என் மலர்
கிசுகிசு
தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை வழங்க இருந்த உதவித்தொகையை அவரது காதலன் குறைத்துள்ளாராம்.
கொரோனா வைரஸ் பரவுவதன் காரணமாக சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் திரைப்பட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. அவர்களுக்கு நடிகர்- நடிகைகள் உதவி செய்து வருகிறார்கள்.
இயல்பாகவே இரக்க சுபாவம் கொண்ட ஒரு ஐந்தெழுத்து நடிகை, பெரிய தொகையை கொடுக்க முன்வந்தார். அதற்கு அவருடனே வசித்து வரும் காதலர் தடை போட்டு, உதவித்தொகையை பாதியாக குறைத்து விட்டாராம்.
அதற்கு அவர் சொன்ன காரணம்: ‘‘ஒரு நட்சத்திர அப்பா, மகன்களே ரூ.10 லட்சம்தான் கொடுத்து இருக்கிறார்கள். நீ (நடிகை) இவ்வளவு கொடுத்ததே போதும்’’ என்றாராம். ‘‘காதலரின் கட்டளையே சாசனம்’’ என்று அந்த நடிகையும் அதை அப்படியே ஏற்றுக்கொண்டாராம்.
கோலிவுட், டோலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் அக்கட தேசத்து நடிகை ஒருவர் வதந்தி பரப்பிய நடிகரை திட்டினாராம்.
அக்கட தேசத்தை சேர்ந்த வாரிசு நடிகை ஒருவருக்கு தொழிலதிபருடன் திருமணம் நடக்க இருப்பதாக சமீபத்தில் ஒரு செய்தி தீயாய் பரவியதாம். இதனை திட்டவட்டமாக மறுத்த அந்த நடிகை, தற்போதைக்கு திருமணம் செய்யும் எண்ணமில்லை, சினிமாவில் மட்டும் கவனம் செலுத்த இருப்பதாக கூறினார்.
இதுபோன்ற செய்தியை கிளப்பிவிட்டது யார் என கண்டுபிடிக்க விசாரணையில் இறங்கினாராம் அந்த நடிகை. இறுதியில் ஒரு காமெடி நடிகர் தான் இதனை பரப்பிவிட்டதாக நடிகையின் காதுக்கு செய்திவர, சம்பந்தப்பட்ட நடிகரை போனில் தொடர்பு கொண்டு விளாசி விட்டாராம்.
கடந்த சில நாட்களாக நடிகை அமைதியாக இருப்பதால், டோலிவுட் வட்டாரங்கள் பல விதமாக பேசி வருகிறார்களாம்.
சமூக வலைத்தளங்களில் அதிகமாக ஆக்டிவ்வாக இல்லாதவர்கள் கூட தற்போது தினமும் ஒரு வீடியோ அல்லது பதிவு என பிஸியாக உள்ளார்களாம். ஆனால், எப்போதுமே சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் யூ டர்ன் போட்ட நடிகை, கடந்த பத்து நாட்களாக அமைதியாக இருப்பது டோலிவுட்டில் ஆச்சர்யத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளதாம்.
எந்த ஒரு நன்கொடையையும் அவர் அறிவிக்கவில்லையாம். தனது சமூக சேவை நிறுவனம் மூலம் என்ன உதவி செய்கிறார் என்பதையும் தெரிவிக்கவில்லையாம். ஒரு சிலரோ நடிகை கர்ப்பமாக இருப்பதால் ஓய்வில் இருக்கிறார் என்றெல்லாம் பேச ஆரம்பித்துவிட்டார்களாம். இப்படியான கிசுகிசுக்கள் மேலும் பரவாமல் தடுக்க நடிகை சீக்கிரமே ஏதாவது ஒன்றை பதிவிட வேண்டும் என திரையுலகில் எதிர்பார்க்கிறார்களாம்.
அந்த நடிகை விழாவில் ஆட்டம் போட்டது அதற்கு தானா என்று நடிகைகள் பலர் பேசி வருகிறார்களாம்.
