என் மலர்
கிசுகிசு
ஒரு படத்தில் நடிகை நடித்திருப்பதால் படத்தின் இயக்குனருக்கு புதிய பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது.
தமிழ் தெலுங்கு மொழிகளில் வரலாற்று படத்தை எடுத்து தடம் பதித்த இயக்குனர் தற்போது தெலுங்கில் அதிக பொருட்செலவில் ஒரு படத்தை உருவாக்கி வருகிறாராம். இதில் நாயகியாக பிரபல பாலிவுட் நடிகை ஒருவர் நடித்து வருகிறாராம்.
இந்த நடிகை, தற்போது பாலிவுட்டில் புதுப் பிரச்சினையில் சிக்கி இருக்கிறாராம். இதனால் நடிகையை படத்திலிருந்து நீக்க வேண்டும் என்று இயக்குனருக்கு போன் செய்து மிரட்டல் விடுகிறார்களாம். இதனால் இயக்குனர் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறாராம்.
பிரபல நடிகர் ஒருவர் முதல்வர் கதாபாத்திரத்தில் நடிக்க பயப்படுவதாக இயக்குனரிடம் கூறியிருக்கிறார்.
எதிர்காலத்தில், அரசியலுக்கு வரும் ஆர்வத்தில் இருக்கும் நடிகர், தான் நடித்த ஒரு ஐந்தெழுத்து படத்தின், 'கிளைமாக்சில் முதல்வராக நடிக்க சொன்னபோது, மறுத்து விட்டாராம். இந்நிலையில், பிரமாண்ட இயக்குனர், அவரிடத்தில், முதல்வராக நடிக்க வேண்டும் என்று. ஒரு கதை சொன்ன போது, "நான். முதல்வர் வேடத்தில் நடிப்பது....' என்று அதிர்ச்சியை வெளிப்படுத்தினாராம்.
காரணம் கேட்டால். நான் அரசியலுக்கு வரும் முடிவில் இருப்பதால் தான், என் எல்லா படங்களுக்கும், ஏதாவது ரூபத்தில் குடைச்சல் கொடுக்கின்றன ஆளும் கட்சி, இந்த நேரத்தில், நான் முதல்வராக நடித்தால், அதன்பின், என் படங்களை தியேட்டருக்கே வர விடாத அளவுக்கு பெரிய பிரச்னை கொடுப்பர். அதனால் தான். நான் முதல்வராக நடிக்க பயப்படுகிறேன்...' என்று, பிரமாண்ட இயக்குனரின் காதில், கிசுகிசுத்து உள்ளாராம் நடிகர்.
வரலாற்று படங்களில் நடித்து பிரபலமான நடிகை மாப்பிள்ளை பார்த்து விரக்தி அடைந்து இருக்கிறாராம்.
வரலாற்று படங்களில் நடித்த பிரபல நடிகை படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டாராம். திருமணத்திற்கு தயாரான நடிகைக்கு எத்தனையோ மாப்பிள்ளைகளை பார்த்தும், ஒரு மாப்பிள்ளையும் அமையவில்லையாம்.
அவருக்கு பிடித்தால் அம்மா, அப்பாவுக்கு பிடிக்கவில்லையாம். அம்மா, அப்பாவுக்கு பிடித்தால், இவருக்கு பிடிக்கவில்லையாம். ஏறக்குறைய நடிகைக்கு விரல் வித்தை நடிகரின் ஜாதகமாம். இதனால், நடிகை அடைந்து இருக்கிறாராம்.
சமீபத்தில் வெளியான நடிகையின் படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாததால் கொள்கையை மாற்ற முடிவு செய்திருக்கிறாராம்.
வாரிசு நடிகை நடித்த முந்தைய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாம். குறிப்பாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படம் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்ததாம். இதனால் தொடர்ந்து இதுபோன்ற படங்களில் நடிக்க முடிவு செய்தாராம்.
தற்போது வெளியான அந்த வகை படம் ரசிகர்களிடையே எதிர்மறையான விமர்சனத்தை பெற்றுக் கொடுத்ததாம். மிகவும் எதிர்பார்த்த இந்த படம் இப்படியாகிவிட்டதே என்று நடிகை வருத்தத்தில் இருக்கிறாராம். இதனால் சில காலம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தை தவிர்த்து வைக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறாராம்.
