என் மலர்tooltip icon

    கிசுகிசு

    தொகுப்பாளர் மற்றும் தற்போது நடிகராக இருப்பவர் வெளியில் வர பயப்படுகிறாராம்.
    சின்னத்திரை நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்தவர் தற்போது நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறாராம். இவர் தற்போது வெளியில் வர பயந்து கொண்டு இருக்கிறாராம். 

    காரணம் விசாரித்தால் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட சின்னத்திரை நடிகைக்கும், இவருக்கும் தொடர்பு இருப்பதாக செய்திகள் வெளியானதாம். இதில் இருந்துதான் நடிகர் வெளியில் வர பயப்படு கிறாராம். வெளியில் சென்றால் இறந்த நடிகையை பற்றி கேட்பார்கள் என்று பயப்படு கிறாராம். 
    தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகை ஒருவர், ரூ.10 கோடி சம்பளம் கொடுத்தும் நடிக்க மறுத்துவிட்டாராம்.
    தென்னிந்திய திரையுலகில் கொடிகட்டிப் பறக்கும் நம்பர் நடிகை ஒருவர், ஒரு படத்துக்கு ரூ.5 கோடியில் இருந்து ரூ.6 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம். அதிக சம்பளம் கொடுத்தால், அவர் நடிக்க சம்மதிப்பார் என்ற நம்பிக்கையுடன் ஒரு இந்தி பட தயாரிப்பாளர் அந்த நடிகையை அணுகினாராம். 

    தனது வெப் தொடரில் நடித்து கொடுத்தால், ரூ.10 கோடி சம்பளம் தருவதாக கூறினாராம். அந்த தொடரின் கதைப்படி, நெருக்கமான காதல் காட்சிகளும், கட்டிப்பிடிக்கும் காட்சிகளும் நிறைய இருந்ததால், அந்த நடிகை அதில் நடிக்க மறுத்து விட்டாராம். இது அந்த தயாரிப்பாளருக்கு பெரும் ஏமாற்றத்தை தந்ததாம்.
    பிரபல நடிகர் ஒருவர் தான் நடிக்கும் புதிய படத்தில் நடிப்பதற்காக ரூபாய் 50 கோடி சம்பளமாக கொடுக்க வேண்டும் என்று கேட்டு வருகிறாராம்.
    இந்தி நடிகர், நடிகைகள் அதிக சம்பளம் வாங்குகிறார்களாம். ஒரு படம் வெற்றி பெற்றால் அடுத்த படத்தில் பல மடங்கு தொகை கேட்கின்றனர். இது தவிர படங்களின் லாபத்தில் பங்கு, விளம்பர படங்கள் என்றும் நிறைய சம்பாதிக்கிறார்களாம். இந்த நிலையில் இந்தி நடிகர் ஒருவர் சம்பளத்தை ரூ.50 கோடியாக உயர்த்தி உள்ளாராம். 

    இவர் பிரபல இந்தி நடிகையின் கணவர். இதுவரை நடித்து வந்த படங்களுக்கு ரூ.30 கோடி, 35 கோடி என்று சம்பளம் வாங்கிய அவர் தற்போது புதிய இந்தி படத்தில் நடிக்க ரூ.50 கோடி சம்பளம் கேட்டுள்ளாராம். 
    இளம் நடிகையின் வாய்ப்பை மற்ற நடிகை ஒருவர் தட்டிப் பறிக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறாராம்.
    தமிழ் சினிமாவிற்கு வந்த உடனே அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்ட ராசியான நடிகை, உச்ச நடிகர்களுடன் ஜோடி போட வேண்டும் என்று ஆசையுடன் இருந்து வருகிறாராம். இந்நிலையில் தெலுங்கில் பட வாய்ப்பு கிடைத்தவுடன் அங்கு சென்று விட்டாராம்.

