என் மலர்tooltip icon

    கிசுகிசு

    கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் நடிக்க அதிக சம்பளம் வேண்டும் என்று நடிகை கேட்கிறாராம்.
    தமிழ் தெலுங்கு மொழிகளில் பிரபலமாக இருக்கும் வீரமான நடிகை, கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படம் ஒன்றில் நடித்தாராம். ஆனால் நடிகைக்கு எதிர்பார்த்த அளவிற்கு அந்த படம் சரியாக ஓடவில்லையாம். 

    இதனால் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க வேண்டாம் என்று முடிவெடுத்த நடிகை, தற்போது அதே பாணியில் கதை ஒன்றை தேர்வு செய்திருக்கிறாராம். ஆனால் இந்த முறை அதிக சம்பளம் கேட்டு இருக்கிறாராம். 
    தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரீ-மேக் படத்தில் நடிக்க மறுத்து விட்டாராம்.
    பிரபல இந்தி படம் ஒன்று தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டுள்ளதாம். இந்த பட வாய்ப்பு முதலில் பெரிய நம்பர் நடிகைக்கு தான் வந்ததாம். ஆனால் நடிகை படத்தை நிராகரித்திருக்கிறாராம். 

    இந்த படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக்கில் பெரிய நம்பர் நடிகையை நடிக்க வைக்க, படத்தின் தயாரிப்பாளர்கள் கடும் முயற்சி செய்திருக்கிறார்களாம். ஆனால் நடிகையோ முடியவே முடியாது என திட்டவட்டமாக மறுத்துவிட்டராம்.
    பிரபல கவர்ச்சி நடிகை ஒருவர் பிறந்த நாள் கொண்டாடும்போது வயதை கேட்டதற்கு கிண்டல் செய்திருக்கிறாராம்.
    கவர்ச்சி நடிகை ஒருவர் சில தினங்களுக்கு முன்பு, பிறந்த நாள் கொண்டாடினாராம். “இது எத்தனையாவது பிறந்த நாள்?” என்று அவரிடம் கேட்டதற்கு, “பதினேழு முடிந்து பதினெட்டு பிறந்து இருக்கிறது” என்று சிரித்தபடி பதில் அளித்தாராம்.

     “ஊரடங்கு காரணமாக கோவிலுக்கு கூட போக முடியவில்லை. வருடந்தோறும் ஒரு ஆதரவற்றோர் இல்லத்துக்கு போவேன். அதுவும் போக முடியவில்லை” என்று வருத்தப்பட்டாராம் நடிகை.
    அக்கட தேசத்தை சேர்ந்த கல்யாணமாகாத நடிகை ஒருவர், திருமணத்திற்கு முன்பே குழந்தை வேண்டும் எனக்கூறி சலசலப்பை ஏற்படுத்தி உள்ளாராம்.
    அக்கட தேசத்தில் கொடிகட்டி பறக்கும் தயாரிப்பாளர் ஒருவர் உச்ச நடிகரின் படம் மூலம் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்தாராம். அந்த படம் ஹிட்டானதால் அடுத்தப்படமும் அந்த நடிகரையே வைத்து தயாரித்து வருகிறாராம் அந்த தயாரிப்பாளர். அவரின் மகளும் நடிகை என்பதால் அவ்வப்போது கிசுகிசுக்களில் சிக்கி வருகிறாராம்.

    திருமணமே ஆகாத அந்த நடிகை குழந்தை வேண்டும் என்று விளையாட்டாக கூறி சர்ச்சையில் சிக்கி உள்ளாராம். நடிகை பதிவிட்ட இந்த பதிலை நெட்டிசன்கள் பல்வேறு விதமாக திரித்து, திருமணத்திற்கு முன்பே குழந்தை பெற்றுக்கொள்ள ஆசையா என விமர்சித்து வருகிறார்களாம்.
    நடிகர் ஒருவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒன்று பதிவு செய்ய அதை வைத்து நெட்டிசன்கள் அவரை விளாசி வருகிறார்களாம்.
    ஒளிப்பதிவாளராக இருந்து தற்போது நடிகராக வளர்ந்து இருப்பவர் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் ஏதாவது ஒன்று சொல்லிக் கொண்டிருப்பாராம். இந்த தடவை பிரபல இயக்குனரை பற்றி சம்பந்தமே இல்லாமல் பேசி இருக்கிறாராம். 

