என் மலர்
கிசுகிசு
கோலிவுட் நடிகைகளிடம் நெருக்கமான நட்பில் இருந்த நடிகர், திருமணத்துக்கு பின் பேச்சை குறைத்துள்ளாராம்.
எல்லா கதாநாயகிகளுடனும் நெருக்கமான நட்பில் இருந்த ‘கடவுள்’ நடிகர், திருமணத்துக்குப்பின் தன் சுபாவத்தை மாற்றிக் கொண்டார். முன்னணி கதாநாயகிகளை கண்டால், முகம் திருப்பிக் கொள்கிறாராம்.
எந்த ஒரு கதாநாயகியிடமும் அவர் முகம் கொடுத்து பேசுவதில்லையாம். இதற்கு காரணம், அவருடைய காதல் மனைவிதான் என்று கோடம்பாக்கம் முழுவதும் கிசுகிசுக்கிறார்கள்.
கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என பல மொழிகளில் கலக்கி வரும் நடிகை ஒருவர் அந்த இடத்திற்கு ஆசைப்படுகிறாராம்.
உச்ச நடிகையும், மூன்றெழுத்து நடிகையும் கடந்த 15 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில், ஓஹோ என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்களாம். இப்போதைக்கு இருவரும் நடிப்பில் இருந்து ஓய்வு பெற மாட்டார்கள் என்பது உறுதியாகி விட்டது.
எப்போது இரண்டு பேரும் ஓய்வு பெறுவார்கள்? என்று சில முன்னணி நாயகிகள் காத்திருக்கிறார்களாம். அவர்களில் ‘கீ’ நடிகையும் ஒருவராம். முதல் இரண்டு இடத்தில் ஏதாவது ஒன்றை கைப்பற்றி விடவேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறாராம்.
தமிழில் பல படங்களில் நடித்து சினிமாவில் இருந்து விலகி இருந்த நடிகை, தற்போது ரீஎன்ட்ரிக்காக கொடுப்பதற்காக பார்ட்டி செல்லுகிறாராம்.
மஞ்சள் நிற புடவை கட்டி ஆட்டம் போட்ட நடிகை, திருமணம் செய்துக் சினிமாவை விட்டு விலகி இருந்தாராம். கணவர், குழந்தைகள் என்று வாழ்ந்து வந்த நடிகைக்கு தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வம் வந்துவிட்டதாம்.
இதன் முதல் முயற்சியாக பார்ட்டிகளில் கலந்துக் கொண்டு வருகிறாராம். அதோடுமட்டுமில்லாமல், குடிக்கும் புகைப்படத்தை எடுத்து பார்ட்டி தயார் என்று சொல்லும்படி தூது அனுப்பி உள்ளாராம். மேலும் முன்னணி நடிகர்களுக்கு பார்ட்டி கொடுக்கவும் முடிவு செய்துள்ளாராம்.
தமிழ், தெலுங்கில் நடித்து வந்த பிரபல நடிகை, பல பட வாய்ப்புகளை மேனேஜரால் இழந்ததாக கூறியிருக்கிறார்.
தமிழில் அண்ணன், தம்பி நடிகர்களுடன் ஜோடி போட்ட நடிகைக்கு பெரியதாக வாய்ப்புகள் எதுவும் கிடைக்க வில்லையாம். அதுபோல் தெலுங்கில் நடிகை நடித்த படங்கள் எதுவும் சரியாக ஓடவில்லையாம். இதனால் மனமுடைந்த நடிகை நல்ல கதைகளை தேர்வு செய்ய வேண்டும் என்று முயற்சியில் இறங்கினாராம்.
ஆனால், பல கதைகளை தன்னுடைய மேனேஜர் நிராகரித்து விட்டதாக நடிகைக்கு தகவல் கிடைத்ததாம். இதனால், கோபமடைந்த நடிகை அவரால் தான் பல பட வாய்ப்புகளை இழந்ததாக கூறி அவரை வேலையை விட்டு நிறுத்தி விட்டாராம்.
கதையில் தனக்கு ஏற்றார் போல் நடிகர் மாற்றம் செய்ய சொன்னதால், இயக்குனர் குழு வைத்து ஸ்கிரிப்ட்டை மாற்றி வருகிறாராம்.
