என் மலர்
கிசுகிசு
முன்னணி நடிகையாக வலம் வருபவர் மற்ற கதாநாயர்களுடன் காதல் காட்சிகளில் நடிக்க மறுப்பு தெரிவித்து வருகிறாராம்.
முன்னணி நடிகையாக இருக்கும் போதே திருமணம் செய்துக் கொண்ட கதாநாயகி, தற்போதும் பல படங்களில் நடித்து வருகிறாராம். தற்போது வேறு கதாநாயகர்களுடன் காதல் காட்சியில் நடிக்க மறுக்கிறாராம்.
தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் “டூயட் எல்லாம் வைக்காதீர்கள். அதை இப்ப ரசிகர்கள் விரும்புவதில்லை” என்கிறாராம். “நல்ல முடிவுதான். டூயட்டை ரசிகர்கள் விரும்புவதில்லைதான். இதெல்லாம் சரி...ரூ.4 கோடி சம்பளம் கேட்பதுதான் சரியில்லை...” என்கிறாராம், ஒரு டைரக்டர்.
முதல் இரண்டு படத்திலேயே மிகவும் பிரபலமான நடிகை பட வாய்ப்பை பிடிக்க புதிய முயற்சியில் ஈடுபட்டு வருகிறாராம்.
தமிழ் சினிமாவில் முதல் படத்திலேயே உச்ச நடிகர் படத்தில் நடித்த நடிகை, அடுத்ததாக ஆசிரியர் படத்தில் கதாநாயகியாக நடித்தாராம். முதல் இரண்டு படத்திலேயே மிகவும் பிரபலமான நடிகை அடுத்ததாக இளம் நடிகர் ஒருவருக்கு ஜோடியாக நடிக்கிறாராம்.
அடுத்ததாக மற்ற முன்னணி நடிகர்கள் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று தேடிவாய்ப்பு கேட்டு வருகிறாராம். மேலும் எனக்கு கதை முக்கியம் இல்லை... உங்களோடு நடித்தால் போதும் என்று சொல்லி வருகிறாராம். இதை கேட்டவர்கள் அனைவரும் பட வாய்ப்பை பிடிக்க நடிகை எப்படியெல்லாம் முயற்சி செய்கிறார் என்று பேசி வருகிறார்களாம்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சர்ச்சையில் சிக்கி சத்தம் காட்டாமல் இருக்கிறாராம்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சமீபத்தில் ஒரு பெண்ணை ஏமாற்றியதாக சர்ச்சையில் சிக்கினாராம். இதற்கான காரணத்தை கேட்க நடிகரை தொடர்பு கொண்டால் பேச மறுக்கிறாராம்.
மேலும் நடிகரின் திரைப்படம் ஒன்று வெளியாக இருக்கிறதாம். இதற்கான புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் நடிகர் கலந்துக் கொள்ள மறுக்கிறாராம். கொஞ்சநாள் வெளியில் தலையை காட்டாமல் இருந்தால் நல்லது என்று நடிகர் முடிவு செய்து இருக்கிறாராம்.
தமிழில் அதிகமான விளம்பர படங்களில் நடிகை சம்பள விஷயத்தில் விடாபிடியாக இருக்கிறாராம்.
விளம்பர படங்களில் நடிக்க அதிக சம்பளம் வாங்குபவர், பெரிய நம்பர் நடிகை என்றாலும், அதிகமான விளம்பர படங்களில் நடிப்பவர், புன்னகை நடிகைதானாம். இவர், ஒரு நாளைக்கு ரூ.2 லட்சம் சம்பளம் வாங்குகிறாராம்.
சம்பளத்தை குறைக்க சொல்லி பலர் நடிகையிடம் கேட்டாலும் முடியவே முடியாது என்று சொல்லுகிறாராம். காரணம் பட வாய்ப்பு இல்லாததால், இப்படியாவது சம்பாதிக்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறாராம் நடிகை.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அநியாயத்துக்கு சம்பளம் கேட்கிறாராம்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்த நடிகர் தற்போது தெலுங்கு படத்திலும் வில்லனாக நடித்துள்ளாராம். நடிகரின் நடிப்பை பார்த்து தெலுங்கு இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் நடிகரை ஒப்பந்தம் செய்ய முயற்சி செய்து வருகிறார்களாம்.
