என் மலர்
கிசுகிசு
பிரபல நடிகர் ஒருவர் இயக்குனரை கைவிட்டு விட்டதால், அவர் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறாராம்.
தமிழில் முன்னணி நடிகரை வைத்து தொடர்ந்து மூன்று படங்களை இயக்கிய இயக்குனர், பாலிவுட்டில் முன்னணி நடிகருக்கு கதை சொல்லி ஓகே வாங்கினாராம். எப்போது தொடங்கலாம் என்று நடிகர் சொல்லவில்லையாம். ஆனால் அதற்குள் கோலிவுட்டில், பாலிவுட் நடிகரை இயக்குகிறார் இயக்குனர் என்று செய்திகள் வந்துவிட்டதாம்.
இயக்குனர் நம்பி காத்துக் கொண்டிருக்கும் நிலையில், நடிகர் தற்போது கைவிட்டு விட்டராம். இப்போதைக்கு இந்த படம் வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம். இதனால், நொந்துபோன இயக்குனர், மீண்டும் முன்னணி நடிகரை அணுகி மீண்டும் ஒரு படம் இணைந்து செய்வோம் என்று கேட்டாராம். முன்னணி நடிகரோ இப்போதைக்கு வாய்ப்பு இல்லை. வரிசையாக படம் இருக்கிறது என்று சொல்லிவிட்டாராம். தற்போது இயக்குனர் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறாராம்.
தமிழ் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் கோடியில் சம்பளம் கேட்டு வாக்குவாதம் செய்திருக்கிறாராம்.
தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக பிரபலமான நடிகை, ஐதராபாத்தில் சொந்த வீடு வாங்கி, அங்கேயே வசித்து வருகிறாராம். தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய 3 மொழி படங்களில் அவர் நடித்து இருக்கிறாராம். அதனால் நடிகை ஒரு பெரிய தொகையை சம்பளமாக வாங்கி வருகிறாராம்
அவரை ஒரு புதிய தமிழ் படத்தில் நடிக்க வைப்பதற்காக பேச்சுவார்த்தை நடந்ததாம். 60 நாட்கள் கால்ஷீட்டுக்கு ரூ.3 கோடி சம்பளம் வேண்டும் என்று அவர் கேட்டாராம். அந்த சம்பளத்தை கொடுக்க டைரக்டர் தயங்கினாராம்.
அதற்கு நடிகை என்னுடைய படங்கள் அனைத்து மொழிகளிலும் ‘டப்’ செய்யப்படுகிறது. அதனால் எனக்கு ரூ.3 கோடி சம்பளத்தை தாராளமாக கொடுக்கலாம்” என்று கூறினாராம்.
இது வாக்குவாதமாக மாறியதாம். இதில் நடிகை வெற்றி பெற்று விட்டாராம். நீண்ட வாக்கு வாதத்திற்கு பிறகு நடிகை கேட்ட சம்பளத்தை இயக்குனர் கொடுக்க முன்வந்து இருக்கிறாராம்.
பிரபல நடிகை சமூக வலைத்தளத்தில் ஓயாமல் புலம்பி வருவதால், ரசிகர்கள் பலரும் கண்டுக்கொள்ளாமல் இருந்து வருகிறார்களாம்.
சில படங்களில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே நடித்து பெரிய முதலாளி வீட்டுக்கு சென்று எதிர்மறையான விமர்சனங்களை பெற்ற நடிகை, அடிக்கடி சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறாராம். இதற்கு ரசிகர்கள் கிண்டல் செய்து பல கருத்துக்களை பதிவு செய்வார்களாம்.
ஆனால், சில தினங்களாக நடிகை பல முன்னணி நடிகர்கள், நடிகைகளை பற்றி குறை கூறி பல பதிவுகளை போட்டாராம். இதற்கு மற்ற நடிகர்களின் ரசிகர்கள் அவரை திட்டி தீர்த்தார்களாம். இதனால், நடிகையின் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகமானதாம்.
இதையறிந்த ரசிகர்கள் நடிகையின் கருத்துக்கு எந்த பதில் பதிவும் செய்யக் கூடாது என்று முடிவு செய்துவிட்டார்களாம். இதனால் நடிகை போடும் கருத்துக்கு ரசிகர்கள் கண்டுக்கொள்ளாமல் இருக்கிறார்களாம்.
பட வாய்ப்பு இல்லாத நடிகைக்கு, பிரபல நடிகர் இரக்கப்பட்டு ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு தர சம்மதித்து இருக்கிறாராம்.
முன்னணி நடிகையாக வலம் வந்தவர், தற்போது ஒரே ஒரு படத்தை மட்டுமே நம்பி இருக்கிறாராம். கைவசம் ஒரு படம் கூட இல்லையாம். இதனால், தன்னுடன் நடித்த ஒல்லியான நடிகருக்கு போன் செய்து பட வாய்ப்பு இல்லை என்று புலம்பினாராம்.
