என் மலர்tooltip icon

    கிசுகிசு

    இளம் நடிகை ஒருவர் மற்றவர்களிடம் பந்தா காண்பித்து மொக்கை வாங்கியிருக்கிறாராம்.
    தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் சமீபத்தில் பெரிய ஹீரோ படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனாராம். ஒப்பந்தம் ஆனதிலிருந்து நெருங்கிய வட்டாரம் மற்றும் தயாரிப்பாளர்கள் இயக்குனரிடம் பெரிய நடிகை அளவிற்கு பந்தா காண்பித்து வந்தாராம்.

    படம் வெளியான பிறகு நடிகைக்கு படத்தில் பெரிய வேலை ஒன்றும் இல்லையாம். கதாபாத்திரமும் பெரியதாக இல்லையாம். இதைப்பார்த்த பலரும் நடிகையை கிண்டல் செய்து வருகிறார்களாம்.
    தமிழ் தெலுங்கு மொழிகளில் பிரபலமாக இருக்கும் நடிகை, அதிக ரசிகர்களை கொண்ட நடிகர் பற்றி பேசி சர்ச்சையில் சிக்கி இருக்கிறாராம்.
    கன்னட நடிகர் ஒருவர், தமிழ், தெலுங்கு மொழி ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்து இருக்கிறாராம். இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறதாம்.

     அப்படி அனைவரும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் நடிகரை, தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் பிரபலமாக வலம் வருகின்ற நடிகை மிகவும் தரக்குறைவாக பேசி இருக்கிறாராம். இது பலருக்கும் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம். நடிகரின் ரசிகர்கள் நடிகையை வைத்து கிண்டல் செய்து வருகிறார்களாம்.
    இளம் நடிகை ஒருவர் பட வாய்ப்பை கைப்பற்றுவதற்காக புதிய யுக்தியை கையாண்டு வருகிறாராம்.
    தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு பட வாய்ப்பு கிடைப்பது மிகவும் கஷ்டமான விஷயமாக இருக்கிறதாம். இதற்காக பல நடிகைகள் போட்டா போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறார்களாம். தற்போது புதியதாக அறிமுகமாகியிருக்கும் இளம் நடிகை ஒருவர் பட வாய்ப்புக்காக புதிய யுக்தியை கையாண்டு வருகிறாராம்.

    தமிழ் சினிமாவில் இருக்கும் முக்கியமானவர்களை தன் வசம்படுத்தி இருக்கிறாராம். மேலும் சமூக வலைத்தளத்தில் இருப்பவர்கள், தயாரிப்பாளர்களுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் அனைவரையும் நேரடியாக தொடர்பு கொண்டு கைக்குள் போட்டு வைத்திருக்கிறாராம். இதனால், நடிகைக்கு தற்போது வாய்ப்புகள் அதிகரித்து வருகிறதாம்.
    அக்கட தேசத்தை சேர்ந்த இளம் நடிகை ஒருவர் ஒரு படம் ஹிட்டானதும் ஒரு கோடி வரை சம்பளம் கேட்கிறாராம்.
    இளம் நடிகை ஒருவர் சீனியர் ஹீரோவுக்கு ஜோடியாக நடித்த படம் ஒன்று பிளாக் பஸ்டர் ஹிட் ஆனதாம். இந்த படத்தின் மூலம் அந்த இளம் ஹீரோயினுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறதாம். இதனால் அம்மணி தன் சம்பளத்தையும் கிடுகிடுவென உயர்த்தி விட்டாராம். ஒரு கோடி வரை கேட்கிறாராம்.

    ஒரே படத்தில் இப்படியா என அவர் வயது நடிகைகள் வாயடைத்து போய் உள்ளார்களாம். அதேபோல் அந்த நடிகை கதை தேர்விலும் கவனமாக இருக்கிறாராம். கமர்ஷியல் படங்கள் என்று சொன்னால், வேண்டாம் என ஒரே வார்த்தையில் சொல்லி அனுப்பி விடுகிறாராம்.
    அக்கட தேசத்தை சேர்ந்த இளம் நடிகர் ஒருவர், தன்னை விட வயதான நடிகையை காதலித்து வருகிறாராம்.
    பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என பல்வேறு மொழி படங்களை தயாரித்துள்ள பிரபல தயாரிப்பாளரின் மகனும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறாராம். பல்வேறு ஹிட் படங்களை கொடுத்த அவர் ஒரு நடிகையை காதலிக்கிறாராம். நடிகர் - நடிகைகளிடையே காதல் ஏற்படுவது சகஜம் தானே என நீங்கள் எண்ணலாம்... ஆனால் அந்த நடிகர் காதலிப்பது ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தான நடிகையாம்.

