என் மலர்tooltip icon

    கிசுகிசு

    போராட்டம் செய்து முதலாளி வீட்டுக்கு சென்று பிரபலமான நடிகை வாய்ப்புக்காக ரூட்டை மாற்றி இருக்கிறாராம்.
    போராட்டம் செய்து முதலாளி வீட்டுக்கு சென்று சர்ச்சைகளில் சிக்கிய நடிகைக்கு எதிர் பார்த்த வாய்ப்புகள் கிடைக்கவில்லையாம். இதனால் பல போட்டோக்களை எடுத்து வெளியிட்டாராம்.

    ஆனால் எந்த பலனும் கிடைக்கவில்லையாம். இதனால் தனது முடிவை மாற்றிக் கொண்டு கவர்ச்சிக்கு மாறி புதிய புகைப்படங்களை எடுத்திருக்கிறாராம். அந்த புகைப்படங்களை வெளியிட்டு தற்போது வாய்ப்புக்காக காத்திருக்கிறாராம்.
    டோலிவுட், கோலிவுட் என தென்னிந்திய மொழிகளில் கொடிகட்டிப்பறக்கும் முன்னணி நடிகை ஒருவர் சொத்துக்களாக வாங்கி குவித்து வருகிறாராம்.
    தென்னிந்திய கதாநாயகிகளில் அதிக சம்பளம் வாங்கி வரும் நடிகை ஒருவர் வாங்குகிற சம்பளத்தை எல்லாம் புத்திசாலித்தனமாக ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து வருகிறாராம். சென்னை, ஐதராபாத், பெங்களூரு ஆகிய 3 மாநிலங்களிலும் சொத்துக்களாக வாங்கி குவித்து வருகிறாராம் அந்த நடிகை.

    இதுமட்டுமின்றி வருமான வரி கணக்கு காட்டுவதற்காக சொந்த பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் தொடங்கியுள்ளாராம். வயதாகி வருவதால் நடிகை இவ்வாறு வேறு தொழில்களில் முதலீடு செய்து வருகிறாராம். படவாய்ப்பு இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் பிசினஸ் கைகொடுக்கும் என்ற நோக்கத்தில் அவர் இப்படி செய்து வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது
    தென்னிந்தியாவில் வளர்ந்து வரும் நடிகை ஒருவர், வயதான நடிகருடன் நடிக்க கோடிக்கணக்கில் சம்பளம் கேட்கிறாராம்.
    தமிழ்நாட்டை சேர்ந்த அழகிய நடிகை, அக்கட தேசத்தில் அறிமுகமாகி பின்னர் தமிழுக்கு வந்தாராம். இங்கு படங்கள் கைகொடுக்காததால் டோலிவுட் பக்கம் சென்ற அந்த நடிகை அங்கு பிசியான நடிகையாகிவிட்டாராம். தற்போது அவருக்கு ஒரு ரீமேக் பட வாய்ப்பு தேடி வந்துள்ளதாம்.

    அந்த படத்தில் வயதான நடிகருக்கு ஜோடியாக நடிக்க அவரை அணுகினார்களாம். நடிக்க ஓகே சொன்ன அந்த நடிகை ரூ.2 கோடி சம்பளம் கேட்டு அதிர்ச்சி கொடுத்தாராம். கேட்ட சம்பளத்தை கொடுத்து அவரை ஒப்பந்தம் செய்வதா? அல்லது வேறு கதாநாயகியை தேர்வு செய்வதா? என்று படக்குழுவினர் ஆலோசிக்கிறார்களாம். 
    இயக்குனர் ஒருவர் முன்னணி நடிகரை பற்றி பேசி அவரது ரசிகர்களிடம் வசமா மாட்டிக் கொண்டாராம்.
    தமிழ் சினிமாவில் இயக்குனராக இருந்து நடிகராக மாறி தற்போது அரசியல்வாதியாக வலம் வந்து கொண்டிருக்கிறாராம். இவர் அடிக்கடி எதாவது பேசி சர்ச்சையில் சிக்கி வருவாராம். 

