என் மலர்tooltip icon

    கிசுகிசு

    ஹீரோவாக வந்து தற்போது வில்லனாக நடித்து வரும் நடிகருக்கு பிரபல நடிகை ஒருவர் சிபாரிசு செய்து இருக்கிறாராம்.
    நடிகர் ஒருவர் திரையுலகுக்கு வந்த நேரத்தில், அவருடைய அழகான தோற்றம் பிரபல கதாநாயகிகளை கவர்ந்து இழுத்ததாம். கதாநாயகனாக நடித்து வந்த அவர், இப்போது வில்லனாகி விட்டாராம். இருப்பினும் அவர் சில கதாநாயகிகளின் ‘கனவுக்கண்ணனாகவே இருந்து வருகிறாராம்.

    குறிப்பாக ஒரு பிரபல கதாநாயகி, நடிகருடன் இணைந்து நடிக்க ஆசைப்படுகிறாராம். அடுத்து அவர் நடிக்க இருக்கும் ஒரு புதிய படத்தில் தனக்கு ஜோடியாக, நடிகரை ஒப்பந்தம் செய்யும்படி இயக்குனரிடம் சிபாரிசு செய்து இருக்கிறாராம்.
    சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த திருமணமான நடிகை ஒருவர் பட வாய்ப்புக்காக அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம்.
    சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்த பிரியமான நடிகை வேகமாக வளர்ந்துவிட்டதை அடுத்து, தற்போது மற்றொரு சின்னத்திரை நாயகியும் சினிமாவில் நடிக்க வந்துள்ளாராம். ஆனால் அந்த நடிகைக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளதாம். 

    ஆனபோதும் அதை மறைத்து, தான் டீன் ஏஜ் பெண் என்று கூறி வருகிறாராம். அதோடு கணவரும், குழந்தையும் சென்னையில் இருந்தால் உண்மை வெளிச்சத்துக்கு வந்து தன் ஹீரோயின் இமேஜ் போய்விடும் என்பதால், அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி விட்டாராம். 
    தெலுங்கில் பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்க பிரபல நடிகை ஒருவர் அதிக சம்பளம் கேட்டு படக்குழுவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளாராம்.
    அதிக வயதாகியும் தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவருக்கு ஜோடியாக நடிக்க பல ஹீரோயின்களிடம் பேசப்பட்டதாம். ஆனால் ஒரு நடிகையும் ஒத்துக்கொள்ளவில்லையாம். கடைசியாக இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அங்காடி நடிகை நடிக்க சம்மதித்துள்ளாராம். 

    இந்நிலையில் இப்படத்தில் மற்றொரு ஹீரோயினாக நடிக்க வீரமான நடிகையிடம் கேட்கப்பட்டதாம். அதற்கு அவர் ஒரு பெரிய தொகையை சம்பளமாக கேட்டதாக டோலிவுட் வட்டாரங்கள் கூறுகிறதாம். இதனால் தயாரிப்பாளர் தரப்பு மிகுந்த அதிர்ச்சி அடைந்துவிட்டதாம். 
    பிரபல நடிகை ஒருவர், தன்னுடைய படத்தின் விழாவிற்கு போகாமல் இருக்க புதிய திட்டம் போட்டாராம்.
    மூன்றெழுத்து பிரபல நாயகி, அவர் நடித்த படவிழாவில் கலந்து கொள்ளாதது கோடம்பாக்கம் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதாம். விழாவுக்கு அவர் வராதது ஏன்? என்று கேட்டு தயாரிப்பாளர்கள் கொந்தளித்தார்களாம்.

    விழா குறிப்பிட்ட தேதியில் நடைபெறுவது அந்த நடிகைக்கு தெரியுமாம். ஊரில் இருந்தால்தானே விழாவுக்கு போக வேண்டியிருக்கும். வெளிநாடு போய் விட்டால். யாரும் எதுவும் சொல்ல முடியாது என்று கணக்கு போட்டு அந்த நடிகை துபாய் பறந்து விட்டாராம்.
    ஒழுங்காக படப்பிடிப்புக்கு வந்துக்கொண்டிருந்த நடிகர், மீண்டும் படப்பிடிப்பு பழையபடி தாமதமாக வருவதால் தயாரிப்பாளர் புலம்புகிறாராம்.
    படப்பிடிப்புக்கு ஒழுங்காக வர மாட்டார் என்ற சர்ச்சைக்குரிய நடிகர் இப்போது, ஒரு மூன்றெழுத்து படத்தில் நடித்து வருகிறாராம். படப்பிடிப்பு தொடங்கிய நாளில் இருந்து 16 நாட்கள் வரை மிக சரியான நேரத்துக்கு வந்த அவருடைய அக்கறையை பார்த்து தயாரிப்பாளர் வியந்து போனாராம். “இந்த பையனை பார்த்து இப்படி தவறான தகவலை பரப்புகிறார்களே...” என்று வருத்தப்பட்டாராம்.

