என் மலர்
கிசுகிசு
தமிழில் வாய்ப்பில்லாமல் இருக்கும் நடிகை தற்போது எந்த காட்சியினாலும் நான் ரெடி என்று வாய்ப்பு தேடி வருகிறாராம்.
தமிழ் சினிமாவில் பாம்பாட்டத்தில் ஆடிய நடிகைகளில் ஒருவர், இந்தி படங்களில் நடிக்க ஆசைப்பட்டு, அங்கு இருப்பவர்களுக்கு தூது அனுப்பி, பார்ட்டி வைத்து வாய்ப்பு தேடினாராம். ஆனால், நடிகைக்கோ அங்கு எந்த வாய்ப்பும் கிடைக்க வில்லையாம். இதனால், தமிழுக்கு திரும்பிய நடிகை தற்போது இங்கு வாய்ப்பு தேடி வருகிறாராம்.
இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் நடிகையை அதிகம் கண்டுக்கொள்ளாததால், எந்த காட்சியினாலும் நான் ரெடி என்று கூறி வருகிறாராம். இப்படியாவது வாய்ப்பு கிடைத்தால் சரி என்று நடிகை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறாராம்.
நீண்ட நாட்களுக்கு பின் கோலிவுட்டில் ரீ-என்ட்ரி கொடுத்து கலக்கி வரும் நடிகர் ஒருவருக்கு அரசியல் ஆசை வந்துள்ளதாம்.
திரையுலகில் ரீ-என்ட்ரி கொடுத்து கலக்கி வரும் நடிகர் ஒருவர், தற்போது வாழ்க்கை வரலாற்று படத்தில் அரசியல்வாதியாக நடிக்கிறாராம். அந்த லுக்கில் அவர் நிஜ அரசியல்வாதி போல் இருப்பதாக வாழ்த்துக்கள் குவிந்தனவாம். இதனால் மகிழ்ச்சி அடைந்த அந்த நடிகர் அரசியலில் இறங்கினால் என்ன என கணக்கு போடுகிறாராம்.
அரசியலில் இறங்குவது குறித்து தனது திரையுலக நண்பர்களிடம் ஆலோசனை கேட்டு வருகிறாராம். விரைவில் அவர் அரசியலில் குதித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என கோலிவுட் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறதாம்.
கோலிவுட்டில் கமர்ஷியல் படங்களை கொடுத்துவந்த இயக்குனர் மீது வீண் செலவு செய்வதாக புகார்கள் தெரிவிக்கப்படுகிறதாம்.
மூன்றெழுத்து இளம் இயக்குனர் பாலிவுட்டில் பாட்ஷா நடிகரை வைத்து இயக்குவதாக இருந்த படம் தாமதமாகிக் கொண்டே வருகிறதாம். அதை தயாரிக்க இருந்த பாலிவுட் தயாரிப்பு நிறுவனம் அந்த படத்துக்கு காப்பீடு வேண்டி முறையிட்டபோது, அந்த காப்பீட்டு நிறுவனம் இயக்குனர் பற்றி விசாரித்தார்களாம்.
அப்போது அந்த இயக்குனர் தயாரிப்பாளருக்கு தேவையில்லாத செலவு அதிகம் வைப்பார், அவர் படங்களை தயாரித்த நிறுவனத்துக்கு பெரிதாக லாபம் கிடைக்கவில்லை போன்ற புகார்கள் வந்ததுதான் அந்த படம் தொடங்கப்படாமல் இருப்பதற்கான முக்கிய காரணமாக சொல்கிறார்களாம்.
தமிழில் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர், படப்பிடிப்பு தளத்திலேயே உற்சாக பானம் அருந்துகிறாராம்.
வெற்றியை பெயராக கொண்ட இரண்டெழுத்து நாயகன் படப்பிடிப்பு தளத்திலேயே உற்சாக பானம் அருந்துவதாக ஒரு தகவல் பரவி வருகிறதாம். படப்பிடிப்பு மாலை 6 மணிக்கு முடிந்ததும் சரக்கும், வறுத்த நாட்டுக்கோழியும் கேரவனில் தயாராக இருக்க வேண்டும் என்று கட்டளையிடுகிறாராம்.
நல்ல நடிகர் ஏன் இப்படி இருக்கிறார் என்று இரண்டெழுத்து நடிகரின் இந்த நிலை கண்டு மனம் வெதும்புகிறார்களாம், அவருக்கு நெருக்கமான உறவினர்கள்!
