என் மலர்
கிசுகிசு
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் சொன்ன உண்மையை மறைக்க போராடி வருகிறாராம்.
வெற்றி படங்களில் நடித்து வந்த வாரிசு நடிகையின் சமீபத்திய திரைப்படம் சரியாக ஓடவில்லையாம். இதையடுத்து நல்ல கதைகளை தேடி வரும் நடிகை தனக்கு தெரிந்தவர்களிடம் நானே ஒரு படத்தை தயாரிக்க போகிறேன் என்று சொல்லி இருக்கிறாராம். இந்த விஷயம் காட்டுத்தீ போல் பரவி நடிகைக்கு வேட்டு வைக்கும் அளவிற்கு வந்து விட்டதாம்.
என்கிட்ட பணம் இல்லை. நான் அப்படி சொல்லவே இல்லை. அது பொய் என்று சொல்லி வருகிறாராம். இருந்தாலும் அதை அனைவரும் ஏற்க மறுக்கிறார்களாம். விளையாட்டாக சொல்ல போய் இப்படி ஆகிவிட்டதே என்று புலம்பி வருகிறாராம் நடிகை.
நடிகைக்கு இன்னும் வேணும்... இதெல்லாம் பத்தாது என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் புலம்பி வருகிறார்களாம்.
கோமாளியான நடிகை ஒருவர் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறாராம். இதைப் பார்த்த பலர் ரசித்தாலும், சிலருக்கு முகம் சுழிக்கவும் செய்கிறார்களாம். குறிப்பாக இவர் அரைகுறை ஆடையில் ஆடும் நடனத்தை பலரும் விரும்ப வில்லையாம்.
இந்நிலையில், நடிகை பொது இடத்தில் இதுபோன்று ஆடியதால் அதைப்பார்த்த பொதுமக்கள், நடிகையிடம் சண்டைக்கு சென்றிருக்கிறாராம். இதை அவர் பதிவு செய்ய, நெட்டிசன்கள் இது உங்களுக்கு பத்தாது... இன்னும் வேணும் என்று சிலர் கூறியிருக்கிறார்களாம்.
முன்னணி நடிகை ஒருவர் தான் நிராகரித்த கதைகளை மீண்டும் கேட்டு நடிக்க முடிவு செய்து இருக்கிறாராம்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த வீரமான நடிகைக்கு தற்போது பட வாய்ப்புகள் குறைந்து விட்டதாம். இவருடைய நெருங்கிய தோழிகள் பலரும் கைவசம் நிறைய படங்களை வைத்திருக்கிறார்களாம். இது நடிகைக்கு கடுப்பாகி இருக்கிறதாம்.
இதனால் நடிகை நிராகரித்த பல கதைகளை மீண்டும் கேட்டு வருகிறாராம். கைவசம் படம் இருந்தால்தான் நண்பர்கள் மதிப்பார்கள் என்று நினைத்து நடிகை இப்படி செய்து வருகிறாராம்.
எவ்வளவு பணம் கொடுத்தாலும் அங்கு மட்டும் செல்ல மாட்டேன் என்று நடிகை ஒருவர் கூறியிருக்கிறாராம்.
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்த நடிகை, காதலருடன் ஏற்பட்ட பிரச்சனையால் மிகவும் பிரபலமாகி விட்டாராம். இவருக்கு மிகவும் பிரபலமாக வேண்டும் என்று ஆசை இருக்கிறதாம். அதற்காக எதாவது செய்து கொண்டே இருக்கிறாராம். ஆனால், எதுவும் பலன் அளிக்கவில்லையாம்.
இந்நிலையில், நடிகையை பெரிய முதலாளி வீட்டிற்கு அழைக்கிறார்களாம். ஆனால், நடிகை செல்ல மறுக்கிறாராம். அதிக பணம் கொடுக்கிறோம் என்று கூறியும் நடிகை செல்ல மறுக்கிறாராம். அவரது காதலர் அங்கு சென்றதால் தான் காதல் பிரிந்ததாம். அதனால் தான் செல்ல மறுக்கிறார் என்று பலரும் பேசி வருகிறார்களாம்.
