக இருப்பவர், தனது திருமணத்தை தள்ளிப்போட்டு வருவதால், அவரது காதலர் மிகவும் வருத்தத்தில் இருக்கிறாராம்.
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க வேண்டும் விரும்பி வருகிறாராம். அதே நேரத்தில் ரசிகர்களின் ‘கனவுக்கன்னி’யாகவும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாராம்.
இதனால்தான், டிசம்பரில் திருமணம் செய்துக் கொள்ளலாம் என்ற முடிவை மாற்றினாராம். மாறாக விரைவில் திருமணம் செய்துக் கொள்ளலாம் என்று காதலரிடம் சொன்ன அவர், சீக்கிரமாக செய்து கொண்டால், ‘கனவுக்கன்னி’ பட்டம் தன்னை விட்டுப் போய்விடும் என்று அச்சப்படுகிறாராம். இதனால் திருமணத்தை தள்ளிப்போட்டு வருகிறாராம். ஆனால், காதலரோ வருத்தத்தில் இருக்கிறாராம்.
தமிழில் ஒரு சில படங்களில் நடித்து பெயர் பெற்ற தமிழ் நடிகை, ஓவர் பந்தா காட்டி வருகிறாராம்.
ஒரு சில தமிழ் படங்களில் நடித்து பெயர் பெற்ற நடிகை, தமிழ் பெண்களுக்கு வாய்ப்பு இல்லை, அழகும் திறமையும் இருந்து என்ன பயன், என்று எங்கு சென்றாலும் புலம்பி தள்ளுகிறாராம்.
ஆனால், நடிகை தான் நடித்த படங்களின் விளம்பரத்துக்கு வர மறுக்கிறாராம். இப்படி இருந்தால் எப்படி வாய்ப்பு கிடைக்கும் என்றும், பேச்சில் ஒன்றும் குறையில்லை. ஆனால், ஓவர் பந்தா காட்டுகிறார் என்றும் பலரும் பேசி வருகிறார்களாம்.
தமிழில் உச்ச நடிகருக்கு ஜோடியாக நடித்த நடிகை ஒருவரின் நடவடிக்கைகள் தயாரிப்பாளர்களை பதற வைக்கிறதாம்.
உச்ச நடிகருடன் மூன்றெழுத்து படத்தில் ஜோடி சேர்ந்த அந்த மும்பை நடிகை, மீண்டும் சில மேல்தட்டு நடிகர்களுடன் நடிக்க முயற்சித்து வருகிறாராம். ஆனால் வாய்ப்பு கேட்க செல்லும்போது சில ஆண் நண்பர்களின் அரவணைப்புடன் செல்கிறாராம்.
இதை பார்த்து அதிர்ந்து போகும் தயாரிப்பாளர்கள் இப்போவே இப்படினா, படப்பிடிப்புக்கு வரும்போது இன்னும் ஒரு பெரிய படையோடு வந்திறங்குவாரோ..... என்ற பயத்தில் அம்மணியை விரட்டாத குறையாய் வெளியேற்றி வருகின்றனராம்.
தமிழில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவருக்காக அரசியல் நடிகர் பிரபல இயக்குனரிடம் சமரசம் பேச முடிவு செய்திருக்கிறாராம்.
மன்னர் படத்தின் அடுத்த பாகம் குறித்த பஞ்சாயத்தில் புயல் நடிகருக்கும் பிரம்மாண்ட இயக்குனருக்குமிடையே மிகுந்த மனக்கசப்பு இருந்தபோதிலும், சமீபமாக நடந்த அரசியல் நடிகரின் விழாவில் புயல் பேசுவதை ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தாராம் பிரம்மாண்ட இயக்குனர்.
இதற்கிடையில், புயல் நடிகருக்கும் பிரம்மாண்ட இயக்குனருக்குமிடையே சமரசம் செய்து வைக்கும் பணியில் மும்முரமாக இருக்கிறாராம் அந்த அரசியல் நடிகர்.
உச்ச நடிகரின் படத்திற்கு இளம் இசையமைப்பாளர் இசை அமைத்த பாடலை நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்களாம்.
தற்போதெல்லாம் எந்த பாட்டு வந்தாலும் அது எந்த பாடலின் சாயலில் இருக்கிறது என நெட்டிசன்கள் உடனே கண்டுபிடித்து விடுகிறார்கள். அந்த வகையில், அண்மையில் வெளியான உச்ச நடிகரின் பாடல் தான் தற்போது நெட்டிசன்கள் வசம் சிக்கியுள்ளதாம்.
இளம் இசையப்பாளர் இசை அமைத்த அந்த பாடல், கேட்ட உடன் பிடிக்கும் வகையில் இருந்தாலும், எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே என தோனவும் வைத்ததாம். இதையடுத்து நெட்டிசன்கள் வலைவீசி தேடியதில் அது பக்தி பாடலின் மெட்டுகளோடு ஒன்றிப்போவதை கண்டுபிடித்து, கலாய்த்து வருகிறார்களாம். இது தொடர்பான மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் உள்ளதாம்.
படத்தில் ஒப்பந்தம் ஆகி, படப்பிடிப்பு வராமல் இருந்த நடிகர், மீண்டும் வருகிறேன் என்று சொல்லி வராமல் தயாரிப்பாளரை புலம்ப வைத்திருக்கிறாராம்.
தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வரும் வம்பு நடிகர், கடைசியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனாராம். ஆனால், குறிப்பிட்ட நாளில் படப்பிடிப்புக்கு வராமல் அந்த படம் நிறுத்தப்பட்டதாம். ஒரு வழியாக சமரசம் செய்து படப்பிடிப்புக்கு வர சம்மதம் தெரிவித்தாராம்.
சபரிமலைக்கு மாலை போட்ட பிறகு, தனது நடவடிக்கையை மாற்றிக் கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் தன் பாணியிலேயே செயல்படுகிறாராம். இதனால் நடிப்பதற்காக வம்பு தேதி கொடுத்துள்ள படத்தின் தயாரிப்பாளர் அந்த கடவுள் தான் காப்பாத்தணும் என்று நொந்துபோய் புலம்புகிறாராம்.






