என் மலர்tooltip icon

    கிசுகிசு

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவரின் காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்ய இருப்பதை அறிந்து சோகத்தில் இருக்கிறாராம்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சங்க தலைவர், ஒரு பெண்ணை காதலித்து வருவதாகவும் அவரை தான் திருமணம் செய்ய இருப்பதாகவும் கூறி வந்தாராம். ஆனால் திடீரென்று வேறு ஒரு பெண்ணை காதலிப்பதாக கூறி அவருடன் நிச்சயமும் செய்து கொண்டாராம்.

    நிச்சயம் ஆன சில நாட்களிலேயே இவர்களுடைய திருமணம் நின்று விட்டதாம். இதற்கு காரணம் தெரியாத நிலையில், நிச்சயம் செய்த பெண் வேறொருவரை திருமணம் செய்ய இருக்கிறாராம். இதை அறிந்த சங்கத்தலைவர் சோகத்தில் இருக்கிறாராம்.
    பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர் காதலனுக்காக வீட்டை மாற்றி அவர் அருகிலேயே சென்று இருக்கிறாராம்.
    பிரபல பாலிவுட் நடிகையான ஆலியமானவர், இந்தி பட உலகில் வாரிசுகள் ஆதிக்கம் செலுத்துவதாக சர்ச்சையில் சிக்கினாராம். இவரும் மற்றொரு வாரிசு நடிகரும் காதலித்து வருகிறார்களாம். 

    இந்நிலையில் நடிகை அடுக்கு மாடி குடியிருப்பின் 5-வது மாடியில் வீடு வாங்கி இருக்கிறாராம். இதன் மதிப்பு ரூ.32 கோடியாம். இதே குடியிருப்பின் 7-வது மாடியில் அவரது காதலர் வசித்து வருகிறாராம். காதலர் வீட்டின் அருகிலேயே செல்ல இவ்வளவு கோடியா செலவு செய்வார்கள் என்று பலரும் பேசி வருகிறார்களாம்.
    அக்கறை தேசத்தை சேர்ந்த உயரமான நடிகை ஒருவர் பட வாய்ப்பு இல்லாததால் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம்.
    டோலிவுட், கோலிவுட் என இரு மொழி படங்களிலும் உயரமான நடிகை ஒருவர் பிசியாக நடித்து வந்தாராம். ஒரு படத்திற்காக குண்டான அந்த நடிகை மீண்டும் உடல் எடையை குறைக்க முடியாமல் போனது அவரது சினிமா கேரியரில் பின்னடைவாக அமைந்ததாம்.

    அதையும் மீறி வந்த ஓரிரு படங்களும் பிளாப் ஆனதால் அந்த நடிகையை திருமணம் செய்துகொள்ளச் சொல்லி குடும்பத்தினர் அறிவுறுத்தினார்களாம். பெற்றோரின் அறிவுரைப்படி திருமணம் செய்துகொள்ள அந்த நடிகை ரெடியாகி வருகிறாராம். அவருக்கு மாப்பிள்ளை பார்க்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம்.
    தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை, கெட்ட பெயரை மறைக்க போராடி வருகிறாராம்.
    தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை, சமீபத்தில் போதை வழக்கில் சிக்கிய நடிகையுடன் தொடர்பு இருப்பதாக செய்திகள் வெளியானதாம். இதனால் நடிகைக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளதாம். வழக்குகள், விசாரணையில் சிக்கிய நடிகை வேதனையடைந்து சில நாட்கள் சுற்றுலா சென்றாராம்.

    தற்போது தன் பெயர் மீது விழுந்த அவபெயரை போக்க போராடி வருகிறாராம். இயக்குனர்கள், நடிகர்கள், நண்பர்கள் அனைவரிடமும் நடிகையே போன் செய்து பேசுகிறாராம். சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது என்று இருக்கிறாராம். படப்பிடிப்பில் முன்பு போல் இல்லாமல் சகஜமாக பேசுகிறாராம்.
    தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்த நடிகை கோவில் கோவிலாக சென்று வருவதற்கு நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்களாம்.
    சிறிய படங்களில் சின்ன வேடங்களில் நடித்த நடிகை, பெரிய முதலாளி வீட்டுக்கு சென்று பிரபலமானாராம். அதன் பிறகு வெளிய வந்த நடிகை கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டும், முன்னணி நடிகர்களை பற்றி பேசியும் சர்ச்சையில் சிக்கினாராம்.

