என் மலர்
கிசுகிசு
முன்னணி நடிகர்கள் தங்களுடைய படங்களில் நடிக்க வைக்க அந்த நடிகையை ஒப்பந்தம் செய்யாதீர்கள் என்று பயப்படுகிறார்களாம்.
தமிழ் திரையுலகின் தங்க நிறத்தழகிகளில் ஒருவர், நான்கெழுத்து நடிகை. இவரை அந்த தொற்று நோய் சமீபத்தில் பாதித்ததாம். அதில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பிய அவர், இப்போது தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு மும்பை வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறாராம்.
இந்த நிலையில், புது படங்களுக்கு அவர் பெயரை சொன்னாலே “அந்த நடிகையா, அய்யோ வேண்டாம்...” என்று எல்லா கதாநாயகர்களும் அலறியடித்து ஓடுகிறார்களாம். நோய் தொற்றிக் கொள்ளும் என்று பயப்படுகிறார்களாம்.
நடன இயக்குனரும் நடிகையுமானவர் தற்போது பிரபலமான நடிகையின் வரவால் கலக்கத்தில் இருக்கிறாராம்.
தமிழ் சினிமாவில் நடன இயக்குனரும், நடிகையாகவும் வலம் வந்தவர் பெரிய முதலாளி வீட்டிற்கு சென்று பிரபலமானாராம். பின்னர் வெளியே வந்த பிறகு ஒரு கட்சியில் சேர்ந்து ஒரு பொறுப்பில் அமரவேண்டும் என்று ஆசைப்பட்டாராம். பெண்கள் யாரும் இல்லாததால் அதிகமாக குரல் கொடுத்து தன்னை முன்னிலைப்படுத்தி வந்தாராம்.
இந்நிலையில் வேறு கட்சியில் இருந்து பூ நடிகை அந்த கட்சிக்கு வந்திருக்கிறாராம். பூ நடிகையின் வரவால் நடன நடிகை கலக்கத்தில் இருக்கிறாராம். தனக்கு எதாவது ஒரு பொறுப்பு கிடைக்கும் என்று பார்த்தால் இந்த நடிகை வந்துவிட்டாரா என்று கவலைப்படுகிறாராம். மேலும் வேண்டுதலுக்காக கோவிலுக்கு சென்று வருகிறாராம்.
முன்னணி நடிகை ஒருவர் முன்னணி நடிகர்கள், நடிகைகளுக்கு பார்ட்டி கொடுக்க இருக்கிறாராம்.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை, பட வாய்ப்பு குறைந்து இருப்பதால் திருமணத்திற்கு தயாராகி இருக்கிறாராம். சமீபத்தில் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்ய இருப்பதாக அறிவித்தாராம். ஏற்கனவே நடிகையை ஒப்பந்தம் செய்த தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மீதமுள்ள படப்பிடிப்புக்கு நடிகை வருவாரா என்று அச்சத்தில் இருக்கிறார்களாம்.
இந்நிலையில், திருமணத்திற்கு முன்பாக சில முன்னணி நடிகர்கள், நடிகைகளை அழைத்து பெரிய பங்களாவில் பார்ட்டி கொடுக்க இருக்கிறாராம். இதற்காக பல நடிகர்கள் நடிகையின் அழைப்புக்காக காத்திருக்கிறார்களாம்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்து பிரபலமான நடிகை வந்த வாய்ப்பை நழுவவிட்டு புலம்பி வருகிறாராம்.
மலையாளத்தில் டீச்சராக வந்த இளம் நடிகை, தமிழில் இவர் முதலில் அறிமுகமான படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு ஓட வில்லையாம். இதனால் தெலுங்கு பக்கம் போய், இரண்டு வெற்றி படங்களை கொடுத்து அங்கு பிரபல நடிகையானாராம். இந்த நிலையில், நடிகை ஒல்லி நடிகருடன் மீண்டும் நடிக்க வேண்டும் என்ற வாய்ப்பு வந்ததாம்.
மீண்டும் அவருடனா, ஏற்கனவே நடித்த படம் ஓடவில்லை, இந்த படமும் ஓடவில்லை என்றால் ராசி இல்லாதவல் என்று முத்திரை குத்திவிடுவார்கள் என்று படத்தில் நடிக்க மறுத்து விட்டாராம். ஆனால், அவர் மறுத்த படம் சூப்பர் ஹிட்டாகி விட்டதாம். இதைப்பார்த்த நடிகை தேடி வந்த வாய்ப்பை நழுவவிட்டுவிட்டோமே என வருத்தம் தெரிவித்து புலம்பி வருகிறாராம்.
