என் மலர்
கிசுகிசு
பிரபல நடிகை ஒருவர் திருமணத்திற்காக மாப்பிள்ளைகளுக்கு தூண்டில் வீசி இருக்கிறாராம்.
வீரமான நடிகையிடம் அவருடைய நெருக்கமான நண்பர்கள், “எப்போது திருமணம்?” என்று கேட்கிறார்களாம். அதற்கு நடிகை, “திருமணம் பற்றி யோசிக்கவே இல்லை” என்று பதில் அளிக்கிறாராம்.
இருப்பினும் நண்பர்கள் கேள்விகளுக்குப்பின், அவர் திருமணம் பற்றி சிந்திக்க ஆரம்பித்து இருக்கிறாராம். “எனக்கு வரப்போகிறவர் எந்த தேசத்துக்காரராக இருந்தாலும் பரவாயில்லை. என்னை உயிருக்கும் மேலாக நேசிப்பவராக இருந்தால் போதும்” என்று மாப்பிள்ளைகளுக்கு தூண்டில் வீசியிருக்கிறாராம்.
பிரபல தயாரிப்பு நிறுவனம் ஒன்று பட்ஜெட்டை குறைக்கச் சொல்லி இயக்குனரிடம் கேட்க அதற்கு அவர் கடுப்பாகி விட்டாராம்.
பிரம்மாண்ட இயக்குனர் எப்போதும் அதிக பொருட் செலவில் தரமான படத்தை எடுத்து வருவாராம். இவர் தற்போது நீதி தலைவரை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறாராம். இதன் பட்ஜெட் 350 கோடி ரூபாய் இருந்ததாம்.
முதலில் இந்த பட்ஜெட்டுக்கு சரி சொன்ன தயாரிப்பாளர்கள் பிறகு இயக்குனரிடம் பட்ஜெட்டை குறைக்க வேண்டும் என்று கூறினார்களாம். இயக்குனரும் ஒப்புக்கொண்டு சரி என்றாராம். தற்போது கொரோனா ஊரடங்கு நேரத்தில் தயாரிப்பு நிறுவனம் பாதிக்கப்பட்டுள்ளதால் இன்னும் பட்ஜெட்டை குறைக்க சொல்லி கேட்டு இருக்கிறார்களாம்.
ஆனால் இயக்குனரோ கடுப்பாகி இதற்கு மேல் பட்ஜெட்டை குறைக்க முடியாது என்று சொல்லிவிட்டாராம். கதை வேண்டும் என்றால் கொடுத்துவிடுகிறேன் நீங்களே படத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்று கடுப்பில் சொல்லிவிட்டாராம்.
என்ன ஆனாலும் சம்பளத்தை குறைக்க மாட்டேன் என்று பிரபல நடிகை ஒருவர் விடாபிடியாக சொல்லிவிட்டாராம்.
தமிழிலில் முன்னணி நடிகையாக வலம் நம்பர் நடிகை, அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதலிடத்தில் இருக்கிறாராம். தற்போது கொரோனா பிரச்சனைகளால் பல முன்னணி நடிகர்கள், நடிகைகள் தங்களுடைய சம்பளத்தை குறைக்க முடிவு செய்திருக்கிறார்களாம். அதுபோல் நடிகையும் குறைப்பார் என்று படக்குழுவினர் அணுகினார்களாம்.
ஆனால் நடிகையோ, சம்பளத்தை பற்றி பேசினால் கடுப்பாகிறாராம். மேலும் என்ன ஆனாலும் சம்பளத்தை குறைக்க மாட்டேன் என்று விடாபிடியாக சொல்லிவிட்டாராம். இதனால் படக்குழுவினர் ஏமாந்து போயிருக்கிறார்களாம்.
நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று பல பட வாய்ப்புகளை தவிர்த்து வருகிறாராம் முன்னாள் ஹீரோ.
80களில் கொடிகட்டிப் பறந்த ஹீரோ தற்போது படவாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறாராம். நடித்தால் கதாநாயகன் தான் என்று அடம் பிடித்த நடிகர், வரும் பட வாய்ப்புகளை எல்லாம் தவிர்த்து வருகிறாராம்.
