என் மலர்
கிசுகிசு
தெலுங்கு நடிகர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பால் முன்னணி நடிகை என்ன செய்வது என்று தெரியாமல் திக்கு முக்காடி இருக்கிறாராம்.
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் சின்ன நம்பர் நடிகை, தெலுங்கு பட நடிகருடன் அடிக்கடி கிசுகிசுக்கப்பட்டு வந்தாராம்.
இருவரும் ஒன்றாக ஊர் சுத்துவது பார்ட்டிகளில் கலந்து கொண்டு வந்தார்களாம்.
இந்நிலையில் நடிகர், தான் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் அறிவித்திருக்கிறாராம்.
இதைப்பார்த்த நடிகை என்ன செய்வது என்று தெரியாமல் திக்கு முக்காடி இருக்கிறாராம்.
தமிழில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று படங்களை நிராகரித்து வருகிறாராம்.
தமிழ் மானாக வந்து எலி படத்தில் நடித்த நடிகை தற்போது பல படங்களில் ஒப்பந்தம் ஆகி வருகிறாராம். ஆனால், பல படங்களுக்கு கதை கேட்டு நிராகரித்து விட்டாராம்.
காரணம் கதை பிடிக்காமல் இல்லையாம். அந்த கதைகளில் கவர்ச்சியாக நடிக்க வேண்டியது இருந்ததாம். அதனால் தான் நடிகை நிராகரித்து விட்டாராம்.
என் முகத்துக்கும், உடற்கட்டுக்கும் கவர்ச்சி செட் ஆகாது என்று இயக்குனர்களிடம் கட்டாயமாக சொல்லி விடுகிறாராம்.
காரணம் கதை பிடிக்காமல் இல்லையாம். அந்த கதைகளில் கவர்ச்சியாக நடிக்க வேண்டியது இருந்ததாம். அதனால் தான் நடிகை நிராகரித்து விட்டாராம்.
என் முகத்துக்கும், உடற்கட்டுக்கும் கவர்ச்சி செட் ஆகாது என்று இயக்குனர்களிடம் கட்டாயமாக சொல்லி விடுகிறாராம்.
பொறுத்திருந்து பார்த்த நடிகைக்கு பட வாய்ப்புகள் கிடைக்காததால் மனதை மாற்றி இருக்கிறாராம்.
தமிழில் ஓவியமாக வந்த நடிகை, பெரிய முதலாளி வீட்டுக்கு சென்று மிகவும் பிரபலமானவர், அதிக படங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்த்தாராம். ஆனால், எதிர் பார்த்த அளவிற்கு இல்லை என்றாலும், ஓரிரு படங்கள் வந்ததாம்.
ஆனால், அந்த படங்கள் எதுவும் சரியாக ஓடவில்லையாம். நல்ல படங்கள் கிடைக்கும் என்று பொறுத்து பார்த்தாராம். ஆனால், எதுவும் கிடைக்காததால் தன் மனதை மாற்றி வாய்ப்புகள் தேட ஆரம்பித்து இருக்கிறாராம். கவர்ச்சி புகைப்படங்களை தற்போது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறாராம். இனிமேலாவது நடிகைக்கு வாய்ப்பு கிடைக்குமா என்று பொறுத்து இருந்து தான் பார்க்கணும்.
ஆனால், அந்த படங்கள் எதுவும் சரியாக ஓடவில்லையாம். நல்ல படங்கள் கிடைக்கும் என்று பொறுத்து பார்த்தாராம். ஆனால், எதுவும் கிடைக்காததால் தன் மனதை மாற்றி வாய்ப்புகள் தேட ஆரம்பித்து இருக்கிறாராம். கவர்ச்சி புகைப்படங்களை தற்போது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறாராம். இனிமேலாவது நடிகைக்கு வாய்ப்பு கிடைக்குமா என்று பொறுத்து இருந்து தான் பார்க்கணும்.
முன்னணி நடிகை ஒருவர் கொரோனா நிவாரணத்துக்கு எந்தவித உதவியும் செய்யாததால் நடிகை மீது ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளார்களாம்.
கொரோனா மற்றும் ஊரடங்கு பிரச்சினையில் பாதிக்கப்பட்ட திரைப்பட தொழிலாளர்களுக்கு பிரபல நடிகர்- நடிகைகள் அனைவரும் தங்களால் முடிந்த உதவியை செய்துவரும் நிலையில், மூன்றெழுத்து நடிகை மட்டும் எந்த உதவியும் செய்யவில்லையாம். இதனால் அவரது ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளார்களாம்.