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்த நடிகை பப்ளிசிட்டிக்காக பல விஷயங்களை செய்து வருகிறாராம்.
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்த நடிகை, பிரபலம் ஆகவில்லை என்று வருத்தப்பட்டாராம். கடந்த வருடம் அவரது காதலர் பெரிய முதலாளி வீட்டுக்கு சென்ற பின் வெளியில் கண்ணீர் விட்டு அழுது பிரபலமானாராம்.
அதன் பின், தான் எப்பவும் பிரபலமாக இருக்க வேண்டும் என்பதற்காக போட்டோ ஷூட் வெளியிடுவது, வீடியோ வெளியிடுவது என்று இருந்தாராம். தற்போது பெரிய முதலாளி வீட்டுக்கு சென்று பப்ளிசிட்டிக்காக பல விஷயங்களை செய்து வருவதாக பலரும் பேசி வருகிறார்களாம்.
தமிழில் முன்னணி நடிகர் ஒருவர் படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு செல்ல பயப்படுகிறாராம்.
கடவுள் பெயரை கொண்ட நடிகர் இப்போது, மருத்துவரான படத்தில் நடித்து வருகிறாராம். படப்பிடிப்பு சென்னையில் நடைபெறுகிறதாம். தினமும் படப்பிடிப்பு முடிந்ததும் அவர் வீட்டுக்கு போவதில்லையாம். ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்குகிறாராம்.
இதைப் பார்த்த பலரும் நடிகர் வீட்டுக்கு போகாமல் ஓட்டலில் தங்குகிறாரா என்று பலரும் பேசினார்களாம். காரணம் விசாரித்தால், கொரோனாவின் ஆட்டம் அதிகமாக இருப்பதுதான் காரணமாம். குடும்பத்தினரின் நலன் கருதி, முன் எச்சரிக்கையாக வீட்டுக்கு போகாமல் ஓட்டலில் தங்குகிறாராம் நடிகர்.
பிரபல நடிகையின் திடீர் அறிவிப்பால் பல தயாரிப்பாளர்கள் கலக்கத்தில் இருக்கிறார்களாம்.
தமிழ் தெலுங்கு மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமாக இருக்கும் நடிகை, தற்போது தமிழில் வெற்றி பெற்ற படத்தின் 2 ஆம் பாகத்தில் மட்டும் நடித்து வருகிறாராம். சில படங்களில் நடிக்க கதை கேட்டு வைத்திருந்தாராம். கொரோனா பாதிப்பால் எந்த படப்பிடிப்பு நடக்காததால் நடிகை திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்து விட்டாராம்.
சமீபத்தில் திருமணம் செய்ய இருக்கும் நபரை பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டு விட்டாராம். இவரை வைத்து படம் எடுக்கலாம் இருந்த தயாரிப்பாளர்கள் எல்லாம் கலக்கத்தில் இருக்கிறார்களாம்.
வாய்ப்பு இருக்கும்போது பலரை கண்டுக்கொள்ளாத நடிகை, தற்போது இயக்குனர்களை புலம்ப வைத்திருக்கிறாராம்.
தமிழில் ஒரு சில படங்களில் நடித்து பிரபலமான ராசியான நடிகை, தெலுங்கில் வாய்ப்பு கிடைத்தவுடன் இங்கு இருப்பவர்களை கண்டுக் கொள்ள வில்லையாம். தன்னை அணுகும் இயக்குனர்களிடம் ஓவர் பந்தா காண்பித்தாராம்.
தற்போது தெலுங்கில் பட வாய்ப்பு இல்லாததால் இல்லாததால் நடிகை போட்டோ ஷூட் எடுத்து அதை இயக்குனர்களுக்கு அனுப்பி இருக்கிறாராம். இதைப் பார்த்த இயக்குனர்கள் வாய்ப்பு இருக்கும் போது கண்டுக்கல... இப்போ வாய்ப்புக்காக நடிகை இப்படியெல்லாம் பண்ணுறாங்க என்று புலம்பி வருகிறார்களாம்.
பல படங்களில் கஷ்டப்பட்டு நடித்து பெயர் பெற்ற நடிகை, தற்போது நடித்ததை நினைத்து புலம்பி வருகிறாராம்.
தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரபலமான நடிகை, பிரம்மாண்டமான படம், வரலாற்று படம், கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்திருக்கிறார். பல படங்களில் கஷ்டப்பட்டு நடித்து பெயர் பெற்ற நடிகை, சமீபத்தில் ஒரு படத்தில் நடித்திருந்தாராம்.
