என் மலர்
கிசுகிசு
காமெடியனாக அறிமுகமாகி ஹீரோவாக உயர்ந்திருக்கும் நடிகர் ஒருவர் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என புலம்புகிறாராம்.
காமெடி ஹீரோவுக்கு சம்பளம் கொடுப்பதற்காக சில கோடிகளை பைனான்சியரிடம் முக்கிய தயாரிப்பாளர் ஒருவர் வாங்கியிருந்தாராம். அதே பைனான்சியரிடம் தான் காமெடி நடிகரும் தனது முந்தைய படத்துக்காக கடன் வாங்கினாராம்.
சம்பளப் பணம் காமெடி நடிகருக்கு போய் சேர்ந்த ஒருசில நிமிடங்களிலேயே தன்னுடைய ஆள் ஒருவரை அந்த நடிகரின் ஆபீசுக்கு அனுப்பிய பைனான்சியர், கடன் தொகையைக் கறாராக வசூலித்துவிட்டாராம். இதனால் காமெடி நடிகர் ஷாக்காகி இருக்கிறாராம்.
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவருக்கு ஒரு படத்தில் இயக்குனர் கொடுத்த கதாபாத்திரம் வேண்டாம் என்று அடம் பிடிக்கிறாராம்.
தற்போது தயாரிப்பில் உள்ள ஒரு புதிய படத்தில், நம்பர் ஒன் நடிகைக்கு வக்கீல் வேடம் கொடுக்கப்பட்டு இருந்ததாம். அந்த கதாபாத்திரத்துக்கும் கதாநாயகனுடன் தொடர்பு இல்லை என்று தெரிந்து கொண்டதும் நடிகை அதிர்ச்சி அடைந்தாராம்.
“எனக்கு இந்த வக்கீல் வேடம் வேண்டாம்... கதாநாயகனுடன் டூயட் பாடுகிற வேடம் இருந்தால் கொடுங்கள்” என்று டைரக்டரிடம், நடிகை கேட்டுக் கொண்டாராம். டைரக்டர், “பார்க்கிறேன்” என்று ஒற்றை வார்த்தையில் பதில் அளித்தாராம். இதற்கு நடிகை வக்கீல் வேடம் என்றால் நடிக்க மாட்டேன் என்று திட்ட வட்டமாக கூறிவிட்டாராம்.
நார்த் மெட்ராஸ் நடிகை ஒருவர் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் வேடங்கள் என்றால் சம்பளத்தை கூட குறைத்துக் கொள்ள தயாராக இருக்கிறாராம்.
அசுர நடிகரின் படத்தில் நார்த் மெட்ராஸ் நடிகை படுகவர்ச்சியாக நடித்திருந்தாராம். அதைத்தொடர்ந்து அவருக்கு வருகிற பட வாய்ப்புகள் அனைத்திலும் கவர்ச்சி வேடங்களாகவே இருக்கிறதாம்.
பெரும்பாலான ரசிகர்கள் என்னை கவர்ச்சியாகவே பார்க்க விரும்புகிறார்கள். நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் வேடங்கள் என்றால் சம்பளத்தை கூட குறைத்துக் கொள்ள தயாராக இருக்கிறேன்’’ என்கிறாராம் அந்த நடிகை.
டாப் நடிகை ஒருவர் ஹீரோக்களுக்கு இணையாக சம்பளம் கேட்டு தயாரிப்பாளர்களை திக்குமுக்காட வைக்கிறாராம்.
டாப் நடிகை ஆரம்ப காலத்தில் தமிழ் படங்களில் நடித்து வந்தாராம். இங்கு அவர் நடித்த படங்கள் எதுவும் சரியாக போகாததால், பாலிவுட் பக்கம் சென்றாராம். அங்கு அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறாராம்.
அவர் தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் மட்டும் கவனம் செலுத்துகிறாராம். அதோடு மட்டும் இல்லாமல், முன்னணி ஹீரோக்களுக்கு இணையாக சம்பளம் கேட்டு முரண்டு பிடிக்கிறாராம். இதனால் தயாரிப்பாளர்கள் புலம்பி வருகிறார்களாம்.
முன்னணி நடிகரை வைத்து நடிகையின் காதலன் இயக்குவதாக இருந்த படம், தயாரிக்க ஆளில்லாததால் ட்ராப் செய்யப்பட்டதாக பேச்சு அடிபடுகிறதாம்.