‘செல்லப்பிராணிகளிடம் காட்டும் அக்கறையை ஏழை மக்களிடமும் காட்டலாமே’ என்று அவரது ரசிகர்கள் கூறுகிறார்களாம். இருப்பினும் அந்த நடிகை இதுவரை எந்தவித உதவியும் செய்யாமல் மவுனம் காத்து வருகிறாராம். சமீபத்தில் அந்த நடிகை நடித்த எந்த படமும் ரிலீசாகாததால் அவர் நிதிச்சிக்கலில் இருப்பதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறதாம்.
தற்போது பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கும் நடிகை, விட்டதை பிடிக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறாராம்.
தெலுங்கில் தொப்புள் காண்பித்து பிரபலமான நடிகை, தற்போது அங்கு முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறாராம். தற்போது ஊரடங்கு நேரத்தில் பேசப்பட்ட சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் விட்டுக்கொடுக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளதாம்.
இதனால் ஊரடங்கு முடிந்து நிலைமை சீரானபின் தான் நடிக்க ஒப்புக்கொள்ளும் படங்களில் சம்பளத்தை கணிசமாக உயர்த்த முடிவு செய்துள்ளாராம். தன்னை போனில் தொடர்புகொள்ளும் தயாரிப்பாளர்களிடம் ஊரடங்கு முடிந்தபின் சம்பளம் பற்றி பேசிக்கொள்ளலாம் என கூறிவிடுகிறாராம் நடிகை.
டோலிவுட், கோலிவுட், பாலிவுட் என பல்வேறு மொழி படங்களில் நடிக்கும் நடிகை, கவர்ச்சியாக நடிக்க இரண்டு மடங்கு சம்பளம் கேட்கிறாராம்.
கோலிவுட்டில் முகமூடியுடன் அறிமுகமான நடிகை, தொடக்கமே தோல்வி படமாக அமைந்ததால், டோலிவுட் பக்கம் சென்றாராம். அங்கு படத்துக்கு படம் அவரது மார்க்கெட் எகிறிக்கொண்டே போகிறதாம். இதையடுத்து அந்த நடிகையை தேடி கோலிவுட் தயாரிப்பாளர்கள் படையெடுத்தார்களாம்.
ஆனால், அந்த நடிகை கேட்கும் சம்பளம் தயாரிப்பாளர்களை தலைசுற்ற வைக்கிறதாம். இதையடுத்து அந்த நடிகைக்கு முன்னணி பாலிவுட் நடிகருடன் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்ததாம். படத்தில் கவர்ச்சி காட்சிகளும், நெருக்கமான படுக்கை அறை காட்சிகளும் உள்ளன என்று அவரிடம் தெரிவித்து கதை சொன்னார்களாம். அனைத்துக்கும் ஓகே சொன்ன நடிகை, அவ்வாறு நடிக்க இரண்டு மடங்கு சம்பளம் கேட்கிறாராம்.
கோலிவுட்டில் சூப்பர் ஹிட்டான படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க அந்த நடிகை அதிக சம்பளம் கேட்கிறாராம்.
கோலிவுட்டில் சூப்பர் ஹிட்டான படங்களின் இரண்டாம் பாகம் உருவாவது தற்போது டிரெண்டாகி வருகிறது. அந்த வரிசையில் அடுத்ததாக சூப்பர் ஹிட்டான பேய் படத்தின், 2ம் பாகம் தயாராகிறதாம். இதில் ஹீரோயினாக நடிக்க முதல் பாகத்தில் நடித்த நடிகைகையை இரண்டாம் பாகத்திலும் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறதாம்.
ஆனால் சொந்த தயாரிப்பு தவிர வேறு தயாரிப்பு நிறுவனங்களின் படங்களில் நடிப்பதில்லை என்று முதலில் முரண்டுபிடித்த நடிகை பின்னர் நிபந்தனைகளுடன் நடிக்க சம்மதம் தெரிவித்தாராம். சம்பளம் அதிகம் கொடுத்தால் ஓகே என்கிறாராம். அந்த நடிகைக்கு இவ்வளவு சம்பளம் கொடுக்கலாமா? அல்லது வேறு யாரையாவது நடிக்க வைக்கலாமா? என்று யோசிக்கிறார்களாம்.
தமிழில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர்க்கு தயாரிப்பாளர் கிடைக்காமல் அவஸ்தைப்பட்டு வருகிறாராம்.
தமிழில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டு இருப்பவர் தயாரிப்பாளருக்கு அதிக செலவு வைப்பதாக பிரச்சனைகள் எழுந்ததாம். இதுபோக கதை திருட்டு பிரச்சனைகளிலும் இயக்குனர் சிக்கினாராம்.