இந்த படம் சமீபத்தில் வெளியாகி நெகட்டிவ்வான விமர்சனங்களை பெற்றதாம். இது நடிகைக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறதாம். மேலும் படம் நடிக்கும் போது நல்ல பெயர் கிடைக்கும் என்று எதிர்பார்த்தாராம். ஆனால், வெளியான பிறகு இருக்கிற பெயரும் கெட்டு போய்விட்டதாக சைலண்ட்டான நடிகை புலம்புகிறாராம்.
தமிழில் ஒரு சில படங்களில் நடித்த நடிகை மனம் தளராமல் தொடர்ந்து பட வாய்ப்புக்காக காத்திருக்கிறாராம்.
தமிழில் ஓரிரு படங்களில் நடித்த நடிகை வேற படத்தில் நடிக்க ஆர்வமானாராம். ஆனால் படம் கைகூடும் நிலையில், அந்த பட வாய்ப்பை வேறொரு நடிகை தட்டி பறித்து விட்டாராம். என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த நடிகை போட்டோஷூட் எடுத்து வலை தளத்தில் பரவ விட்டாராம்.
எதிர்பார்த்த மாதிரி எதுவும் வரவில்லையாம். ஆனாலும் இன்னும் மனம் தளராத நடிகை பல இயக்குனர்கள், நடிகர்களுக்கு தூது அனுப்பி வருகிறாராம். சம்பளம் குறைவு என்றாலும் பரவாயில்லை வாய்ப்பு கிடைத்தால் போதும் என்கிறாராம் அந்த உலக அழகி பெயரை கொண்ட மலையாள நடிகை.
பிரபல நடிகை ஒருவர் தன்னுடைய படம் வெளியாக இருக்கும் நிலையில், பணம் கொடுத்தால்தான் புரமோஷனுக்கு வருவேன் என்று கூறியிருக்கிறாராம்.
தமிழ் தெலுங்கு மொழிகளில் நடித்து மிகவும் பிரபலமாக இருக்கும் நடிகை, தற்போது ஒரு படத்தில் நடித்து இருக்கிறாராம். இவரை நம்பித்தான் படமே எடுத்தார்களாம். படம் எடுத்து முடிந்த பிறகு தியேட்டரில் ரிலீசாகாமல் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அறிவித்ததால் நடிகை அதிருப்தி அடைந்தாராம்.
மேலும் ஓடிடி தளத்தில் அதிக பணம் கொடுத்து படத்தை வாங்கி விட்டதால், நடிகை அதிர்ச்சியடைந்து இருக்கிறாராம். தனக்கு குறைவான சம்பளம் கொடுத்துவிட்டு நீங்கள் அதிகமாக சம்பாதித்து விட்டீர்களே என்று தயாரிப்பாளர்களிடம் கூறியிருக்கிறாராம். மேலும் தனக்கு இன்னும் பணம் கொடுத்தால் தான் புரமோஷனுக்கு வருவேன் என்று கூறிவிட்டாராம். படக்குழுவினரும் பணம் கொடுக்காமல் நடிகையில்லாமலே புரமோஷன் செய்து வருகிறார்களாம்.
சினிமாவை விட்டு சென்று தற்போது வாய்ப்பு தேடி வரும் நடிகை, பிரபல நடிகரின் அழைப்புக்காக காத்திருக்கிறாராம்.
தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி சில படங்களில் நடித்துவிட்டு வாய்ப்பு இல்லாமல் ஒதுங்கிய நடிகை பெரிய முதலாளி வீட்டுக்கு சென்று மிகவும் பிரபலமானாராம். மேலும் குண்டாக சென்ற நடிகை அங்கு போன பிறகு உடல் மெலிந்து பழைய தோற்றத்திற்கு மாறிவிட்டாராம்.
நடிகை புதுபொழிவுடன் இருப்பதால் படம் வாய்ப்புகள் தேடி வர ஆரம்பித்து இருக்கிறதாம். இருப்பினும் தான் முதன்முதலாக அறிமுகமான ஒல்லியான நடிகருடன் மீண்டும் நடிக்க ஆசைப்பட்டு தூது அனுப்பினாராம். அவரும் ஊரடங்கு முடிந்த பிறகு சந்திக்கலாம் என்று சொல்லிவிட்டாராம். ஊரடங்கு முடிந்து இருப்பதால் நடிகரின் அழைப்பை எதிர்ப்பார்த்து நடிகை காத்திருக்கிறாராம்.






