என் மலர்
சினிமா

கிசுகிசு
பணம் கொடுத்தால் வருவேன்... நடிகை விடாப்பிடி
பிரபல நடிகை ஒருவர் தன்னுடைய படம் வெளியாக இருக்கும் நிலையில், பணம் கொடுத்தால்தான் புரமோஷனுக்கு வருவேன் என்று கூறியிருக்கிறாராம்.
தமிழ் தெலுங்கு மொழிகளில் நடித்து மிகவும் பிரபலமாக இருக்கும் நடிகை, தற்போது ஒரு படத்தில் நடித்து இருக்கிறாராம். இவரை நம்பித்தான் படமே எடுத்தார்களாம். படம் எடுத்து முடிந்த பிறகு தியேட்டரில் ரிலீசாகாமல் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அறிவித்ததால் நடிகை அதிருப்தி அடைந்தாராம்.
மேலும் ஓடிடி தளத்தில் அதிக பணம் கொடுத்து படத்தை வாங்கி விட்டதால், நடிகை அதிர்ச்சியடைந்து இருக்கிறாராம். தனக்கு குறைவான சம்பளம் கொடுத்துவிட்டு நீங்கள் அதிகமாக சம்பாதித்து விட்டீர்களே என்று தயாரிப்பாளர்களிடம் கூறியிருக்கிறாராம். மேலும் தனக்கு இன்னும் பணம் கொடுத்தால் தான் புரமோஷனுக்கு வருவேன் என்று கூறிவிட்டாராம். படக்குழுவினரும் பணம் கொடுக்காமல் நடிகையில்லாமலே புரமோஷன் செய்து வருகிறார்களாம்.
Next Story