தளபதியாரை வைத்து தொடர்ந்து படங்கள் இயக்கி வந்த இயக்குனர், அடுத்ததாக பால்வுட்டில் பிரபல நடிகரை வைத்து படம் இயக்க இருக்கிறாராம். இயக்குனர் சொன்ன கதை அவருக்கு பிடித்திருந்தாலும் அதில் நிறைய மாற்றங்களை சொல்லி இருக்கிறாராம் நடிகர். அத்துடன் திரைக்கதையில் பல்வேறு மாற்றங்கள் செய்யும்படியும் இந்த கதையை மேலும் மெருகேற்றும்படியும் கறாராக கூறியிருக்கிறாராம்
அந்த மாற்றங்களையெல்லாம் செய்தால்தான் இதில் நடிக்க முடியும் என்றும் நடிகர் சொல்லிவிட்டாராம். இதனால் ஸ்கிரிப்ட்டை மாற்றியமைக்க ஒரு குழுவை நியமித்து வேகமாக வேலை பார்த்து வருகிறாராம் இயக்குனர்.
சொன்ன கதையில் மாற்ற செய்ய சொன்னதால் வேறு நடிகரை ஒப்பந்தம் செய்திருக்கிறாராம் இயக்குனர்.
தமிழில் முன்னணி இயக்குனராக இருக்கும் அந்த பொல்லாதவர், அடுத்ததாக தளபதியாரை வைத்து படம் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியானதாம். ஆனால், இயக்குனர் சொன்ன கதை நடிகருக்கு பிடித்தது உண்மையாம்.
ஆனால், கதையில் சில மாற்றங்களைச் செய்யச் சொல்லி நடிகர் கட்டாயப் படுத்தினாராம். இதை கேட்ட, இயக்குனர் யோசிப்பதாகச் சொல்லிவிட்டு வந்திருக்கிறாராம். தற்போது வேறு நடிகரை வைத்து படம் இயக்க ஆரம்பித்துவிட்டாராம்.
ஒரு படம் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற நடிகை, தற்போது பட வாய்ப்புக்காக கவர்ச்சிக்கு மாறியிருக்கிறார்.
ஒரு படத்திலேயே புகழின் உச்சிக்கு சென்ற நடிகைக்கு எந்த பட வாய்ப்பும் கிடைக்க வில்லையாம். இதுவரைக்கும் பல நூறு கதைகளை கேட்ட நடிகை எந்த கதையும் பிடிக்கவில்லை என்று கூறிவிட்டராம். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மலையாளத்தில் பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறாராம்.
இதன்பின் நடிகையை சந்தித்த பலர் இப்படி இருந்தால் நிலைக்க முடியாது என்று கூற, நடிகை மனம் மாறி பட வாய்ப்புக்காக தற்போது கவர்ச்சியான போட்டோக்களை எடுத்து இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறாராம். இதைப்பார்த்த பலரும் நடிகை இப்படி மாறி விட்டாரே என்று பேசி வருகிறார்களாம்.
ஒரு காலத்தில் மிகப்பெரிய இயக்குனராக இருந்து பலரை சிறந்த நடிகராக உருவாக்கியவர், தற்போது தன் மகனை நினைத்து புலம்பி வருகிறாராம்.
ஒரு காலத்தில் மிகப்பெரிய இயக்குனராக இருந்தவர், முருங்கைக்காய் பார்ட்டி. ஆனால், அவரது மகனை ஒரு நடிகராக உருவாக்க முடியவில்லையாம். விளைவு, தற்போது ஓரிரு, ஹிட் படங்களை கொடுத்த இளவட்ட இயக்குனர்களை தொடர்பு கொண்டு, மகனை வைத்து படம் இயக்குமாறு கேட்டு வருகிறாராம்.
அதோடு ஒரு காலத்தில் கல்லை கூட சிற்பமாக்கியவன் நான். இப்போது என் மகனை, என்னால் சிற்பமாக்க முடியவில்லையே என்று புலம்பி வருகிறாராம்.
நடிகை ஒருவர் ‘நான் தொட்டதெல்லாம் தங்கமாக மாறும்’ என்று சொல்லி நெட்டிசன்களிடம் கலாய் வாங்கிய இருக்கிறாராம்.
அழகிப்போட்டி நடத்துவதாக கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை, பெரிய முதலாளி வீட்டுக்குச் சென்று அங்கேயும் பல பஞ்சாயத்துகள், பிரச்சனைகள் என்று சிக்கினாராம். வெளியே வந்த பிறகும் கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிட்டு வரும் நடிகை, தற்போது நான் தொட்டதெல்லாம் தங்கமாக மாறும் என்று சொல்லி நெட்டிசன்களிடம் மாட்டிக்கொண்டாராம்.