    16-வது நாளில், நடிகர் மிக காலதாமதமாக படப்பிடிப்புக்கு வந்தாராம். அதோடு தனக்கு 2 கேரவன் வேண்டும். அதை பக்கத்தில் பக்கத்தில் நிறுத்த வேண்டும். எப்ப லீவு கேட்டாலும் கொடுத்துடணும். அப்பதான் படப்பிடிப்புக்கு வருவேன்” என்று நிபந்தனைகளையும் விதித்தாராம். இதை கேட்ட தயாரிப்பாளருக்கு தலை சுற்றி விட்டதாம்!
    தொடர்ந்து கவர்ச்சி வேடங்களில் நடித்ததால் பட வாய்ப்புகள் குறைந்துவிட்டதாக பிரபல நடிகை புலம்புகிறாராம்.
    கோலிவுட்டில் அறிமுகமானாலும் போதுமான படவாய்ப்பு கிடைக்காததால், டோலிவுட்டுக்கு சென்ற தீரமான நடிகை அங்கு முன்னணி நடிகை அந்தஸ்தை பெற்றாராம். பின்னர் அவருக்கு பாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு வந்ததால் தென்னிந்திய பட வாய்ப்புகளை உதறிவிட்டு சென்றாராம். 

    பாலிவுட் படங்களில் தொடர்ந்து கவர்ச்சி வேடங்களில் நடித்து வந்த அந்த நடிகையின் படங்கள் எதுவும் சரியாக ஓடாததால், மீண்டும் கோலிவுட் பக்கம் தலையை காட்டினாராம். இங்கும் எதிர்பார்த்த பட வாய்ப்புகள் கிடைக்கவில்லையாம். பட வாய்ப்புக்காக சம்பளத்தை குறைத்தும் பார்த்தாராம். ஆனால் கவர்ச்சி வேடங்களில் நடித்தால் தான் அந்த நடிகைக்கு பட வாய்ப்புகள் குறைந்ததாக கோலிவுட் வட்டாரத்தில் சொல்லப்படுகிறதாம்.
    தென்னிந்திய திரையுலகில் பிசியாக நடித்து வரும் அக்கட தேசத்து நடிகைக்கு கதை சொல்ல இயக்குனர்கள் தயங்குகிறார்களாம்.
    அக்கட தேசத்து இயக்குனரின் மகள், அடுத்தடுத்து வெற்றிபடங்களை கொடுத்து முன்னணி நடிகை அந்தஸ்துக்கு உயர்ந்துள்ளாராம். குறிப்பாக இவர் சமீபத்தில் நடித்த பயோபிக் படத்திற்கு தேசிய அளவில் அங்கீகாரம் கிடைத்ததாம். இதற்கு பின் அந்த நடிகையின் கதை தேர்வே மாறியுள்ளதாம்.

    அழுத்தமான, கனமான கதாபாத்திரங்களில் நடிக்கும் தொனியில் கடந்த மூன்று மாதங்களில் 30 கதைகள் கேட்டுள்ளாராம் அந்த நடிகை. ஆனால், ‘அதில் ஒரு கதை கூட என்னை இம்ப்ரஸ் பண்ணவில்லை....’ என்று தட்டிக்கழித்து விட்டாராம். அதனால், அந்த நடிகைக்காக புது ஸ்கிரிப்ட் எழுத ஐடியாவும் இல்லை, எனர்ஜியும் இல்லை என்று இயக்குனர்கள் தெறித்தோடுகிறார்களாம்.
    முன்னணி நடிகையாக வலம் வருபவர், தான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்புக்கு வரமாட்டேன் என்று அடம் பிடிக்கிறாராம்.
    தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் இனிப்பு கடை நடிகை பிரம்மாண்ட இயக்குனர் படத்தில் நடித்து வருகிறாராம். இந்த படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் சிலர் இறந்தார்களாம். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த நடிகை மனதளவில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளாராம்.

