என் மலர்tooltip icon

    கிசுகிசு

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவரின் செயலால் இயக்குனர் ஒருவர் கடுப்பாகி இருக்கிறாராம்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த வாரிசு நடிகை, காதலால் சில காலமாக படங்களில் நடிக்காமல் இருந்தாராம். தற்போது படங்களில் கவனம் செலுத்தி வரும் நடிகை, படப்பிடிப்பு தளத்தில் இருந்து யாருக்கும் சொல்லாமல் திடீரென வெளியேறினாராம்.

    இதனால் கடுப்பான இயக்குனர் நடிகை சம்பந்தப்பட்ட சில காட்சிகள் படமாக வேண்டி இருந்தாலும் அவை படத்தில் இல்லையென்றாலும் பரவாயில்லை என அத்துடன் நடிகையை படப்பிடிப்புக்கு அழைக்காமல் புறக்கணித்திருக்கிறாராம் இயக்குனர்.

    மேலும் டப்பிங், புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் நடிகையை புறக்கணிக்கும் எண்ணத்தில் இருக்கிறாராம் இயக்குனர்.
    தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து பிரபலமான நடிகை, நடிகர் ஒருவரை காதலிக்கிறாராம்.
    தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்த நடிகை சமீபத்தில் பெரிய முதலாளி வீட்டுக்கு சென்று மிகவும் பிரபலமானாராம். இவர் ஏற்கனவே ஒரு நடிகரை காதலித்து, நிச்சயதார்த்தம் வரை சென்று பிரிந்தார்களாம். 

    இந்த நிலையில் நடிகை ஒருவரை காதலிப்பதாக கூறி இருக்கிறாராம். அவர் யார் என்று விசாரித்தால் தன்னுடன் சமீபத்தில் ஒரு படத்தில் நடித்த நடிகர் என்று நெருங்கியவர்கள் கூறுகிறார்களாம். 
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடந்ததை எண்ணி வருந்தி வருகிறாராம்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர், தற்போது 50 படங்களை நிறைவு செய்து இருக்கிறாராம். இவர் நடிக்க வந்த புதிதில் கொழு கொழு என்று இருந்தாராம். அப்போது பட வாய்ப்புகளும் கிடைத்ததாம்.

    உடல் எடையை குறைத்தால் இன்னும் பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று நெருங்கியவர்கள் கூற, நடிகை தற்போது உடல் எடையை குறைத்து ஸ்லிமாக மாறினாராம். ஆனால் எந்த பட வாய்ப்பும் வர வில்லையாம். இதனால் நடிகை உடல் எடையை குறைக்க எடுத்த முயற்சியை எண்ணி வருந்தி வருகிறாராம்.
    கோலிவுட்டில் பிசியான நடிகர் ஒருவருடன் காதல் படத்தில் நடிக்க மாட்டேன் என பிரபல நடிகை ஒருவர் திட்டவட்டமாக சொல்லிவிட்டாராம்.
    சில ஆண்டுகளாக படங்களில் சரிவர நடிக்காமல் இருந்த நடிகர் ஒருவர், தற்போது மீண்டும் பிசியாக நடிக்க தொடங்கியுள்ளாராம். அந்த நடிகருக்கு ஒரு காதல் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாம். அதற்கு அந்த நடிகர் சட்டென ஓகே சொல்லிவிட்டாராம். அப்படத்தில் அவருக்கு ஜோடியாக முன்னணி கதாநாயகிகளை நடிக்க வைக்க இயக்குனர் முயற்சி செய்தாராம்.

    ஆனால் அந்த நடிகருடன் நடிக்க அந்த முன்னணி நாயகிகள் தயக்கம் காட்டி வருகிறார்களாம். அதில் ஒரு நடிகையெல்லாம், அதிக சம்பளம் கொடுத்தாலும் அவருடன் நடிக்க மாட்டேன் என திட்டவட்டமாக சொல்லிவிட்டாராம். இதனால் வேறு சில நடிகைகளிடம் கதையை சொல்லி வருகிறாராம் அந்த இயக்குனர்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் இப்போதைக்கு அது வேண்டாம் என்று அடம்பிடித்து வருகிறாராம்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர், தற்போது பல படங்கள் கைவசம் வைத்து இருக்கிறாராம். ஆனால், நடிகையின் குடும்பத்தார் திருமணம் செய்து வைக்க ஆசைப்படுகிறார்களாம். ஆனால் நடிகை, “இப்போதைக்கு அது வேண்டாம்” என்கிறாராம்.

