என் மலர்
கிசுகிசு
பிரபல நடிகை ஒருவர் பட வாய்ப்புக்காக முன்னணி நடிகர்களை தன் வசப்படுத்தும் முயற்சியில் இறங்கி இருக்கிறாராம்.
தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து தற்போது வெள்ளித்திரைக்கு வந்திருக்கும் நடிகை, பட வாய்ப்புகளை பிடிக்க புதிய யுக்தியை கண்டுபிடித்து இருக்கிறாராம். முதலில் இளம் கதாநாயகர்களிடம் ஜோடி சேர நினைத்த நடிகை, அவர்களுக்கு தூது அனுப்பினாராம். ஆனால், அவர்களோ நடிகையை கண்டுக்கொள்ள வில்லையாம்.
இதனால், தன்னுடைய முடிவை மாற்றிய நடிகை, ஓரளவிற்கு வளர்ந்த நடிகர்களை தன் வசப்படுத்தும் முயற்சியில் இறங்கி இருக்கிறாராம். இதற்கு பலனாக ஓரிரு படங்கள் நடிகைக்கு கிடைத்து இருக்கிறதாம்.
பிரபல நடிகர் ஒருவர் தன்னுடன் நடிக்க இளம் நடிகைகள் மறுத்ததால், பழைய நடிகை ஒருவரை தேடி போய் இருக்கிறாராம்.
சில ஆண்டுகளுக்கு முன்பு முன்னணி நடிகராக வலம் வந்தவருடன் அப்போது பல இளம் நடிகைகள் அவருடன் ஜோடி போட ஆசைப்பட்டார் களாம். அப்போது பல நடிகைகளை நடிகர் கண்டுகொள்ள இல்லையாம்.
ஆனால், இப்போது நடிகர் ஒரு படத்தில் நடிக்க தயாராகி வருகிறாராம். இதற்காக பல இளம் நடிகைகளிடம் நடிக்க அணுகினாராம். யாரும் நடிகரை கண்டுகொள்ள இல்லையாம். இதனால், தன்னுடன் நடித்த பழைய நடிகையை தன்னுடன் நடிக்க கேட்டு இருக்கிறாராம். நடிகையும் கேட்ட உடனே சம்மதித்து விட்டாராம்.
முன்னணி நடிகர் ஒருவருடன் நடிப்பதற்காக பிரபல நடிகை ஒருவர் அவரை கவரும் முயற்சியில் இறங்கி இருக்கிறாராம்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறாராம். இவருடன் நடிக்க தெலுங்கு நடிகை ஒருவருக்கு மிகவும் ஆசையாம். இதனால் பல இடங்களில் நடிகரை தொடர்பு கொள்ள முயற்சி செய்து வருகிறாராம். ஆனால் எந்த பலனும் கிடைக்க வில்லையாம்.
இதனால், நடிகரை நேரடியாக கவர திட்டம் போட்டு இருக்கிறாராம். இதனால், நடிகையை பற்றிய செய்திகளை நடிகரின் காதுக்கு கொண்டு செல்ல இருக்கிறாராம். மற்ற நடிகைகள் போட்டி போடுவதற்குள் முந்திக்கொள்ள நடிகையின் இந்த முயற்சியாம்.
பிரபல நடிகையாக இருப்பவர் நான் யாரையும் லவ் பண்ணல என்று வருத்தப்பட்டு கூறியிருக்கிறாராம்.
தமிழில் ஒரு சில படங்களில் நடித்து தெலுங்கு பக்கம் வெற்றி படங்களில் நடித்த நடிகை, மறுபடியும் தமிழில் வந்து அண்ணன் தம்பி இருவருடன் நடித்து புகழின் உச்சிக்கு சென்றாராம். இந்த நிலையில் நடிகை பிரபல நடிகரை காதலிப்பதாக செய்திகள் வந்த தாம்.
இதை அறிந்த நடிகை, நான் யாரையும் காதலிக்கவில்லை. அப்படி ஒருவரை இன்னும் பார்க்கவில்லை என்று வருத்தப்பட்டு கூறியிருக்கிறாராம்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் தன்னுடைய உடம்பை குறைக்காததால் பட வாய்ப்பை இழந்து இருக்கிறாராம்.