இதையெல்லாம் கண்டுகொள்ளாத இயக்குனர் பாலிவுட்டில் முன்னணி நடிகரை வைத்து படம் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியானதாம். ஆனால் சில பிரச்சனைகளால் அது நடக்காமல் போனதாம். அடுத்ததாக தளபதியாரை வைத்து படம் இயக்க திட்டம் போட்டாராம். அதுவும் கைகூடாமல் இருக்கிறதாம். காரணம் விசாரித்த இயக்குனர் நம்பி படம் தயாரிக்க யாரும் முன்வரவில்லையாம். இதனால் அடுத்த படத்தை இயக்க முடியாமல் அவஸ்தைப்பட்டு வருகிறாராம் இயக்குனர்.
இந்தி தெலுங்கு மொழிகளில் பிரபலமாகி வரும் நடிகை தமிழ் நடிகர்களுக்கு கொக்கி போட்டு வருகிறாராம்.
இந்தி, தெலுங்கு திரையுலகில் பிரபலமாகி வரும் நித்தியமான நடிகைக்கு, தமிழ் படங்களில் நடிக்க ஆசை வந்திருக்கிறதாம். இதற்காக தமிழ் மொழி இயக்குநர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு தூது அனுப்பினாராம்.
எதுவும் பலன் அளிக்காததால் தற்போது தமிழில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்களுக்கு கொக்கி போட்டு வருகிறாராம். அவர்கள் மூலமாவது பட வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவ்வாறு செய்து வருகிறாராம்.
கொறோனா ஊரடங்கு உத்தரவு பிரபல நடிகைக்கு மிகவும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறதாம்.
பெரிய முதலாளி வீட்டுக்கு சென்றதன் மூலம் அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்ட நடிகை, அதே வீட்டில் இருந்தவருடன் காதல் வலையில் விழுந்தாராம். இருவரும் அடிக்கடி ஊர் சுற்றி வருவார்களாம்.
கடந்த வருடம் நடிகையின் பிறந்தநாளுக்கு இருவரும் வெளிநாட்டு சுற்றுப்பயணம் சென்றார்களாம். இந்த வருடம் ஊரடங்கு உத்தரவு இருப்பதால் இருவரும் சந்திக்காத நிலையில் இருக்கிறார்களாம். இதனால் நடிகை மிகவும் சோகத்துடன் தனது பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறாராம்.
பாட்டிக்கு எதுக்கு தேவையில்லாத வேலை என்று நடிகையை பலரும் கலாய்த்து வருகிறார்களாம்.
சில ஆண்டுகளாக திரையுலகை விட்டு ஒதுங்கி இருந்த ஓ போட்ட நடிகை, மீண்டும் தமிழ் மற்றும் ஹிந்தி படங்களில் நடிக்க ஆர்வம் காண்பித்து வருகிறாராம்.
அவ்வப்போது தன் கவர்ச்சி படங்களை, சமூக வலைதளங்களில் வெளியிடுகிறாராம். இவரிடம் ரசிகர் ஒருவர், 'உங்கள் வயது என்ன?' எனக் கேட்க, அதற்கு நடிகை, ''எனக்கு எப்போதுமே 16 வயது தான்,'' என கூறினாராம். ஆனால், இதற்கு பலர் பாட்டிக்கு எதுக்கு தேவையில்லாத வேலை என்று கலாய்த்து வருகிறார்களாம்.
நடித்தால் கதாநாயகி தான், இல்லையென்றால் படமே வேண்டாம் என்று நடிகை அதிரடியாக கூறிவிட்டாராம்.
தமிழில் ஓரிரு படங்களில் நடித்த நடிகை, காதலரைப் பற்றி பேசி பிரபலமானாராம். சில மாதங்களிலேயே இவர்களுடைய காதல் முடிவுக்கு வந்ததாம். காதலர் போனால் என்ன புகழ் இருக்கிறதே சம்பாதிக்கலாம் என்று நினைத்தாராம்.
ஆனால் நடிகைக்கு எந்த பட வாய்ப்பும் கிடைக்கவில்லையாம். நடிகை சிறப்பு தோற்றத்தில் நடித்த படங்கள் எதுவும் ஓடவில்லையாம். சமீபத்தில் நடிகை கே கதாநாயகி தோழியாக நடிக்க வேண்டும் என்று அழைத்தார்களாம். ஆனால் நடிகை நடித்தால் கதாநாயகி வேடம் தான் இல்லன்னா நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டாராம்.
ஆனால் நடிகைக்கு எந்த பட வாய்ப்பும் கிடைக்கவில்லையாம். நடிகை சிறப்பு தோற்றத்தில் நடித்த படங்கள் எதுவும் ஓடவில்லையாம். சமீபத்தில் நடிகை கே கதாநாயகி தோழியாக நடிக்க வேண்டும் என்று அழைத்தார்களாம். ஆனால் நடிகை நடித்தால் கதாநாயகி வேடம் தான் இல்லன்னா நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டாராம்.






