என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக, வாய் திறக்காத நடிகர்கள் கோழைகள் என கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.
    தலைவி பட சூட்டிங்குக்காக ஐதராபாத்தில் இருக்கும் நடிகை கங்கனா ரனாவத், மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து, தன்னுடைய கருத்துக்களை பேட்டியாக அளித்திருக்கிறார். அதில், திரையுலக பிரபலங்களை அவர் விமர்சித்திருக்கிறார். 

    அவர் கூறியிருப்பதாவது: குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக, வாய் திறக்காத பாலிவுட் நடிகர்கள் வெட்கப்பட வேண்டும். பாலிவுட்டில் அனைவரும் கோழைகள். அவர்கள், தினமும் இருபது முறை கண்ணாடியில் தங்களை பார்த்துக் கொள்வர். ஏதாவது கேட்டால், எங்களுக்கு அனைத்தும் கிடைக்கிறது; நாங்கள் எதற்காக நாட்டை பற்றி கவலைப்பட வேண்டும் என்பர். வேறு சிலர் இருக்கின்றனர். அவர்கள், நாங்களே கலைஞர்கள். நாங்கள் ஏன் நாட்டை பற்றி கவலைப்பட வேண்டும் என கேட்பர். 

    அவர்களையெல்லாம் அழைத்து வந்து, குடியுரிமை சட்டத் திருத்த மசோதா குறித்து கருத்துச் சொல்ல வைக்க வேண்டும். அதனால் தான் அவர்களை எல்லாம் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறேன். அவர்களின் நடவடிக்கையை மக்கள் கவனித்து கொண்டிருக்கின்றனர். இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டு விட்டால் போதும் என நினைக்கின்றனர். அது மட்டும்தான் அவர்களுடைய வேலையா? அவர்கள் மக்களால் உருவாக்கப்பட்டவர்கள். 

    கங்கனா ரனாவத்

    அப்படி இருக்கும் போது, மக்களுக்காக குரல் கொடுக்க பயந்தால், அவர்கள் இந்த இடத்தில் இருக்க தகுதியற்றவர்கள் என்பதை, மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு அதிகாரம் கொடுத்திருப்பது, இன்ஸ்டாகிராம் போஸ்ட் போடவும், போதை பார்ட்டிகள் நடத்தவுமா? திரைத்துறையினர் எதற்கெடுத்தாலும் பயப்படுகிறார்கள். அவர்கள் கோழைகள், முதுகெலும்பில்லாதவர்கள். 

    அவர்கள் கோழைகளாக இருப்பதால் தான் சினிமா பின்னணி இல்லாதவர்களுக்கு பிரச்னை ஏற்படுத்துகிறார்கள்; பெண்களை அவமதிக்கிறார்கள். அவர்களை தலைவர்கள் போன்று பார்ப்பதை நிறுத்த வேண்டும். நம் நிஜ முன் மாதிரி யார் என்கிற தெளிவு, நமக்கு இருக்க வேண்டும்.இவ்வாறு நடிகை கங்கனா கூறியிருக்கிறார்.
    இதுவரை நான் பேசியதற்கும், இனிமேல் நான் பேசப்போவதற்கும், ரஜினிக்கு சம்மந்தமில்லை என நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.
    தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ராகவா லாரன்ஸ் பேசியது திரையுலகில் மட்டுமல்லாது, அரசியல் வட்டாரத்திலும் சலசலப்பை ஏற்படுத்தியது. கமல் குறித்த பேச்சு சர்ச்சையானதை அடுத்து அது குறித்து கமலை நேரில் சந்தித்து லாரன்ஸ் விளக்கம் அளித்திருந்தார். இதேபோல் அந்த விழாவில் அவர் அரசியல் குறித்து பேசியதற்கும், ரஜினிக்கும் தொடர்பு இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின.

    இந்நிலையில், இது தொடர்பாக விளக்கம் அளித்து லாரன்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தர்பார் இசை வெளியீட்டுக்கு பிறகு என்னை பல ஊடக  நண்பர்கள் பேட்டி கொடுக்கும்படி கேட்கின்றனர். தற்போது நான் இந்தி படப்பிடிப்பில் சற்று பிஸியாக இருப்பதால், தற்சமயம் என்னால் பேட்டி எதுவும் கொடுக்க இயலாது. ஆனால் எனது படப்பிடிப்பு முடிந்ததும் நான் வந்து அனைவருக்கும் தனித்தனியாக பேட்டி கொடுப்பேன். 

