என் மலர்tooltip icon

    கிசுகிசு

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காதல் படங்களில் நடிக்கமாட்டேன் என்று கூறியிருக்கிறாராம்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை, தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறாராம். நடிகையை தொடர்பு கொண்டு கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் காதல் படங்களில் இனிமேல் நான் நடிக்கமாட்டேன் என்று கூறிவிட்டாராம்.

    தானொரு அந்தஸ்துக்கு வந்துவிட்டதாகவும் அதை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக நடிகை திடீர் முடிவு எடுத்திருக்கிறாராம். இதை பார்த்த இயக்குனருக்கும் தயாரிப்பாளர்களும் எத்தனை நாளைக்கு நடிகை இப்படி இருப்பார் என்று பார்க்கலாம் என்று கூறி வருகிறார்களாம்.
    தமிழில் ஒரு சில படங்களில் நடித்த நடிகை, காத்திருந்து ஏமாந்து போய் விட்டாராம்.
    தமிழில் சேவலாக வந்த நடிகைக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்ததாம். அதன்பின் தொடர்ந்து ஒருசில படங்களில் நடித்த நடிகைக்கு திடீரென்று படவாய்ப்புகள் குறைந்ததாம். பின்னர் கவர்ச்சிக்கு மாறி பட வாய்ப்புகளைப் பிடிக்க ஆரம்பித்தாராம்.

    ஒரு சில படங்களில் மட்டுமே வாய்ப்பு கிடைத்ததால், நடிப்பை விட்டு சிலகாலம் விலகி இருந்தாராம். மீண்டும் படவாய்ப்பு பிடிக்க முயற்சிகள் செய்தும் எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லையாம். காத்திருந்து ஏமாந்த நடிகை தற்போது திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து விட்டாராம்.
    தமிழ் பேச தெரிந்த கோலிவுட் நடிகை ஒருவர் ஹீரோயின் வாய்ப்பு கிடைக்காததால் தனது ரூட்டை மாற்றி உள்ளாராம்.
    முதல் படத்திலேயே பாவாடை தாவணி என பவ்வியமாக நடித்து ஹோம்லி ஹீரோயின் என பெயர் வாங்கிய நடிகை, நாளடைவில் படவாய்ப்பு குறைந்ததால், கிளாமர் ரூட்டுக்கு மாறினாராம். இதற்காக விதவிதமாக போட்டோஷூட் எடுத்து சமூக வலைதங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினாராம்.

    இதன்பின் படவாய்ப்பு குவியும் என எதிர்பார்த்த நடிகைக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்ததாம். ஹீரோயினுக்கு பதில் அக்கா, தங்கை போன்ற வேடங்கள் தான் அதிகம் வருகிறதாம். அதுவும் முன்னணி ஹீரோவின் படத்திலாம். வந்த வாய்ப்ப எதுக்கு தவரவிடனும்னு வேற வழியில்லாம நடிக்க சம்மதிக்கிறாராம் அந்த நடிகை.
    கோலிவுட், டோலிவுட் என பல்வேறு மொழிகளில் கொடிகட்டிப் பறக்கும் நடிகைக்கு திடீரென அரசியல் ஆசை வந்ததாம்.
    பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கோலிவுட், டோலிவுட் என கொடிகட்டிப் பறக்கும் நடிகை ஒருவர், சமீப காலமாக கமர்ஷியல் படங்களில் நடிப்பதை தவிர்த்து வருகிறாராம். அதற்கு மாறாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் நடித்து வருகிறாராம்.

    அந்த வகையில் சமீபத்தில் அவர் நடித்துள்ள படத்தில் அரசியல் வசனங்கள் கொஞ்சம் தூக்கலாக உள்ளதாம். அம்மணியின் அரசியல் பிரவேசத்துக்கான அச்சாரமாக இந்த படம் இருக்கும் என கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறதாம். வயதாவதால் அவர் அந்த ரூட்டில் செல்வதாகவும் கிசுகிசுக்கப்படுகிறதாம்.
    கோலிவுட்டில் மீண்டும் படவாய்ப்புகளை பிடிப்பதற்காக திருமணமான நடிகை ஒருவர் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாராம்.
    கோலிவுட்டில் கவர்ச்சி கன்னியாக வலம்வந்த நடிகை ஒருவர், குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து தவிர்க்க முடியாத நடிகை ஆனாராம். பின்னர் உடல் எடை கூடியதால் மார்க்கெட் இழந்த அந்த நடிகை வேறுவழியின்றி திருமணம் செய்து கொண்டாராம்.

