என் மலர்tooltip icon

    கிசுகிசு

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆசைப்பட்டு ஏமாந்து போய் இருக்கிறாராம்.
    தமிழ் சினிமாவில் பாடகியாகவும் நடிகையாகவும் வலம் வருபவர் சமீபத்தில் ஒருவரை சந்தித்தாராம். அவர் பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்று கூறினாராம். இதைக் கேட்ட நடிகை அந்த நடிகருடன் நடிக்கும் சந்தோஷத்தில் துள்ளி குதித்தாராம்.

    எப்போது அந்த நடிகரை பார்க்கலாம் என்று ஆசைப்பட்டு வந்த நிலையில், தன்னை அணுகியவர் போலியானவர் என்று அறிந்து ஏமாந்து விட்டாராம். இருப்பினும் அந்த நடிகருடன் எப்படியாவது ஜோடி சேர வேண்டும் என்று பலருடன் சிபாரிசு கேட்டு வருகிறாராம்.
    ஒரு சில படங்களில் நடித்த நடிகைக்கு தமிழில் வாய்ப்பு இல்லாததால் வேறு ஊருக்கு சென்று இருக்கிறார்.
    தமிழில் முன்னணி நடிகருக்கு ஜோடி போட்டு நடித்த கருப்பு நடிகைக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வரும் என்று எதிர் பார்த்தாராம். ஆனால் எந்த பட வாய்ப்பும் கிடைக்கவில்லையாம். கவர்ச்சி போட்டோ சூட் நடத்தி வெளியிட்டு பார்த்தாராம். அதுவும் பலனளிக்கவில்லையாம்.

    இதனால் நடிகையை முடிவை மாற்றிக்கொண்டு தெலுங்கு பக்கம் சென்று இருக்கிறாராம். அங்கு ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைப்பதால் ஐதராபாத்தில் செட்டிலாக முடிவு செய்திருக்கிறாராம் நடிகை.
    இளம் நடிகை ஒருவர் திருமணம் வேண்டாம் என்று அடம் பிடித்து வருகிறாராம்.
    மலையாளத்தில் அறிமுகமாகி மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவருக்கு நல்ல வரன் வந்திருக்கிறதாம். இந்த விஷயத்தை பெற்றோர்கள் நடிகையிடம் சொல்ல, நடிகையோ இப்போ தான் வளர்ந்து வருகிறேன். அதுக்குள்ள திருமணமா... வேண்டாம் என்று அவர்களிடம் சொல்லி விட்டாராம்.

    ஆனால், பெற்றோர்களோ நல்ல வரன் எப்படி விடுவது என்று தெரியாமல் இருக்கிறார்களாம். ஏதாவது சொல்லி நடிகையை சம்மதிக்க வைக்க வேண்டும் என்று முடிவில் இருக்கிறார்களாம்.
    பிரபல நடிகை ஒருவர் பந்தா காட்டி பிரபல நடிகர் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்து இருக்கிறாராம்.
    தமிழ் தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபலமாக இருக்கும் வாரிசு நடிகை, தான் பெரிய நடிகை அந்தஸ்துக்கு வந்து விட்டதாக நினைத்து அடிக்கடி பந்தா காண்பித்து வருகிறாராம்.

    அப்படி முன்னணி நடிகர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்ததற்கு கால்ஷீட் தருகிறேன் என்று கூறி நடிகை பந்தா காண்பித்து வந்தாராம். நீண்ட நாட்கள் ஆகியும் நடிகை எந்த பதிலும் சொல்லாததால் படக்குழுவினர் வேற நடிகை ஒப்பந்தம் செய்து விட்டார்களாம். தற்போது வாய்ப்பை இழந்து வருத்தப் பட்டு வருகிறாராம்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் இளம் நடிகை சம்பளத்தில் விடாப்பிடியாக இருக்கிறாராம்.
    மலையாளத்தில் அறிமுகமாகி மிகவும் பிரபலமான நடிகை, தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறாராம். குறிப்பிட்ட கதைகளை மட்டும் தேர்வு செய்யும் நடிகை தற்போது சம்பளத்திலும் விடாப்பிடியாக இருக்கிறாராம்.

