என் மலர்
கிசுகிசு
உலகம் முழுவதும் பல ரசிகர்களைக் கொண்ட நடிகை இந்தியாவை விட்டு ஓட்டம் பிடித்து இருக்கிறாராம்.
வெளிநாட்டில் ஆபாச படங்களில் நடித்து பிரபலமானவர், இந்தியாவிற்கு வந்து பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வந்தாராம். அங்கு அவருக்கு நல்ல சம்பளம் நல்ல ரசிகர்கள் கிடைத்ததால் இந்தியாவிலேயே செட்டிலாகிவிட்டாராம்.
சொந்தமாக வீட்டு வசதி என இருந்து வந்த அவர், தற்போது இந்தியாவை விட்டு சென்று இருக்கிறாராம். கொரானா ஊரடங்கு ஆகியவை நடிகைக்கு பாதுகாப்பு இல்லாததால் இந்தியாவை விட்டு வெளியேறியதாக அவர் கூறியிருக்கிறாராம்.
இந்தியாவை விட்டு வெளியேற விரும்பாத நடிகையை இந்த கொரானா இப்படி செய்து விட்டதே என்று அவர் ரசிகர்கள் புலம்பி வருகிறார்களாம்.
கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என பிசியாக நடித்துவரும் வீரமான நடிகை ஒருவர் சம்பள விஷயத்தில் கறார் காட்டுகிறாராம்.
தல, தளபதி போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த நடிகை ஒருவர் தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் நடிக்க ஆர்வம் காட்டுகிறாராம். அதையும் மீறி பிரபல ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்க சம்மதித்தாலும், அதற்கு அவர் கேட்கும் சம்பளம் தயாரிப்பாளர்களை வாயடைக்க செய்கிறதாம்.
சம்பளத்தை குறைக்க சொல்பவர்களிடம், "சம்பளம் என்பது நடிகர்களின் தனிப்பட்ட விஷயம். குறிப்பிட்ட சம்பளத்தை ஏற்பதும் ஏற்காததும் அவரவர் விருப்பத்தை பொறுத்தது. நடிகைகள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று பேசுவது ஏற்புடையது அல்ல. ஒருதலைபட்சமானது. இதே கேள்வியை ஏன் நடிகரிடம் கேட்பது இல்லை. நடிகைகள் அதிக சம்பளம் ஏன் வாங்க கூடாது? ஹீரோக்கள் மட்டும்தான் அதிக சம்பளம் வாங்க வேண்டுமா?" என்று சொல்கிறாராம்.
இளம் நடிகை ஒருவர் ஊரடங்கு உத்தரவின் போதும் ஊர் சுற்றி வருகிறாராம்.
முதல் படத்திலேயே கண்ணை காட்டி பல ரசிகர்களை வசியம் செய்த நடிகை, அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்காக பல போட்டோக்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் பரவ விட்டாராம்.
இதற்கு பலனாக இரண்டு மூன்று படங்கள் வாய்ப்பு கிடைக்க, அந்தப் படங்கள் சரியாக ஓடாததால் மறுபடியும் போட்டோக்களை சமூக வலைதளங்களில் பரவ விட்டிருக்கிறாராம்.
தற்போது ஊரடங்கிலும் பட வாய்ப்புக்காக இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் ஆகியோரை சந்தித்து வருகிறாராம். இதைக் கேள்விப்பட்ட பலர் ஊரடங்கிலும் நடிகை இப்படி ஊர் சுற்றுகிறார் என்று பேசி வருகிறார்களாம்.
இதற்கு பலனாக இரண்டு மூன்று படங்கள் வாய்ப்பு கிடைக்க, அந்தப் படங்கள் சரியாக ஓடாததால் மறுபடியும் போட்டோக்களை சமூக வலைதளங்களில் பரவ விட்டிருக்கிறாராம்.
தற்போது ஊரடங்கிலும் பட வாய்ப்புக்காக இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் ஆகியோரை சந்தித்து வருகிறாராம். இதைக் கேள்விப்பட்ட பலர் ஊரடங்கிலும் நடிகை இப்படி ஊர் சுற்றுகிறார் என்று பேசி வருகிறார்களாம்.
ஒரு தடவை பண்ணேன்... திருப்பியும் அதையே பண்ணமாட்டேன் என்று நடிகை ஒருவர் அலறுகிறாராம்.
தமிழ் சினிமாவில் காதலில் விழுந்த நடிகை அதன் பிறகு ஓரிரு படங்களில் நடித்து பிரபலமானாராம். வேற்று மொழி படங்களை நம்பி, தமிழ் பட வாய்ப்புகளை அதிகம் இழந்தாராம்.
நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம். ஆனால் அந்தப் படத்தில் மூன்று குழந்தைகளுக்கு அம்மாவாக நடிக்க சொன்னார்களாம். நடிகையும் பட வாய்ப்பு இல்லாததால் நடிக்க சம்மதித்தாராம்.
அந்தப் படம் நன்றாக ஓடவே, அதே மாதிரி கதாபாத்திரங்களில் நடிக்க நடிகைக்கு வாய்ப்புகள் வந்தவண்ணம் இருக்கிறதாம். ஆனால் நடிகையோ அந்த மாதிரி கதாபாத்திரத்தில் இனிமேல் நடிக்க மாட்டேன் என்று கூறிவருகிறாராம்.
நடிகையின் அலப்பறை தாங்க முடியவில்லை என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் வலம் வருகிறார்கள்.
சில ஆண்டுகளாக திரையுலகை விட்டு ஒதுங்கி இருந்த ஓ போட்ட நடிகை, மீண்டும் தமிழ் மற்றும் ஹிந்தி படங்களில் நடிக்க ஆர்வம் காண்பித்து வருகிறாராம்.
அவ்வப்போது தன் கவர்ச்சி படங்களை, சமூக வலைதளங்களில் வெளியிடுகிறாராம். ஆனால் இப்போது ஆப் மூலம் நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வருகிறாராம்.
இதைப்பார்த்த ரசிகர்கள் இந்த நடிகையின் அலப்பறை தாங்க முடியவில்லையே என்று சமூகவலைதளத்தில் டிரோல் செய்து வருகிறார்களாம்.
தமிழில் ஒரு சில படங்களில் நடித்து தலைகாட்டிய நடிகையை அவரது தாய் கட்டாயப்படுத்துவதால் அடம்பிடித்து வருகிறாராம்.
தமிழில் ஒரு சில படங்களில் மட்டும் தலைகாட்டிய நடிகை சமீபத்தில் மிக மிக அவசரமாக வந்தாராம். அந்த வேகத்திலேயே காணாமல் போய்விட்டாராம். பட வாய்ப்பு இல்லாததால் சமூக வலைத்தளத்தில் பாட்டு பாடி ஆட்டம் ஆடி வருகிறாராம்.
இந்நிலையில் நடிகையின் தாய் திருமணம் செய்ய கட்டாயப்படுத்துகிறாராம். ஆனால் நடிகையோ படம் வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு திருமணத்திற்கு மறுத்து வருகிறாராம்.
இதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வருகிறதாம். நடிகை ஓவர் பில்டப் கொடுப்பதால்தான் படவாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று பலரும் பேசி வருகிறார்களாம்.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையின் காதல் முறிவுக்கு அவர்தான் காரணம் என்றே பலரும் பேசி வருகிறார்களாம்.
சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு வந்த நடிகையும், இருக்கு ஆனா இல்லை என்று சொல்லும் இயக்குனருக்கும் காதல் இருப்பதாக ஏற்கனவே அரசல்புரசலாக பலரும் பேசி வந்தார்களாம். இதை இருவரும் கண்டு கொல்லாமல் இருந்தார்களாம்.
ஆனால் நடிகையை திடீரென்று கல்லூரி நண்பர் ஒருவரை காதலிப்பதாக சொன்னாராம். தற்போது அந்த காதல் முடிந்துவிட்டதாம். இதற்கு காரணம் அந்த இயக்குனர் தான் என்று கோடம்பாக்கத்தினர் பரவலாக பேசி வருகிறார்களாம்.
ஆனால் நடிகையை திடீரென்று கல்லூரி நண்பர் ஒருவரை காதலிப்பதாக சொன்னாராம். தற்போது அந்த காதல் முடிந்துவிட்டதாம். இதற்கு காரணம் அந்த இயக்குனர் தான் என்று கோடம்பாக்கத்தினர் பரவலாக பேசி வருகிறார்களாம்.
கிளாமர் வேடங்களில் கலக்கி வந்த பிரபல நடிகை ஒருவர், பழைய மாதிரி கவர்ச்சியாக ஆடிப்பாடி நடிக்க முடியாது என தெரிவித்துள்ளாராம்.
சில வருடங்களுக்கு முன் கட்டுக்கோப்பான உடலமைப்புடன் கவர்ச்சி வேடங்களில் கலக்கி வந்த ரம்மியமான நடிகை ஒருவர் திருமணத்துக்கு பின் நடிப்புக்கு முழுக்கு போட்டாராம். பின்னர் நடிக்க பல்வேறு வாய்ப்புகள் வந்தும் அதை மறுத்துவிட்டாராம். தற்போது நடிக்கலாம் என கணவர் கிரீன் சிக்னல் காட்டியதால் மீண்டும் களமிறங்க உள்ளாராம்.