தமிழ் சினிமாவில் பல படங்களை கைவசம் வைத்திருக்கும் நடிகர், பாலிவுட் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆனாராம். முன்னணி நடிகர் ஒருவர் நடிக்க, அவருக்கு இணையாக மக்கள் நடிகரை நடிக்க வைக்க முயற்சி செய்தார்களாம்.
இதில் நடிப்பதற்காக நடிகரிடம் உடம்பை குறைக்க வேண்டும் என்று கூறினார்களாம். நடிகரும் குறைக்கிறேன் என்று சொல்லிவிட்டு பல மாதங்களாகியும் குறைக்கவே இல்லை. இதனால் படக்குழுவினர் நடிகரை நீக்கி விட்டார்களாம்.
தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகையின் காதலருக்கு நிபந்தனை போட்டிருக்கிறாராம்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் பிரபல இயக்குனர் ஒருவரை காதலித்து வருகிறாராம். இந்த இயக்குனர் புதிய படம் ஒன்றை இயக்கி வைக்கிறாராம். இதில் இயக்குனரின் காதலி தவிர, தமிழ் தெலுங்கு மொழிகளில் பிரபலமாக இருக்கும் மற்றொரு முன்னணி நடிகையும் நடிக்க ஒப்பந்தம் ஆனாராம்.
அந்த படத்தில் தனக்கு முக்கியத்துவம் இல்லாத காரணங்களால் அந்த முன்னணி நடிகை இப்படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்து இருக்கிறாராம். நான் நடிக்க வேண்டுமென்றால், தனக்கு முக்கியத்துவம் உள்ள காட்சிகளை வைக்க வேண்டும் என்று இயக்குனருக்கு நடிகை நிபந்தனை போட்டிருக்கிறாராம்.
அக்கட தேசத்தை சேர்ந்த அழகிய நடிகை ஒருவர், முன்னணி ஹீரோக்களின் படம் என்றால் கதை கேட்காமல் நடிக்கிறாராம்.
அக்கட தேசத்தை சேர்ந்த அழகிய நடிகை ஒருவர், பிறமொழி படங்களிலும் மார்க்கெட்டை பிடிக்க ஆர்வம் காட்டி வருகிறாராம். தற்போது அவர் கோலிவுட்டை டார்கெட் செய்து வருகிறாராம். முன்னணி நடிகர்களின் படம் என்றால் கதை கேட்காமல் நடிக்க தயாராக இருப்பதாக கூறுகிறாராம்.
நடிகையின் இந்த யுக்தி மற்ற கோலிவுட் நடிகைகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாம். மேலும் சம்பள விஷயத்திலும் அந்த நடிகை பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லையாம். கொடுத்த சம்பளத்தை வாங்கிக்கொண்டு நடிக்க சம்மதிக்கிறாராம். இந்த யுக்தி நடிகைக்கு கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கனும்.
அக்கட தேசத்தில் இருந்து கோலிவுட் பக்கம் வந்துள்ள இளம் நடிகை ஒருவர், கவர்ச்சி படங்களை அனுப்பி நடிக்க சான்ஸ் கேட்டு வருகிறாராம்.
தயாரிப்பாளர்களுக்கு தனது புகைப்படங்கள் அடங்கிய ஆல்பத்தை அனுப்பி நடிகைகள் வாய்ப்பு கேட்பது முன்னொரு காலத்தில் நடந்து வந்ததாம். அந்த வழக்கம் நாளடைவில் மாறி, நடிகைகள் நேரில் சென்று ‘சான்ஸ்’ கேட்பது நடைமுறையானது. சமீபகாலமாக மும்பையில் இருந்து வந்து சென்னையில் முகாமிட்டுள்ள சில நடிகைகள் புகைப்படங்களை அனுப்பி வாய்ப்பு வேட்டையாடும் வழக்கம் மீண்டும் வந்திருக்கிறதாம்.
இப்படி பழைய நடைமுறையை பின்பற்றுவதில் இளம் நடிகை ஒருவர் முதல் இடத்தில் இருக்கிறாராம். இவர் படுகவர்ச்சியாக தன்னை போட்டோ எடுத்து பட நிறுவனங்களுக்கு அனுப்பி வருவதாக பேசப்படுகிறது. வம்பு நடிகருக்கு ஜோடியாக நடித்துள்ள அந்த நடிகையின் இந்த முடிவு கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறதாம்.