    பொதுவாக திருமணத்துக்கு பின் நடிகைகள் கவர்ச்சி உடைகள் அணிவதை தவிர்ப்பார்கள். ஆனால் இந்த நடிகையோ அதற்கு எதிர்மறையாக சினிமா சம்பந்தமான எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் கவர்ச்சி உடையில் தான் செல்கிறாராம். கோலிவுட்டில் மீண்டும் படவாய்ப்புகளை பிடிப்பதற்கே அவர் இவ்வாறு செய்து வருவதாக பேச்சு அடிபடுகிறதாம்.
    கோலிவுட்டில் உச்ச நட்சத்திரமாக வலம்வரும் நடிகர் ஒருவர், ஹாட்ரிக் ஹிட் கொடுத்த இயக்குனரை கழட்டிவிட்டுள்ளாராம்.
    கோலிவுட்டில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வரும் இயக்குனர் ஒருவர், அடுத்ததாக முன்னணி நடிகர் ஒருவரின் படத்தை இயக்க கமிட் ஆனாராம். ஏற்கனவே அந்த நடிகருக்கு ஹாட்ரிக் ஹிட் கொடுத்த இயக்குனர் தற்போது மீண்டும் கூட்டணி சேர்ந்ததால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தார்களாம்.

    ஆனால் அந்த படத்தின் கதை சொதப்பலாக இருப்பதாக நடிகர் கூறியதால் அந்த இயக்குனர் அப்படத்தில் இருந்து விலக முடிவு செய்துவிட்டாராம். ஹாட்ரிக் ஹிட் கொடுத்த இயக்குனருக்கே இந்த நிலமையா என கோலிவுட் வட்டாரமே ஷாக் ஆகி உள்ளதாம்.
    கோலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் ஒருவர், அவசரப்பட்டு அரசியல் பேசிட்டமோ என புலம்புகிறாராம்.
    கோலிவுட்டில் படம் ரிலீசாகும் சமயத்தில் அரசியல் பற்றி ஏதேனும் கருத்து தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்துவது ஒரு டிரெண்டாகவே மாறி வருகிறதாம். இப்படி ஒருசில முன்னணி நடிகர்கள் செய்தது அவர்களது படத்தின் புரமோஷனுக்கு பயனுள்ளதாக இருந்ததாம்.

    இதை பார்த்த மூன்றெழுத்து வாரிசு நடிகர், சமீப காலமாக தன் பங்கிற்கு அரசியல் பற்றி அதிரடி கருத்துகளை தெரிவித்து வருகிறாராம். இது அவரது படத்திற்கு உதவியாக இருக்கும் என நினைத்த வேளையில், அதுவே பின்னடைவாக அமைந்துள்ளதாம். அப்படத்திற்காக அரசு தரப்பில் இருந்து தரப்பட வேண்டிய சான்றிதழ் இப்போ அப்போ என்று இழுத்தடிக்கிறார்களாம்.

    இதனால் அந்த நடிகரின் படம் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா என்பது கேள்விக்குறிதான். அவசரப்பட்டு அரசியல் பேசிட்டமோ என அந்த நடிகர் புலம்புகிறாராம்.
    சர்ச்சை நடிகையின் காதல் கணவர் மூன்றே மாதத்தில் பிரிந்து சென்றதால், இப்படி நம்பி ஏமாந்துவிட்டோமே என அந்த நடிகை புலம்புகிறாராம்.
    சர்ச்சைக்கு பெயர்போன நடிகை ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டது பெரும் சர்ச்சையானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கெல்லாம் சளைக்காமல் பதிலடி கொடுத்து வந்த அந்த நடிகை, காதல் கணவருடன் ஹாயாக ஒரு டிரிப் போனாராம்.

    யார் கண்ணு பட்டுச்சோ தெரியல, கப்பிலாக போன அவர்கள் சிங்கிளாக திரும்பி வந்தார்களாம். உருகி உருகி காதலித்த அந்த நடிகை, தற்போது ஏமாந்துட்டேனேனு புலம்புகிறாராம். குடி குடியை கெடுக்கும் என்பதற்கு உதாரணமாக அமைந்துவிட்டது அந்த நடிகையின் காதல் கதை.
    தமிழில் காமெடி படங்களில் நடித்து பிரபலமாகி தற்போது ஹீரோவாக இருப்பவர் டப்பிங் பேச மறுத்து வருகிறாராம்.
    பொதுவாக திரைப்படங்களில் பெரிய நட்சத்திரங்களுக்கான சம்பளத்தில் பாதியை படத்தின் துவக்கத்திலும் மீதியை அவர்கள் டப்பிங் பேசி முடித்த பின்பும்தான் கொடுப்பது வழக்கமாம். உச்ச நட்சத்திரங்களைத் தவிர மற்றவர்களுக்கு இதுதான் நடைமுறையாம்.