    தினமும் நெட்டிசன்கள் உடன் சண்டை போட்டு வரும் நடிகை தற்போது கோவில் கோவிலாக சென்று வருகிறாராம். இதை அறிந்த நெட்டிசன்கள், செய்த தப்புக்கு பிரார்த்தனை செய்கிறீர்களா என்று கேட்டு வருகிறார்களாம்.
    தமிழில் ஒரு சில படங்களில் நடித்த நடிகை தயாரிப்பாளரை புலம்ப வைத்திருக்கிறாராம்.
    தமிழில் கண் கட்டிய படம் மூலம் அறிமுகமான நடிகை, முன்னணி இயக்குனர்கள் படத்தில் நடித்திருந்தாராம். அவர்களுடன் நடித்ததால் தான் ஒரு பெரிய நடிகை என்று நினைக்க ஆரம்பித்து விட்டாராம். சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் அதிகம் சேர்ந்ததால் முன்னணி நடிகையாகி விட்டோம் என்று நினைத்து பல சின்ன படங்களை நடிக்க மறுத்து வருகிறாராம்.

    இந்த நிலையில் நடிகை ஒரு படத்தில் நடித்திருந்தாராம். அந்தப் படம் தற்போது வெளியாக இருக்கும் நிலையில், படம் சம்பந்தப்பட்ட ப்ரமோஷன்களில் நடிகை கலந்து கொள்ள மறுக்கிறாராம். தயாரிப்பாளர் அழைத்தால் பல காரணங்களைச் சொல்லி தட்டிக் கழிக்கிறாராம். 

    பல வெற்றி படங்களில் நடித்த முன்னணி நடிகைகளே தான் நடித்த படங்களின் ப்ரோமோஷன்களுக்கு செல்லும் நிலையில், தனக்கென்று ஒரு அடையாளத்தை பெற்றிராத இளம் நடிகை, இப்படி செய்வது சரியில்லை என்று தயாரிப்பாளர் புலம்பி வருகிறாராம்.
    அக்கட தேசத்தை சேர்ந்த இளம் நடிகை ஒருவர் ஒரு படம் ஹிட்டானதும் ஒரு கோடி வரை சம்பளம் கேட்கிறாராம்.
    இளம் நடிகை ஒருவர் சீனியர் ஹீரோவுக்கு ஜோடியாக நடித்த படம் ஒன்று பிளாக் பஸ்டர் ஹிட் ஆனதாம். இந்த படத்தின் மூலம் அந்த இளம் ஹீரோயினுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறதாம். இதனால் அம்மணி தன் சம்பளத்தையும் கிடுகிடுவென உயர்த்தி விட்டாராம். ஒரு கோடி வரை கேட்கிறாராம்.

    ஒரே படத்தில் இப்படியா என அவர் வயது நடிகைகள் வாயடைத்து போய் உள்ளார்களாம். அதேபோல் அந்த நடிகை கதை தேர்விலும் கவனமாக இருக்கிறாராம். கமர்ஷியல் படங்கள் என்று சொன்னால், வேண்டாம் என ஒரே வார்த்தையில் சொல்லி அனுப்பி விடுகிறாராம்.
    தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் பல படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக இருப்பவர் ஹீரோவுக்கு நிகராக சம்பளம் கேட்கிறாராம்.
    தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் பல படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக இருப்பவர் இந்திய திரை உலகிலேயே அதிக சம்பளம் வாங்கி வருகிறாராம். இவர் ஒரு படத்திற்கு 3, 4 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறாராம்.

    சமீபத்தில் இளம் நடிகர் ஒருவர் படத்தில் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்ற அழைப்பு வந்ததாம். இதற்கு கோடிக்கணக்கில் சம்பளம் கேட்டாராம் ஸ்டண்ட் மாஸ்டர். இதைக் கேட்ட படக்குழுவினரும் ஹீரோவுக்கு அவ்வளவுதான் சம்பளம் உங்களுக்கும் அதுவே தர வேண்டுமா என்று கேட்டார்களாம். குறைத்துக் கொள்ளாத ஸ்டண்ட் மாஸ்டருக்கு படக்குழுவினர் கேட்ட சம்பளத்தைக் கொடுத்து ஒப்பந்தம் செய்தார்களாம்.
    தமிழ் சினிமாவில் பிரபல நடிகரின் செயலால் படப்பிடிப்பை விட்டு நடிகை ஒருவர் ஓட்டம் பிடித்துள்ளார்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தற்போது வாரிசு நடிகைக்கு ஜோடியாக நடித்து வருகிறாராம். நடிகர் எப்போதும் ரசிகர்களிடம் நெருக்கமாக இருப்பாராம். அவர்களை கட்டிப்பிடிப்பது, முத்தம் இடுவது என்று இருப்பாராம்.