    இதற்கிடையில் இளம் நடிகை ஒருவர் அடுத்து அடுத்து இரண்டு பெரிய ஹீரோக்களுடன் நடிக்க ஒப்பந்தமாகி விட்டாராம். இதைக்கண்ட நடிகை, இளம் நடிகையின் வளர்ச்சியை தடுக்க முயற்சி செய்து வருகிறாராம். இளம் நடிகைக்கு கிடைத்த வாய்ப்பை தட்டிப் பறிக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறாராம் நடிகை.
    தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழி படங்களில் நடித்த நடிகை கெட்ட பெயர் எடுத்து வாய்ப்பை இழந்து இருக்கிறாராம்.
    கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்துவிட்டு, தமிழுக்கு வந்த நடிகை, தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்து வந்தாராம். படப்பிடிப்பு தளங்களில் நடிகை சோம்பேறி தனமாக இருந்தால், அவரைப் பற்றி சோம்பேறி நடிகை என்று பெயர் பரவியதாம்.

    இதனால் நடிகைக்கு பல பட வாய்ப்புகள் குறைந்ததாம். இழந்த வாய்ப்புகளை பிடிக்க தற்போது தீவிர முயற்சியில் இறங்கி இருக்கிறாராம் நடிகை. இதற்காக போட்டோ ஷுட் நடத்தி மேனேஜர் மூலமாக வாய்ப்பு தேடி வருகிறாராம்.
    படம் தோல்வி அடைந்ததால் முன்னணி நடிகை ஒருவர் அதிரடி முடிவு ஒன்றை எடுத்து இருக்கிறாராம்.
    தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரபலமான நடிகை, பிரம்மாண்டமான படம், வரலாற்று படம், கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்திருக்கிறார். பல படங்களில் கஷ்டப்பட்டு நடித்து பெயர் பெற்ற நடிகை, சமீபத்தில் ஒரு படத்தில் நடித்திருந்தாராம்.

    இந்த படம் சமீபத்தில் வெளியாகி நெகட்டிவ்வான விமர்சனங்களை பெற்றதாம். இது நடிகைக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறதாம். மேலும் படம் நடிக்கும் போது நல்ல பெயர் கிடைக்கும் என்று எதிர்பார்த்தாராம். ஆனால், வெளியான பிறகு இருக்கிற பெயரும் கெட்டு போய்விட்டதாக புலம்புகிறாராம். இதனால் தனது முடிவை மாற்றி இருக்கிறாராம்.

    இனிமேல் கதை கேட்க புது குழு ஒன்றை உருவாக்கி இருக்கிறாராம். அவர்கள் கேட்ட பிறகுதான் அந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்வாராம்.

    இளம் நடிகர் ஒருவரின் சம்பளத்தை கேட்டு முன்னணி நடிகர்கள் பலர் அதிர்ச்சி அடைந்த இருக்கிறார்களாம்.
    தமிழில் வெளியான டப்பிங் படம் மூலம் பல ரசிகர்களைக் கவர்ந்த நடிகர், இப்போது அந்த படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்திருக்கிறாராம். இதற்காக நடிகருக்கு 30 கோடிக்கு மேல் சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறதாம்.

    இது அந்த மாநிலத்தில் இருக்கும் முன்னணி நடிகர்களை விட அதிக சம்பளமாம். நடிகரின் சம்பளத்தை கேட்ட சக நடிகர்கள் மற்றும் முன்னணி நடிகர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்களாம்.

    இளம் இயக்குனர் ஒருவரின் செயலால் முன்னணி நடிகர் ஒருவர் கடுப்பாகி இருக்கிறாராம்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தற்போது இளம் இயக்குனருடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகிறாராம். மிகவும் எதிர்பார்க்கும் இந்த படத்தில் நடிகர் பல வேடங்களில் நடித்து வருகிறாராம்.

    தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் இன்னும் முடியாததால் நடிகர் கோபமடைந்து இருக்கிறாராம். சொன்ன நாட்களை விட அதிக நாட்களாக இயக்குனர் படத்தை இயக்கி வருகிறாராம். இதனால் கடுப்பான நடிகர் படப்பிடிப்பிற்கு செல்லாமல் இருக்கிறாராம்.
    சின்னத்திரை நடிகை ஒருவர், பெரிய திரைக்கு வருவதற்காக ஆசை பட்டு நிறைய விஷயங்கள் செய்து வருகிறாராம்.
    அந்தக் காலத்தில் சினிமாவில் ரிட்டையர் ஆன நடிகைகள் எல்லாம் சீரியலுக்கு வருவது வழக்கம். ஆனால் தற்போது இது தலைகீழாக மாறி சீரியலில் நடிப்பவர்கள் சினிமாவிற்குள் நுழைகின்றனர்.