    இயக்குனர் ஒருவர் கதைசொல்லி நடிகையை அணுகினாராம். கதைக்கேட்டு பிடித்துப்போக, நடிகை 2 கோடிக்கு மேல் சம்பளம் வேண்டும் என்று கூறிவிட்டாராம். இயக்குனர் சம்பளத்தை குறைக்க சொல்லியும், மாட்டேன் என்று விடாப்பிடியாக இருக்கிறாராம் நடிகை.
    பிரபல நடிகர் ஒருவரை நடிக்க இருந்த படம் டிராப் ஆனதால் தயாரிப்பாளரான நடிகர் அடுத்த ப்ளான் போட்டு விட்டாராம்.
    இளம் இயக்குனர் ஒருவரை வைத்து உலக நடிகர் ஒரு படத்தை தயாரிக்க முடிவு செய்தாராம். அதில் உச்ச நடிகரை நடிக்க வைக்கவும் முடிவு செய்தாராம். ஆனால், சில காரணங்களால் அந்த படம் தொடங்க வில்லையாம். 

    காரணம் விசாரித்தால் உச்ச நடிகர் கேட்ட சம்பளத்தை உலக நடிகரால் கொடுக்க முடியவில்லையாம். அதனால்தான் அந்த படம் டிராப்பாக ஆகி விட்டதாம். மேலும் அந்த படத்தை உலக நடிகரே நடிக்க முடிவு செய்துவிட்டாராம்.
    தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் இனிமேல் இப்படித்தான் என்று கூறி ரூட்டை மாற்றி இருக்கிறாராம்.
    தமிழ் சினிமாவில் நடிகையாக இருந்து பாடகியாக இருப்பவர் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்தாராம். இந்நிலையில் திடீரென்று சினிமாவுக்கு முழுக்கு போட்டு எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்தாராம். ஒரு அரசியல் சார்ந்த நடிகரை நம்பி ஏமாந்து விட்டேன் என்று கூறி வந்தாராம்.

    தற்போது நடிகை தன்னுடைய ரூட்டை மாற்றி கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடித்து வருகிறாராம். ஹீரோக்களுடன் எப்போது நடிப்பீர்கள் என்று கேட்டால், இனிமே என் ரூட்டு இப்படித்தான் அவர்களுடன் நடிக்க மாட்டேன் என்று கூறுகிறாராம்.
    தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் காதல் திருமணம் செய்ய இருக்கிறாராம்.
    தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவாராம். பல நடிகைகளுடன் தொடர்பு இருப்பதாக அடிக்கடி பேசப்படுவாராம். இந்நிலையில் இசையமைப்பாளர் காதல் திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளிவந்து இருக்கிறதாம்.

    இதையறிந்த ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் இசையமைப்பாளர் திருமணம் செய்ய இருக்கும் நபர் யாரா இருக்கும் என்று பேசி வருகிறார்களாம். மேலும் அந்த நடிகையா, இந்த நடிகையா யாரா இருக்கும் என்று குழம்பி வருகிறார்களாம்.

    முன்னணி நடிகரை வைத்து படம் தயாரித்த நிறுவனம் ஒன்று மீண்டும் படம் தயாரிக்க தயக்கம் காட்டுகிறார்களாம்.
    தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பு நிறுவனம் முன்னணி நடிகரை வைத்து திரைப்படம் தயாரித்தார்களாம். அந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றதுதாம். ஆனால், எதிர் பார்த்த வசூல் கிடைக்க வில்லையாம். 

