என் மலர்
கிசுகிசு
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஹீரோயின் ஒருவர் தற்போது சம்பளத்தை குறைத்துள்ளாராம்.
‘பொம்மாயி’ வேடம் போட்ட அந்த பிரபல கதாநாயகி, ஒரு படத்துக்காக குண்டானாராம். அந்த படம் முடிவடைந்ததும் பழைய உடம்பை கொண்டுவர முயற்சி செய்தார். உடனடியாக முடியவில்லை. மெலிவதற்கான சிகிச்சை பெற்றபின், அவருக்கு பழைய உடம்பு கிடைத்து இருக்கிறது.
இந்த நிலையில், அந்த நடிகைக்கு பட வாய்ப்புகள் குறைந்து விட்டன. கவலை அடைந்த நடிகை, மீண்டும் இழந்த மார்க்கெட்டை பிடிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறாராம்.
முதல்கட்டமாக அவர் தனது சம்பளத்தை குறைத்து இருக்கிறாராம். அவருடைய சம்பள குறைப்புக்கு சில தெலுங்கு பட அதிபர்கள் வரவேற்பு தெரிவித்து இருக்கிறார்களாம்.
தமிழில் முன்னணி நடிகராக வலம் வருபவர், இளம் இயக்குனர் ஒருவரை பாடாய் படுத்தி விட்டாராம்.
எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் சிறப்பாக நடித்து பெயர் பெற்று வரும் மக்கள் செல்வாக்கு உள்ள நடிகர், தற்போது புதிய படத்தில் வில்லனாக நடித்துள்ளாராம். இவரை வைத்து இயக்கும் இளம் இயக்குனரை நடிகர் பாடாய் படுத்தி விட்டாராம்.
இயக்குனரின் கதையில் நுழைந்து சில மாற்றங்களை சொல்லியதோடு மட்டுமில்லாமல், இயக்கத்திலும் தலையிட்டு இதை அப்படி செய், அதை அப்படி செய் என்று சொல்லி இயக்குனரை வேலை வாங்கி விட்டாராம். இவரை இந்த படத்தில் கமிட் பண்ணதே தப்பா போச்சே என்று புலம்பி வருகிறாராம் இயக்குனர்.
நன்கு தமிழ் பேச தெரிந்த நடிகைக்கு கோலிவுட்டை விட டோலிவுட்டில் மவுசு அதிகரித்து இருக்கிறதாம்.
கோலிவுட் திரையுலகில் தமிழ் பேச தெரிந்த நடிகைகளுக்கு எதிர்பார்த்த பட வாய்ப்பு கிடைப்பதில்லை என்பது தொடர்கதை ஆகியுள்ளதாம். அந்த டிரெண்டை மாற்ற மதுரையை சேர்ந்த சங்கத்தமிழ் நடிகை முயன்றாராம். ஆனால் அவரது சூட்சமம் பலிக்காததால், அக்கட தேசத்துக்கு அப்பீட்டாகி விட்டாராம்.
ஆம் அந்த நடிகைக்கு கோலிவுட்டில் கோடிகள் கிடைக்காததால், தற்போது டோலிவுட் பக்கம் திரும்பியுள்ளாராம். அங்கு அந்த நடிகையின் மார்க்கெட் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளதாம். இதனால் கோலிவுட்டுக்கு பைபை சொல்லிவிட்டு டோலிவுட்டில் செட்டிலாக அந்த நடிகை முடிவெடுத்திருக்கிறாராம்.
எவ்வளவு பணம் கொடுத்தாலும் அந்த வேடத்தில் நடிக்க மாட்டேன் என்று பிரபல நடிகை கூறியிருக்கிறாராம்.
90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை, திருமணத்துக்கு பின்னர் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டாராம். திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாயான நடிகை, தற்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்து இருக்கிறாராம்.
திருமணமான நடிகை என்பதால், அம்மா வேடத்துக்கு நடிக்க அழைக்கிறார்களாம். ஆனால் நடிகையோ எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும், நடிக்க மாட்டேன் என்று உறுதியாக இருக்கிறாராம்.
தமிழில் சில ஆண்டுகளுக்கு முன்பு முன்னணி நடிகையாக இருந்தவர் தற்போது இனிமேல் படத்தில் நடிக்க மாட்டேன் என்று முடிவு செய்து இருக்கிறாராம்.