நம்பர் நடிகையின் காதலர் இயக்கத்தில் ஹீரோ நடிகர் நடிப்பதாக இருந்ததாம். இந்த படத்தை தயாரிப்பதாக இருந்த பெரிய நிறுவனம் படக்குழுவில் இருந்து திடீரென வெளியேறியதால், வேறு சில தயாரிப்பாளர்களை அணுகினாராம் இயக்குனர்.
ஆனால் எதுவும் ஒர்க் அவுட் ஆகவில்லையாம். இதனால் வேறொரு முன்னணி நடிகரின் படத்தை கையிலெடுத்து, அவரே தயாரித்து இயக்க முடிவு செய்துவிட்டாராம். இதனால் அவர் இயக்கத்தில் ஹீரோ நடிகர் நடிக்க இருந்த படம் ட்ராப் என்று பேச்சு அடிபடுகிறதாம்.
அக்கட தேசத்தை சேர்ந்த திறமையான நடிகை ஒருவர், பட வாய்ப்புக்காக அதிரடி முடிவு ஒன்றை எடுத்திருக்கிறாராம்.
அக்கட தேசத்தில் மிக திறமையான நடிகை ஒருவர், கடந்த இரண்டு வருடங்களாகவே மீடூ புகார்களை கூறி போர்க்கொடி தூக்கி வந்தாராம். இதனாலேயே எதற்கு வம்பு என இவரை தேடி வந்த பட வாய்ப்புகளும் இவரை விட்டு ஒதுங்கி சென்றனவாம். தற்போது கைவசம் ஒரே ஒரு படம் மட்டுமே வைத்துள்ள அந்த நடிகை, சமீப நாட்களாக தனது சீரியஸ் முகமூடியைக் கழற்றி வைத்துவிட்டு ஜாலி மூடுக்கு மாறியுள்ளாராம்.
அதுமட்டுமல்ல முன்பெல்லாம் தனது உடையில் அதிக கவனம் செலுத்தாத அந்த நடிகை, சமீபத்தில் புதுவிதமான டிசைனிங் உடைகளை அணிந்துகொண்டு விதவிதமான போஸ்களில் புகைப்படம் எடுத்து தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வைரலாக்கி வருகிறாராம். இவை அனைத்தும் படவாய்ப்புக்காக அவர் செய்வதாக கிசுகிசுக்கப்படுகிறதாம்.
முன்னணி நடிகையாக வலம் வருபவரின் பட வாய்ப்பை சமீபத்தில் அறிமுகமாகி பிரபலமாகி இருக்கும் நடிகை தட்டி பறித்திருக்கிறாராம்.
தமிழ், தெலுங்கில் பிசியாக நடித்து வரும் அஞ்சாத நடிகை, தெலுங்கில் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததாம். நடிகையும் கதையை கேட்டு ஓகே சொல்லிவிட்டாராம். படப்பிடிப்புக்காக நடிகை காத்திருக்கும் நிலையில், திடீர் என்று அந்த படத்தில் இருந்து நடிகையை நீக்கி விட்டார்களாம்.
அந்த படத்தில் நடிக்க ஏற்கனவே காற்றான நடிகையிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்களாம். நடிகை திடீர் என்று ஓகே சொன்னதால் அஞ்சாத நடிகையை நீக்கி விட்டார்களாம். இதை கேள்வி பட்ட அஞ்சாத நடிகை, அவர் மீது கடுங்கோபத்தில் இருக்கிறாராம். மேலும் நடிகையின் பட வாய்ப்பை பறிக்கவும் முடிவு செய்திருக்கிறாராம்.
தமிழில் முன்னணி நடிகர் ஒருவர், அவர் நடித்த படங்கள் தோல்வியடைந்துள்ளதால் தனது கொள்கையை மாற்றி இருக்கிறாராம்.
கடவுளின் பெயரை கொண்ட நடிகர் நடித்த படங்கள் சரியாக ஓடவில்லையாம். இதனால் வெற்றி படத்தை கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறாராம். இதற்காக புதிய கொள்கை ஒன்றை முடிவெடுத்து இருக்கிறாராம்.
இனிமேல் பட எண்ணிக்கையை குறைத்து, வருடத்துக்கு 1 படங்களில் மட்டுமே நடிப்பது என்று முடிவு செய்திருக்கிறாராம். மேலும் கதையை கேட்க குழு ஒன்றை உருவாக்கி இருக்கிறாராம். இந்த கொள்கைக்கு காரணம் அவரது நண்பர்களாம்.
வயதான நடிகருக்கு ஜோடியாக நடிக்க நடிகை ஒருவர் கோடிக்கணக்கில் சம்பளம் கேட்டுள்ளாராம்.