ஆனால் ஒருசில நிபந்தனை விதித்திருக்கிறார். அது என்னவென்றால் நல்ல கதையும், கதாபாத்திரமும் அமைந்தால், மீண்டும் நடிப்பேன். என்னால் பழைய மாதிரி கவர்ச்சியாக ஆடிப்பாடி நடிக்க முடியாது. மூன்று குழந்தைகளுக்கு தாயாகி விட்டேன் என கூறியுள்ளார்.
முன்னணி நடிகர் வெளியிட்ட அறிவிப்பால் பிரபல தயாரிப்பாளர் அதிர்ச்சி அடைந்திருக்கிறாராம்.
தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர் வலிமையான படத்தில் நடித்திருக்கிறாராம். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் போதே எப்போது ரிலீசாகும் என்ற தேதியும் அறிவித்து இருந்தார்களாம். ஆனால் படப்பிடிப்பை சில காரணங்களால் அவ்வப்போது சரியாக நடைபெறவில்லை. தற்போது ஊரடங்கு உத்தரவால் படப்பிடிப்பு முழுவதும் பாதிக்கப்பட்டு இருக்கிறதாம்.
பின்னணி வேலைகளைத் தொடங்க அரசு அனுமதித்த போதும், அதன் வேலைகள் எதுவும் நடைபெறவில்லையாம். தயாரிப்பாளர் தொடங்க திட்டமிட்டிருந்த நிலையில் நடிகர் எந்த வேலையும் தொடங்க வேண்டாம் என்று கூறிவிட்டாராம். நடிகர் இப்படி கூறியதால் அதிர்ச்சியில் இருக்கிறாராம் தயாரிப்பாளர்.
பின்னணி வேலைகளைத் தொடங்க அரசு அனுமதித்த போதும், அதன் வேலைகள் எதுவும் நடைபெறவில்லையாம். தயாரிப்பாளர் தொடங்க திட்டமிட்டிருந்த நிலையில் நடிகர் எந்த வேலையும் தொடங்க வேண்டாம் என்று கூறிவிட்டாராம். நடிகர் இப்படி கூறியதால் அதிர்ச்சியில் இருக்கிறாராம் தயாரிப்பாளர்.
நடிகை ஒருவர் கதை விவாதத்தில் தலையிடுவதால் இளம் இயக்குனர் கடுப்பாகி வருகிறாராம்.
80-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அந்த அல்வா நடிகை. பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவது ஒரு சில படங்களில் நடிப்பது என்று இருந்து வருகிறாராம்.
தற்போது பள்ளிக்கூட ஆசிரியை கதாபாத்திரத்தை மையமாக வைத்து நடிகையிடம் ஒரு டைரக்டர் கதை சொல்லியிருக்கிறாராம். நடிகைக்கு அந்தக் கதை ரொம்ப பிடித்துப்போனதாம். கதை விவாதத்தில் அவர் கலந்துகொண்டு கதையை மேலும் மெருகேற்றும் பணியில் ஈடுபட்டு இருக்கிறாராம். ஆனால், அந்த படத்தின் இளம் இயக்குனரோ கடுப்பாகி இருக்கிறாராம்.
கொரோனா மற்றும் ஊரடங்கு பிரச்சினையில் நடிகை ஒருவர் உதவி செய்யாததால் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கிறார்களாம்.
கொரோனா மற்றும் ஊரடங்கு பிரச்சினையில் பாதிக்கப்பட்ட திரைப்பட தொழிலாளர்களுக்கு பிரபல நடிகர்- நடிகைகள் அனைவரும் உதவி செய்திருக்கிறார்களாம். ஆனால் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கும் மூன்றெழுத்து நடிகை மட்டும் எந்த உதவியும் செய்யவில்லையாம்.
இதனால் அவருடைய ரசிகர்கள் வருத்தப் படுகிறார்களாம். செல்லப்பிராணிகளிடம் காட்டும் அக்கறையை ஏழை மக்களிடமும் காட்டட்டும் என்று அவரது ரசிகர்கள் கூறுகிறார்களாம்.
1980 களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் தற்போதும் ஹீரோவாக தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்கிறாராம்.
தமிழ் சினிமாவில் 80 களில் மைக் பிடித்து பிரபலமானவர் அந்த நடிகர். சில பிரச்சனைகளால் நடிக்காமல் இருந்த இவர் தற்போது நடிக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறாராம். இதை அறிந்த பலர் அவரை தேடி சென்று கதை சொல்கிறார்களாம்.
ஆனால் அவரோ தன்னிடம் கதைக் கூற வரும் இயக்குனர்களிடம் எனக்கு என்ன வயசு ஆயிடுச்சு நடிச்சா ஹீரோவாக தான் நடிப்பேன் என சண்டையிட்டு அனுப்பி வைக்கிறாராம்.