தமிழில் வீரனாக வந்த படத்தில் விருது பெற்ற பெல் நடிகை, ஒரு சில காரணங்களால் தமிழில் ஓரங்கட்ட பட்டாராம். தெலுங்கில் ஒரு சில படங்களில் நடித்தாலும் அதிகமாக ஜொலிக்க முடியவில்லையாம். இனிமேல் படமே வேண்டாம் என்று ரியால்டி ஷோக்களில் கலந்துக் கொண்டு வந்த நடிகை, இணைய தொடர் ஒன்றில் நடித்தாராம்.
இது பாலிவுட் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து விட்டதாம். அதனால், இனிமேல் படங்களில் நடிக்க மாட்டேன். இணைய தொடரில் மட்டுமே நடிப்பேன் என்று முடிவு செய்து இருக்கிறாராம். நடிகையின் இந்த முடிவு எவ்வளவு தூரம் போகும் என்று பலரும் பேசி வருகிறார்களாம்.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ஒருவர், வயதான நடிகருடன் ஜோடி சேர மறுத்துவிட்டாராம்.
பல்லாவரம் அழகி நடிகையின் காதலன் இயக்கும் புதிய படத்தில் இருந்து சமீபத்தில் விலகிக் கொண்டாராம். அந்த படத்தில் ஏற்கனவே அதிக சம்பளம் வாங்கும் நடிகை நடித்து வருகிறாராம். பல்லாவரம் அழகிக்கு பதில் மூணுஷாவை அந்த படத்தில் நடிக்க வைக்க முயற்சி நடக்கிறதாம். இவரும், அதிக சம்பளம் வாங்கும் நடிகையும் இதுவரை இணைந்து நடித்ததில்லையாம்.
இப்போது இணைந்து நடிப்பதற்கு ஒரு வாய்ப்பு வந்து இருக்கிறது. அதை இருவரும் பயன்படுத்திக் கொள்வார்களா? என்ற எதிர்பார்ப்பு கோடம்பாக்கத்தில் இருந்து வருகிறது. மேலும் இதற்காக தான் மூணுஷா நடிகை வயதான நடிகரின் படத்தில் இருந்து சமீபத்தில் விலகினார் என கிசுகிசுக்கள் பரவி வருகிறதாம்.
பிரபல நடிகர் நடிக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பதால் நடிகை சம்பளத்தை அதிகளவு குறைத்திருக்கிறாராம்.
தமிழில் முகமூடி அணிந்து வந்த நடிகை, ஒரு படத்திலேயே ஓரங்கட்ட பட்டாராம். ராசி இல்லாத நடிகை என்று கூறப்பட்ட நடிகை, தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறாராம்.
தற்போது இந்தியில் மான் நடிகர் நடிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறாராம். பாலிவுட்டுக்கு செல்லும் நடிகைகள் பலரும் சம்பளத்தை அப்படியே இரட்டிப்பாக்கி விடுவார்களாம். இந்த விஷயத்தில் நடிகை அப்படியே நேர் எதிராக இருக்கிறாராம். தான் வாங்கி வரும் ஊதியத்தை விட குறைவாகவே இந்த படத்தில் வாங்க சம்மதித்திருக்கிறாராம்.
மான் நடிகருடன் இணைந்து நடிக்க நடிகை பல வருட கனவாம். இப்போது அமைந்திருப்பதால் சம்பளத்தை பெரியதாக கருதவில்லையாம்.
சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடித்த நடிகை ஒருவர், பார்ட்டிகளுக்கு அழையா விருந்தாளியாக செல்கிறாராம்.
சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடித்த நடிகை ஒருவர், ஒருகாலத்தில் உடன் நடிப்பவர்களை மதிக்காமல் ஓவர் பந்தா காட்டி வந்தாராம். தற்போது திருமணத்துக்கு பின் மீண்டும் திறமையை காட்ட வந்துள்ள அந்த அம்மணியை மாஜி ஹீரோக்கள் ஏறெடுத்து கூட பார்ப்பதில்லையாம்.
இருப்பினும், நான் இப்போது பழைய பந்தா நடிகை இல்லை என்பதை வெளிப்படுத்தும் வகையில், அவர்களை வலிய சென்று நட்பு வளர்க்கிறாராம் அந்த நடிகை. அதோடு பார்ட்டிகளிலும் அழையா விருந்தாளியாக விசிட் அடித்து வாய்ப்பு கேட்டு வருகிறாராம். இதன்மூலம் வாய்ப்புகள் குவியும் என நம்புகிறாராம் அந்த நடிகை.
