என் மலர்
கிசுகிசு
முன்னணி நடிகை நடித்த ஒரு படம் தோல்வி அடைந்துள்ளதால் தற்போது திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம்.
திருமணத்திற்கு பிறகும் தமிழ் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர், சமீபத்தில் தன்னுடைய நடிப்பில் வெளியான ரீமேக் படங்கள் எதுவும் சரியாக ஓடவில்லையாம். இதனால் ரசிகர்கள் பலரும் நடிகைக்கு ரீமேக் படங்கள் செட் ஆகாது என்று கூறி வந்தார்களாம்.
இதனால் சோகத்தில் இருந்த நடிகை சமூக வலைதள பக்கத்தில் தலைகாட்டாமல் இருந்தாராம்.
தற்போது ஒரு படத்தின் ரீமேக்கில் நடிகை நடிக்கயிருப்பதாக செய்திகள் வெளியானதாம். இதை பார்த்த நடிகை அய்யய்யோ இனிமேல் ரீ-மேக் படங்களில் நடிக்க மாட்டேன். இந்த படமும் தோற்றால் என்னை ரொம்ப கலாய்ப்பார்கள் என்று இந்த முடிவை எடுத்திருக்கிறாராம்.
தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் ஒருவர், பணம் என்றதும் ஓகே சொல்லியிருக்கிறாராம்.
தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் சின்ன நம்பர் நடிகை, தற்போது குறிப்பிட்ட கதைகளை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறாராம். தற்போது படப்பிடிப்பு இல்லாததால் நடிகை மிகவும் வருத்தத்துடன் இருந்தாராம்.
இதை அறிந்த ஆப் நிறுவனம் ஒன்று நடிகையை அணுகி எங்களுடைய ஆப்- பில் நீங்கள் வந்தால் சிறப்பாக இருக்கும் என்று கூறினார்களாம். முதலில் மறுத்த நடிகை பின்னர் நிறைய பணம் தருகிறோம் என்று சொன்னதும் உடனே அதில் கலந்து கொண்டாராம்.
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மனதை அவரது காதலன் மாற்றி இருக்கிறாராம்.
தமிழில் முன்னணி நடிகையாக இருப்பவர் பல கோடி சம்பளம் வாங்கி வருகிறாராம். மேலும் நடிகைக்கு இரக்க குணம் அதிகம். அதனால் கொரோனா நிதியாக பெரிய தொகையை அள்ளிக் கொடுக்க முடிவு செய்தாராம். ஆனால் அவரின் காதலருக்கு அதில் உடன்பாடு இல்லையாம்.
கோடி, கோடியாக சம்பாதிக்கும் பெரிய நடிகர்களே கொஞ்சமாகத் தான் நிதி அளித்திருக்கிறார்கள். நீ எதற்காக பெரிய தொகையை கொடுக்க நினைக்கிறாய். அதெல்லாம் ஒன்னும் வேண்டாம், கொஞ்சமா கொடுத்தால் போதும் என்றாராம். இதையடுத்து நடிகை குறைந்த தொகையை நிதியாக அளித்துள்ளாராம்.
நடிகையின் இரக்க குணத்தை காதலர் மாற்றி வருவதாக பலரும் பேசி வருகிறார்களாம்.
ஊரடங்கு நேரத்தில் நடிகை செய்த காரியத்தால் நெட்டிசன்கள் பலரும் நடிகையை கலாய்த்து வருகிறார்களாம்.
பெரிய முதலாளி வீட்டிற்கு சென்று பலருடனும் சண்டைபோட்டு வெளியான நடிகை, அதன் பிறகு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தாராம். அப்போது ரசிகர்கள் பலரும் அவரை கிண்டல் செய்தார்களாம். ஒரு சில ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்து வந்தார்களாம்.
தற்போது ஊரடங்கு நேரத்தில் படுகவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறாராம் நடிகை. இதைப்பார்த்த ரசிகர்கள் பலர் இந்த நேரத்தில் இது தேவையா என்று கலாய்த்து வருகிறார்களாம். ஆதரவு தெரிவித்து வந்த ரசிகர்கள் கூட கடுப்பாகி இருக்கிறார்களாம்.
தமிழ் தெலுங்கு மொழிகளில் பிரபலமாக இருக்கும் நடிகை ஒரு பதிவு செய்யாதது குற்றமா என்று புலம்பி வருகிறாராம்.
தமிழ் தெலுங்கு மொழிகளில் மிகவும் பிரபலமான நடிகை, தெலுங்கில் முன்னணி நடிகரின் மகனை திருமணம் செய்து கொண்டாராம். திருமணத்திற்கு பிறகு நடிகரின் வீட்டாருக்கும் நடிகைக்கும் பிரச்சனை என்று பல செய்திகள் வெளியானதாம். ஆனால் நடிகை இதைப்பற்றி எதுவும் கண்டு கொள்ளவில்லையாம்.