    நீங்கள் எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும், பொதுவான சில விஷயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் பதிவிடும் ட்வீட்டுகள், நான் பேசிய பேச்சு மற்றும் இனிமேல் நான் பேசப்போகும் விஷயங்கள் அனைத்தும் எனது சொந்த கருத்துக்கள் மட்டுமே.  என்னுடைய கருத்துகளுக்கு எந்தவகையிலும் ரஜினிகாந்த் பொறுப்பல்ல என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். ரஜினி சார் சொல்லி தான் நான் பேசுவதாக சிலர் சொல்லுவது உண்மையற்றது என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.  

    அவர் பேச விரும்பினால், அவர் தானாகவே பேசுவார். ஒருவரை தூண்டிவிட்டு பேசவைக்ககூடிய நபர் அல்ல அவர். என்னால் அவருக்கு எந்த பாதிப்பும் வேண்டாம். நான் அவருடைய ரசிகனாக அவரிடம் எதிர்பார்ப்பது அவருடைய ஆசீர்வாதமும், அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்வது மட்டுமே தான். நான் எந்த அரசியல் கட்சிக்கும் எதிரானவன் அல்ல, நான் யாரையும் ஆதரிக்கவில்லை.  நான் எனது சேவையைச் செய்கிறேன், தேவைப்படும் போதெல்லாம் எனது குழந்தைகளுக்கான உதவி கேட்பேன்.

    ரஜினிகாந்த் , ராகவா லாரன்ஸ்

    இதைத் தவிர அவர்கள் உதவி செய்தால் எனது நன்றியைத் தெரிவிப்பேன். எனக்கு அரசியலில் எந்த தொடர்பும் இல்லை, ஆனால் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது நான் தேவையின்றி ஒரு பிரச்சினையில் இழுத்துச் செல்லப்பட்டேன். இதன் காரணமாக எனக்கும் மற்றொரு நபருக்கும் இடையில் கருத்து வேறுபாடும், சர்ச்சைகளும் எழுந்தன. எனவே நான் பேச வேண்டிய ஒரு நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டேன்.  

    எனது பிறந்த இடம், மொழி மற்றும் எனது சேவை குறித்து அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர், அதற்கு நான் சாந்தமாக பதிலளிப்பேன். ஜல்லிக்கட்டு சமயத்திலிருந்தே நான் சாந்தமாகவே பதில் சொல்லிக் கொண்டிருக்கிறேன், அதை தொடர்ந்து என்னால் முடிந்த அளவில் அவர்களுக்கு சாந்தமாக புரியவைக்க முயற்சிப்பேன். 

    இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, பல வெற்றி படங்களை கொடுத்த பிரபல இயக்குனருடன் முதன்முறையாக இணைந்துள்ளார்.
    வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதோடு 100 கோடிக்கும் மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இப்படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் விஜய்யை வைத்து படம் இயக்க உள்ளதாக செய்திகள் பரவி வந்தன.

    வெற்றிமாறன்

    இந்நிலையில், வெற்றிமாறன் அடுத்ததாக சூர்யாவின் 40-வது படத்தை இயக்குகிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்படத்தை தயாரிக்கும் கலைப்புலி எஸ். தாணு, டுவிட்டரில், ‘’அசுரனின் அசுர வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன், முதல் முறையாக சூர்யாவுடன் இணையும் சூர்யாவின் 40வது படத்தை எனது வி கிரியேஷன்ஸ் தயாரிப்பதில் மகிழ்ச்சி’’ என தெரிவித்துள்ளார்.
    நயன்தாராவை வைத்து ‘மாயா’, டாப்சியை வைத்து ‘கேம் ஓவர்’ ஆகிய படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் அடுத்ததாக சமந்தாவை வைத்து இயக்க உள்ளார்.
    தமிழ் திரையுலகை கடந்த சில வருடங்களாக பேய் படங்கள் ஆக்கிரமித்துள்ளன. குற்ற பின்னணியிலான திகில் படங்களுக்கும் வரவேற்பு இருந்து வருகிறது. புதுமுக டைரக்டர்கள் எல்லோரும் இதை புரிந்து கொண்டு திகில் படங்களை எடுத்து வருகிறார்கள். முன்னணி கதாநாயகர்கள் மற்றும் கதாநாயகிகளும் திகில் படங்களில் நடிப்பதில் ஆர்வமாக இருக்கிறார்கள்.