சில நாட்களுக்கு முன்பு நடிகரிடம் தளபதியான நடிகருக்கு அப்பா வேடத்தில் நடிக்க வேண்டும் என்று அழைப்பு வந்ததாம். ஆனால் நடிகரோ நடித்தால் ஹீரோதான் இல்லையென்றால் நடிக்கமாட்டேன் என்று விடாப்பிடியாக சொல்லிவிட்டாராம்.
தமிழில் பிரபல நடிகையாக இருப்பவர் தேடி வந்த வாய்ப்பை தவறவிட்டு தற்போது புலம்பி வருகிறாராம்.
தமிழில் களவாணியாக வந்த நடிகை, பெரிய முதலாளி வீட்டுக்கு சென்று மிகவும் பிரபலமானாராம். அதிக ரசிகர்கள் பட்டாளத்துடன் வெளியான நடிகைக்கு பல பட வாய்ப்புகள் வந்ததாம். ஆனால், நடிகை ரொம்ப கெத்து காட்டி வந்த பட வாய்ப்புகளை தவறவிட்டாராம்.
தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் புலம்பி வருகிறாராம். மாறாக 2 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறாராம். அந்த படங்கள் ரொம்ப சின்ன படங்களாம். மேலும் சிறிய பட்ஜெட் படம் என்பதால் வெளியில் யாரிடமும் சொல்லாமல் இருக்கிறாராம்.
நடிகரிடம் கொடுத்த அட்வான்ஸ் பணத்தை திருப்பி கேட்க தயாரிப்பாளர் போராடி வருகிறாராம்.
பிரபல தயாரிப்பாளர் ஒருவர் வம்பு நடிகரை அணுகி புதிய படத்திற்கான ஒப்பந்தம் செய்து அதில் ஒரு பகுதியை முன்பணமாக கொடுத்தாராம். திரைப் படம் சிறப்பாக வரும் என்று இயக்குனர் மற்றும் இசையமைப்பாளருக்கும் முன்பணம் கொடுத்தாராம் தயாரிப்பாளர்.
தற்போது இருக்கும் சூழ்நிலையால் திரைப்படத்தை தொடங்க முடியாது என்று முடிவு செய்துவிட்டாராம். இதனால் இயக்குனர் அட்வான்ஸ் பணத்தில் ஒரு பகுதியை தயாரிப்பாளரிடம் கொடுத்து விட்டாராம். இசையமைப்பாளரும் வேறொரு படத்திற்கு இசை அமைத்து கொடுக்கிறேன் என்று சொல்லி விட்டாராம். ஆனால் நடிகரோ எதுவும் வாய் திறக்காமல் இருக்கிறாராம். அட்வான்ஸ் பணத்தைத் திருப்பிக் கேட்டால் எதுவும் சொல்லாமல் காலம் தாழ்த்தி வருகிறாராம் நடிகர்.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் சண்டை காட்சிக்கு பயப்படுகிறாராம்.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தற்போது புதிய படத்தில் நடித்து வருகிறாராம். இந்தப் படம் கொரானா ஊரடங்கு காரணமாக தற்போது படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாம்.
இந்நிலையில் படத்தின் நாயகன் தற்போது இருக்கும் பிரச்சினைகள் முடிவுக்கு வந்த பிறகே படப்பிடிப்பு தொடங்கலாம் என்று சொல்லிவிட்டாராம். மேலும் இப்படத்தில் இடம்பெறும் சண்டைக்காட்சிகள் வேண்டாம் என்று சொல்லியிருக்கிறாராம்.
கொரானா பயத்தின் காரணமாக நடிகர் இந்த முடிவை எடுத்திருக்கிறாராம். ஆனால் இயக்குனரோ நடிகரை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கி இருக்கிறாராம். படத்தில் இருப்பதே இரண்டு சண்டைக் காட்சிகள்தான். அதுவும் வேண்டாம் என்றால் படம் சிறப்பாக இருக்காது என்று இயக்குனர் கூறி வருகிறாராம்.
பிரபல நடிகர் ஒருவர் சம்பளத்தை குறைக்க மாட்டேன் என்று தயாரிப்பு நிறுவனத்திடம் கூறிவிட்டாராம்.
தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் தளபதியானவர், ஒவ்வொரு படத்திற்கும் தன் சம்பளத்தை கோடிக்கணக்கில் உயர்த்தி வருகிறாராம். தற்போது கொரோனா வைரஸ் காரணமாக பல முன்னணி நடிகர்கள் சம்பளத்தை குறைத்து வருகிறார்களாம்.