    இந்நிலையில் தயாரிப்பு நிறுவனம் மற்றொரு முன்னணி நடிகரை வைத்து படம் தயாரிக்க இருப்பதாக செய்திகள் வெளியானதாம். இதை பார்த்த தயாரிப்பாளர் ஏற்கனவே பட்ட நஷ்டம் இன்னும் தீரல... அதுக்குள்ள இன்னொரு படமா.. நாங்க இப்போ எந்த படமும் தயாரிக்க எண்ணம் இல்லை என்று கூறி விட்டார்களாம்.

    எவ்வளவு கொடுத்தாலும் அங்கு மட்டும் வர மாட்டேன் என்று பிரபல நடிகை ஒருவர் பிடிவாதம் பிடித்து வருகிறாராம்.
    தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்த மஞ்சான நடிகையிடம், பெரிய முதலாளி வீட்டிற்கு செல்ல அழைப்பு வந்ததாம். நடிகை சொல்லுகிறேன் என்று சொல்லிவிட்டு அப்படியே விட்டுவிட்டாராம். ஆனால், அவர்களோ விடாமல் நடிகையை தொடர்ந்து கேட்டு வருகிறார்களாம். நடிகையோ செல்ல தயங்குகிறாராம்.

    பணம் அதிகமாக தருகிறோம் என்று சொல்லியும், நடிகை வரமாட்டேன் என்று கூறுகிறாராம். இப்போதுதான் நான் ஏதோ கொஞ்சம் நல்ல பெயர் எடுத்து இருக்கிறேன். அங்கு வந்தால் இருக்கும் பெயரும் கெட்டு போய்விடும் என்று நெருங்கியவர்களிடம் சொல்லி வருகிறாராம்.
    பிரபல நடிகை ஒருவர் கெத்துக்காக ஒரு செயலை செய்ய போய், அது அவருக்கு அவமானத்தை தேடி கொடுத்து இருக்கிறதாம்.
    தமிழில் பல படங்களில் நடித்து மிகவும் பிரபலமான காக்கா நடிகை, தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறாராம். தான் பெரிய நடிகை அந்தஸ்துக்கு வந்து விட்டதாக நினைத்து கெத்து காண்பித்து வருகிறாராம்.

    இந்த நிலையில் நடிகை தற்போது டிரெண்டாகி வரும் டி.சர்ட்டை போட்டு கெத்து காண்பித்து இருக்கிறாராம். ஆனால், நடிகை இதற்கு முன் பல ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த இந்தி பேட்டியை நெட்டிசன்கள் தேடி கண்டுபிடித்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்களாம். இது நடிகைக்கு பெரிய அவமானமாக ஆகி விட்டதாம்.
    சமீபத்தில் திருமணம் செய்துக் கொண்ட நடிகரின் திருமணத்திற்கு அவரது காதலி செல்ல மறுத்து விட்டாராம்.
    பெரிய முதலாளி வீட்டில் இருந்த போது ஓவியமானவவரும் மருத்துவ முத்தம் கொடுத்த நடிகரும், காதலிப்பதாக பலரும் கூறினார்களாம். அவர்களும் மறுக்காமல் ஊர் ஊராக சுற்றினார்களாம். சில மாதங்களுக்குப் பின் நாங்கள் இருவரும் நண்பர்கள்தான், காதலிக்கவில்லை என்று கூறினார்களாம். இருப்பினும் இருவரும் அடிக்கடி சேர்ந்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டதால் யாரும் நம்பவில்லையாம்.

    இந்தநிலையில், நடிகர் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் அவரை திருமணம் செய்ய இருப்பதாகவும் கூறி மணந்துக் கொண்டாராம். இவரின் திருமணத்திற்கு பெரிய முதலாளி வீட்டில் இருந்த போட்டியாளர்கள் பலரும் சென்றார்களாம். ஆனால், அவரது காதலி மட்டும் செல்லவில்லையாம். பலரும் வர சொல்லி கட்டாயப்பட்டுத்தியும் நடிகை செல்ல மறுத்து விட்டாராம்.


    ×