    இதை பார்த்த ரசிகர்கள் நடிகர் ஏன் சம்பந்தமே இல்லாமல் இப்படி பதிவு செய்கிறார் என்று அவரிடம் கேட்டார்களாம். நடிகரோ திரும்பத்திரும்ப சம்பந்தமே இல்லாமல் ஏதோ பதிவு செய்து வந்திருக்கிறார். ஆனால் ரசிகர்கள் நடிகருக்கு போதை அதிகமாயிடுச்சு என்று கருத்து தெரிவித்து வருகிறார்களாம்.
    காதலரின் அறிவுரையைக் கேட்டு பிரபல நடிகை ஒருவர் மனதை மாற்றிக் கொண்டிருக்கிறாராம்.
    ஒரு படத்தில் நடித்து மிகவும் பிரபலமான அந்த மலையாள நடிகை சில தினங்களுக்கு முன்பு சமூக வலைத் தளத்தை விட்டு வெளியேறினாராம். பலரும் கேலி கிண்டல் செய்வதால் இந்த முடிவை எடுத்ததாக பலரும் பேசி வந்தார்களாம்.

    தற்போது முடிவை மாற்றிக் கொண்டு மீண்டும் சமூக வலைத்தளத்தில் வந்திருக்கிறாராம் நடிகை. இதற்கு காரணம் அவருடன் படத்தில் நடித்த அவருடைய காதலர் தானாம். இதற்கெல்லாம் பயந்து போகக்கூடாது என்று அவர் அறிவுரை சொன்னதாலேயே மனதை மாற்றிக் கொண்டு மீண்டும் சமூக வலைத்தளத்தில் வந்திருக்கிறாராம்.
    ஒரு பக்கம் எதிர்ப்பு, மறுபக்கம் ஆதரவு என்று ரசிகர்களை நினைத்து நடிகை திணறி வருகிறாராம்.
    போராட்டக் களத்தில் இருந்தவர் பெரிய முதலாளி வீட்டுக்கு சென்று மிகவும் பிரபலமானாராம். அங்கு அவர் சொன்ன பொய்யால் இன்றுவரை ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்களாம். தற்போது நடிகையாக அவதாரம் எடுத்திருக்கும் இவருக்கு பெரிய வாய்ப்புகள் எதுவும் இதுவரை வரவில்லையாம். எடுத்த படமும் பாதியில் நிற்கிறதாம்.

     சமூக வலைத்தளத்தில் நடிகை போடும் புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் பலரும் கிண்டல் செய்து வருவார்களாம். ஆனால் ஒரு தளத்தில் மட்டும் நடிகைக்கு பெரிய ஆதரவு இருந்து வருகிறதாம். இதனால் நடிகை எதை நம்புவது என்று தெரியாமல்  திணறி வருகிறாராம்.
    அக்கட தேசத்தை சேர்ந்த அழகிய நடிகை ஒருவர், தேடிவந்த வாய்ப்புகளை நழுவவிட்டு புலம்புகிறாராம்.
    அக்கட தேசத்தை சேர்ந்த அழகிய நடிகை ஒருவர் வருத்தப்படாமல் தமிழ் திரையுலகில் அறிமுகமானாலும், அடுத்தடுத்து பிரபல ஹீரோக்களுடன் ஜோடி போட்டு முன்னணி நடிகை ஆனாராம். குடும்பப்பாங்கான வேடங்களுக்கு கச்சிதமாக பொருந்தும் அந்த நடிகை, ஒரு கட்டத்திற்கு மேல் லட்சத்தில் இருந்த தனது சம்பளத்தை கோடியாக உயர்த்தினராம். 

