என் மலர்
கிசுகிசு
கோலிவுட்டில் பல ஆண்டுகளாக கொடிகட்டி பறக்கும் அக்கட தேசத்தை சேர்ந்த நடிகை ஒருவர் தனக்கு வயதாகி விட்டதை உணர்ந்து விட்டாராம்.
அந்த ‘ரா’ நடிகை, திரையுலகுக்கு வந்து 20 வருடங்கள் ஆகிறது. தனக்கு வயதாகி விட்டதை அவர் உணர்ந்து விட்டாராம். அவரை முன்னணி நாயகன் ஒருவர், தனது புதிய படத்தில் நடிக்க அழைத்தாராம். அந்த படத்தில், கதாநாயகிக்கு சண்டை காட்சிகளும், ‘பைக் ரேஸ்’சும் இருக்கிறதாம்.
இதையறிந்த ‘ரா’, “எனக்கு வயதாகி விட்டது. சண்டை காட்சிகளில் நடிக்க முடியாது. நீங்க வேறு கதாநாயகியை பார்த்துக் கொள்ளுங்கள்” என்று கூறி, அமைதியாக அந்த படத்தில் இருந்து விலகிக் கொண்டாராம்.
தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்த நடிகை, காமெடி நடிகருடன் நடிக்க அதிக சம்பளம் கேட்டு வாங்கி இருக்கிறாராம்.
தமிழில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகை, நடுவில் சித்தி பிரச்சனையால் வாய்ப்புகளை இழந்தாராம். அதன்பிறகு தமிழ் மொழி பக்கம் தலைகாட்டாமல் இருந்த நடிகை, தெலுங்கில் நடித்து வந்தாராம். தற்போது தமிழ் படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காண்பித்து வருகிறாராம்.
இந்த நிலையில், காமெடி நடிகருடன் நடிக்க நடிகையிடம் அணுகினார்களாம். நடிகையும் கதை கேட்டு அதிக சம்பளம் வேண்டும் என்று கேட்டாராம். திகைத்து போன படக்குழுவினர், நடிகையிடம் ஓரளவிற்கு சம்பளத்தை குறைத்து சமாதானம் செய்து படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்களாம்.
தமிழ் மொழியில் மிகவும் பிரபலமாக இருக்கும் வாரிசு நடிகை ஒருவரின் படங்கள் தோல்வி அடைந்து வருவதால் வருத்தத்தில் இருக்கிறாராம்.
தென்னிந்திய மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை, தற்போது உச்ச நடிகருடன் நடித்து வருகிறாராம். இவர் நடித்த பயோபிக் திரைப்படம் சூப்பர் ஹிட்டானதால், அடுத்ததாக நடிக்கும் படத்தின் கதை தேர்வில் குழப்பம் அடைந்தாராம். ஒரு வழியாக இரண்டு படங்களை தேர்வு செய்து நடித்தாராம். ஆனால், அந்த இரண்டு படங்களும் படுதோல்வி அடைந்து இருக்கிறதாம்.
நடிகையின் நடிப்புக்கு பாராட்டு கிடைத்தாலும் மோசமான விமர்சனங்களே எழுந்ததாம். இதனால் வருத்தத்தில் இருக்கும் நடிகை, என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறாராம்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சம்பள விஷயத்தில் ஒரு சிலருக்கு விரல்களை மடக்கி காட்டுவதால் தயாரிப்பாளர்கள் கொதித்து இருக்கிறார்கள்.
பெரிய நம்பர் நடிகை தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கிறாராம். ஒரு பக்கம் உச்ச நடிகர்களுடன் ஜோடி, இன்னொரு பக்கம் தனி கதாநாயகியாகவும் வலம் வருகிறாராம். தமிழ், தெலுங்கு சினிமாக்களில் நடிக்க கேட்டால் 4 அல்லது 5 விரல்களை காட்டுகிறாராம். முன்னணி ஹீரோ என்றாலோ கதை பிடித்து இருந்தாலோ 3 விரல்களுக்கு சம்மதிக்கிறாராம்.