இதனை பயன்படுத்தி நடிகர் தன்னுடைய சம்பளத்தை 10 மடங்காக உயர்த்தி விட்டாராம். மேலும் ஒரு நாளைக்கு ஒரு கோடிக்கு மேல் சம்பளம் கேட்கிறாராம். கொஞ்சம் புகழ்ந்து பேசியதுமே சம்பளத்தை உயர்த்தி விட்டார் என அக்கட தேசத்து தயாரிப்பாளர்கள் புலம்புகிறார்களாம்.
காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்ற பழமொழியை நடிகர் சரியாக பயன்படுத்திக் கொள்கிறாராம்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் படத்தில் இருந்து பிரபல நடிகை விலகி இருக்கிறாராம்.
‘ந’ நடிகையும், ‘த’ நடிகையும் ஒரு புதிய படத்தில் இணைந்து நடிக்க ஒப்பந்தமானார்கள். ஒருவருக்கு ஐந்து கோடியும், அடுத்தவருக்கு ஒன்றரை கோடியும் சம்பளம் பேசப்பட்டு, படப்பிடிப்பு தேதியும் சொல்லப்பட்டது.
என்ன நடந்ததோ...‘த’ நடிகை அந்த படத்தில் இருந்து திடீரென்று விலகிக் கொண்டாராம்.
‘‘படத்தில் ‘ந’ நடிகைக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள். உன்னை ஒரு சில காட்சியுடன் நடிக்க வைத்து, ஒதுக்கி விடுவார்கள்’’ என்று ‘த’ நடிகையிடம் அவருக்கு நெருக்கமானவர்கள் கூறியதுதான் விலகலுக்கு காரணம் என்கிறார்கள்.
இனிமேல் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என்று நடிகை ஒருவர் இயக்குனர்களிடம் அடம்பிடிக்கிறாராம்.
தமிழில் நம்பர் ஒன் நடிகை நடித்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அதிகமாக கவனம் பெற்ற நடிகை, அந்த படத்திற்குப் பிறகு மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டாராம். காரணம் அந்த படத்தில் நடிகை சிறு வயது குழந்தைக்கு அம்மாவாக நடித்தாராம்.
அதன்பிறகு நடிகைக்கு தொடர்ந்து குழந்தைக்கு அம்மாவாக நடிக்கவே வாய்ப்பு வருகிறதாம். இதனால் பல பட வாய்ப்புகளை இழந்தாராம். இயக்குனர்களிடமும் இனிமேல் அந்தமாதிரி கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என்று கண்டிப்பாக சொல்லிவிட்டாராம்.
முன்னணி நடிகர் ஒருவர் பிரபல இயக்குனர் ஒருவருக்கு வாய்ப்பு தருவதாக கூறி கைவிட்டு விட்டாராம்.
தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை இயக்கிய சிவமான இயக்குனர், தற்போது உச்ச நடிகரை வைத்து படம் இயக்கி வருகிறாராம். எப்போதே முடிய வேண்டிய படம் பல பிரச்சனைகளால் தள்ளி போய் இருக்கிறதாம். இந்த இயக்குனர் அடுத்ததாக நான்கு முறை தன்னுடைய பயணித்த நடிகரை வைத்து படம் இயக்க திட்ட மிட்டாராம்.
நடிகரும் ஓகே சொல்லி இருந்தாராம். இந்நிலையில், நடிகர் தற்போது நடித்து வரும் படத்தின் இயக்குனரின் திறமையை பார்த்து அடுத்த படத்தையும் அதே இயக்குனருக்கு கொடுத்து விட்டாராம். இதனால் பழைய இயக்குனர் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறாராம்.
தமிழ் தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை ஒருவர் 40 வயது இயக்குனரை காதலிக்கிறாராம்.