இதை வைத்து பிரபல தயாரிப்பு நிறுவனம் ஒன்று நடிகர் நடிக்கும் அடுத்த படத்தில் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்களாம். ஆனால் நடிகரோ சம்பளத்தை குறைக்க மாட்டேன் என்று விடாப்பிடியாக சொல்லிவிட்டாராம். தயாரிப்பு நிறுவனமும் என்ன செய்வது என்றே தெரியாமல் இருக்கிறார்களாம்.
தமிழ் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர், மற்றொரு நடிகையின் வாய்ப்பை தட்டி பறிக்க முயற்சி செய்திருக்கிறாராம்.
திருமணத்திற்கு பிறகும் தமிழ் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவரின் கைவசம் எந்தப் பெரிய படங்களும் இல்லையாம். இதனால் இதற்கு முன் எடுத்த பெரிய தயாரிப்பாளர்களுக்கு போன் செய்து வாய்ப்பு கேட்டு வருகிறாராம்.
இதில் ஒருவர் மற்றொரு முன்னணி நடிகையை வைத்து படம் தயாரிக்க போவதாக கூறி இருக்கிறாராம். இதையறிந்த நடிகை நான் நடிக்கிறேன், குறைந்த சம்பளம் கொடுங்கள், அந்த நடிகை வேண்டாம் என்று கூறி நடிகையின் வாய்ப்பை தட்டி பறிக்க முயற்சி செய்து இருக்கிறாராம்.
பிரபல நடிகை ஒருவர் அவசரமாக திருமணம் செய்து கொண்டதை அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்களாம்.
வாரிசு குடும்பத்தில் பிறந்த நடிகை, தமிழில் ஒரு சில படங்களில் மட்டும் நடித்து விட்டு காணாமல் போனாராம். பின்னர் பெரிய முதலாளி வீட்டில் நுழைந்து மிகவும் பிரபலமானாராம்.
ஏற்கனவே இரண்டு கணவரை பிரிந்த இவர் சமீபத்தில் மூன்றாவது திருமணம் செய்து கொண்டாராம். ஊரடங்கு நேரத்தில் திடீரென்று நடிகை திருமணம் செய்ததால் ஏன் இவ்வளவு அவசரம் என்று பலரும் பேசி வந்தார்களாம்.
தற்போது நடிகை திருமணத்துக்கு முன்பே கர்ப்பம் ஆனதால் தான் சீக்கிரமே திருமணம் செய்து கொண்டார் என்று கோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்கிறார்களாம்.
பிரபல நடிகை ஒரு தடவை பட்டது போதும் இனிமேல் அப்படி பண்ண மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.
நண்பர்களுடன் இணைந்து சென்னையில் கிரிக்கெட் விளையாட நடிகை, தன் கணவருடன் சேர்ந்து ஒரு படத்தை தயாரித்து வெளியிட்டாராம். அந்தப்படம் எதிர்பார்த்த அளவிற்கு சரியாகப் போகவில்லையாம்.
இதனால் இனிமேல் படத்தை தயாரிக்கக் கூடாது என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம். நடிகையிடம் எப்போது அடுத்த படம் தயாரிக்கப் போகிறார்கள் என்று கேட்டால், ஒரு தடவை பட்டது போதும்.. இனிமேல் படம் தயாரிக்க மாட்டேன் என்று கூறி வருகிறாராம்.
படவாய்ப்புகள் எதுவும் இல்லாததால் கவர்ச்சியாக நடிக்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறாராம் நடிகை.
நடிக்க வந்த புதிதிலேயே முன்னணி ஹீரோக்கள் நடித்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானாராம் நடிகை. குறிப்பாக ஆசிரியர் வேடத்தில் நடித்து அக்கா ஐ லவ் யூ என்று பலராலும் பேசப்பட்டாராம்.
முன்னணி ஹீரோக்கள் படத்தில் நடித்திருந்தாலும், நடிகைக்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லையாம். இதனால் பொறுத்திருந்து பார்த்த நடிகை கவர்ச்சியாக நடிக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம். இதன் முன்னோட்டமாக கவர்ச்சி போட்டோ சூட் எடுத்து சமூக வலைத்தளத்தில் பரவவிட்டு இருக்கிறாராம்.