    விபத்து நடந்த பின்பு வீட்டிற்கு சென்ற அவர் அதன்பிறகு வீட்டை வெளியே எங்கும் செல்லவில்லையாம். இந்த அதிர்ச்சியில் இருந்து நடிகை மீள முடியாமல் தவிப்பதால் படப்பிடிப்பிற்கு என்னால் வரமுடியாது என்று கூறியிருக்கிறாராம். மேலும் எனக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கூறிவருகிறாராம். 
    தமிழில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவருக்கு நடிகர் ஒருவரின் படத்தால் சோதனை ஏற்பட்டிருக்கிறதாம்.
    தமிழில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர், சமீபத்தில் திடீர் என்று திருமணம் செய்துக் கொண்டாராம். திருமணம் முடித்த கையோடு மனைவியோடு வெளிநாட்டுக்கு சென்று தேன் நிலவு கொண்டாட முடிவு செய்தாராம்.

    ஆனால், நகைச்சுவை நடிகர் நடிக்க சம்மதித்த படங்கள் நிறைய இருக்கிறதாம். இருந்தாலும் பரவாயில்லை அப்புறம் நடித்துக் கொள்ளலாம் என்று நினைத்த நடிகருக்கு, திடீர் என்று வலிமையான படத்தில் நடிக்க நடிகருக்கு அழைப்பு வந்ததாம். இதை மறுக்க முடியாததால், தேன்நிலவு கொண்டாட்டத்தை சில மாதங்கள் தள்ளிப்போட்டு வருத்தத்தில் இருக்கிறாராம்.
    கோலிவுட், டோலிவுட் என பல்வேறு மொழி படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகை, அரசியல் படங்களில் நடிக்க மறுக்கிறாராம்.
    கோலிவுட்டில் அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து வரும் குளிர்ச்சியான நடிகையிடம் புதுமுக இயக்குனர் ஒருவர் கதை சொன்னாராம். அது, சாதி வெறி மற்றும் அரசியலை கருவாக கொண்ட கதை என்பதால் அந்த நடிகை அதில் நடிக்க மறுத்து விட்டாராம்.

    சாதி, அரசியல் இரண்டும் இல்லாமல் ஒரு கதையை சொல்லுங்க நடித்து தருகிறேன்” என்று கூறி, இயக்குனரை நல்லவிதமாக அனுப்பி வைத்தாராம் நடிகை. சர்ச்சை, பிரச்சனைகள் எதிலும் சிக்காமல் இருப்பதற்காக நடிகை, அந்த மாதிரி கதைகளை தவிர்த்து வருவதாக கிசுகிசுக்கப்படுகிறதாம்.
    பிரபல நடிகைக்கு ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் இயக்குனரிடம் புலம்பி வருகிறாராம்.
    உச்ச நட்சத்திரத்தின் ஜோடியாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட வாரிசு நடிகைக்கு அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பும் வந்ததாம். ஆனால், அது கதாநாயகி வேடம் இல்லையாம். மகள் வேடமாம். இருந்தாலும் பரவாயில்லை என்று நடிக்க ஒப்புக் கொண்டாராம் நடிகை.

    ஜோடியாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட எனக்கு மகள் வேடம் கொடுத்து விட்டீர்களே என்று வாரிசு நடிகை இயக்குனரிடம் அடிக்கடி புலம்பி தள்ளுகிறாராம். அவரை சமாதானப்படுத்துவதற்குள் டைரக்டருக்கு போதும்... போதும்... என்றாகி விட்டதாம். நடிகையை இந்த படத்தில் தெரியாமல் ஒப்பந்தம் செய்து விட்டேன் என்று இயக்குனர் வருத்தப்படுகிறாராம்.
    மலையாளம், தமிழ் மொழிகளில் நடித்த நடிகை, புதியதாக எடுத்த சபதத்தை இயக்குனர்கள் யாரும் கண்டுக்கொள்ளவில்லையாம்.
    மலையாளத்தில் வெளியான காதல் படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை, தமிழில் ஒல்லி நடிகருடன் கொடி பிடித்து நடித்தாராம். அதன்பின் நடிகைக்கு பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்தாராம். ஆனால், ஒன்றும் கிடைக்க வில்லையாம். இதனால் தெலுங்கு பக்கம் போன நடிகைக்கு ஒரு படத்தை தவிர வேறு பட வாய்ப்பு கிடைக்க வில்லையாம்.

    தற்போது தமிழில் ஒரு படத்தில் நடித்து வருகிறாராம். மேலும் இனிமேல் தமிழில்தான் கவனம் செலுத்த போறேன் என்று சபதம் எடுத்து பல இயக்குனர்களுக்கு தூது அனுப்பி இருக்கிறாராம். ஆனால், இயக்குனர்களோ நடிகையை கண்டுக்கொள்ள வில்லையாம்.
    ×