நடிகையின் இந்த பதிலுக்கு எங்கள் வீட்டில் வந்து தொடுங்கள், என்னை தொடுங்கள் என்று நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து பயங்கரமாக கலாய்த்திருக்கிறார்களாம்.
தமிழில் முன்னணி நடிகையாக இருப்பவரிடம் கவர்ச்சியாக நடிக்க கேட்டதற்கு, அந்த அளவுக்கு நடிக்க மாட்டேன் என்று படக்குழு மீது கோபப்பட்டிருக்கிறார்.
புதிதாக தயாராக இருக்கும் ஒரு தமிழ் படத்துக்கு ‘தழுக்...மொழுக்’ என்று வசீகர உடற்கட்டை கொண்ட ஒரு கதாநாயகி தேவைப்பட்டாராம். யாரை நடிக்க வைக்கலாம்? என்று படக்குழுவினருடன் தயாரிப்பாளர் ஆலோசனை நடத்தினாராம்.
எல்லோரும் ஒருமித்த குரலில், ‘அங்காடி’ நாயகியின் பெயரை சொன்னார்களாம். அவரையே தயாரிப்பாளரும் ஒப்பந்தம் செய்தாராம். படப்பிடிப்பும் தொடங்கியது. முதல்நாள் படப்பிடிப்பிலேயே ‘அங்காடியிடம்’ ஒரு கால் சட்டையை கொடுத்து அணிந்து வர சொன்னார்களாம். நொந்து போனார், ‘அங்காடி.’
“இந்த அளவு கவர்ச்சியாக நடிக்க முடியாது. நான் வாங்கிய முன்பணத்தை திருப்பிக் கொடுத்து விடுகிறேன்...” என்றாராம். இருதரப்பினர் இடையே இப்போது சமரசம் ஏற்படுத்தும் முயற்சிகள் நடைபெறுகின்றதாம்!
பிரபல நடிகர் ஒருவர் நடித்த பிரம்மாண்ட திரைப்படம் பிளாப் ஆனதால், அடுத்த படத்திற்காக கதை சொல்ல வரும் இயக்குனர்களுக்கு கண்டிஷன் போடுகிறாராம்.
தான் நடித்த பிரம்மாண்ட பட்ஜெட் படம் பிளாப் ஆனதால் விரக்தியில் இருக்கும் பிரபல நடிகர், தன் அடுத்த ஸ்டெப் பயங்கரமாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறாராம். இதற்காக மற்ற மொழிகளில் சிறப்பாக செயல்பட்டுவரும் இயக்குனர்களை சந்தித்து பேசி வருகிறாராம்.
தவிர, வெப் தொடரிலும் கலக்கும் இயக்குனர்களிடமும் கதை கேட்டுள்ளாராம். ஆனால் அது ரீமேக் படமாக இருக்க கூடாது என இயக்குனர்களிடம் கண்டிஷன் போடுகிறாராம். நடிகரின் இந்த கண்டிஷனால் சில இயக்குனர்கள் ஜகா வாங்குகிறார்களாம்.
அவருடன் நடித்தால் மட்டும் சம்பளத்தை குறைப்பேன் என்று முன்னணி நடிகை ஒருவர் நிபந்தனை ஒன்றை விதித்திருக்கிறாராம்.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நாயகியாக இருக்கும் வாரிசு நடிகை தனது சம்பளத்தை ஒரு கோடியே இருபத்தைந்து லட்சமாக உயர்த்தி விட்டாராம். அவரை ஒப்பந்தம் செய்ய ஒரு தயாரிப்பாளர் சென்றாராம்.
சம்பளம் தொடர்பாக இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினார்களாம். சம்பளத்தை கொஞ்சம் குறைத்துக் கொள்ளும்படி, தயாரிப்பாளர் கேட்க, அதற்கு ‘வாரிசு’ நடிகை ஒரு நிபந்தனை விதித்தாராம். “ஹீரோவாக அந்த ‘சிவ’ நடிகரை ஒப்பந்தம் செய்யுங்கள். இருபத்தைந்து லட்சத்தை குறைத்துக் கொள்கிறேன்” என்றாராம், ‘வாரிசு.’
இரண்டு பேருக்கும் இடையே என்ன உடன்பாடோ? என்று தயாரிப்பாளர் புலம்பிக் கொண்டே சென்றாராம்.