    அந்த நடிகரை விட 12 வயது மூத்தவராம் அந்த நடிகை. வயதான நடிகையை மகன் காதலிப்பது அந்த நடிகரின் தந்தைக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். இதனால் மகனுடன் பேசுவதே இல்லையாம். ஆனால் அதை பற்றியெல்லாம் கவலைப்படாத அந்த நடிகர், வயதான நடிகையை உருகி உருகி காதலித்து வருகிறாராம்.
    தெலுங்கில் நடித்து பிரபலமான நடிகை ஒருவர் சொகுசு கார் ஒன்றை வாங்கி மற்ற நடிகைகளை பொறாமை பட வைத்திருக்கிறாராம்.
    தெலுங்கில் ஒரு ஹீரோவுடன் நடித்து மிகவும் பிரபலமான நடிகைக்கு அங்கு இரண்டு மூன்று பட வாய்ப்புகள் கிடைத்ததாம். அதன்பிறகு தமிழில் ஒப்பந்தமான நடிகைக்கு இன்னும் திரைப்படம் வெளியாகவில்லையாம். இந்நிலையில் நடிகைக்கு பாலிவுட்டில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறதாம்.

    இதில் நடிக்க ஒப்பந்தம் ஆனவுடனே சொகுசு கார் ஒன்றை வாங்கி இருக்கிறாராம். இதைப்பார்த்த மற்ற இளம் நடிகைகள், நடிகையின் வளர்ச்சியை பார்த்து பொறாமை பட்டு வருகிறார்களாம். மாறாக பாலிவுட்டில் படம் வெற்றி அடைந்து விட்டால் நடிகையை கையில் பிடிக்க முடியாது என்று பலரும் பேசி வருகிறார்களாம்.
    பிரபல நடிகை ஒருவர் நல்லது செய்தும் வாய்ப்பில்லை என்று மற்றவர்களிடம் புலம்பி வருகிறாராம்.
    தமிழ்,தெலுங்கு, கன்னட மொழி படங்களில் நடித்து பிரபலமானவர், தொடர்ந்து தெலுங்கில் பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தாராம். அதன் பிறகு நடிகைக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லையாம். 

    ஊரடங்கில் பல நல்ல விஷயங்கள் செய்து வந்தாராம். இதை கவனித்த பலரும் நடிகையை பாராட்டினார்களாம். மகிழ்ச்சி அடைந்த நடிகை தனக்கு வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்தாராம். ஆனால் இதுவரை எந்த வாய்ப்பும் கிடைக்க வில்லையாம். இதனால் நடிகையை நல்லது செய்தும் வாய்ப்பில்லை என்று புலம்பி வருகிறாராம். மேலும் நடிகை ரூட்டை மாற்றி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறாராம்.
    தமிழ் தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபல நடிகையாக இருப்பவர் சம்பளத்தை குறைக்க சொன்னதால் படத்திலிருந்து விலகி விட்டாராம்.
    வரலாற்றுப் படங்களில் நடித்து பிரபலமான தமிழ், தெலுங்கு பட நடிகை, ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமானாராம். கொரோனா வைரஸ் பிரச்சினைக்கு முன்பாக ஒத்துக் கொண்டதால் அதிக சம்பளம் பேசி இருந்தாராம்.

    இப்போது நடிகைகள் பலரும் சம்பளத்தை குறைத்துக் கொண்டதால் நடிகையும் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் கூறினார்களாம். இதற்கு மறுப்பு தெரிவித்த நடிகை அந்த படத்திலிருந்து விலகி விட்டாராம். 
    படப்பிடிப்பு தளத்தில் வாரிசு நடிகை ஒருவர் அடாவடி செய்வதால், தயாரிப்பாளர்கள் சமாளிக்க முடியாம தவிக்கிறாங்களாம்.
    சில ஆண்டுகள் ஓய்வில் இருந்த வாரிசு நடிகைக்கு பெரிய வாய்ப்புகள் எதுவும் இல்லையாம். ஆனால் கிடைக்கிற வாய்ப்பில் கூட அவரது அடாவடி தாங்க முடியவில்லையாம். 

