என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • விஷால் பெற்ற கடனை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டது.
    • விஷால் நிறுவனத்திற்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

    நடிகர் விஷால், தனது 'விஷால் பிலிம் பேக்டரி' நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது.

    அந்த தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தை மீறி, வீரமே வாகை சூடும் என்ற படத்தை வெளியிடுவதாக விஷால் நிறுவனத்திற்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, விஷால் தரப்பில் சொத்து, வங்கி கணக்கு விவரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. வழக்கு விசாரணையை நீதிபதி ஆஷா வரும் 29-ந் தேதிக்கு தள்ளி வைத்தார்.

    • நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ள திரைப்படம் ‘இறைவன்’.
    • ’இறைவன்’ திரைப்படம் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் அஹமத் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'இறைவன்'. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 'இறைவன்' திரைப்படம் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.


    இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ஜெயம் ரவி பேசியதாவது, இறைவன் என்றாலே அன்புதான். எதுக்கு இந்தப் பெயர் வைத்தீர்கள் என என்னிடம் நிறைய பேர் கேட்டார்கள். இந்தத் தலைப்பை இயக்குனர் சொன்ன போது, 'இன்னுமா யாரும் இந்த தலைப்பை வைக்கவில்லை?' என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அன்பை கொடுக்கும் இறைவனை ஏன் தலைப்பாக வைக்கவில்லை என்று தோன்றியது. இந்த அன்பில்தான் படம் தொடங்கியது.


    கோவிட் காரணமாக 'ஜனகனமண' நின்றது. அதன் பின்புதான் 'இறைவன்' தொடங்கியது. நான் பார்த்த முதல் நடிகன் ரவிதான் என விஜய் சேதுபதி சொன்னார். ஆனால், நான் இயக்க வேண்டும் என நினைத்த முதல் ஹீரோ விஜய்சேதுபதிதான். சீக்கிரம் எனக்கு கால்ஷீட் கொடுங்கள். வினோத் சாரின் படங்கள் திரையுலகை புரட்டிப் போட்டவை. அவருக்கும் நன்றி. அஹமது சாரின் அன்பும் நட்பும் எனக்கு எப்போதும் தேவை. அழகர் சாருக்கு இந்தப் படம் மிகப்பெரிய லாபம் கொடுக்கும்.


    விஜயலட்சுமி, நரேன் சிறப்பாக நடித்துள்ளனர். அப்பாதான் நான் உருவான இடம். நிறைய கற்றுக் கொடுத்துள்ளார். தயாரிப்பாளர் சுதன் எங்களுக்கு சிறப்பாக செய்துள்ளார். 'பொன்னியின் செல்வன்' படமெல்லாம் முடித்து விட்டு என்ன செய்ய போகிறாய் என்று என் அண்ணன் கேட்டார். ஏன் 'தனி ஒருவன்2' பண்ண மாட்டாயா எனக் கேட்டேன். அப்படி ஒரு அண்ணன் இருக்கும் போது எல்லாமே எனக்கு ஜெயம்தான். 'இறைவன்' படம் எல்லாருக்கும் பிடிக்கும். நான் இந்தப் படத்தில் நன்றாக நடித்திருக்கிறேன் என்றால் யுவனும் அதற்குக் காரணம். படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள் என்றார்.

    • ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குவதோடு மட்டுமல்லாமல் படங்களையும் தயாரித்தும் வருகிறார்.
    • இவர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

    அஜித் நடிப்பில் வெளியான தீனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஏ.ஆர்.முருகதாஸ். அதன்பின்னர் விஜயகாந்த்தின் ரமணா, சூர்யாவின் கஜினி, 7ஆம் அறிவு, விஜய்யின் துப்பாக்கி, கத்தி, சர்கார், ரஜினியின் தர்பார் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்குவதோடு மட்டுமல்லாமல் படங்களையும் தயாரித்தும் வருகிறார்.


    இந்நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் இன்று தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன் அவரது அடுத்த படத்தின் அப்டேட்டையும் கொடுத்துள்ளார். அதன்படி, சிவகார்த்திகேயன் நடிக்கும் 23-வது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளார். இதனை சிவகார்த்திகேயன் தனது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.

    மேலும், "எனது 23-வது படத்தில் உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் கதையைக் கேட்டு இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தேன். இந்த படம் எனக்கு எல்லா விதத்திலும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.


    • நெல்சன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் 'ஜெயிலர்'. இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.


    சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை சமூக வலைதளத்தில் பட்டையை கிளப்பி வருகிறது. இந்நிலையில், 'ஜெயிலர்' படத்தில் இடம்பெற்றிருந்த 'ஹுக்கும்' பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ பாடலுக்கு ரசிகர்கள் வைப் செய்து வருகிறார்கள்.



    • அருண் விஜய் நடிக்கும் திரைப்படம் ‘வணங்கான்’.
    • இந்த படத்தில் ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாக நடிக்கிறார்.