பிரபல நடிகை ஒருவர் முன்னணி நடிகரிடம் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கேட்டு நச்சரித்து வருகிறாராம்.
ஒல்லி நடிகர் நடித்த முதல் படத்தில் அறிமுகமான நடிகை நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க நினைத்து இருக்கிறாராம். இதற்காக பலரிடம் வாய்ப்பு கேட்ட நடிகைக்கு எந்த பலனும் அளிக்கவில்லையாம்.
இதனால் ஒல்லி நடிகரிடம் பேசி நாம் நடித்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க சொல்லி வற்புறுத்தி வருகிறாராம். இல்லை என்றால் வேறு ஒரு படத்தில் கதாநாயகி இடம் வாங்கி கொடுங்கள் என்று நச்சரிக்கிறாராம்.
நடிகரோ வேறு ஏதோ காரணம் சொல்லி நடிகையிடம் எஸ்கேப் ஆகி வருகிறாராம்.
பிரபல நடிகை ஒருவர் சினிமா பிரபலங்களை தவிர்த்து தற்போது அரசியல் தலைவர்களை வம்புக்கு இழுத்து இருக்கிறாராம்.
பெரிய முதலாளி வீட்டுக்கு சென்று பிரச்சனையால் வெளியேறி நடிகை, வெளியே வந்த பிறகும் பல சர்ச்சைகளில் சிக்கினாராம். தொடர்ந்து பலருடைய கருத்துக்கு பதிலளித்த வந்தாராம். குறிப்பிட்ட நாளுக்கு பிறகு நடிகையை யாரும் கண்டு கொள்ளாததால் தற்போது அரசியல்வாதிகளின் பக்கம் தன்னுடைய கவனத்தை திருப்பி இருக்கிறாராம். கொ
ஊரடங்கு நேரத்தில் மக்கள் அவதிப்படுவதை பார்த்த நடிகை, இந்த சமயத்தில் நான் முதல்வராக இருந்தாள் வேற மாதிரி நடந்திருக்கும் என்று கூறியிருக்கிறாராம். இதைப் பார்த்த பலரும் இப்போ அரசியல்வாதியா என்று கருத்து தெரிவித்து வருகிறார்களாம்.
அக்கட தேசத்தை சேர்ந்த வாரிசு நடிகை ஒருவர் இனிமேல் கதாநாயகனுடன் ஜோடி போட்டு டூயட் பாடும் நாயகியாக மட்டும் நடிக்க யோசித்து வருகிறாராம்.
அக்கட தேசத்தை சேர்ந்த வாரிசு நடிகை ஒருவர், கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க முனைப்பு காட்டினாராம். அந்த நடிகை நடித்த படம் ஒன்று சமீபத்தில் வெளியாகி கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளதாம். இந்த படத்திற்காக அவர் 20 கதைகளை நிராகரித்தாராம். இதையும் சுட்டிக்காட்டி கடுமையாக விமர்சித்து வருகிறார்களாம்.
இந்த விமர்சனங்களை அந்த நடிகை தாங்குவாரா? இனிமேல் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பாரா? என்ற கேள்விக்குறியை ஏற்படுத்தி உள்ளதாம். ‘’இனிமேல் கதாநாயகனுடன் ஜோடி போட்டு டூயட் பாடும் நாயகியாக வந்து, கொஞ்சம் கவர்ச்சி காட்டினால் போதும்‘’ என்று அந்த நடிகைக்கு நெருக்கமானவர்கள் யோசனை கூறியிருக்கிறார்களாம். இதுகுறித்து அந்த நடிகை யோசித்து வருகிறாராம்.
பிரபலமான நடிகை எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் தன்னுடைய மனதை மாற்றிக் கொண்டிருக்கிறார்.
பெரிய முதலாளி வீட்டுக்குச் சென்று மிகவும் பிரபலமான நடிகை, பெரிய திரையில் வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்பி இருந்தாராம். இதற்காக நிறைய புகைப்படங்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் பரவ விட்டாராம்.
ஆனால் நடிகைக்கு எந்த பட வாய்ப்பும் வரவில்லையாம். இதனால் தனது மனதை மாற்றிக் கொண்ட நடிகை தற்போது சின்னத்திரையில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறாராம். சின்னத்தில் நடிப்பதற்காக பெரும் தொகையை சம்பளமாக கேட்டிருக்கிறாராம். முதலில் தயங்கிய குழுவினர் பிறகு நடிகை கேட்ட தொகையைக் கொடுக்க சம்மதித்திருக்கிறார்களாம்.