    சமந்தா

    இந்த நிலையில், ‘மாயா’ ‘இறவா காலம்’ ‘கேம் ஓவர்’ ஆகிய படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் அடுத்ததாக ஒரு திகில் படத்தை இயக்க இருக்கிறார். அதில் கதாநாயகியாக சமந்தா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்துக்கு பிறகு சமந்தா தமிழில் நடிக்கும் படம், இது. அவருடைய கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. 
    சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம் ஆகிய 3 மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.
    சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல் அண்ணா சாலை மீரான் சாகிப் தெருவில் உள்ள விநியோகஸ்தர்கள் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. 532 உறுப்பினர்களை கொண்ட இச்சங்கத்தில் தலைவர், துணைத் தலைவர், செயலாளர், இணைச் செய லாளர், பொருளாளர், 16 கமிட்டி உறுப்பினர்கள் ஆகிய பொறுப்புகளுக்கு, நடிகர் டி.ராஜேந்தர் தலைமையில் ஒரு அணியும், விநியோகிஸ்தர் அருள்பதி தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிடுகின்றன.

    திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தேர்தலில் வாக்களிக்க வந்த பிரபலங்கள்

    தேர்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி பாட்ஷா முன்னிலையில், காலை 9 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. நடிகர்கள் சரத்குமார், டி.ராஜேந்தர், ராதாரவி, நடிகைகள் ராதிகா, பூர்ணிமா பாக்யராஜ், இயக்குனர்கள் தங்கர் பச்சான், எஸ்.ஏ.சந்திரசேகர், கே.டி.குஞ்சுமோன் உள்ளிட்ட உறுப்பினர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்குகளை பதிவு செய்தனர். மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். அதன் பின்னர் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
    ஆன்லைனில் மது ஆர்டர் செய்த நடிகை பிரியா பானர்ஜியிடம் ரூ.35 ஆயிரம் ரூபாய் மோசடி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    தமிழில் விதார்த், ராதிகா ஆப்தே நடித்த சித்திரம் பேசுதடி-2 படத்தில் இன்னொரு கதாநாயகியாக நடித்தவர் பிரியா பானர்ஜி. தெலுங்கில் கிஸ், அசுரா, ஜஸ்பா ஆகிய படங்களிலும், இந்தியில் தேவ் படத்திலும் நடித்து இருக்கிறார். மும்பையில் உள்ள கர் பகுதியில் வசிக்கிறார்.

    பிரியா பானர்ஜி ஆன்லைனில் மதுபாட்டில் வாங்க ஆர்டர் கொடுத்தார். அப்போது அவருக்கு ஒரு போன் அழைப்பு வந்தது. அதில் பேசியவர் முதலில் பணம் செலுத்துங்கள் மது பாட்டிலை வீட்டுக்கு கொண்டு தருகிறோம் என்றார். அதோடு வங்கி டெபிட் கார்டு விவரங்களையும் கேட்க, பிரியா பானர்ஜி சொல்லி உள்ளார்.

    உடனடியாக அவரது கணக்கில் இருந்து ரூ.23 ஆயிரம் எடுக்கப்பட்டு உள்ளதாக செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். வந்தது. அதிர்ச்சியான பிரியா பானர்ஜி போனில் பேசியவரிடம் தொடர்பு கொண்டு அதிகமான பணம் எடுத்துள்ளீர்களே என்று கேட்டார். உடனே அந்த நபர் மன்னித்து விடுங்கள் மேடம் உங்கள் கூகுள் பே பார்கோடை அனுப்பி அதில் ஸ்கேன் செய்யுங்கள் உங்கள் ரூபாய் திரும்ப வந்துவிடும் என்றார்.