    தற்போது முன்னணி நடிகர் ஒருவரை பற்றி பேசி இருக்கிறாராம். இதற்கு அவரது ரசிகர்கள் இயக்குனரை பற்றி சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்து விட்டார்களாம். மேலும் இயக்குனரை மிரட்டி போஸ்டர் ஒட்டி விட்டார்களாம். இதனால் கருத்து சொல்லி வசமா மாட்டிக் கொண்டோம் என்று இயக்குனர் வருத்தப்பட்டு வருகிறாராம்.
    தமிழ் தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபலமானவர் நடிகை தற்போது பயத்தில் இருக்கிறாராம்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை தற்போது மற்ற மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறாராம். இவர் சமீபத்தில் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டாராம்.

    அதன்பின் தேனிலவுக்காக தீவுக்கு சென்றாராம். அங்கு ஜாலியாக தேனிலவை கொண்டாடிவிட்டு தற்போது வீடு திரும்பி இருக்கிறாராம். இந்நிலையில் சமீபத்தில் தீவுக்கு சென்று வந்த நடிகை ஒருவருக்கு நோய் தொற்று ஏற்பட்ட தாம். இதனால் தனக்கும் வந்துவிடுமோ என்ற பயத்தில் இருக்கிறாராம் வெளியில் செல்ல தயங்குகிறாராம்.
    மலையாள சினிமா மூலமாக அறிமுகமாகி சிறப்பாக நடித்து வரும் நடிகை ஒருவர், இளம் நடிகருடன் லிவிங் டுகெதரில் இருக்கிறாராம்.
    மலையாளத்தில் வெளியான படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் அந்த நடிகை. அந்த படத்தின் அபரிமிதமான வெற்றியால் மூன்று நாயகிகளுமே பிரபலமானார்கள். மலையாளம் அல்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்து வருகின்றனர்.

    அதில் ஒருவரான அந்த நடிகை இப்போது தெலுங்கு படங்களில் அதிகமாக நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் ஆந்திராவிலேயே தங்கியும் உள்ளார். இதற்கெல்லாம் காரணம் அங்குள்ள ஒரு இளம் நடிகரோடு லிவிங் டுகெதரில் இருப்பதுதானாம். இவருக்காக அந்த நடிகர் தனி வீடு ஒன்றே வாங்கிக் கொடுத்துள்ளாராம்.
    தமிழ் தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபலமான நடிகையின் ஆர்வத்தை இயக்குனர்கள் மறுத்து வருகிறார்களாம்.
    தமிழ், தெலுங்கு என 2 மொழிகளிலும் முன்னணி நடிகையாக பிசியாக இருந்த யோகா நடிகை, வரலாற்று படத்தின் 2 வது படத்துக்கு பிறகு தேர்ந்தெடுத்தே நடித்தாராம். உடல் எடையை குறைத்த பிறகு ஒரு படத்தில் மட்டும் நடித்தாராம்.

    இதனால் பல நடிகைகள் அவர் இடத்துக்கு போட்டியாக வந்துவிட்டார்களாம். இருந்தாலும் இழந்ததை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வரும் ஆண்டு அதிக படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளாராம். இதற்காக நிறைய கதைகள் கேட்டுவருகிறாராம். 

    ஆனால், இயக்குனர்களோ நடிகைக்கு கதை சொல்ல மறுக்கிறார்களாம். நடிகைக்கு வயதாகிவிட்டது என்று ஓரம்கட்டுகிறார்களாம்.
    துறுதுறுப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்த நான்கெழுத்து நடிகை ஒருவர், பட வாய்ப்பை பெற கவர்ச்சியில் இறங்கி உள்ளாராம்.
    நான்கெழுத்து நடிகை ஒருவர், சினிமாவில் அறிமுகமான போது துறுதுறுப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தாராம். நாளடைவில் அவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து பிளாப் ஆனதால், பட வாய்ப்பும் குறையத் தொடங்கியது. அதுவரை ஹீரோயினாக நடித்துவந்தவர் பின்னர் சின்ன சின்ன கதாபாத்திரங்களிலும் நடிக்க தொடங்கினாராம்.

