என் மலர்
கிசுகிசு
முதல் படத்திலேயே புகழ் பெற்ற நடிகை வாய்ப்பு இல்லாததால் தன்னுடைய முடிவை மாற்றிக் கொண்டிருக்கிறார்.
காதலான படத்தில் நடித்து புகழின் உச்சிக் சென்ற நடிகை, அதன்பிறகு பெரியதாக எந்த பட வாய்ப்பும் கிடைக்கவில்லையாம். காமெடி நடிகருக்கு, சிறப்பு கதாபாத்திரம் என்று நடிகைக்கு அழைப்பு வந்ததாம். நடிகையும் ஒரு சில படங்களில் நடிக்க, தொடர்ந்து அதுபோல் கதாபாத்திரம் வரவே படங்களில் நடிக்காமல் இருந்தாராம்.
காத்திருந்து காத்திருந்து எந்த பலனும் கிடைக்காததால் தற்போது சின்னத்திரை பக்கம் சென்றிருக்கிறாராம். பட வாய்ப்பு இல்லாததால் நடிகை இந்த முடிவை எடுத்திருக்கிறாராம். ஆனால், கேட்பவர்களிடம் மாற்றத்திற்காகத்தான் இந்த மாதிரி நடிக்கிறேன் என்று கூறிவருகிறாராம்.
தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகைக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதால் புதிய படங்களில் நடிக்க மறுத்து வருகிறாராம்.
வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்ற படத்தின் இரண்டாம் பாகம் ஒன்று தயாராக இருக்கிறதாம். இந்த படம் ஏற்கனவே மிகப்பெரிய வெற்றியை பெற்றதால் தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில், ரீமேக் செய்யப்பட்டதாம்.
தற்போது இரண்டாம் பாகத்தில் பிரபல நடிகர் ஒருவர் ஒப்பந்தம் ஆகியிருக்கிறாராம். கதாநாயகியாக நடிக்க பிரபல நடிகையிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாம். அதற்கு நடிகை மறுத்து விட்டாராம். தனக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும், அதனால் புதிய படங்களை ஏற்கவில்லை என்று அவர் கூறியதாகவும் சொல்லப்படுகிறதாம்.
கோலிவுட், டோலிவுட் என கொடிகட்டி பறந்த நடிகை ஒருவர் பட வாய்ப்புக்காக தனது ரூட்டை மாற்றி உள்ளாராம்.
தன்னை தல, தளபதி நடிகர்கள் கழட்டி விட்டுள்ள நிலையில், இரண்டாம் தட்டு நடிகர்களின் ஆஸ்தான நாயகியாகும் முயற்சியில் இறங்கியுள்ளாராம் ஸ்வீட் கடை பெயர் கொண்ட நடிகை.
இதற்கு முன்பு, அதுபோன்ற நடிகர்களை தீண்டத்தகாதவர்களை போன்று துரத்தியடித்த நடிகை, இப்போது அவர்களிடம் வலிய சென்று பேசி வருகிறாராம்.
இப்படி செய்தால் தான் இன்னும் சில ஆண்டுகள் நடிகையாக நிலைத்து இருக்க முடியும் என்பதற்காக அந்த நடிகை அத்தகைய முடிவு எடுத்துள்ளதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.
பிரபல நடிகர் ஒருவர், தான் எதிர்பார்த்ததை விட அதிகம் கிடைத்திருப்பதால் சந்தோஷத்தில் இருக்கிறாராம்.
ஒரு காதல் படத்தில் அறிமுகமான மூன்றெழுத்து நாயகனை வைத்து படம் தயாரிக்க, துபாயில் எண்ணெய் கிணறு வைத்திருக்கும் தொழில் அதிபர் வந்தாராம். பட வாய்ப்புகளே இல்லாமல் வீட்டில் சும்மா இருந்த நடிகருக்கு வாயெல்லாம் பல். தொழில் அதிபரை சிரித்தபடி வரவேற்றாராம். தயாரிப்பாளர் துபாய்க்காரர் என்பதால் ரூ.25 லட்சம் சம்பளம் கேட்கலாம் என்று மனதுக்குள் கணக்கு போட்டாராம், ஹீரோ.
தொழில் அதிபரோ, “ரூ.45 லட்சம் கொடுக்கிறேன். ஒரே கட்டமாக படத்தை முடித்துக் கொடுத்து விடுங்கள்” என்று கூறி, முன்பணமாக ரூ.25 லட்சத்தை எடுத்து கொடுத்தாராம். எதிர்பார்த்ததை விட அதிகமாகவே கிடைத்திருக்கிறது என்று நடிகர் சந்தோஷத்தில் இருக்கிறாராம்.