    பிரியா பானர்ஜி

    அவர் சொன்னபடி பிரியா செய்ய மேலும் 12 ஆயிரம் பறிபோனது. உடனே அந்த நபருக்கு பிரியா பானர்ஜி போன் செய்ய அவரது செல்பொன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. அதிர்ச்சியான பிரியா பானர்ஜி போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து செயல்பட்டு மேலும் பணம் வேறு கணக்குக்கு மாறுவதை தடுத்து நிறுத்திய போலீசார் 2 மணிநேரத்தில் பணத்தை மீட்டு கொடுத்தனர்.
    பிரபுதேவா இயக்கத்தில் சல்மான்கான், கிச்சா சுதிப், சோனாக்‌ஷி சின்ஹா நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘தபங் 3’ படத்தின் விமர்சனம்.
    போலீஸ் அதிகாரியாக இருக்கும் சல்மான்கான், நேர்மையாகவும், ரவுடிகளிடம் இருந்து பறிக்கும் பணத்தை, போலீஸ்காரர்களுக்கு கொடுத்து வருகிறார். இந்நிலையில், பெண்களை கட்டாயப்படுத்தி தவறான தொழிலை செய்யச் சொல்லும் கும்பலை அடித்து நொறுக்குகிறார் சல்மான்கான்.

    இந்த கும்பலுக்கு தலைவனாக கிச்சா சுதீப் இருப்பது சல்மான்கானுக்கு தெரிய வருகிறது. ஏற்கனவே இருக்கும் பழைய பகை காரணமாக இருவருக்கும் மோதல் ஏற்படுகிறது. சல்மானுக்கும், கிச்சா சுதீப்புக்கும் இடையே இருக்கும் பழைய பகை என்ன? இவர்களின் மோதல் எப்படி முடிவு பெற்றது என்பதே படத்தின் மீதிக்கதை.

    தபங் 3

    சுல்புல் பாண்டேவாக நடித்திருக்கும் சல்மான்கான், நடை, உடல் மொழி என அனைத்திலும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். குறிப்பாக ப்ளாஷ்பேக்கில் சென்டிமென்ட்டாக நடித்து ரசிகர்களிடம் கைத்தட்டல் பெற்றிருக்கிறார். காமெடியிலும், சண்டைக்காட்சிகளிலும், செம்ம ஸ்கோர் செய்திருக்கிறார். 

    சல்மான்கானுக்கு ஏற்ற வில்லனாக நடித்திருக்கிறார் கிச்சா சுதிப். தன்னுடைய வில்லத்தனத்தால் ரசிகர்களை மிரள வைத்திருக்கிறார். நாயகியாக வரும் சோனாக்‌ஷி சின்ஹா அழகு பதுமையாக வந்து செல்கிறார். மற்றொரு நாயகியாக வரும் சாய் மஞ்சிரேக்கர் அலட்டல் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

    தபங் 3

    தனக்கே உரிய ஸ்டைலில் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் பிரபுதேவா. ஆட்டம், பாட்டம், சண்டை, சென்டிமென்ட், பன்ச் வசனம் அனைத்தையும் திறம்பட கொடுத்திருக்கிறார். தமிழ் டப்பிங் வசனம் படத்திற்கு பலம். பல இடங்களில் பார்ப்பவர்களை சிரிக்க வைத்து போரடிக்காமல் கொண்டு சென்றிருக்கிறது.

    சாஜித் அலி இசையில் பாடல் அனைத்தும் கேட்கும் ரகம். இவரின் பின்னணி இசையும், மகேஷ் லிமாயேயின் ஒளிப்பதிவோடு சேர்ந்து படத்தை பார்க்கும் போது கூடுதல் ரசனை.