ஆனால் தன் சொந்த மொழியான மலையாளத்தில் மட்டும் விரல்களை மடக்கி வழக்கமாக வாங்கும் சம்பளத்தில் கால்வாசி மட்டும் வாங்கிக்கொண்டு நடிக்கிறாராம். இது தமிழ், தெலுங்கு சினிமாவில் கடும் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளதாம். சமீபத்தில் அப்படி ஒரு மலையாள படத்தில் ஒரு கோடி சம்பளத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளாராம். இந்த தகவல் கிடைத்ததும் கொதித்து போன தயாரிப்பாளர்கள் இந்த விவகாரத்தை சங்கம் மூலம் பேசி நடிகைக்கு ரெட் கார்டு போட்டு விடலாமா என்று ஆலோசித்து வருகிறார்களாம்.
அக்கட தேசத்தை சேர்ந்த இளம் நடிகை ஒருவர், கவர்ச்சி வேடங்களில் நடிக்க அணுகினால் கடுப்பாகி விடுகிறாராம்.
குடும்ப குத்து விளக்குகள் என பெயர் வாங்கிய நடிகைகள், கவர்ச்சி விளக்குகளாக மாறிக்கொண்டிருக்கும் நிலையில், அக்கட தேசத்தை சேர்ந்த நடிகை ஒருவர், யாராவது இயக்குனர்கள், கவர்ச்சி என்று வாய் திறந்தாலே, காட்டுக்கூச்சல் போடுகிறாராம்.
'சைவ ஓட்டலுக்கு வந்து அசைவம் கேட்டா எப்படி...' என்று, எதிர் குரல் கொடுக்கும், அந்த நடிகை, 'நம்மகிட்ட, கவர்ச்சி, கண்ணுல மட்டும் தான் கிடைக்கும். உடம்புல கிடைக்கும்ன்னு எதிர்பார்த்து, என் வீட்டுப் பக்கம் மறந்தும் கூட வந்துடாதீங்க...' என்று, கழுத்தை பிடித்து தள்ளாத குறையாய், இயக்குனர்களை தள்ளி விட்டுக் கொண்டிருக்கிறாராம்.
தமிழ் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் பணத்திற்காக அப்பா வயது நடிகருடன் நடிக்க தயாராக இருக்கிறாராம்.
தமிழ்நாட்டில் பிறந்து இருந்தாலும் மலையாள படத்தின் மூலம் பிரபல நடிகையாக இருப்பவர், தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறாராம்.
பெரிய நடிகர்கள் முதல் சிறிய நடிகர்கள் வரை அந்த நடிகையுடன் சேர்ந்து நடிக்க மிகவும் ஆர்வமாக இருக்கிறார்களாம். ஆனால், நடிகைக்கு பணத்தின் மீது ஒரு கண்ணு இருக்கிறதாம். வாய்ப்பு இருக்கும் போதே வலித்துக்கட்டி விட வேண்டும் என்று நினைத்து இருக்கிறாராம்.
தற்போது தெலுங்கில் அப்பா வயது நடிகருடன் ஜோடி போட மிகப் பெரிய சம்பளத்தைப் பேசி ஓகே செய்துள்ளாராம் அந்த நடிகை.
அந்த நடிகை கிடைப்பாரா என்றே பலரும் எங்கி வரும் நிலையில் இளம் நடிகர் ஒருவர் புறக்கணித்து விட்டாராம்.
தனக்கு ஜோடியாக, ‘ரா’ நடிகை கிடைப்பாரா? என்று சில கதாநாயகர்கள் ஏங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அவரை வேண்டாம் என்று சொல்லி விட்டாராம், ஒரு இளம் நடிகர்.
“கொடுக்கப்படும் சம்பளம் அளவுக்கு அவர் அழகாக இல்லை” என்றும், நடிப்பும் அவ்வளவாக வரவில்லை என்றும் காரணம் சொல்கிறாராம், அந்த சிவமான நடிகர்.
ஒரு சில படங்களில் நடித்து பிரபலமான நடிகையின் படத்தை முன்னணி நடிகை ஒருவர் தட்டிப்பறித்து இருக்கிறாராம்.
காக்கா படத்தில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை, தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வந்தாராம். இவர் நடித்த படங்கள் எல்லாம் தொடர்ந்து வெற்றி பெறுவதால், முன்னணி நடிகை பட்டியலில் இணைந்தாராம்.