    தற்போது பரவி வரும் வைரஸ் காரணமாக பலரும் சமூக இடைவெளிவிட்டு இருக்கும் நிலையில், நடிகர் மட்டும் இதை பின் பற்றுவது இல்லையாம். இதேபோல் படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்களுடன் மிகவும் நெருக்கமாக பழகி இருக்கிறாராம். இதைப் பார்த்த வாரிசு நடிகை படப்பிடிப்பு விட்டு ஓடி விட்டாராம். 

    மற்றவர்களை தொட்டு விட்டு என்னை தொட்டால் நோய் தொற்று வந்து விடும் என்ற பயத்தில் ஓட்டம் பிடித்து விட்டாராம்.

    தமிழ் சினிமாவில் பல ரசிகர்களை கொண்ட நடிகர், தனது பெயரை மாற்றலாம் என்று முடிவு செய்து இருக்கிறாராம்.
    தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர், தயாரிப்பாளருடன் பிரச்சனை, படப்பிடிப்பு செல்லாதது, போனை எடுக்காமல் இருப்பது என பல குற்றச்சாட்டுகளால் பட வாய்ப்புகளை இழந்து வீட்டிலேயே இருந்தாராம். உடல் எடை கூடியதால் இனிமேல் நடிகர் சினிமா வாழ்க்கை முடிந்தது என்று அனைவரும் நினைக்கும் நேரத்தில், உடல் எடையை குறைத்து அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறாராம்.

    பலரும் இவரது செயலை பாராட்டி வருகிறார்களாம். இந்நிலையில், நடிகர் தனது பெயரை மாற்றலாம் என்று முடிவு செய்து இருக்கிறாராம். புனைப் பெயர்கள் எல்லாம் இனிமேல் வேண்டாம். தன்னுடைய வீட்டில் வைத்த பெயரையே அனைவரையும் என்னை அழையுங்கள் என்று சொல்லி வருகிறாராம்.
    முன்னணி நடிகையாக இருப்பவர் திருமணத்திற்கு தயாரான நிலையில், அவரது காதலர் இப்போது வேண்டாம் என்று தள்ளிப்போட்டு வருகிறாராம்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர், இயக்குனர் ஒருவரை காதலித்து வருகிறாராம். இவரும் ஒன்றாக வசித்தும் வருகிறார்களாம். இவர்கள் திருமணம் எப்போது என்று பலரும் கேட்டு வந்தார்களாம். நடிகை பல படங்களில் பிசியாக நடித்து வந்ததால், திருமணத்தை தள்ளிப்போட்டு வந்தாராம்.

    தற்போது நடிகை திருமணத்திற்கு தயாராகி விட்டாராம். ஆனால், காதலரோ இப்போது வேண்டாம் என்று தள்ளி வைத்து இருக்கிறாராம். என்ன காரணமாக இருக்கும் என்று பலரும் தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார்களாம்.

    பழைய நட்பை புதுப்பிக்க நடிகைகள் ஆர்வம்காட்டி வருவதால், மூன்றெழுத்து நடிகர் ஒருவர் அவர்களை கண்டால் தெறித்தோடுகிறாராம்
    மூன்றெழுத்து நடிகர் ஒருவர், தற்போது ஆளே மாறிவிட்டாராம். படப்பிடிப்புக்கு ஆப்சென்டே ஆகாமல் வேலையை கச்சிதமாக செய்து முடிக்கிறாராம். இந்த விஷயம் தான் தற்போது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறதாம்.

    இழந்த மார்க்கெட்டை மீண்டும் பிடிக்க அவர் இவ்வாறு செய்து வருவதாக பேச்சு அடிபடுகிறதாம். புதிய பட வாய்ப்புகளும் அவரை தேடி வருகிறதாம். வந்ததுக்கெல்லாம் ஓகே சொல்லாமல் ஒவ்வொரு படத்தையும் மிக கவனமாகத் தேர்ந்தெடுக்கிறாராம்.

    இந்த சூழலில் அவருடன் நடித்த முன்னாள் நடிகைள் சிலர், நடிகரை தொடர்பு கொண்டு பழைய நட்பை புதுப்பிக்க ஆர்வம்காட்டி வருகிறார்களாம். ஆனால் அவர்களை கண்டால் தெறித்தோடும் அந்த நடிகர், இனி நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்துவது என உறுதியாக இருக்கிறாராம்.
    ×