தமிழில் துப்பறிந்த நடிகை அதன்பிறகு கடவுளின் பெயரைக் கொண்ட நடிகருடன் இணைந்து நடித்தாராம். இவர் தெலுங்கு மலையாளம் மொழி படங்களிலும் நடித்துள்ளாராம். இவர் தெலுங்கு இயக்குனருடன் நெருங்கி பழகி வருகிறாராம்.
இயக்குனருடன் நெருக்கமாக இருப்பதால்தான் தெலுங்கு படங்களில் மட்டுமே நடித்து வருகிறாராம் நடிகை. அந்த இயக்குனருக்கு 40 வயது ஆகிறதாம். நடிகைக்கு 23 ஆகிறதாம். இவர்களுடைய காதல் தான் தற்போது தெலுங்கு பட உலகில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறதாம்.
பிரபல நடிகரின் படத்தில் நடிச்சது தப்பா போச்சு என கோலிவுட் நடிகை ஒருவர் சினிமா வட்டாரங்களில் புலம்பி வருகிறாராம்.
முத்தம் கொடுத்து சர்ச்சையில் சிக்கிய நடிகை ஒருவர், சமீபத்தில் முன்னணி நடிகரின் படம் ஒன்றில் நடித்தாராம். அந்த படத்தில் நடித்தால் அடுத்த லெவலுக்கு சென்று விடலாம் என்று அவர் எண்ணினாராம். கதைக்கு முக்கியமான வேடம் என்று சொல்லி தன்னை டம்மி பண்ணி விட்டதாக சினிமா வட்டாரங்களில் தற்போது புலம்பி வருகிறாராம் அந்த நடிகை.
அவருக்கு தற்போது வரும் வாய்ப்புகளும் முக்கியத்துவம் இல்லாதது போன்ற வேடங்களே வருகிறதாம். ஆகவே, இனிமேல் ஆரம்ப காலத்தைப் போலவே தேர்ந்தெடுத்த கதைகளில் மட்டுமே நடிக்க முடிவெடுத்திருக்கிறாராம். குறிப்பாக முன்னணி நடிகர்களின் படங்களில் நடிப்பதை தவிர்த்து வருகிறாராம்.
அதுபோன்ற கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என்று கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வரும் நடிகை திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம்.
திருமணத்துக்குப்பின் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடித்து வரும் நடிகையின் சில படங்கள், எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லையாம். இதற்கு காரணம் அவர் மாற்று திறனாளி கதாபாத்திரங்களில் நடித்ததுதான் என்ற உண்மையை அவரது சினேகிதிகள் போட்டு உடைத்தார்களாம்.
அதனால் நடிகை, இனிமேல் அதுபோன்ற கதாபாத்திரங்களில் நடிப்பதில்லை என்பதில் அவர் உறுதியாக இருக்கிறாராம்.
தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களிடம் கண்டிப்பாக சொல்லி விடுகிறாராம்.
முன்னணி இயக்குனர் இயக்கும் புதிய படத்திற்கு தயாரிப்பாளர் ஒருவர் செக் வைத்திருக்கிறாராம்.
தெலுங்கு தயாரிப்பாளர் தயாரிக்கும் படத்தை பிரம்மாண்ட இயக்குனர் யுனிவர்சல் நாயகனை வைத்து படம் இயக்க இருந்தாராம். ஆனால் அறிவிப்பையும் வெளியிட்டார்கள். ஆனால், திடீரென அப்படத்திலிருந்து பின் வாங்கினாராம் தயாரிப்பாளர்.
தற்போது பிரம்மாண்ட இயக்குனர் தெலுங்கு நடிகரை வைத்து படம் இயக்க இருக்கிறாராம். பெரிய பட்ஜெட்டில் தான் இந்த படமும் தயாராக இருக்கிறதாம். குறிப்பிட்ட அந்த பட்ஜெட்டிற்கு மேற்கொண்டு ஒரு பைசா கூட தரமாட்டேன் என தயாரிப்பாளர் ஒப்பந்தத்தில் தெளிவாகக் குறிப்பிட்டு இயக்குனருக்கு 'செக்' வைத்துவிட்டாராம்.