    இயக்குனர் பாலா தற்போது இயக்கி வரும் திரைப்படம் 'வணங்கான்'. அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில், ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், சமுத்திரக்கனி, மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    வி ஹவுஸ் ப்ரோடக்ஷன்ஸ் மற்றும் பி ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதுகிறார். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று வெளியானது. ஒரு கையில் பெரியாரும் மற்றொரு கையில் விநாயகரும் இருக்கும் இந்த போஸ்டரை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.


    இந்நிலையில், இந்த போஸ்டர் குறித்து இயக்குனர் சுரேஷ் காமாட்சி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "இங்கு காலத்தை வெல்வது முக்கியம். நம் முன்னே எத்தனை சமர் வரினும் நின்று எதிர்கொண்டு இன்று தனக்கென படைப்பாற்றலில் மிகச் சிறந்த இடத்தை தக்க வைத்திருக்கும் நம் தமிழ்சினிமாவின் வரம், இயக்குனர் அண்ணன் பாலா அவர்கள்.

    அவரது இதுவரையிலான படைப்புகள் மக்கள் மத்தியில் அதிர்வுகளை உருவாக்கியுள்ளன. அதேபோல இன்று வணங்கான் படத்தின் முதல் பார்வை வெளியாகி உள்ளது. பெரும் அதிர்வை ஏற்படுத்தும் ஒரு கதையைத் தொட்டிருக்கிறார் என்பது மட்டும் நிச்சயம். சகோதரர் அருண்விஜய்க்கு இது மற்றுமொரு பெயர் சொல்லும் அவதாரம். இனி உங்கள் கோணத்திற்கே விட்டுவிடுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.


    • ’சந்திரமுகி -2’ திரைப்படம் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • இப்படத்தை இயக்குனர் பி.வாசு இயக்கியுள்ளார்.

    இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் 'சந்திரமுகி -2'. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடித்திருக்கின்றனர்.


    லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். 'சந்திரமுகி 2' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    'சந்திரமுகி -2' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 15-யிலிருந்து 28-ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டது குறித்து இயக்குனர் பி.வாசு விளக்கமளித்துள்ளார். அவர் கூறியதாவது, 'சந்திரமுகி 2' திரைப்படத்தின் Final Copy-ஐ கடந்த 8-ஆம் தேதி பார்க்க முடிவு செய்திருந்தோம். அன்று படத்தின் 480 ஷாட்களை காணவில்லை என அழைப்பு வந்தது. இப்படியெல்லாம் நடக்குமா என மனதில் தோன்றியது. பின்னர் 4,5 நாட்கள் தீவிரமாக தேடி காணாமல் போன ஷாட்களை கண்டுபிடித்தோம். இதனால் தான் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது என்று பேசினார்.

    • இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘வணங்கான்’.
    • இப்படத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கிறார்.

    சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய பாலா, தற்போது 'வணங்கான்' என்ற படத்தை இயக்கி வருகிறார். அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில், ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், சமுத்திரக்கனி, மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


    ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதுகிறார். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்ய, சில்வா இந்த படத்திற்கு ஆக்ஷன் காட்சிகளைக் கையாண்டுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    வணங்கான் போஸ்டர்

    இதையடுத்து 'வணங்கான்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. அருண் விஜய் ஒரு கையில் பெரியார் மற்றும் இன்னொரு கையில் விநாயகர் வைத்துள்ள இந்த போஸ்டரை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.


    • 9 கேரள அரசு விருதுகளை கே.ஜி.ஜார்ஜ் வென்றுள்ளார்.
    • மலையாள சினிமா தொழில்நுட்ப கலைஞர்கள் கூட்டமைப்பின் தலைவராகவும் இருந்தார்.

    திருவனந்தபுரம்:

    மலையாள சினிமாவின் புகழ்பெற்ற இயக்குநர் கே.ஜி.ஜார்ஜ். சில ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று கே.ஜி.ஜார்ஜ் காலமானார். அவருக்கு வயது 77.

    கேரளாவின் பத்தனம்திட்டாவில் பிறந்தவரான கே.ஜி.ஜார்ஜ், கடந்த 1975-ம் ஆண்டு வெளியான 'ஸ்வப்னதானம்' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்த படம் சிறந்த மலையாளப் படத்துக்கான தேசிய விருதை வென்றது.

    மேலும் ஊழ்க்கடல், மேளா, யவனிகா, லேகாயுடே மரணம் ஒரு ஃப்ளாஷ்பேக் ஆகிய பல்வேறு வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். இதுவரை 9 கேரள அரசு விருதுகளை கே.ஜி.ஜார்ஜ் வென்றுள்ளார். மலையாள சினிமா தொழில்நுட்ப கலைஞர்கள் கூட்டமைப்பின் தலைவராகவும் இருந்தார். அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    • இயக்குனர் பாலாவின் வணங்கான் படத்தில் அருண் விஜய் நடிக்கிறார்.
    • இந்த படத்தில் சமுத்திரகனி, இயக்குனர் மிஸ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

    இயக்குனர் பாலாவின் வணங்கான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் செப்டம்பர் 25-ம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருக்கிறது.