தமிழில் இரண்டு, மூன்று படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை, இயக்குனர்களை ஷூட்டிங் ஸ்பாட்டில் இயக்குனர்களை மிரட்டுகிறாராம்.
பாலிவுட்டில் இருந்து கோலிவுட்டுக்கு வந்த நடிகை, தொடர்ந்து மணியான இயக்குனர் படத்தில் நடித்தாராம். தற்போது பல படங்களில் ஒப்பந்தமாகி வரும் நடிகை, இயக்குனர்களை மிரட்டுகிறாராம்.
பெரிய காட்சிகள், கஷ்டமான காட்சிகள் என எது கொடுத்தாலும் ஒரே டேக்கில் நடித்து அசத்தி விடுகிறாராம். ஆனால், குறிப்பிட்ட நேரத்தில் ஷாட் எடுக்காமல், நடிகையை காக்க வைத்தால் அதிக கோபம் வந்து விடுமாம். இதனால், சொன்ன நேரத்தில் ஷாட்டை எடுக்க வேண்டும் என்று இயக்குனர்களை மிரட்டுகிறாராம்.
தமிழில் ஒரு சில படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகர், பட வாய்ப்பு இல்லாததால் சம்பளத்தை அதிகளவு குறைத்திருக்கிறாராம்.
பெரிய நடிகருக்கு பின்னால் இருந்த நடிகர், ஒரிரு படங்களில் கதாநாயகனாக நடித்து மிகவும் பிரபலமானாராம். குறிப்பாக திருடனாக நடித்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதாம். இதைத்தொடர்ந்து நடிகர் தனது சம்பளத்தை ஒரு கோடியாக உயர்த்தினாராம்.
இப்போது அவருடைய மார்க்கெட் நிலவரம் திருப்தியாக இல்லை என்பதால், சம்பளத்தை ரூ.25 லட்சமாக குறைத்து விட்டாராம். இனிமேலாவது நிறைய பட வாய்ப்புகள் வருமா என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாராம் நடிகர்.
தமிழில் நம்பர் ஒன் இடத்தை பிடிக்க பிரபல நடிகை ஒருவர் தீவிரமாக முயற்சி செய்து வருகிறாராம்.
தமிழில் தற்போது நம்பர் ஒன் இடத்தில் நயனமான நடிகை இருந்து வருகிறாராம். இவருடைய இடத்தை பிடிக்க பல நடிகைகள் போட்டி போட்டு வருகிறார்களாம். ஆனால், வீரமான நடிகை மட்டும் அதிகமாக தீவிரம் காண்பிடித்து வருகிறாராம்.
நம்பர் ஒன் நடிகை நடிக்க முடியாத படங்களில் தாமாகவே முன் வந்து நான் நடிக்கிறேன் என்று கூறுகிறாராம். மேலும் அந்த நடிகையிடம் கால்ஷீட் இல்லை என்றால் என்னிடம் வாருங்கள். சம்பளத்தை குறைத்துக் கொள்ளவும் நான் தயாராக இருக்கிறேன் என்றும் கூறிவருகிறாராம். எப்படியாவது நடிகையின் இடத்தை பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக பிடிவாதம் பிடித்து வருகிறாராம்.
தமிழில் முன்னணி நடிகராக வலம் வந்த நடிகர், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பேசுவதை கேட்டு கண் கலங்கி இருக்கிறாராம்.
முன்னணி நடிகராக வலம் வந்த விரல் வித்தை நடிகர், பல வம்புகளால் பிரச்சனையில் சிக்கினாராம். அவர் திறமையான நடிகர் தான், அவர் மட்டும் தொழிலில் அக்கறை காட்டினால், சில முன்னணி கதாநாயகர்களுக்கு சரியான போட்டியாக இருப்பார்” என்று பெரும்பாலான டைரக்டர்களும், தயாரிப்பாளர்களும் கூறுகிறார்களாம்.
இதை கேள்விப்பட்ட நடிகர் மனம் வருந்தி கண்கலங்கினாராம்! இனிமேலாவது ஒழுங்காக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து, அதற்காக முயற்சியில் இறங்கி இருக்கிறாராம் நடிகர்.
அந்த நடிகர் என்றால் இலவசமாக நடிப்பேன் என்று முன்னணி நடிகை ஒருவர் திட்டவட்டமாக கூறியிருக்கிறாராம்.