    டப்பிங் பேசுவதற்கு முன்பாக மொத்தமுள்ள மீதித் தொகையையும் கொடுத்தால்தான் டப்பிங் பேசவே வருவேன் என்று சொல்லி கறாராய் சம்பளத்தை வசூலிக்கும் நட்சத்திரங்களும் திரையுலகத்தில் இருக்கிறார்களாம். அந்த வரிசையில் இப்போது காமெடியில் கலக்கி, ஹீரோவாக நடித்து வருபவர் இணைந்திருக்கிறாராம். 

    ஒரு நாள் ‘தலைவலி’.. அடுத்த நாள் ‘காய்ச்சல்’.. மூன்றாவது நாள் ‘மூடு சரியில்லை’ என்று ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி டப்பிங் பேச தவிர்க்கிறாராம் நடிகர். ஏன் இப்படி செய்கிறார் என்று படக்குழுவினர் புலம்பி வருகிறார்களாம்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவரின் புதிய படத்திற்கு புதிய சிக்கல் ஒன்று வந்திருக்கிறதாம்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவரின் புதிய படம் ஒன்று உருவாகியுள்ளதாம். தியேட்டர்கள் திறந்தவுடன் வெளியாக இருக்கும் நிலையில், புதிய சிக்கல் ஒன்று ஏற்பட்டுள்ளதாம். அதாவது, படத்தின் வியாபாரத்தில் பங்கு பிரிப்பதில் ஒரிஜினல் தயாரிப்பாளருக்கும் செலவு செய்த தயாரிப்பாளருக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறதாம்.

    தனக்கு தேவையான கோடியை கொடுத்துவிட்டு என்ன வேண்டுமானாலும் பண்ணிக்கொள்ளுங்கள் என்று செலவு செய்த தயாரிப்பாளரிடம் ஒரிஜினல் தயாரிப்பாளர் கறார் காட்டுகிறாராம். இதையறிந்த நடிகர் இதை எப்படி சரிக்கட்டுவது என்று நினைத்து தலையில் கைவைத்து உட்காந்து இருக்கிறாராம்.
    பட வாய்ப்பு குறைந்ததால், பிரபல நடிகை ஒருவர் கவர்ச்சியாக நடிக்க கிரீன் சிக்னல் காட்டி உள்ளாராம்.
    சினிமா, வாய்ப்பு 'டல்' அடிப்பதால், அடுத்ததாக, 'வெப் தொடர்' பக்கம் தனது கவனத்தை திருப்பி இருக்கிறார் மூன்றெழுத்து முன்னணி நடிகை. 'வெப்தொடரில்' கவர்ச்சி வேடமாக இருந்தாலும் சரி நடித்துக் கொடுப்பதாக சொல்லி ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளாராம்.

    'ஒரு சீனியர் நடிகையே, இப்படி ஒரு முடிவெடுத்து, ரசிகர்களை துவம்சம் செய்ய தயாராகி விட்டால், நம்ம கதி என்னாகுமோ...' என்று, இளவட்ட நடிகையர், கதிகலங்கி நிற்கின்றார்களாம். மேலும் கதைக்கும் தேவைப்பட்டால் மட்டுமே கவர்ச்சி வேடத்தில் நடிப்பேன் என்ற நிபந்தனையும் விதித்துள்ளாராம்.
    ஒரு படத்தில் நடித்து பிரபலமான நடிகை, தவறு செய்து விட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறாராம்.
    ஒரு படத்தில் நடித்து புகழின் உச்சிக்கு சென்ற அருவியான நடிகை, அந்த படத்திற்குப் பிறகு காணாமல் போய் விட்டாராம். ஒரு இயக்குனரின் கட்டுப்பாட்டில் இருந்ததாக கூறப்பட்ட நடிகை, மன அழுத்தம் காரணமாக பல ஊர்களுக்கு சென்று வந்தாராம்.

    நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறாராம். அந்த படமும் கொரோனாவால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாம். தற்போது நடிகை பொது இடத்திற்கு முககவசம் அணியாமல் சென்றிருக்கிறாராம். இதை கேட்டதற்கு கேட்டவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறாராம். இதைப் பார்த்தவர்கள் நடிகை செய்தது தவறு. ஆனால் வாக்குவாதமா என்று பேசினார்களாம்.
    ×