     

    வி ஹவுஸ் ப்ரோடக்ஷன்ஸ் மற்றும் பி ஸ்டூடியோஸ் தயாரிக்கும் வணங்கான் படத்தில் அருண் விஜய், ரோஷினி, சமுத்திரகனி, இயக்குனர் மிஸ்கின் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை சூர்யா மேற்கொள்கிறார்.

    முதலில் வணங்கான் படத்தில் சூர்யா நடிக்க முடிவு செய்து, படத்திற்கான படப்பிடிப்பும் நடந்தது. அப்போது இந்த படத்தை 2டி நிறுவனம் சார்பில் சூர்யாவே தயாரித்து வந்தார். பிறகு, இந்த படத்தில் இருந்து விலகிக் கொள்வதாக சூர்யா மற்றும் 2டி நிறுவனம் அறிவித்தது. இது தொடர்பான அறிவிப்பை முதலில் இயக்குனர் பாலா வெளியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • துருவ் விக்ரம் நடிப்பில் மாரி செல்வராஜ் புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

    கதிர், கயல் ஆனந்தி, யோகிபாபு நடிப்பில் வெளியான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் இயக்குனர் மாரி செல்வராஜ். இப்படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் உருவாகியிருந்த கர்ணன் திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதன்பின்னர், நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் கபடி விளையாட்டை மையமாக வைத்து புதிய படம் ஒன்றை இயக்கினார்.


    இப்படத்தை பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, ரைட்டர் போன்ற பல படங்களை தயாரித்த இயக்குனர் பா.இரஞ்சித் நீலம் புரொடக்ஷன் தயாரிக்கிறது. இந்த படத்திற்காக நடிகர் துருவ் விக்ரம் கபடி விளையாட்டு பயிற்சியும் பெற்று வந்தார். ஆனால், திடீரென்று இயக்குனர் மாரிசெல்வராஜ் இந்த படத்தை தள்ளி வைத்துவிட்டு உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடிப்பில் வெளியான 'மாமன்னன்' திரைப்படத்தை தொடங்கினார். இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.


    இந்நிலையில், கதாநாயகன் துருவ் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. மாரி செல்வராஜும் துருவ் விக்ரமும் இடம்பெற்றுள்ள இந்த போஸ்டர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


    • நடிகர் விஜய் சேதுபதி பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.
    • விஜய் சேதுபதி நடித்த ‘உப்பென்னா’ திரைப்படம் தேசிய விருது பெற்றது.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி, தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். இவர் ஹீரோவாகவும், வில்லனாகவும் நடித்து ரசிகர்கள் மனதில் தனி இடத்தை பிடித்துள்ளார்.

    விஜய் சேதுபதி கடந்த 2021-ஆம் ஆண்டு தெலுங்கு இயக்குனர் பிச்சிபாபு சனாவின் இயக்கத்தில் 'உப்பென்னா' என்ற திரைப்படத்தில் கீர்த்தி ஷெட்டிக்கு தந்தையாக நடித்திருந்தார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது. மேலும், தேசிய விருதையும் பெற்றது.


    இதைத்தொடர்ந்து இயக்குனர் ஜனநாதன் இயக்கத்தில் வெளியான 'லாபம்' திரைப்படத்தில் கீர்த்தி ஷெட்டியை கதாநாயகியாக நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால், விஜய் சேதுபதி, கீர்த்தி ஷெட்டியுடன் நடிக்க மறுத்துவிட்டார். இது குறித்து அவர் அப்போது விளக்கமளித்திருந்தார்.

    இந்நிலையில், தற்போது மீண்டும் விளக்கமளித்துள்ளார். அவர் கூறியதாவது, "லாபம் படத்தில் கீர்த்தி ஷெட்டியை கதாநாயகியாக நடிக்க வைக்கலாம் என பட நிறுவனம் கூறியது. அதே நேரத்தில் தெலுங்கில் உப்பென்னா படத்தில் அவருக்கு தந்தையாக நடித்துக் கொண்டிருந்தேன். அப்பாவாக நடிக்கும் போது எப்படி என்னால் ரொமான்ஸ் செய்ய முடியும் என்று கூறி மறுத்துவிட்டேன்.


    'உப்பென்னா'பட கிளைமேக்ஸ் காட்சியில் நான் கீர்த்தியிடம், என்னை உங்களின் தந்தையாக நினைத்துக்கொள்ளுங்கள் என்று கூறினேன். கீர்த்திக்கு என் மகன் வயது தான் இருக்கும். கீர்த்தியை என் மகளாகதான் நான் பார்த்தேன். என்னால் அவருடன் நிச்சயமாக என்னால் ரொமான்ட்டிக்காக நடிக்க முடியாது" என்று பேசினார்.

    • சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அயலான்’.
    • இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள திரைப்படம் அயலான். இப்படத்தை இயக்குனர் ஆர்.ரவிகுமார் இயக்கியுள்ளார். ஏ.ஆர் ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    அயலான் போஸ்டர்

    இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியிருக்கும் இப்படம் தீபாவளி தினத்தன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

    அதன்படி, 'அயலான்' திரைப்படம் 2024-ஆம் ஆண்டு பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை சிவகார்த்திகேயன் தனது சமூக வலைதளத்தில் போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளார்.


    ×