    இருப்பினும் குடும்பத்தார் தங்கள் முயற்சியை கைவிடாமல், மாப்பிள்ளை தேடுகிறார்களாம். ஆனால், நடிகை கண்டுகொள்ளாமல் படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறாராம்.
    மலையாளத்தில் பிரபல நடிகையாக இருப்பவர் மீண்டும் நடிகருடன் இணைய மறுத்து இருக்கிறாராம்.
    மலையாளத்தில் அறிமுகமாகி மிகவும் பிரபலமான நடிகை, தமிழில் ஒரு படத்தில் பிரபல நடிகரும் ஜோடி சேர்ந்து நடித்தராம். அந்த படம் ஓரளவிற்கு வரவேற்பை பெற்றதாம்.

    இதையடுத்து நடிகைக்கு பல பட வாய்ப்புகள் கிடைத்ததாம். ஆனால் நடிகை நடிக்க மறுத்து விட்டாராம். தற்போது தமிழ் படத்தில் நடிக்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறாராம். ஒரு இயக்குனர் நடிகையை அணுக, அவர் ஹீரோ யார் என்று கேட்டு படத்தில் நடிக்க மறுத்து விட்டாராம்.

    ஏற்கனவே நடித்த ஹீரோ என்பதால் மறுத்து விட்டாராம். காரணம் விசாரித்தால் முன்பு நடந்த எதோ சம்பவத்தால் நடிகை மறுத்ததாக சொல்லுகிறார்களாம்.
    தமிழ் சினிமாவில் ஒரு படத்தில் நடித்து பிரபலமான நடிகை, இயக்குனரை நம்பி எமாந்து விட்டாராம்.
    தமிழ் சினிமாவில் ஒரு படத்தில் நடித்து புகழின் உச்சிக்கு சென்ற நடிகை, அதன் பிறகு எந்த படத்திலும் நடிக்க ஒப்புக் கொள்ள இல்லையாம். மேலும் அந்த படத்தின் இயக்குனர் வேறொரு படம் இயக்குவார் அதில் நடிக்கலாம் என்று காத்துக் கொண்டு இருந்தாராம்.

    ஆனால், இயக்குனர் இதுவரைக்கும் எந்த படத்தையும் இயக்கவில்லையாம். அவரை நம்பி சில வருடங்களையும் பல படங்களையும் இழந்துவிட்டதாக நடிகை புலம்பி வருகிறாராம். இனிமேலாவது நடிகைக்கு நீர் வீழ்ச்சி போல் வாய்ப்பு கிடைக்குமா என்று பலரும் பேசி வருகிறார்களாம்.
    முன்னணி நடிகர் ஒருவர், வாரிசு நடிகரின் வளர்ச்சியை தடுக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறாராம்.
    தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக இருப்பவர் கொஞ்சம் மாதங்களுக்கு முன்பு பல சர்ச்சைகளில் சிக்கி பட வாய்ப்புகளை இழந்து வந்தாராம். தற்போது அனைவரிடமும் சமரசம் செய்து இழந்த வாய்ப்புகளை பிடித்து வருகிறாராம்.

