என் மலர்tooltip icon

    சினிமா

    கிசுகிசு
    X
    கிசுகிசு

    ரூட்டு விடும் நடிகை - கண்டு கொள்ளாமல் இருக்கும் நடிகர்

    தற்போது தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமாகி வரும் நடிகை, நடிகர் ஒருவருக்கு ரூட்டு போட்டு வருகிறாராம்.
    துணை நடிகையாக அறிமுகமாகி பெரிய முதலாளி வீட்டுக்கு சென்று பிரபலமாகி தற்போது ஹீரோயினாக இருக்கிறாராம் அந்த நடிகை. இவர் இளம் நடிகர் ஒருவருடன் சேர்ந்து நடித்த படம் ஒன்று நல்ல வரவேற்பை பெற்றதாம்.

    எல்லோரும் நல்ல ஜோடி என்று சொல்ல நடிகைக்கு அந்த ஹீரோ மீது ஒரு ஈர்ப்பு வந்து விட்டதாம்.

    இதனால் நடிகை சிரித்து ஜாலியாக சொன்னால் அதை யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்று நினைத்து, அவரைத்தான் கல்யாணம் பண்ணப் போகிறேன், அவரைத்தான் காதலிக்கிறேன் என்று அடிக்கடி சொல்லி வருகிறாராம்.

    ஆனால் அந்த ஹீரோ அவர் உண்டு, அவர் வேலை உண்டு என்று இருக்கிறாராம்.
    Next Story
    ×