தமிழில் நம்பர் ஒன் இடத்தில் இருந்த ரன் நடிகை திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தாராம். தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறாராம். இதற்காக பல முன்னணி ஹீரோக்களுக்கு தூது அனுப்பி வருகிறாராம்.
சமீபத்தில்கூட முன்னணி நடிகரின் படவிழாவில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டாராம். இதற்குக் காரணம் நடிகரின் அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு தான் அந்த விழாவில் கலந்து கொண்டாராம். இது பல நடிகைகள் கேட்டு தெரிந்து பலரிடம் பேசி வருகிறார்களாம்.
அண்டை நாட்டை சேர்ந்த அழகான தமிழ் நடிகை தனது பெயரில் பொய்யான வீடியோ லீக் ஆனதால் கடுப்பாகி உள்ளாராம்.
அண்டை நாட்டை சேர்ந்த தமிழ் பேசும் நடிகை ஒருவர் பெரிய தல நிகழ்ச்சி மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளாராம். அந்த நிகழ்ச்சியில் கிடைத்த வரவேற்பால் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றனவாம்.
சமீபத்தில் அந்த நடிகையின் பெயரில் ஆபாச படம் ஒன்று உலா வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அது மார்பிங் செய்யப்பட்டது தெரியவந்தது. இதையறிந்து கடுப்பான நடிகை மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறாராம்.
மீண்டும் சொந்தமாக படம் எடுங்கள் என்று சொன்னவரிடம் வேண்டவே வேண்டாம் என்று அலறி இருக்கிறாராம் வாரிசு நடிகர்.
தமிழில் வாரிசு நடிகராக இருப்பவர் சில வருடங்களுக்கு முன்பு ஒரு படத்தை சொந்த செலவில் தயாரித்தாராம். ஆனால், அந்த படம் வெளியிட ரொம்ப சிரமப்பட்டார். அப்படி வெளியிட்ட படமும் சரியாக ஓடவில்லையாம். இதனால் படம் இனிமேல் தயாரிக்க வேண்டாம் என்று முடிவு செய்து இருந்தாராம்.
தற்போது புதிய படத்தின் கதை கேட்ட நடிகர், பட தயாரிப்பாளரை தேடி வருகிறாராம். ஆனால் இதுவரை யாரும் கிடைக்க வில்லையாம். இதனால் படக்குழுவினர் நீங்களே படத்தை தயாரிக்கலாமே என்று சொல்லியிருக்கிறாராங்களாம். இதற்கு நடிகர் நானா, மாட்டவே மாட்டேன் என்று அலறுகிறாராம்.
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர், சம்பளம் வேண்டாம், அவருடன் நடித்தால் போதும் என்று கூறியுள்ளாராம்.
சிரித்து சிரித்து தமிழ் ரசிகர்களைக் கவர்ந்த நடிகை, திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை குறைத்துக் கொண்டாராம். தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வரும் அவர், பல கதைகளைக் கேட்டு வருகிறாராம்.
பிளாஷ்பேக் நடிகை, இளம் நடிகருக்கு அக்கா, மற்ற கதாபாத்திரங்கள் வருகிறதாம். ஆனால் நடிகைக்கு ஒரு ஆசை இருக்கிறதாம். அதாவது உச்ச நடிகர் உடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பதுதானாம். அவருடன் என்றால் சம்பளம் கூட வேண்டாம் என்கிறாராம்.
தற்போது உலகமெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் தனது காதலனை பிடித்து விட்டதாக நடிகை வருத்தத்தில் இருக்கிறாராம்.
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் இயக்குனர் ஒருவரை காதலிக்கும் விஷயம் அனைவருக்கும் தெரிந்ததே. இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்களாம். தற்போது பரவிவரும் கொரோனா வைரசால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்களாம்.
ஆரம்பத்தில் ஒன்றாக இருந்த இவர்கள், வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களுக்கு கொரோனா அதிகம் பரவுவதாக அறிந்து இருவரும் பிரிந்து இருக்கிறார்களாம். சமீபத்தில் இவர்கள் 2 பேரும் வெளிநாட்டுக்கு சென்று திரும்பியதால் இந்த முடிவை எடுத்திருக்கிறார்களாம்.