பிரபல நடிகராக இருப்பவரை பார்த்து பல நடிகைகள் தெறித்து ஓடுகிறார்களாம்.
சமீபகாலமாக நடிகைகள் பலரும் சீனியர் நடிகர்களுடன் நடிப்பதை தவிர்த்து வருகிறார்களாம். அதற்கு காரணம் படப்பிடிப்பு தளங்களில் அவர்கள் மிகவும் கடுமையான முறையில் நடந்து கொள்வதுதான் என செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளதாம்.
அப்படி தெலுங்கில் 60 வயதாகியும் நாயகனாக நடித்து வருபவர் கோபத்தை கட்டுப்படுத்த முடியாதவராம். யாராவது படப்பிடிப்பு தளத்தில் தப்பு செய்து விட்டால் உடனே அந்த இடத்திலேயே அவரை அடித்து விடுவாராம். மேலும் கடுமையான சொற்களில் திட்டி நார் நாராய் கிழித்து விடுவாராம்.
இது அங்கிருக்கும் தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல. சில சமயம் நடிகர் நடிகைகளுக்கும் கூட அந்த மாதிரி நடந்து இருக்கிறதாம். இதனைப்பற்றி தெலுங்கு சினிமாவில் பரப்பி விட, தற்போது நடிகர் படங்களில் நடிக்க நடிகைகள் தயங்கி வருகிறார்களாம்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் பிரபல இயக்குனர் ஒருவரை கடுப்பாகி இருக்கிறாராம்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜெயமான நடிகர், பல படங்கள் கைவசம் வைத்திருக்கிறாராம். கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் நடிக்கிறேன் நடிக்கிறேன் என்று கூறி வருகிறாராம்.
இப்படி பிரபல இயக்குனர் தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டாராம். கால்ஷீட் கேட்டால் தருகிறேன் என்று கூறி காலத்தை கடத்தி விட்டாராம். இதனால் கடுப்பான இயக்குனர் வேற நடிகரை ஒப்பந்தம் செய்யலாம் என்று முடிவு செய்து இருக்கிறாராம்.
தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் நடித்த நடிகை, டாட்டூ ஒன்றை நெஞ்சில் குத்தி பிரச்சனையில் சிக்கி இருக்கிறாராம்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என பல மொழிகளில் நடித்த நடிகை, தன்னுடைய மார்பின் மேல் பகுதியில் ஒரு டாட்டூவை குத்தி இருக்கிறாராம். இந்த டாட்டூ குறிப்பிட்ட மதத்தை இழிவு படுத்தும்படி இருப்பதாக சர்ச்சைகள் எழுந்து வருகிறதாம். மேலும் அந்த மதத்தை சார்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்களாம்.
மிகவும் ரசித்து தன் உடம்பில் பதித்துக்கொண்ட நடிகை தனது சமூக வலைத்தள பக்கத்தில் அந்த டாட்டூவை காட்டியபடி போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டுள்ளாராம். இந்த புகைப்படத்திற்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகிறார்களாம். ஏன் டாட்டூ குத்தினோம் என்று நடிகை வருத்தப்பட்டு வருகிறாராம்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பல கோடி ரூபாயில் வீடு வாங்கி இருக்கிறாராம்.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருக்கிறாராம். இவருடைய அரசியல் முடிவுக்கு பலரும் காத்துக் கொண்டிருக்கிறார்களாம்.
இந்நிலையில் இவருடைய மருமகன், மாமனார் இருக்கும் வீட்டின் அருகே பல கோடி ரூபாயில் வீடு ஒன்றை வாங்கி இருக்கிறாராம். உச்ச நடிகர் அரசியலுக்கு வந்துவிட்டால், அவருடனே மருமகனும் பயணிப்பார் என்பதற்காக மருமகனுக்கு பக்கத்திலேயே வீடு வாங்கி கொடுத்து இருப்பதாக பலரும் பேசி வருகிறார்களாம்.