தமிழ் திரையுலகில் இயக்குனராக இருந்து நடிகராக வலம் வரும் குமார நடிகருக்கு, ‘ராசியான கதாநாயகன்’ என்ற பெயர் கிடைத்து இருக்கிறதாம். அவர் நடிக்கிற படங்கள் அனைத்தும் வெற்றி பெறுவதால், அவருடன் ஜோடி போட பெரும்பாலான கதாநாயகிகள் விரும்புகிறார்களாம். அவர்களில், ‘அங்காடி’ நடிகையும் ஒருவராம்.
இருவரும் ஜோடியாக நடித்து விரைவில் திரைக்கு வர இருக்கும் இரண்டாம் பாக படத்துக்கு வினியோகஸ்தர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறதாம். இதை கேள்விப்பட்ட ‘அங்காடி’ நடிகை, “குமார நடிகருடன் ஜோடி போட வாய்ப்பு வந்தால், சம்பளமே வாங்காமல், இலவசமாக நடிக்க தயார்” என்கிறாராம்.
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவரின் பட வாய்ப்பை தடுத்த நடிகருக்கு அவர் பதிலடி கொடுத்திருக்கிறாராம்.
சங்க நடிகரை காதலித்து வந்த வரமான நடிகை, வேறு பெண்ணுடன் நடிகருக்கு நிச்சயதார்த்தம் முடிந்ததை அடுத்து, நடிகரை பகைத்துக் கொண்டாராம். மேலும் நடிகரை பல இடங்களில் வசைப்பாடி வந்தாராம்.
இதனால், கடுப்பான நடிகர் தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி, அம்மணிக்கு வர இருந்த புதிய படங்களை தடுத்து நிறுத்தி, அவரது மார்க்கெட்டையே ஆட்டம் காண வைத்து விட்டாராம். இதற்கெல்லாம் அசராத நடிகை, நடிகரின் எதிரி நடிகர்களை சந்தித்து பட வேட்டை நடத்தி சில படங்களை கைப்பற்றியிருக்கிறாராம்.
ஒரு படத்திலேயே புகழின் உச்சிக்கு சென்று ஓவர் பில்டப் கொடுத்த நடிகை தற்போது வாய்ப்பில்லாமல் தவித்து வருகிறாராம்.
மலையாளத்தில் கண்ணடித்து மிகவும் பிரபலமான நடிகை புகழின் உச்சிக்கு சென்றாராம். அந்த படத்தின் இயக்குனர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களிடம் என்னை வைத்து புரமோசன்கள் செய்யுங்கள் என்று அவரே கூறினாராம். அனைவரும் புகழ்ந்து புகழ்ந்து பேச நடிகைக்கு ஓவர் கெத்து வந்துவிட்டதாம்.
படம் வெளியாகி சரியாக ஓடாததால் நடிகை நொந்து போனாராம். மாறாக இந்த படத்திற்குப் பிறகு எனக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்த அவருக்கு எந்த பட வாய்ப்பும் கிடைக்க வில்லையாம். ஓவர் பில்டப் கொடுத்தால் இப்படித்தான் நடக்கும் என்று மலையாள திரையுலகில் பலரும் பேசி வருகிறார்களாம்.
தெலுங்கில் பிரபலமாகி தற்போது தமிழில் நடித்து வரும் நடிகை, இந்த தடவையும் ஏமாந்துட்டேன் என்று மிகவும் வருத்தத்தில் இருக்கிறாராம்.
தெலுங்கில் பிரபலமான நடிகை தமிழில் வெளியான முதல் படத்தில் நடிகையின் கதாபாத்திரம் படத்தின் வேகத்திற்கு தடையாக இருக்கிறது என்று சர்ச்சை எழுந்ததால், அந்த படத்தில் நடிகையின் காட்சிகளை தூக்கி விட்டார்களாம். இதனால், அடுத்ததாக நடித்தால் பெரிய ஹீரோ படத்தில்தான் என்று விடாப்பிடியாக இருந்து ஒல்லி நடிகர் படத்தில் நடித்திருந்தாராம்.
இந்த படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனத்தை எதிர்கொண்டதாம். இந்த படத்திலும் நடிகையின் கதாபாத்திரம் பேசப்பட வில்லையாம். இதையறிந்த நடிகை இந்த தடவையும் ஏமாந்துட்டேன். அடுத்த படத்தில் நிச்சயம் நல்ல கதாபாத்திரத்தில் நடிப்பேன் என்று வருத்தமாக கூறுகிறாராம்.






