என் மலர்tooltip icon

    சினிமா

    கிசுகிசு
    X
    கிசுகிசு

    தயாரிப்பாளர் கிடைக்காமல் அவஸ்தைப்படும் இயக்குனர்

    தமிழில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர்க்கு தயாரிப்பாளர் கிடைக்காமல் அவஸ்தைப்பட்டு வருகிறாராம்.
    தமிழில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டு இருப்பவர் தயாரிப்பாளருக்கு அதிக செலவு வைப்பதாக பிரச்சனைகள் எழுந்ததாம். இதுபோக கதை திருட்டு பிரச்சனைகளிலும் இயக்குனர் சிக்கினாராம். 

    இதையெல்லாம் கண்டுகொள்ளாத இயக்குனர் பாலிவுட்டில் முன்னணி நடிகரை வைத்து படம் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியானதாம். ஆனால் சில பிரச்சனைகளால் அது நடக்காமல் போனதாம். அடுத்ததாக தளபதியாரை வைத்து படம் இயக்க திட்டம் போட்டாராம். அதுவும் கைகூடாமல் இருக்கிறதாம். காரணம் விசாரித்த இயக்குனர் நம்பி படம் தயாரிக்க யாரும் முன்வரவில்லையாம். இதனால் அடுத்த படத்தை இயக்க முடியாமல் அவஸ்தைப்பட்டு வருகிறாராம் இயக்குனர்.
    Next Story
    ×