இதைக்கேட்ட நடிகர் இரக்கப் பட்டு தான் நடிக்கும் ஒரு படத்தில் கண்டிப்பாக வாய்ப்பு தருகிறேன் என்று கூறியுள்ளாராம். நடிகரை வைத்து மீண்டும் ஒரு ரவுண்டு வரலாம் என்று நடிகை முடிவு செய்து இருக்கிறாராம்.
சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வருபவர், தற்போது முன்னணி நடிகர் ஒருவரின் கவனத்தை ஈர்த்து இருக்கிறாராம்.
சின்னத்திரையில் 2, 3 தொடர்களில் நடித்து பெயர் பெற்ற ஒரு நடிகை, தற்போது பெரிய திரையில் நடிக்க ஆர்வமாக இருக்கிறாராம். இதற்காக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறாராம். இதைப் பார்த்த பிரபல நடிகர், நடிகையின் பக்கம் கவனம் செலுத்த ஆரம்பித்தாராம்.
சமீபத்தில் நடிகரின் ஒரு பாடல் ஒன்று வெளியானதாம், இதைப் பார்த்த நடிகை, அந்த பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ வெளியிட்டார் ராம். இது நடிகருக்கு ரொம்ப பிடித்து போய் விட்டதாம். தன்னுடைய அடுத்த படத்தில் நடிகையை நடிக்க வைக்கலாம் என்று யோசித்து வருகிறாராம்.
பிரபல நடிகரிடம் கொடுத்த பணத்தை தயாரிப்பு நேரம் திருப்பி கேட்க, நடிகர் மறுத்து வருகிறாராம்.
தமிழ் சினிமாவை கட்டுக்குள் வைத்திருக்கும் தயாரிப்பாளர் பல முன்னணி நடிகர்களிடம் முன்பணம் கொடுத்து தன் படத்தில் நடிக்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்து இருக்கிறாராம். தற்போது நிலைமை சரியில்லாததால் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டு வருக்கிறாராம் தயாரிப்பாளர்.
இதில் பிரபல நடிகராக இருக்கும் ஹீரோ நடிகரிடம் தயாரிப்பு நிறுவனம் கோடிக்கணக்கில் முன்பணம் கொடுத்து இருக்கிறார்களாம். இந்த பணத்தை தயாரிப்பு நிறுவனம் கேட்க நடிகரோ உங்களுடைய படத்தில் கண்டிப்பாக நடிக்கிறேன் பணத்தை திருப்பித் தர முடியாது என்று கூறி வருகிறாராம். ஆனால் நிறுவனமோ கொடுத்த பணத்தை எப்படியாவது வாங்கிவிட வேண்டுமென்று முயற்சி செய்து வருகிறார்களாம்.
பிரபல நடிகை ஒருவர் பாட்டு பாட பல லட்சத்தில் சம்பளம் வேண்டும் என்று கூறி இசையமைப்பாளரை பயந்து ஓட வைத்து விட்டாராம்.
வாரிசு நடிகையாக இருப்பவருக்கும் பல திறமைகள் இருக்கிறதாம். குறிப்பாக நடிகை பாட்டு பாடுவதில் சிறந்தவராம். இவர் பாடிய பல பாடல்கள் ஹிட்டாகி இருக்கிறதாம். ஆனால், சில ஆண்டுகளாக நடிகை படங்களில் நடிக்காமலும், பாட்டு பாடாமல் இருந்து வந்தாராம். தற்போது ஒரு படத்தில் நடித்து வரும் நடிகை பாட்டு பாடவும் முயற்சி செய்து வருகிறாராம்.
இந்நிலையில், இசையமைப்பாளர் ஒருவர் நடிகையை அணுகி பாட்டு பாட கேட்டாராம். ஆனால், நடிகையோ பாடுகிறேன் எனக்கு சம்பளமாக பல லட்சம் வேண்டும் என்று கேட்டாராம். இதைகேட்ட இசையமைப்பாளர் அதிகமாக இருக்கிறதே குறைத்துக் கொள்ள முடியுமா என்று கேட்க, நடிகையோ முடியவே முடியாது என்று சொல்லிவிட்டாராம்.
பிரபல நடிகையை ஜோதிடர் எச்சரித்ததாக கோடம்பாக்கத்தில் ஒரு தகவல் காட்டுத்தீயாக பரவி இருக்கிறதாம்.
மாமுனியுடன் பேசி, ஜோதிடம் சொல்வதாக பேசப்படும் ஒரு ஜோதிடர் சொன்னதெல்லாம் நடக்கிறதாம். அவருடைய ஜோதிடத்தில் திரையுலகைச் சேர்ந்த சில முக்கிய பிரமுகர்கள் அதிக நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள். ஒரு அரசியல்வாதியும், ஒரு பிரபல நடிகையும் கொரோனாவினால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று அந்த ஜோதிடர் எச்சரித்ததை அறிந்து, உள்ளூர் மற்றும் வெளிமாநில நடிகைகள் பீதி அடைந்து இருக்கிறார்கள்.