    மேலும் சினிமா வாய்ப்பை எப்படியாவது பெற வேண்டும் என்ற எண்ணத்தில் நடிகைகள் சிலர் தங்களது கவர்ச்சியான புகைப்படத்தை தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டு இருக்கிறார்களாம்.

    அந்தவகையில் சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை ஒருவர் கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறாராம். தற்போது பாத்டப்பில் தனது உடலை நுரையால் மறைத்து செம ஹாட்டான போஸ் கொடுத்திருக்கும் போட்டோவை சோசியல் மீடியாவில் பதிவிட்டிருக்கிறாராம் நடிகை.
    ஒரு சில படங்களில் நடித்த நடிகைக்கு தமிழ் மொழியில் வாய்ப்பு இல்லாததால் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம்.
    தமிழில் முன்னணி நடிகருக்கு ஜோடி போட்டு நடித்த கருப்பு நடிகைக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வரும் என்று எதிர் பார்த்தாராம். ஆனால் எந்த பட வாய்ப்பும் கிடைக்கவில்லையாம். கவர்ச்சி போட்டோ சூட் நடத்தி வெளியிட்டு பார்த்தாராம். அதுவும் பலனளிக்கவில்லையாம்.

    இதனால் நடிகை அதிரடி முடிவு ஒன்றை எடுத்து இருக்கிறாராம். அதாவது தெலுங்கு பக்கம் சென்று இருக்கிறாராம். அங்கு ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைப்பதால் ஐதராபாத்தில் செட்டிலாக முடிவு செய்திருக்கிறாராம் நடிகை.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் இளம் நடிகை சம்பளத்தை குறைக்க மாட்டேன் என்று அடம்பிடிக்கிறாராம்.
    மலையாளத்தில் அறிமுகமாகி மிகவும் பிரபலமான நடிகை, தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறாராம். குறிப்பிட்ட கதைகளை மட்டும் தேர்வு செய்யும் நடிகை தற்போது சம்பளத்திலும் விடாப்பிடியாக இருக்கிறாராம்.

    இயக்குனர் ஒருவர் கதைசொல்லி நடிகையை அணுகினாராம். கதைக்கேட்டு பிடித்துப்போக, நடிகை 2 கோடிக்கு மேல் சம்பளம் வேண்டும் என்று கூறிவிட்டாராம். இயக்குனர் சம்பளத்தை குறைக்க சொல்லியும், மாட்டேன் என்று அடம் பிடிக்கிறாராம் நடிகை.
    டோலிவுட், கோலிவுட் என பிசியாக நடித்து வரும் நடிகையை அவரது பெற்றோர் திருமணம் செய்ய செல்லி வற்புறுத்துகிறார்களாம்
    அக்கட தேசத்தை சேர்ந்த அழகிய நடிகை ஒருவர், தமிழ் படங்களில் நடித்து பாப்புலர் ஆனாலும், தற்போது பிற மொழி படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறாராம். தற்போது அவருக்கு அதிக பட வாய்ப்புகள் கிடைத்தாலும், அவர் சந்தோஷப்பட வில்லையாம். இதற்கு காரணம் அவரது பெற்றோர்கள் தான் என்கிறார்கள்.

    அந்த நடிகையை திருமணம் செய்யச் சொல்லி குடும்பத்தினர் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார்களாம். திருமணம் செய்துகொண்டால் படவாய்ப்புகள் வருமா?, திருமணத்துக்கு பின் படத்தில் நடிக்க அனுமதிப்பார்களா? என்ற குழப்பத்தில் அந்த நடிகை உள்ளாராம். 
    ×