தமிழில் அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்த நடிகைக்கு தற்போது கோலிவுட்டில் பட வாய்ப்பு இல்லாததால் பிற மொழி படங்களில் நடிக்க தொடங்கியுள்ளாராம். கிளாமர் படமாக இருந்தாலும் அசராமல் நடித்து வரும் அந்த நடிகைக்கு, கன்னடத்தில் வயதான நடிகருடன் நடிக்க சமீபத்தில் வாய்ப்பு வந்ததாம்.
முதலில் நடிக்க ஓகே சொன்ன நடிகை, பின்னர் கோடியில் சம்பளம் கொடுத்தால் தான் நடிப்பேன் என முரண்டு பிடித்தாராம். அந்த நடிகைக்கு அவ்வளவு சம்பளம் கொடுக்க முடியாது என படக்குழு பின்வாங்கியுள்ளதாம்.
உச்ச நடிகரின் படத்தை இயக்கும் இயக்குனர், அப்படத்தில் நடிக்கும் நடிகைகளில் யாருக்கு முக்கியத்துவம் கொடுப்பது என புரியாமல் புலம்பி வருகிறாராம்.
உச்ச நடிகர் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு மனைவியாக இரண்டெழுத்து நடிகை, வில்லியாக மூன்றெழுத்து நடிகை, இன்னொரு மனைவியாக நம்பர் நடிகை, மகளாக வாரிசு நடிகை ஆகிய 4 கதாநாயகிகள் நடித்து வருகிறார்களாம். படத்தில் பழைய கதாநாயகிகள் இரண்டு பேரும், மகள் வேடத்தில் வாரிசு நடிகையும் இருப்பதால் தனக்கு முக்கியத்துவம் இல்லாமல் போய்விடுமோ என்ற பயம் நம்பர் நடிகைக்கு வந்து இருக்கிறதாம்.
தனக்குத்தான் படத்தில் முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்று டைரக்டரை அவர் வற்புறுத்தி வருகிறாராம். இதைக்கேள்விப்பட்டு மற்ற 3 கதாநாயகிகள், தங்களுக்கும் முக்கியத்துவம் வேண்டும் என்று கொடி பிடிக்கிறார்களாம். யாருக்கு முக்கியத்துவம் கொடுப்பது? என்றும், இவர்களின் கவுரவ பிரச்சினையை எப்படி தீர்ப்பது? என்றும் டைரக்டர் புலம்புகிறாராம்.
முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்த பிரபல நடிகை ஒருவர் தன்னை படத்தில் ஒல்லியாக காட்ட சொல்லி அடம்பிடிக்கிறாராம்.
ஆரம்ப காலகட்டத்தில் கமர்ஷியல் படங்களில் மட்டும் கவனம் செலுத்திவந்த உயரமான நடிகை, தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் மட்டும் நடித்து வருகிறாராம். அந்த வகையில் அவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து ஹிட் ஆனதால், அந்த நடிகை சம்பளத்தையும் கிடுகிடுவென உயர்த்தினாராம். தற்போது குண்டானதால் அந்த நடிகைக்கு பட வாய்ப்புகள் குறைந்து வருகிறதாம்.
அவர் கடைசியாக நடித்த படம் நீண்ட நாட்களாக ரிலீசாகாமல் இருக்கிறதாம். இதற்கு முக்கிய காரணம் அந்த நடிகை தான் என்று படக்குழு தரப்பில் சொல்லப்படுகிறதாம். தான் குண்டாக இருப்பதால் தன்னை படத்தில் ஒல்லியாக காட்ட வேண்டும் என நடிகை கண்டிஷன் போட்டு விட்டாராம். இதற்கான பணிகள் நடைபெற்று வருவதால் படம் தள்ளிப்போகிறதாம்
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து வரும் நடிகைக்கு அவரது காதலன் நெருக்கடி கொடுக்கிறாராம்.
தென்னிந்திய திரையுலகில் பல வருடங்களாக ஆதிக்கம் செலுத்திவரும் நம்பர் நடிகையின் திருமணம் எப்போது என நீண்ட நாட்களாக கேட்டு வருகின்றனர். தற்போது நடிகையின் காதலனும் அவரிடம் இதே கேள்வியை கேட்க தொடங்கியுள்ளாராம்.
காதலரும் திருமணத்திற்கு நெருக்கடி கொடுப்பதால் விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளாராம் அந்த நடிகை. அதனால் அதற்குள் சம்பாதித்துவிட வேண்டும் என முடிவெடுத்து கெஸ்ட் ரோலாக இருந்தாலும் ஓகே சொல்கிறாராம்.