    ஒன்றிரண்டு படங்களில் நடித்தவுடன் கோடிகளில் சம்பளம் கேட்ட அந்த நடிகையை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் முனைப்பு காட்டவில்லையாம். இதனால் தேடிவந்த வாய்ப்புகளை தவறவிட்ட அந்த நடிகை, தற்போது படவாய்ப்பு இல்லாமல் தவித்து வருகிறாராம்.
    பிரபலமான நடிகை ஒருவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு துண்டு போட்டு வருகிறாராம்.
    தெலுங்கில் முன்னணி நடிகையாகி விட்டாராம் ராசியான நடிகை. தற்போது தமிழிலும் முன்னணி நடிகையாக வேண்டும் என்று ஆசைப்பட்டு வருகிறாராம். இதனால் தமிழில் முன்னணி நடிகர்களாக இருக்கும் சிலருக்கு துண்டு போட்டு வருகிறாராம்.

    தற்போது ஊரடங்கு நேரத்தில் சமூக வலைத்தளத்தில் முன்னணி நடிகர்களை பற்றி அடிக்கடி பேசி வருகிறாராம். அவர்களின் கவனத்தைத் திருப்பவே நடிகை இதுபோல் செய்து வருகிறார் என்று பலரும் பேசி வருகிறார்களாம். 
    தமிழில் ஒரு சில படங்களில் நடித்த நடிகை விளையாட்டாக செய்து ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொண்டாராம்.
    முகமூடி அணிந்த நடிகை சமூகவலைதளத்தில் பிரபல நடிகையின் புகைப்படத்திற்கு விளையாட்டாக கருத்து சொன்னாராம். இந்த கருத்து பிரபல நடிகையின் ரசிகர்களை கோபப்படுத்தி விட்டதாம். 

    என்ன செய்வது என்று தெரியாமல் நடிகை, என்னுடைய கணக்கு முடக்கப்பட்டது என்று கூறிவிட்டாராம். அப்படி இருந்தும் பிரபல நடிகையின் ரசிகர்கள் முகமூடி அணிந்த நடிகையை விடாமல் தொந்தரவு செய்து விட்டார்களாம். 

    இப்படி விளையாட்டாக செய்ய போய் இப்படி மாட்டிக் கொண்டோமே என்று இரவு முழுவதும் தூங்காமல் தவித்து இருக்கிறாராம்.
    சீக்கிரமாகவே பிரபலமான நடிகைகளின் பட்டியலில் இடம் பிடித்த நடிகை, பிரபல நடிகர்கள் கொக்கி போட்டு வருகிறாராம்.
    தமிழில் உச்ச நடிகர் படத்தில் அறிமுகமான நடிகைக்கு, இரண்டாவது படமே தளபதியாருடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்து விட்டதாம். இதனால் மிகவும் பிரபலமான நடிகைகளின் பட்டியலில் இடம் பிடித்து விட்டாராம். 

    அடுத்த படத்தில் யாருடன் நடிக்கலாம் என்று யோசித்த நடிகை, முன்னணி நடிகர்கள் வரிசையில் அடுத்த படியாக இருக்கும் பிரபல நடிகருக்கு கொக்கி போட்டு வருகிறாராம். விரைவில் அவருடைய படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகி விடுவார் என்றும் பலரும் பேசி வருகிறார்களாம்.
    நடிகரும் இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் திருமணத்திற்கு நோ என்று வீட்டில் சொல்லிவிட்டாராம்.
    நடிகரும் இசையமைப்பாளருமான அவர், சமீபத்தில் நண்பர்களுடன் சேர்ந்து கோவில் கோவிலாக ஏறி இறங்கினாராம். இதை பார்த்தவர்கள் அனைவரும் திருமணத்திற்கான வேண்டுதல் என்று பேசி வந்தார்களாம். 

    ஆனால், நடிகருக்கு இதுவரை எந்த பெண்ணும் அமையாததால் திருமணமே செய்யப் போவதில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம். அதனால் வீட்டில் திருமணத்திற்கு நோ என்று சொல்லிவிட்டாராம். எதற்கு கல்யாணம், குழந்தை எல்லாம். தனியாக இருப்பதே மகிழ்ச்சி என்று கூறி வருகிறாராம்.
    ×