டோலிவுட், கோலிவுட் என எங்கு சென்றாலும் பரபரப்புக்கு பஞ்சமில்லாத நடிகை ஒருவர், நடிகர் ஒருவரை மிரட்டி உள்ளாராம்.
அந்த ‘ஸ்ரீ’ நடிகையிடம் மெதுவாக நூல் விட்டு பார்த்தார், ஒரு தெலுங்கு நாயகன். புரிந்து கொண்ட அந்த நடிகை, “மீ டூ பற்றி உங்களுக்கு தெரியுமா?” என்று கேட்டுவிட்டு, “எனக்கு போலீசில் தெரிந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்” என்றாராம்.
உடனே அந்த கதாநாயகன், “நீ எனக்கு சகோதரி மாதிரி... உனக்கு என்ன உதவி வேண்டுமானாலும் என்னிடம் கேள்” என்று ‘பல்டி’ அடித்தாராம். அவருடைய திடீர் பாசத்தை பார்த்து உள்ளுக்குள் சிரித்தபடி, வெளியில் முறைப்பை காட்டினாராம், நடிகை.
உடனே அந்த கதாநாயகன், “நீ எனக்கு சகோதரி மாதிரி... உனக்கு என்ன உதவி வேண்டுமானாலும் என்னிடம் கேள்” என்று ‘பல்டி’ அடித்தாராம். அவருடைய திடீர் பாசத்தை பார்த்து உள்ளுக்குள் சிரித்தபடி, வெளியில் முறைப்பை காட்டினாராம், நடிகை.
முன்னணி நடிகையாக இருப்பவர் பெரியவர்கள் பேச்சை கேட்க மாட்டேன் என்று அடம் பிடித்து வருகிறாராம்.
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் சின்ன நம்பர் நடிகைக்கு வயது அதிகமாகி கொண்டே போகிறதாம். காதல் கிசுகிசுக்கப்பட்ட நடிகரும் தற்போது வேறொரு பெண்ணை திருமணம் செய்துக் கொண்டாராம். இதனால், வருத்தத்தில் இருக்கும் நடிகையை பெற்றோர்கள் விரைவில் திருமணம் செய்துக் கொள் என்று கட்டாயப்படுத்துகிறார்களாம்.
ஆனால், நடிகையோ பெரியவர்கள் பேச்சை கேட்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறாராம். தனக்கு கணவராக வருபவர் எப்படி இருக்க வேண்டும் என்று எனக்கு தெரியும், காதலித்துதான் திருமணம் செய்வேன் என்று கூறுகிறாராம். மனதில் இருப்பவர் யார் என்று கேட்டாலும் சொல்ல மறுக்கிறாராம்.
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தி இருக்கிறாராம்.
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் ஒரு நாளைக்கு சம்பளம் என்ற விதத்தில் வாங்கி வருகிறாராம். சுமார் 8 லட்சம் வீதம் வாங்கி வரும் நடிகர் தற்போது சம்பளத்தை உயர்த்தி இருக்கிறாராம்.
பல நடிகர்கள் நடிகைகள் சம்பளத்தை குறைத்து வரும் நிலையில், காமெடி நடிகர் சம்பளத்தை உயர்த்தி இருப்பது பல இயக்குனர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம்.
சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தற்போது கவர்ச்சி காட்டி பெரிய திரையில் வாய்ப்பு தேடி வருகிறாராம்.
சின்னத்திரையில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த நடிகைக்கு, தற்போது பெரிய படத்தில் நடிக்க ஆசை வந்திருக்கிறதாம். இதனால், நடிகை சின்னத்திரையில் நடிக்க மாட்டேன் என்று முடிவு செய்து விட்டு பெரிய திரையில் நடிக்க ஆர்வம் காண்பித்து வருகிறாராம். இதற்காக பல போட்டோஷூட்களை எடுத்து சமூக வலைத்தளத்தில் பரவ விட்டாராம்.
ஆனால், நடிகைக்கு எந்த ஆதரவும் கிடைக்கவில்லையாம். இதையடுத்து கவர்ச்சியான புகைப்படங்களை பகிர ஆரம்பித்தாராம். இதற்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறவே தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறாராம். ஆனால், பலரோ கவர்ச்சி காட்டி இப்படி வாய்ப்பு தேட வேண்டுமா என்று கேள்வி எழுப்பி வருகிறார்களாம்.
தென்னிந்திய திரையுலகில் கொடிகட்டி பறக்கும் முன்னணி நடிகை ஒருவர் கேட்ட சம்பளத்தை கொடுத்தால் நடிப்பேன் என கறாராக சொல்லிவிட்டாராம்.