    இந்த நிலையில் வாரிசு நடிகர் வாய்ப்பு இல்லாத போது, பல வாய்ப்புகளை பெற்று வந்த கடவுள் பெயரை கொண்ட நடிகர், தற்போது வருத்தத்தில் இருக்கிறாராம். வாரிசு நடிகர் பட வாய்ப்புகளை பெற்றால் தனக்கு வாய்ப்புகள் கிடைக்காது என்று அவரது வளர்ச்சியை தடுக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறாராம்.
    தமிழ் சினிமாவில் வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் ஒருவர் ரூ.6 கோடியில் இருந்து 15 கோடிக்கு சம்பளத்தை உயர்த்தி இருக்கிறாராம்.
    தென்னிந்திய இயக்குனர்களில் அதிக சம்பளம் வாங்குபவர் பிரம்மாண்ட இயக்குனர்தானாம். இவர் அளவிற்கு யாரும் இதுவரை சம்பளம் வாங்க வில்லை என்கிறார்களாம். ஆனால், தற்போது ஒரு வெற்றி படத்தை கொடுத்த இயக்குனர்கள் பலர் கோடிகளில் சம்பளம் கேட்கிறார்களாம்.

    அப்படி ஒரு சில படங்களை பசங்களை வைத்து இயக்கிய இயக்குனர் இதுவரை ரூ.6 கோடி சம்பளம் வாங்கி வந்தாராம். தற்போது அடுத்த படத்திற்காக ரூ.15 கோடி சம்பளம் கேட்கிறாராம். காரணம் கேட்டால் எனக்கு அப்புறம் வந்தவர்கள் எல்லாரும் ரூ.10 கோடி கேட்கிறார்கள். அதனால்தான் கேட்கிறேன் என்று கூலாக சொல்கிறாராம்.

    தமிழில் பிரபலமாக இருக்கும் நடிகை ஒருவர் தன்னுடைய காதலை மறைத்து வருகிறாராம்.
    வாரிசு நடிகை ஒருவர் வெளிநாட்டை சேர்ந்தவரை காதலித்து வந்தராம். இவர்கள் காதலுக்கு பெற்றோர்கள் சம்மதிக்க, விரைவில் திருமணம் செய்து கொள்ள இருந்தாராம் நடிகை. நடிப்பை விட்டு விலகலாம் என்று முடிவு செய்து இருக்கும் நிலையில், திடீர் என்று காதலரை பிரிந்தாராம் நடிகை.

    இதையடுத்து மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நடிகை, தற்போது மீண்டும் காதல் சர்ச்சையில் சிக்கிய இருக்கிறாராம். ஆனால், இந்த முறை யாருக்கும் தெரியாமல் மறைத்து வருகிறாராம்.
    தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் இனிமேல் இப்படித்தான் என்று கூறி ரூட்டை மாற்றி இருக்கிறாராம்.
    தமிழ் சினிமாவில் நடிகையாக இருந்து பாடகியாக இருப்பவர் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்தாராம். இந்நிலையில் திடீரென்று சினிமாவுக்கு முழுக்கு போட்டு எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்தாராம். ஒரு அரசியல் சார்ந்த நடிகரை நம்பி ஏமாந்து விட்டேன் என்று கூறி வந்தாராம்.

    தற்போது நடிகை தன்னுடைய ரூட்டை மாற்றி கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடித்து வருகிறாராம். ஹீரோக்களுடன் எப்போது நடிப்பீர்கள் என்று கேட்டால், இனிமே என் ரூட்டு இப்படித்தான் அவர்களுடன் நடிக்க மாட்டேன் என்று கூறுகிறாராம்.
    சின்னத்திரை நடிகர் ஒருவர் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்ததற்கு நடிகை தான் காரணம் என்று பலரும் பேசி வருகிறார்களாம்.
    தொலைக்காட்சி சீரியல் ஒன்றில் நடிகரும் நடிகையும் ஒன்றாக சேர்ந்து நடித்தார்களாம். இந்த ஜோடியை பார்த்த பலரும் நிஜ ஜோடி போல் நடிக்கிறார்கள் என்று பாராட்டினார்களாம். ஆனால், நடிகர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்று கொஞ்ச நாளில் தெரிய வந்ததாம்.

    இதை தெரிந்துக் கொண்ட ரசிகர்கள், நடிகருடன் நடிகையை இணைத்து பேசாமல் இருந்தார்களாம். இந்நிலையில் நடிகர், மனைவியை விவாகரத்து செய்து விட்டாராம். இதற்கு நடிகை தான் காரணம் என்று பலரும் பேசி வருகிறார்களாம்.
    ×