தற்போது சமீபத்தில் நடிகரின் சகோதரருக்கு பிறந்தநாள் வந்ததாம். பலரும் வாழ்த்து சொன்னார்கள் ஆனால், நடிகையோ சமூக வலைத்தளத்தில் வாழ்த்துக் கூறி ஒரு பதிவு கூட செய்யவில்லையாம். இதை பலரும் குடும்பத்தில் பிரச்சனை என்று உறுதி செய்து விட்டார்களாம்.
ஆனால் நடிகை ஒரு பதிவு செய்யாதது குற்றமா இதற்கு என்னென்னமோ பேசுகிறார்கள் என்று வருத்தப்படுகிறாராம்.
கோலிவுட்டில் 10 ஆண்டுகளுக்கு மேல் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை ஒருவர், கோடீஸ்வர மாப்பிள்ளையை தேடி வருகிறாராம்.
மூன்றெழுத்து நடிகைக்கு அவருடைய தாயார் சில ஆண்டுகளாக மாப்பிள்ளை தேடி வருகிறாராம். இதற்கிடையில் அவருக்கும், தெலுங்கு நடிகரும் காதல் இருந்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது. இருவரும் திருமணம் வரை நெருங்கி, பின்னர் பிரிந்து விட்டதாகவும் பேசப்பட்டது. ஆனால் இதுகுறித்து இருவரும் எந்தவித மறுப்பும் தெரிவிக்கவில்லை.
தற்போது அந்த நடிகை மாப்பிள்ளை பார்ப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளாராம். “மாப்பிள்ளை என்னை புரிந்து கொண்டவராக இருக்க வேண்டும்” என்ற ஒரே ஒரு நிபந்தனையை மட்டும் நடிகை தனது தாயாரிடம் கூறியிருக்கிறாராம். அதோடு மாப்பிள்ளை பெரும் கோடீஸ்வரராக இருக்க வேண்டுமாம். சிக்குபவர் யாரோ?
தற்போது தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமாகி வரும் நடிகை, நடிகர் ஒருவருக்கு ரூட்டு போட்டு வருகிறாராம்.
துணை நடிகையாக அறிமுகமாகி பெரிய முதலாளி வீட்டுக்கு சென்று பிரபலமாகி தற்போது ஹீரோயினாக இருக்கிறாராம் அந்த நடிகை. இவர் இளம் நடிகர் ஒருவருடன் சேர்ந்து நடித்த படம் ஒன்று நல்ல வரவேற்பை பெற்றதாம்.
எல்லோரும் நல்ல ஜோடி என்று சொல்ல நடிகைக்கு அந்த ஹீரோ மீது ஒரு ஈர்ப்பு வந்து விட்டதாம்.
இதனால் நடிகை சிரித்து ஜாலியாக சொன்னால் அதை யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்று நினைத்து, அவரைத்தான் கல்யாணம் பண்ணப் போகிறேன், அவரைத்தான் காதலிக்கிறேன் என்று அடிக்கடி சொல்லி வருகிறாராம்.
ஆனால் அந்த ஹீரோ அவர் உண்டு, அவர் வேலை உண்டு என்று இருக்கிறாராம்.
எல்லோரும் நல்ல ஜோடி என்று சொல்ல நடிகைக்கு அந்த ஹீரோ மீது ஒரு ஈர்ப்பு வந்து விட்டதாம்.
இதனால் நடிகை சிரித்து ஜாலியாக சொன்னால் அதை யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்று நினைத்து, அவரைத்தான் கல்யாணம் பண்ணப் போகிறேன், அவரைத்தான் காதலிக்கிறேன் என்று அடிக்கடி சொல்லி வருகிறாராம்.
ஆனால் அந்த ஹீரோ அவர் உண்டு, அவர் வேலை உண்டு என்று இருக்கிறாராம்.
தமிழில் மிகவும் பிரபலமான நடிகை மற்ற நடிகைகளின் படத்தை கைப்பற்ற முயற்சி செய்து வருகிறாராம்.
தமிழில் முன்னணி நடிகையாக வலம்வந்த இனிப்பு கடை நடிகைக்கு தற்போது படவாய்ப்புகள் குறைந்து வருகிறதாம். இதனால் மட்டும் நடிகைகளின் படத்தை கைப்பற்ற முயற்சி செய்து வருகிறாராம்.
சமீபத்தில் கூட பெரிய நம்பர் நடிகை நடிக்க ஒப்பந்தமான படத்திலிருந்து விலகிய போது, மற்றும் நடிகைகள் யாரும் கைப்பற்றி விடக்கூடாது என்று முன்கூட்டியே அந்த நடிகருக்கு போன் செய்து பேசி அந்தப் படத்தில் ஒப்பந்தம் ஆகி விட்டாராம்.