சினிமா மற்றும் சின்னத்திரையில் பிரபலமான நடிகை ஒருவர் அடுத்த திருமணத்திற்கு தயாராகி வருகிறாராம்.
90-களில் அறிமுகமானாராம் அந்த மூன்றெழுத்து நடிகை. ஒரு சில படங்களில் மட்டுமே நடித்த அவர், பெரிய வரவேற்பு கிடைக்காததால், சினிமாவை விட்டு விலகினாராம்.
சினிமாவில் இருந்து விலகிய பின்னர் நடிகர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு அவரை விவாகரத்து செய்துவிட்டாராம். பின்னர் வேறு ஒருவரை காதலித்து திருமணம் செய்து, அவரையும் விவாகரத்து செய்துவிட்டாராம். அதன்பின்னரும் டான்ஸ் மாஸ்டர் ஒருவருடன் லிவிங் டுகெதரில் வாழ்வதாக கிசுகிசுக்கப்படும் அந்த நடிகை, அவரையும் விட்டு பிரிந்துவிட்டாராம்.
சமீபத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பெரிய முதலாளி நிகழ்ச்சியில் தனது அதட்டலான தொனியால் தற்போது பிரபலமாகிவிட்டாராம். அதன்பின்னர் நாயகிக்கு வாய்ப்புகள் குவிகிறதாம். இந்த நிலையில், நடிகை தற்போது அடுத்த திருமணத்துக்கு தயாராகிவிட்டதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்களாம்.
பெரிய முதலாளி வீட்டுக்கு சென்று மிகவும் பிரபலமான நடிகை தெரிந்தவர்களுக்கு போன் செய்து வாய்ப்பு கேட்டு வருகிறாராம்.
பெரிய முதலாளி வீட்டுக்கு சென்று மிகவும் பிரபலமான நடிகை, அங்கு இருக்கும் போது நடிகருடன் காதல் சர்ச்சையில் சிக்கினார் ராம். ஒரு வழியாக வெளியே வந்த நடிகை பட வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும் என்று நம்பினாராம். ஆனால் எந்த பட வாய்ப்பும் கிடைக்க வில்லையாம்.
இதனால் சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தாராம். அதுவும் கை கொடுக்க விள்ளையாம். இதனால் நெருங்கிய நண்பர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு போன் செய்து வாய்ப்பு கேட்டு வருகிறாராம்.
பிரபல நடிகை ஒருவர், பழைய காதலை புதுப்பித்து வருகிறாராம்.
விரல் வித்தை நடிகரும் பிரபல நடிகையும் காதலித்து வந்தது அனைவருக்கும் தெரிந்த விஷயமே... சில பிரச்சனைகளால் இருவரும் பிரிந்தார்கள். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார்களாம்.
தற்போது நடிகை மீண்டும் நடிகரும் அடிக்கடி பேசி வருகிறாராம். இதையறிந்த பலரும் நடிகை பழைய காதலை மீண்டும் புத்துப்பிக்கிறார் என்று பேசி வருகிறார்களாம்.
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தனது காதலருக்கு சொகுசு கார் பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறாராம்.
தமிழில் முன்னணி நடிகையாக இருப்பவர் தனது காதல் பரிசாக இயக்குனருக்கு ‘ஜாகுவார்’ என்ற ஆடம்பரமான சொகுசு கார் வாங்கி கொடுத்து இருக்கிறாராம். அதோடு சொந்த பட நிறுவனத்தை தொடங்கி, அவரை தயாரிப்பாளராக உயர்த்தி இருக்கிறாராம்.
எந்த காதலியும் எந்த காதலருக்கும் கொடுத்திராத விலை உயர்ந்த பரிசுகளை நடிகை தனது காதலருக்கு அவ்வப்போது வழங்கி, இன்ப அதிர்ச்சி கொடுக்கிறாராம். “இயக்குனர் அதிர்ஷ்ட சாலி” என்று அவருடைய உறவினர்களும், நண்பர்களும் கூறி வருகிறார்களாம்.