    எந்த படப்பிடிப்புக்கு போனாலும், கேரவனுக்குள் யாரையும் விடாதே, பத்து பேருக்கு மேல கூடாதே... பத்து நிமிடத்துக்கு ஒரு முறை சானிட்டரி தெளி, காஸ்ட்லியான மாஸ் கொடு என்று ஏகப்பட்ட கெடுபிடி பண்றாராம். 

    தங்குற ஓட்டல் அறையில் சின்ன குறை தெரிந்தாலும் உடனே கோவிச்சுக்கிட்டு கிளம்பிடுறாராம். இதனால தயாரிப்பாளர்கள் வாரிசு நடிகையை சமாளிக்க முடியாம தவிக்கிறாங்களாம்.
    முன்னணி நடிகர் ஒருவரின் படத்தில் நடித்துள்ள தேசிய விருது வென்ற இயக்குனர் ஒருவர், போஸ்டரில் தன் பெயரையும் போட சொல்லி நச்சரிக்கிறாராம்.
    தேசிய விருது வென்ற இயக்குனர் ஒருவர், தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறாராம். அந்த வகையில் அவர் முன்னணி நடிகர் ஒருவரின் படத்தில் முக்கியமானக் கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளாராம். இந்த கதாபாத்திரம் ஹீரோவுக்கு இணையானக் கதாபாத்திரம் என சொல்லப்படுகிறது. 

    அதனால் படத்தின் டைட்டில் கார்ட் மற்றும் போஸ்டர்களில் ஹீரோவின் பெயரை போடுவது போல தனது பெயரையும் போட வேண்டும் என பிடிவாதம் பிடிக்கிறாராம். அவரின் இந்த செயலால் படக்குழுவினர் என்ன செய்வது எனத் தெரியாமல் முழிக்கிறார்களாம்.
    பல படங்களில் நடித்து பிரபலமான நடிகை திருமணமானதை ரகசியமாக வைத்திருந்திருக்கிறாராம்.
    யூனிவர்சல் நாயகன் படத்தில் அடுத்தடுத்து நடித்து வந்த நடிகை, மற்ற நடிகர்கள் படங்களில் நடிக்க வாய்ப்பு வரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தாராம். ஆனால் நடிகைக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை.

    இந்த நாள் அமெரிக்காவிற்கு சென்று விட்டாராம். தற்போது நடிகைக்கு குழந்தை பிறந்து இருக்கிறதாம். நடிகைக்கு திருமணம் ஆனது இதுவரைக்கும் யாருக்குமே தெரியாதாம். நடிகையும் சமூகவலைத்தளங்கள் உள்ளிட்ட எதிலேயும் பதிவு செய்யவில்லையாம்.

    தற்போது குழந்தை பிறந்ததை அவரது கணவர் மூலமாக அனைவருக்கும் தெரிய வந்திருக்கிறதாம். இதை அறிந்த பலரும் நடிகை ஏன் திருமணமானதை மறைத்து வந்தார் என்று பேசி வருகிறார்களாம்.
    பிரபல நடிகையாக இருப்பவரின் சம்பளத்தை கேட்டு மற்ற நடிகைகள் வாயடைத்துப்போய் இருக்கிறார்களாம்.
    தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமாக இருக்கும் நடிகை, தற்போது தமிழிலும் நடித்து வருகிறாராம். மேலும் பாலிவுட்டில் அறிமுகமான முதல் படம் ரிலீஸ் ஆகாத நிலையில், அடுத்த வாய்ப்பு அங்கு கிடைத்திருக்கிறதாம்.

    அதற்காக அவருக்கான சம்பளம் 6 கோடி என்று கூறுகிறார்களாம். இன்னும் முதல் படம் அங்கு ரிலீஸ் ஆகாத நிலையில் அவர், இப்போதுகூட அறிமுக நடிகைதான். அவருக்கு இவ்வளவு சம்பளம் ஓவராக இருக்கே? என்று , மற்ற நடிகைகள் வாயடைத்து போயிருக்கிறார்களாம்.
    ×