பிரபல நடிகை ஒருவர் அவர்களுடன் சேர்ந்து நடிக்க மாட்டேன் என்று திடீர் முடிவு ஒன்றை எடுத்து இருக்கிறாராம்.
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர், தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து வருகிறாராம். இது நடிகைக்கு மிகவும் பிடித்து விட்டதாம். மேலும் சம்பளமும் அதிகமாக கிடைக்கிறதாம்.
இதனால் நடிகை திடீர் முடிவு ஒன்றை எடுத்து இருக்கிறாராம். அதாவது இனிமேல் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பேன் என்று கூறிவருகிறாராம். ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்க மாட்டேன் என்று கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் கூறி வருகிறாராம்.
கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என கொடிகட்டி பறக்கும் நடிகை ஒருவர், குறிப்பிட்ட நடிகருடன் நடிக்க ஒரு கோடி கேட்கிறாராம்.
நடன இயக்குனராக இருந்து நாயகன் ஆனவர் நடிக்க இருக்கும் ஒரு புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக, ‘த’ நடிகையை கேட்டார்கள். “ஒரு கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தால் நடிக்கிறேன்” என்று நிபந்தனை விதித்தார், அந்த நாயகி. “சம்பளத்தை கொஞ்சம் குறைத்துக் கொள்ளக் கூடாதா?” என்று கேட்டார், தயாரிப்பாளர்.
வேறு ஒரு ஹீரோ என்றால் ரூ.75 லட்சம் போதும். ‘இவர்,’ பாடல் காட்சியில் கஷ்டமான நடன அசைவுகளை கொடுத்து, பிழிந்து எடுத்து விடுவார். அதற்காகத்தான் பெரிய சம்பளம் கேட்கிறேன்” என்றாராம், அந்த நடிகை. அவருக்கு அவ்வளவு சம்பளம் கொடுக்க வேண்டுமா என தயாரிப்பாளர் யோசிக்கிறாராம்.
படிக்கும் போதே முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்க ஆசைபட்டிருக்கிறாராம்.
படிக்கும் போதே கதாநாயகியாக அறிமுகமான யானை நடிகை, படிப்பில் கவனம் செலுத்தாமல் நடிப்பில் கவனம் செலுத்தி பல படங்களில் நடித்து வந்தாராம். இதனால் படிப்பை கோட்ட விட்ட நடிகை, கல்லூரி முடித்த பிறகு மீண்டும் நடிக்கலாம் என்ற முடிவுக்கு வந்தாராம்.
தற்போது படிப்பு முடிந்து விட்டதால் மீண்டும் நடிக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறாராம். இதற்காக புதிய புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் பரவ விட்டிருக்கிறாராம். மேலும் தெரிந்த இயக்குனர்கள், நடிகர்களுக்கு புகைப்படங்களை அனுப்பி வாய்ப்பு கேட்டு வருகிறாராம்.
ஒரு படத்திலாவது ஜோடியாக நடிக்க வேண்டும் என்று முன்னணி நடிகையாக வலம் வருபவர் பிரபல நடிகரிடம் வாய்ப்பு கேட்டிருக்கிறாராம்.
தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் வாரிசு நடிகை, தற்போது தெலுங்கு படங்களில் நடிக்க ஆர்வம் காண்பித்து வருகிறாராம். இவர் கேட்கும் சம்பளத்தை கொடுக்க அங்கிருக்கும் தயாரிப்பாளர்கள் முன் வருகிறார்களாம்.
இதை தெரிந்துக் கொண்ட நடிகை தெலுங்கு பக்கம் கொஞ்ச நாள் போய்விடலாம் என்று முடிவு செய்து இருக்கிறாராம். மேலும் தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவரிடம் நேரடியாகவே உங்களுடன் ஒரு படத்திலாவது ஜோடியாக நடிக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறாராம். நடிகரும் பார்க்கலாம் என்று சொல்லி விட்டு சென்றிருக்கிறாராம்.
தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் தமிழில் முன்னணி நடிகர்களுக்கு வலை வீசி வருகிறாராம்.
தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர், தமிழில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து இருக்கிறாராம். இவருக்கு என்று அதிக ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறதாம். அதனால் நடிகை தமிழில் முன்னணி நடிகையாக வேண்டும் என்று ஆசை இருக்கிறதாம்.
இதற்காக ஒரு தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி நடித்து விட்டாராம். ஆனால் படம் இன்னும் வெளியாகததால் வருத்தத்தில் இருக்கிறாராம். இதனால், முன்னணி நடிகர்களுக்கு வலை வீசி வருகிறாராம்.
முன்னணி நடிகர் ஒருவர் படப்பிடிப்பிற்கு வர மறுத்ததால் இயக்குனர் திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம்.
தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் ஓ நடிகர், ஸ்டைலிஷான இயக்குனர் படத்தில் நடித்து வந்தாராம். இந்த படத்தின் படப்பிடிப்பு 90 சதவிகிதம் முடிந்துவிட்டதாம். இந்நிலையில் நடிகர் படப்பிடிப்புக்கு வர மாட்டேன் என்று கூறியிருக்கிறாராம்.
காரணம் கேட்டால் நடிகருக்கு சம்பள பாக்கி 3 கோடி இருக்கிறதாம். அதைக் கொடுத்தால் தான் படப்பிடிப்புக்கு வருவேன் என்று கூறியிருக்கிறாராம். இதனால் அதிர்ச்சி அடைந்த இயக்குனர் நடிகர் இல்லாமலே படப்பிடிப்பை நடத்த முடிவு செய்திருக்கிறாராம்.
தமிழில் தற்போது வளர்ந்து வரும் நடிகர் ஒருவர், பல தயாரிப்பாளர்களுக்கு வலை வீசி வருகிறாராம்.
தற்போது பல படங்களை கைவசம் வைத்திருக்கும் வாரிசு நடிகர், தனது சம்பளத்தை கணிசமாக உயர்த்தி உள்ளாராம். கதை நன்றாக இருந்தால் போதும் சம்பளம் பெரிய விஷயம் இல்லை என்று கூறிவந்த நடிகர், தற்போது சம்பளம் தான் முக்கியம் என்று கூறிவருகிறாராம்.
மேலும் தற்போது உறவினர் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறாராம் நடிகர். ஆனால், இந்த படத்திற்கு தயாரிப்பாளர் கிடைக்க வில்லையாம். இதற்காக பல தயாரிப்பாளர்களுக்கு போன் செய்து, நல்ல கதை மாஸ் இயக்குனர் இருக்கிறார், நான் நடிக்கும் படத்தை தயாரிக்க வாருங்கள் என்று அழைக்கிறாராம். இதற்கு தயாரிப்பாளர்களோ உறவினருடன் சேர்ந்து பணத்தை வீணடித்து விடுவாரோ என்று நடிகரை நம்ப பயப்படுகிறார்களாம்.
பிரபல நடிகர் ஒருவர் அங்க மட்டும் என் படம் ரிலீஸ் ஆகட்டும் என்று அலம்பல் செய்து வருகிறாராம்.
மூன்றெழுத்து பெயர் கொண்ட நடிகர் காதலான படத்தின் மூலம் மிகவும் பெயர் பெற்றாராம். தொடர்ந்து தமிழில் நல்ல படங்கள் நடித்தாலும் முன்னணி நடிகர் அந்தஸ்தை அவரால் பெற முடியவில்லையாம்.
நடிகர் தற்போது பாலிவுட் படம் ஒன்றில் பிரபல நடிகருடன் இணைந்து நடித்து வருகிறாராம். பாலிவுட் சென்றதால் தனது ரூட் மாறி விட்டது என்று பேசி வருகிறாராம். மேலும் பாலிவுட் படம் வெளியானதாம் தனது ரேஞ் வேற மாதிரி மாறிவிடும் என்று கூறிவருகிறாராம். இதை பார்ப்பவர்கள் எல்லாம் நடிகரின் அலம்பல் தாங்க முடியவில்லை என்று பேசிவருகிறார்களாம்.