மேலும் வெற்றிபெற்ற படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதை அறிந்து அந்தப் படத்தில் நடிக்க முயற்சி செய்து வருகிறாராம்.
வாரிசு நடிகரின் செயலுக்கு நெட்டிசன்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் கலாய்த்து வருகிறார்களாம்.
கலைக் குடும்பத்தைச் சேர்ந்த வரும் அரசியல் தலைவரின் வாரிசுமான நடிகர், தற்போது படங்களை குறைத்துக்கொண்டு அரசியலில் தீவிர ஆர்வம் காண்பித்து வருகிறாராம்.
தற்போது ஊரடங்கு உத்தரவு இருப்பதால் வெளியே செல்லாமல் இருக்கும் நடிகர், நடிகர்கள் பலரும் சிரமத்தில் இருப்பவர்களுக்கு பண உதவி உள்ளிட்ட உதவிகளை செய்து வருவதை கண்டு, தானும் உதவி செய்யலாம் என்று முடிவுக்கு வந்தாராம்.
ஆனால் நடிகரோ ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே உதவி செய்திருக்கிறாராம். இதை அறிந்த நெட்டிசன்கள் நடிகர் ரொம்ப கஷ்டத்தில் இருக்கிறார் போல... இவர்களிடம் பணம் இல்லை போல.. அதனால்தான் ஒரு லட்சம் ரூபாய் கொடுக்கிறார் என்று கலாய்த்து வருகிறார்களாம்.
அந்தப் படத்தில் அவர் நடிக்க கூடாது, நான் தான் நடிப்பேன் என்று நடிகர் ஒருவர் அடம் பிடித்து வருகிறாராம்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு வம்பு நடிகர் படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காண்பித்து வருகிறாராம். இதற்காக பல படங்களையும் கதைகளையும் கேட்டு வருகிறாராம்.
தெலுங்கு படத்தை பார்த்த நடிகர் அதை ரீமேக் செய்து நடிக்கலாம் என்று ஆசைப்பட்டு இருக்கிறாராம். விசாரிக்கையில் இந்த படத்தின் ரீமேக்கில் சிவமான நடிகர் நடிக்க ஆர்வம் காண்பித்து இருப்பதாக அவருக்கு தெரிய வந்ததாம்.
இதனால் அந்தப் படத்தின் ரீமேக்கை கைப்பற்ற நடிகர் முயற்சி செய்து வருகிறாராம். வேற யாராவது அந்தப் படத்தின் ரீமேக்கை கைப்பற்றினாள் அவர் நடிக்கக்கூடாது, நான் தான் நடிப்பேன் என்று பலரிடமும் கூறி வருகிறாராம்.
அக்கட தேசத்தை சேர்ந்த அழகான நடிகை ஒருவரின் முகநூலை முடக்கி அந்தரங்க புகைப்படங்களை பதிவேற்றி ஹேக்கர்கள் சேட்டை செய்துள்ளார்களாம்.
அக்கட தேசத்தை சேர்ந்த அழகிய நடிகை தமிழில் கொடி பறக்க வைக்க வந்தாராம். அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்த குஷியில் இருக்கும் அந்த நடிகையை ஹேக்கர்கள் சீண்டி உள்ளார்களாம். அந்த நடிகையின் முகநூலை முடக்கி அந்தரங்க புகைப்படங்களை பதிவேற்றி சேட்டை செய்துள்ளார்களாம்.
இதனால் கடுப்பான நடிகை, எனது புகைப்படத்தை இப்படி மார்பிங் செய்துள்ளீர்களே உங்களுக்கு அறிவு இல்லையா? உங்களுக்கு சகோதரியும், அம்மாவும் இல்லையா? என கடுமையாக திட்டி தீர்த்து விட்டாராம். அடுத்தகட்டமாக இந்த விவகாரத்தை சைபர் கிரைம் பக்கம் எடுத்து சென்றுள்ளாராம் அந்த நடிகை.
சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட நடிகையை பலரும் கலாய்த்து வருகிறார்களாம்.
பெரிய முதலாளி வீட்டிற்கு சென்று பலருடனும் சண்டைபோட்டு வெளியான நடிகை, அதன் பிறகு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தாராம். அப்போது ரசிகர்கள் பலரும் அவரை கிண்டல் செய்தார்களாம்.
தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறாராம். இதைப் பார்த்த ரசிகர்கள் இந்த நேரத்தில் இது தேவையா, என்று கண்ட படி கலாய்த்த வருகிறார்களாம்.
தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறாராம். இதைப் பார்த்த ரசிகர்கள் இந்த நேரத்தில் இது தேவையா, என்று கண்ட படி கலாய்த்த வருகிறார்களாம்.