    தற்போது ஹீரோயின் வாய்ப்பை மீண்டும் பெற போராடி வரும் நடிகை கவர்ச்சி ரூட்டுக்கு மாறி இருக்கிறாராம். சமீபத்தில் வெளியான குறும்படம் ஒன்றுக்காக அந்த நடிகை கவர்ச்சியில் தாராளம் காட்டியுள்ளாராம். படங்களில் கூட அவ்வளவு கவர்ச்சியாக நடிக்காதவர், குறும்படத்திற்காக அப்படி நடித்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம். 
    பிரபல நடிகர் ஒருவர், தன்னுடன் நடித்த நடிகை ஒருவரை ஏமாற்றி வருகிறாராம்.
    தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனரின் மகனுக்கு ஜோடியாக நடித்த நடிகை, பட வாய்ப்பு இல்லாததால் உடல் எடை போட்டு குண்டாக மாறினாராம். இந்த சமயத்தில் நடிகை பெரிய முதலாளி வீட்டுக்கு செல்லும் வாய்ப்பு வந்ததாம். இதை ஏற்றுக் கொண்டு வீட்டுக்குள் சென்ற நடிகை, மிகவும் பிரபலமானார் ராம். 

    வீட்டை விட்டு வெளியே வந்த நடிகை, மிகவும் ஒல்லியாகவும் அழகாகவும் மாறினார். இதனால், இயக்குனரின் மகனுக்கு போன் செய்து மீண்டும் நாம் நடிக்கலாம் என்று வாய்ப்பு கேட்டாராம். நடிகரும் தருகிறேன் என்று கூறினாராம். 

    இதை நம்பிய நடிகை, நடிகரின் அழைப்புக்காக காத்து இருக்கிறாராம். ஆனால், நடிகர் வாய்ப்பு தராமல் ஏமாற்றி வருகிறாராம்.
    நடிகை வெளியிட்டு வரும் புகைப்படங்களை நெட்டிசன்கள் தொடர்ந்து கலாய்த்து வந்தாலும் அதை அவர் பொருட்படுத்தாமல் இருக்கிறாராம்.
    தமிழகத்தில் நடந்த போராட்டத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர், பெரிய முதலாளி வீட்டு சீசனில் கலந்துகொண்டாராம்.

    ஆரம்பத்தில் ரசிகர்களின் ஆதரவுடன் வீட்டிற்குள் சென்ற இவர் அங்கு செய்த சில மோசமான நடவடிக்கைகளால் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதிக்க ஆரம்பித்தாராம். அன்றிலிருந்து இன்றுவரை நெட்டிசன்கள் அவர் என்ன செய்தாலும் மோசமாக கலாய்த்து வருகிறார்களாம்.

    ஆனால் அதனை சிறுதும் பொருட்படுத்தாத நடிகை, தொலைக்காட்சி நிகழ்ச்சி, படங்கள், விளம்பரங்கள் என பிஸியாக உள்ளாராம்.
    பல படங்களில் வில்லன் வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகர் தற்போது திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம்.
    தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு ஹிட் திரைப்படங்களில் வில்லனாக நடித்த நடிகர், கொரோனா ஊரடங்கின் போது வேலையில்லாமல், பசி பட்டினியால் திண்டாடிய பலருக்கு உதவிகளை செய்தாராம்.

    அவரது உதவி நடவடிக்கைக்காக அவருக்கு பலரும் பாராட்டி பல விருதுகளை கொடுத்தார்களாம். இந்நிலையில், இனிமேல் திரைப்படங்களில் வில்லனாக நடிக்க மாட்டேன் எனவும், ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என அவர் அறிவித்துள்ளாராம்.
    பிரபல நடிகரிடம் ரூபாய் 20 கோடி வரை சம்பளம் பேசியும் படத்தில் நடிக்க மௌனம் சாதித்து வருகிறாராம்.
    பிரமாண்ட படத்தில் நடித்து பிரபலமான தெலுங்கு நடிகர், தற்போது அதிக பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறாராம். இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க வைக்க பிரபல மலையாள ஹீரோ ஒருவரிடம் பேசி இருக்கிறார்களாம். 

    இதற்காக அவருக்கு சம்பளமாக ரூ. 20 கோடி வரையில் பேசப்பட்டுள்ளதாம். ஆனால், அவர் இதுவரை ஏதும் சொல்லவில்லையாம். தெலுங்கு நடிகருடன் நடிக்க அவருக்கு விருப்பம் இல்லையாம். அதனால் தான் இதுவரை சம்மதம் கொடுக்க வில்லையாம்.
    ×