தமிழ் மொழியைப் போல தெலுங்கிலும் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதற்காக அங்கு பல படங்களை கைப்பற்றி வருகிறாராம். இப்படி டிக் நடிகையின் படத்தை கைப்பற்றி இருக்கிறாராம். இதனால் காக்கா நடிகை மீது டிக் நடிகை மிகவும் கோபத்துடன் இருக்கிறாராம்.
தமிழில் பிரபல நடிகையாக இருப்பவர் ஒரு நடிகருடன் மீண்டும் நடிக்க கேட்டதற்கு நோ நோ சொல்லி விட்டாராம்.
உதடுக்கு கீழே மச்சம் உள்ள நடிகை தொடர்ந்து ஒரே நடிகருடன் இரண்டு மூன்று படங்கள் நடித்தாராம். இதனால் இருவருக்கும் ஏதோ இருக்கிறது என்று பலரும் பேசினார்களாம். அதன்பிறகு அந்த நடிகருடன் ஜோடி சேர நடிகை மறுத்து வந்தாராம்.
தற்போது புதிய இயக்குனர் ஒருவர் நடிகையிடம் கதை சொல்ல, மீண்டும் அந்த நடிருடன் நடிக்க வேண்டும் என்று கேட்டாராம். அதற்கு நடிகை நோ நோ என்னால் நடிக்க முடியாது என்று கண்டிப்பாக சொல்லிவிட்டாராம்.
பிரபல இயக்குனர் ஒருவர் நடிகர் படத்தில் வேலை செய்து கடுப்பாகி இருக்கிறாராம்.
உறியை அடித்து பிரபலமான இயக்குனர், பிரகாசமான நடிகர் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கி சூப்பர் ஹிட் கொடுத்தாராம். இயக்குனரின் திறமையை அறிந்த நடிகர் தான் நடிக்கும் அடுத்த படத்தில் வசனம் எழுத வைத்தாராம்.
இயக்குனர் எழுதிய வசனங்கள் படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறதாம். இருப்பினும் அந்த இயக்குனருக்கு உரிய மரியாதையை படக்குழுவினர் தர மறுத்து வருகிறார்களாம். இதனால் கடுப்பான இயக்குனர் நடிகரிடம் கேட்க முயற்சி செய்து வருகிறாராம். ஆனால் நடிகரோ கண்டு கொள்ளாமல் இருந்து வருகிறாராம்.
அக்கட தேசத்தை சேர்ந்த வயதான நடிகருக்கு ஜோடியாக நடிக்க இளம் நடிகை ஒருவர் ஓகே சொல்லி உள்ளாராம்.
தமிழ்நாட்டை சேர்ந்த இளம் நடிகை ஒருவர் அக்கட தேசத்தில் முன்னணி ஹீரோயினாக வலம் வருகிறாராம். அந்த நடிகை நடித்த தமிழ் படங்கள் பிளாப் ஆனதால், அவர் பிற மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறாராம்.
தற்போது வயதான நடிகர் ஒருவருக்கு ஜோடியாக நடிக்க அவர் ஓகே சொன்னது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளதாம். பல முன்னணி நடிகைகள் நடிக்க தயங்கிய வேளையில், அந்த நடிகை சம்மதித்ததற்கான காரணமும் கசிந்துள்ளது. இதுவரை லட்சத்தில் சம்பளம் வாங்கி வந்த அந்த நடிகைக்கு கோடியில் சம்பளம் தருவதாக கூறி நடிக்க வைத்துள்ளார்களாம்.
கோலிவுட்டில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் மூன்றெழுத்து நடிகர் ஒருவர், மூன்றெழுத்து நடிகையை காதலித்து வருகிறாராம்.
மூன்றெழுத்து நடிகருக்கும், மூன்றெழுத்து நடிகைக்கும் இடையே திடீர் காதல் உருவாகி இருப்பதாக கோடம்பாக்கத்தில் பரவலாக பேசப்படுகிறது. அது உண்மைதான் என்று நிரூபிப்பது போல் இருவருமே நடந்து கொள்கிறார்கள்.
திடீர் காதலருடன் நடிப்பதற்கு வாய்ப்பு வந்தால், என்ன கதை? எவ்வளவு சம்பளம்? என்று அந்த நடிகை கேட்கமாட்டாராம். கண்ணை மூடிக்கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட தயாராக இருக்கிறாராம்.