யார் அந்த அரசியல்வாதி, யார் அந்த பிரபல நடிகை? என்று ஜோதிடருக்கு போன் போட்டு சில முக்கிய புள்ளிகள் கேட்கிறார்களாம். “அந்த ரகசியத்தை உடைக்க மாட்டேன்” என்று ஜோதிடர் உறுதியாக இருக்கிறாராம். இந்த தகவல் கோடம்பாக்கத்தில் காட்டுத்தீயாக பரவிஇருக்கிறது.
தமிழில் பிரபல நடிகையாக இருப்பவர், முன்னாள் காதலரும் நடிகருமானவருக்கு வலை வீசி வருகிறாராம்.
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் சின்ன நம்பர் நடிகை, தற்போது ஒரு சில படங்களை கைவசம் வைத்துள்ளாராம். இதுவரை பல நடிகருடன் கிசுகிசுக்கப் பட்ட நடிகை, சமீபகாலமாக தெலுங்கு பட நடிகரை திருமணம் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியானதாம். ஆனால், நடிகரோ திடீர் என்று வேறொரு பெண்ணை திருமணம் செய்ய இருப்பதாக அறிவித்து விட்டாராம்.
இனி நடிகை யாரை திருமணம் செய்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கும் நிலையில், முன்னாள் காதலரான விரல் வித்தை நடிகரை திருமணம் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியானதாம். நடிகை சில நாட்களாக நடிகருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருதால் தான் இப்படி ஆகிவிட்டதாம். இதை பார்த்த சிலர் முன்னாள் காதலருக்கு நடிகை வலைவீசுவதாக பேசி வருகிறார்களாம்.
பிரபல நடிகை ஒருவரை வம்புக்கு இழுத்து அவருடைய ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டாராம் நடிகை.
கடந்த இரு வாரங்களாக ட்ரெண்டிங்கில் இருக்கும் நடிகை சமூக வலைத்தளத்தில் மற்ற பிரபலங்கள் உடன் சண்டை போட்டு கொண்டு வருகிறாராம். இந்நிலையில் தமிழில் முன்னணி நடிகையாக நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் நடிகையை பற்றி ட்ரெண்டிங் நடிகை பேசி இருக்கிறாராம்.
இதைப்பார்த்த நம்பர் ஒன் நடிகையின் ரசிகர்கள் கொதித்து எழுந்து ட்ரெண்டிங் நடிகையை திட்டி தீர்த்து இருக்கிறார்களாம். மேலும் நடிகையிடம் மன்னிப்பு கேட்டு பதிவு செய்ய வேண்டும் என்றும் கூறினார்களாம். இதனால் நடிகை சமூக வலைத்தளத்திலிருந்து ஓட்டும் படித்து விட்டாராம்.
பிரபல நடிகர் ஒருவர் இளம் இயக்குனர் ஒருவரை வளைத்துப் போட முயற்சி செய்து வருகிறாராம்.
தமிழில் முன்னணி நடிகரான வீரமான நடிகரை வைத்து சமீபத்தில் வெற்றி படத்தை கொடுத்த இயக்குனர், மீண்டும் அவரை வைத்து மற்றொரு படத்தை உருவாக்கி வருகிறாராம். இந்த படம் தற்போது ஊரடங்கு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்த இயக்குனரை பிகில் அடித்த நடிகர் அணுகி எனக்கு ஒரு கதை சொல்லுங்கள் என்று கேட்டிருக்கிறாராம். இயக்குனரோ கேட்டுவிட்டு சொல்லுகிறேன் என்று சொல்லிவிட்டு வந்து விட்டாராம். சில நாட்கள் கழித்து மீண்டும் நடிகர் தரப்பில் இயக்குநரை அணுகி கதை ரெடி ஆகிவிட்டதா என்று கேட்கிறார்களாம். இயக்குனரோ ரெடி பண்ணிவிட்டு சொல்லுகிறேன் என்று சொல்லிவிட்டாராம்.
ஆனால் நடிகரோ அந்த இயக்குனர் படத்தில் எப்படியாவது நடித்து விட வேண்டும் என்று ஆர்வமாக இருக்கிறாராம்.
கொரோனா வைரஸ் ஊரடங்கு நேரத்தில் நடிகர்கள் பலர் சம்பளத்தை குறைக்கும் நேரத்தில் ஒரு நடிகர் உயர்த்தி இருக்கிறாராம்.
கொரோனா வைரஸ் ஊரடங்கு நேரத்தில் நடிகர்கள் நடிகைகள் பலரும் தங்களுடைய சம்பளப் பணத்தை குறைத்து வருகிறார்களாம். முன்னணி நடிகர்களும் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் பலரும் கேட்டு வருகிறார்களாம்.
ஆனால் இந்த நிலையில் பிரபல வாரிசு நடிகர் ஒருவர் தனது சம்பள பணத்தை லட்சத்திலிருந்து கோடியாக உயர்த்தி இருக்கிறாராம். காரணம் கேட்டால் தன்னுடைய முந்தைய படத்தின் வெற்றியை சொல்லுகிறாராம். ஆனால் தயாரிப்பாளர்கள் 10 படத்தில் ஒரு படம் ஓடிவிட்டால் சம்பளத்தை உயர்த்தலாமா என்று கேட்டு வருகிறார்களாம்.