தமிழில் ஒரு சில படங்களில் நடித்து பிரபலமான கேரள நடிகை, தற்போது மாப்பிள்ளை தேடி வருகிறாராம்.
தமிழில் ஒரு சில படங்களில் நடித்து பிரபலமான கேரள நடிகை, தற்போது கொச்சியில் வசித்து வருகிறார். கேரளாவில் இருந்தோ, வெளியே இருந்தோ பொருத்தமான முஸ்லிம் வரன் எனக்கு தேவை என்று கூறியுள்ளாராம்.
மேலும் கணவராகப்போகிறவர் திருமணத்திற்கு பிறகும் நான் நடிக்க சம்மதிக்கவேண்டும். எனது வளர்ச்சிக்கு அவர் துணைபுரியவேண்டும். அதுவே என் நிபந்தனை என்று கூறுகிறார் அந்த நடிகை.
தமிழில் ஒரு சில படங்களில் நடித்த நடிகை தற்போது மீண்டும் நடிகருடன் நடிக்க ஆசைப்பட்டு வருகிறாராம்.
தமிழில் அச்சமில்லாமல் வம்பு நடிகருடன் நடித்த நடிகைக்கு அந்த படத்தில் நல்ல பெயர் கிடைத்ததாம். அதன் பின் ஒரு சில படங்களில் நடித்தாலும் நடிகைக்கு எந்தப் படமும் ஓடவில்லையாம். மீண்டும் ஒரு நல்ல படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படும் நடிகைக்கு இதுவரை எந்த பட வாய்ப்பும் கிடைக்க வில்லையாம்.
இதனால் வருத்தத்தில் இருக்கும் நடிகை மீண்டும் வம்பு நடிகருடன் நடிக்க ஆசைப்படுவதாகவும், அதற்காக தூது அனுப்பி இருப்பதாகவும் கூறுகிறார்களாம்.
முன்னணி நடிகர் நடிக்க வந்த நேரம் உலகமே இப்படி ஆகிடுச்சே என்று பட அதிபர்கள் குழம்பி வருகிறார்களாம்.
மூன்றெழுத்து கதாநாயகன் நடித்து வந்த புதிய படம், முதலில் பெரும் சர்ச்சைக்குள்ளானதாம். ஒருவழியாக சமரசம் பேசி, கதாநாயகன் நடிக்க வந்தாராம். படப்பிடிப்பும் மிக வேகமாக நடைபெற்று வந்ததாம்.
அந்த நடிகர் படப்பிடிப்புக்கு சரியாக வரமாட்டாரே... எப்படி கரெக்டா நடக்குது என்று சொல்லிக் கொண்டிருக்கும் நிலையில், கொரோனா பீதி காரணமாக அந்த படப் பிடிப்பு ரத்து செய்யப்பட்டதாம். மறுபடியும் படப்பிடிப்பு எப்போது தொடங்கும்? என்ற எதிர் பார்ப்புடன் காணப்படுகிறார், தயாரிப்பாளர்.
ஆனால் இவரை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்கள், நடிகர் கரெக்டா நடிக்க வந்த நேரம் பார்த்து இப்படி ஆகிடுச்சு என்று புலம்பி வருகிறார்களாம்.
முன்னணி கதாநாயகி ஒருவர் தன்னுடன் ஜோடி போட ஆள் தேடி வருகிறாராம்.
தென்னிந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் அந்த நடிகை, டைரக்டரான தனது காதலரை சமீபத்தில் தயாரிப்பாளராக உயர்த்தினாராம். தற்போது காதலரை நிரந்தர தயாரிப்பாளராக நிலைக்க செய்யும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறாராம்.
இதற்காக அவர் ஜோடி போடும் பிரபல கதாநாயகர்களிடம், ‘கால்ஷீட்’ கேட்டு வருகிறாராம். முன்னணி கதாநாயகன் ஒருவர் கால்ஷீட் கொடுக்க தயாராகி வருகிறாராம்.