கோலிவுட்டில் கொடிகட்டி பறக்கும் முன்னணி நடிகை ஒருவர், அவ்வப்போது டோலிவுட் படங்களிலும் தலைகாட்டி வருகிறாராம். அவ்வாறு பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அந்த நடிகையை நடிக்க அணுகினார்களாம். நடிகை கேட்ட சம்பளம் அவர்களை வாயடைக்க செய்ததாம்.
முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடிக்க ரூ.3 கோடியும், கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைளில் நடிக்க ரூ.4 கோடியும் வாங்கும் அந்த நடிகை ரூ.4 கோடி கொடுத்தால் நடிப்பேன் என சொலிவிட்டாராம். ரீமேக் படத்திற்காக அந்த நடிகையை ரூ.4 கோடிக்கு ஒப்பந்தம் செய்வதா? வேண்டாமா? என்று படக்குழுவினர் யோசிக்கிறார்களாம்.
பிரபல நடிகையாக வலம் வருபவர் திரைப்படத்திற்கு சம்பளத்தை குறைக்காமல், வெப் தொடருக்கு குறைத்திருக்கிறாராம்.
தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் வீரமான நடிகை, தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே நேரத்தை செலவழித்து வருகிறாராம். இந்த நேரத்தில் பல கதைகளை தேர்வு செய்து வைத்தும் இருக்கிறாராம். தற்போது இருக்கும் சூழ்நிலையில், நடிகர்கள், நடிகைகள் சம்பளத்தை குறைத்து வருவதுபோல், சில இயக்குனர்கள் நடிகையிடம் சம்பளத்தை குறைக்க சொல்லி கேட்டார்களாம். அதற்கு நடிகை நோ என்று கண்டிப்பாக சொல்லிவிட்டாராம்.
இந்நிலையில், நடிகையிடம் ஒரு வெப் தொடரில் நடிக்க கதை சொல்லி இருக்கிறார்களாம். கதையை கேட்ட நடிகை ஓகே சொல்லிவிட்டு, சம்பளத்தை குறைக்கவும் முடிவு செய்து இருக்கிறாராம். இதையறிந்த பல இயக்குனர்கள் வெப் தொடர் என்றால் சம்பளத்தை குறைக்கலாமா என்று கேள்வி எழுப்பியது மட்டுமில்லாமல், நடிகைக்காக வெப் தொடரை உருவாக்கவும் முடிவு செய்திருக்கிறார்களாம்.
பிரபல நடிகர் ஒருவர் தன்னுடைய ரூட்டை மாற்றியதால் பல இயக்குனர்கள் வருத்தத்தில் இருக்கிறார்களாம்.
சுமார் மூஞ்சி நடிகர் தற்போது பல படங்களை கைவசம் வைத்துக் கொண்டு முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறாராம். இவர் தன்னுடைய நண்பர்களுக்கு உதவி செய்யும் விதமாக பல படங்களில் நடித்தாராம். அதில் சில படங்கள் ஓடவில்லையாம்.
மீண்டும் அந்த இயக்குனர்கள் நடிகரிடம் கதை சொல்லி மீண்டும் இணைந்து பணியாற்றலாம் என்று கூறி வருகிறார்களாம். ஆனால் நடிகாரோ இந்த கதை வெப் தொடராக எடுக்கலாம் என்று அவர்களை வேறு பாதைக்கு அனுப்பி விடுகிறாராம். இதனால் பல இயக்குனர்கள் வருத்தத்தில் இருக்கிறார்களாம்.
முன்னணி இயக்குனர் ஒருவர் அடுத்ததாக தான் இயக்கும் படத்தை தயாரிக்க பயப்படு கிறாராம்.
தமிழில் 4 படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வருபவர், தற்போது அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறாராம். இவர் ஒரே நடிகரை வைத்து 3 படங்களை இயக்கி வெற்றி கொடுத்திருக்கிறாராம். ஆனால், அந்த படங்கள் தயாரிப்பாளருக்கு லாபம் கொடுக்கவில்லையாம்.
ஆனால் தற்போது இயக்குனர், தயாரிப்பாளராக மாறி சிறு படங்களை தயாரித்து வருகிறாராம். இதனால் தான் இயக்கும் அடுத்த படத்தை நீங்களே தயாரித்து வெளியிடுங்கள் என்று பலர் இயக்குனரிடம் கூற, அதற்கு அவர் என்னால் முடியாது என்று பயந்து கூறுகிறாராம்.