முன்னணி நடிகர் நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தும் சில காரணங்களால் நடிகை படத்தை உதறி இருக்கிறாராம்.
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் சின்ன நம்பர் நடிகை, தெலுங்கில் உச்ச நட்சத்திரம் நடிக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம். நடிகையும் கதை கேட்டு நடிக்க சம்மதித்தாராம். சில நாட்களில் நடிகை படத்தில் இருந்து விலக இருப்பதாக அறிவித்தாராம்.
காரணம் விசாரித்தால், அந்த படத்தில் பல நடிகைகள் நடிக்க இருப்பதாகவும், அவர்களை விட சின்ன நம்பர் நடிகைக்கு முக்கியத்துவம் குறைவாக இருப்பதால் தான் அந்த படத்தில் இருந்து விலகி இருக்கிறாராம். இதனால் தான் முன்னணி நடிகர் என்று கூட பார்க்காமல் உதறி இருக்கிறாராம் நடிகை.
பிரபல நடிகையிடம் இயக்குனர் ஒருவர் கதை சொல்லிய பின், கதை பிடித்திருந்தாலும் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று நடிகை சொல்லிவிட்டாராம்.
பிரபல நடிகரின் வாழ்க்கை வரலாறு படத்தில் வாரிசு நடிகை நடித்த பிறகு இனிமேல் ஏனோ, தானோ வேடங்களில் நடிப்பது இல்லை என்ற முடிவுக்கு வந்து விட்டாராம். அதிலும், கவர்ச்சி வேடங்களை முற்றிலும் ஒதுக்கி தள்ளி வருகிறாராம்.
தற்போது இயக்குனர் ஒருவர் நடிகையிடம் கதை ஒன்றை சொல்லி இருக்கிறாராம். நடிகைக்கு கதை ரொம்ப பிடித்து நடிக்க சம்மதித்தாராம். அதன்பின் இயக்குனர் இந்த படத்தில் நீங்கள் கொஞ்சம் கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்று கூறினாராம். அதற்கு நடிகை கொஞ்சம் கூட கவர்ச்சி கிடையாது. அப்படித்தான் நடிக்க வேண்டும் என்றால் நான் நடிக்க மாட்டேன் என்று கூறி இயக்குனரை அனுப்பிவிட்டாராம்.
முன்னணி நடிகையாக இருக்கும் ஒருவர், விழா ஒன்றுக்கு பயத்தில் கலந்துக் கொண்டதாக பலரும் பேசி வருகிறார்களாம்.
முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை எப்போதும் தான் நடிக்கும் படங்களின் விழாக்களில் கலந்துக் கொள்வதில்லையாம். படம் ஒப்பந்தம் ஆகும் போதே புரமோஷன்களில் கலந்துக் கொள்ள மாட்டேன் என்று நிபந்தனை போடுவாராம்.
இந்நிலையில் நடிகை ரெய்டு டீம் நடத்திய விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டாராம். இந்த விழாவிற்கு மட்டும் நடிகை சென்றது பலருக்கும் கேள்வியை எழுப்பி இருக்கிறதாம். அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்பதால் விழாவிற்கு செல்லாவிட்டால், வீட்டுக்கு ரெய்டு வந்துவிடும் என்ற பயத்தில் கலந்துக் கொண்டதாக பலரும் பேசி வருகிறார்களாம்.
நடிகை ஒருவர் ரசிகர் ஒருவருக்கு பதலளிக்கும் போது மீண்டும் அந்த பக்கம் போகவே மாட்டேன் என்று கூறியிருக்கிறாராம்.
விளம்படங்களில் நடித்து வந்த நடிகை, முன்னணி நடிகர் படத்தில் மூன்றில் ஒரு நாயகியாக நடித்தாராம். அந்த படம் வெளியாகும் முன்பே பெரிய முதலாளி வீட்டுக்கு சென்று பிரபலமானாராம். படமும் வெற்றி பெற்றதால் தற்போது புதிய கதைகளை கேட்டு வருகிறாராம்.
இந்நிலையில், ரசிகர் ஒருவர் மீண்டும் பெரிய முதலாளி வீட்டுக்கு செல்வீர்களா என்று கேட்டதற்கு, மீண்டும் அங்கேயா போகவே மாட்டேன் என்று அலறியபடி பதில் சொல்லியிருக்கிறாராம்.






