என் மலர்tooltip icon

    சினிமா

    கிசுகிசு
    X
    கிசுகிசு

    தயாரிப்பாளரை புலம்ப வைத்த நடிகை

    தமிழில் ஒரு சில படங்களில் நடித்த நடிகை தயாரிப்பாளரை புலம்ப வைத்திருக்கிறாராம்.
    தமிழில் கண் கட்டிய படம் மூலம் அறிமுகமான நடிகை, முன்னணி இயக்குனர்கள் படத்தில் நடித்திருந்தாராம். அவர்களுடன் நடித்ததால் தான் ஒரு பெரிய நடிகை என்று நினைக்க ஆரம்பித்து விட்டாராம். சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் அதிகம் சேர்ந்ததால் முன்னணி நடிகையாகி விட்டோம் என்று நினைத்து பல சின்ன படங்களை நடிக்க மறுத்து வருகிறாராம்.

    இந்த நிலையில் நடிகை ஒரு படத்தில் நடித்திருந்தாராம். அந்தப் படம் தற்போது வெளியாக இருக்கும் நிலையில், படம் சம்பந்தப்பட்ட ப்ரமோஷன்களில் நடிகை கலந்து கொள்ள மறுக்கிறாராம். தயாரிப்பாளர் அழைத்தால் பல காரணங்களைச் சொல்லி தட்டிக் கழிக்கிறாராம். 

    பல வெற்றி படங்களில் நடித்த முன்னணி நடிகைகளே தான் நடித்த படங்களின் ப்ரோமோஷன்களுக்கு செல்லும் நிலையில், தனக்கென்று ஒரு அடையாளத்தை பெற்றிராத இளம் நடிகை, இப்படி செய்வது சரியில்லை என்று தயாரிப்பாளர் புலம்பி வருகிறாராம்.
    Next Story
    ×