    மொத்தத்தில் ‘தபாங் 3’ சபாஷ் போடலாம்.
    சமுத்திரகனி, சுனைனா, லீலா சாம்சன், சாரா அர்ஜுன், மணிகண்டன் கே, நிவேதிதா நடிப்பில் ஹலிதா சமீம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சில்லுக்கருப்பட்டி படத்தின் முன்னோட்டம்.
    சமுத்திரகனி, சுனைனா, லீலா சாம்சன், சாரா அர்ஜுன், மணிகண்டன் கே, நிவேதிதா மற்றும் பலர் நடித்துள்ள படம் சில்லுக்கருப்பட்டி. இத்திரைப்படத்தின் உரிமையை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் வாங்கியிருக்கிறது. மேலும் சக்தி பிலிம் பேக்டரி நிறுவனத்தின் சிறந்த வெளியீடாக உருவாகியுள்ள சிக்னேச்சர் வெளியீடாக இத்திரைப்படம் வெளியாகவுள்ளது.

    இப்படம் குறித்து இயக்குநர் ஹலிதா சமீம் கூறியதாவது, ‘நான் மிகப்பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறேன் “சில்லுக்கருப்பட்டி” படத்தினை பார்த்த மாத்திரத்தில் சூர்யா சார், ஜோதிகா மேடம் இருவரும் மனதார எங்களது குழுவை பாராட்டினார்கள். மேலும் உடனடியாக இப்படத்தின் உரிமையை வாங்குவதாக அறிவித்தார்கள் இதை விட மகிழ்ச்சி தரும் விசயம் எங்களுக்கு ஏதுமில்லை’ என்றார்.

    “சில்லுக்கருப்பட்டி” நகரப் பின்னணியில் நான்கு அழகான குறுங்கதைகளை கூறும் ஆந்தாலஜி வகை திரைப்படமாகும். டிவைன் புரடொக்‌ஷன்ஸ் சார்பில் வெங்கடேஷ் வேலினீனி இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார். 
    சிம்புவுடன் ‘ஒஸ்தி’, தனுஷுடன் ‘மயக்கம் என்ன’ படங்களில் நடித்து பிரபலமான ரிச்சா, ரகசிய திருமணம் செய்துக் கொண்டது பற்றி விளக்கம் அளித்துள்ளார்.
    சிம்புவுடன் ‘ஒஸ்தி’, தனுஷுடன் ‘மயக்கம் என்ன’ படங்களின் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சையமானவர் ரிச்சா கங்கோபாத்யா. 

    இந்நிலையில் இவர் தனது காதலர் ஜோ என்பவரை ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி வைரலானது. ஆனால் இதுகுறித்து தற்போது ரிச்சா தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக அறிவித்துள்ளார்.

    கணவருடன் ரிச்சா

    அதில், ''வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. கல்யாணம் முடிந்த மூன்று மாதங்கள் முடிந்தது. நாங்கள் இருவரும் அமெரிக்காவில் கிரேட் ஸ்கூல் கிளாஸ்மேட்ஸ். எங்கள் இருவருக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. சில செய்திகளில் குறிப்பிட்டது போல ரகசிய திருமணம் இல்லை. நான் திரையுலகை விட்டு 6 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனாலும் என் மேல் இவ்வளவு அன்பு காட்டுகிறீர்கள் மகிழ்ச்சி'' என்று குறிப்பிட்டுள்ளார்.
    இருட்டு அறையில் முரட்டு குத்து 2 படத்தில் நடித்து வரும் ஷாலு ஷம்மு, சினிமாத் துறையில் அது மட்டும் மாறினால் நன்றாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்.
    வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் குடும்பப்பாங்கான வேடத்தில் நடித்து கவர்ந்த ஷாலு ஷாமு சமூகவலைதளங்களில் கவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். அடுத்து இருட்டு அறையில் முரட்டு குத்து 2 படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார். 

    அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:- சினிமாத்துறை முன்பு இருந்ததைவிட இப்போது முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது. முன்பை காட்டிலும் இப்போது பெண்களுக்கு போட்டியும் அதிகமாக இருக்கிறது. ஆரோக்கியமும் அதிகமாக இருக்கிறது. நான் 'மீ டூ'வை பற்றி யதார்த்தமாக கூறிய கருத்து சர்ச்சைக்கு உள்ளானது. 

    ஷாலு ஷம்மு

    அதேபோல், நான் ஆடிய நடன வீடியோவும் சர்ச்சைக்குள்ளானது. சினிமாத்துறையில் ஒருவர் சர்ச்சைக்கு ஆளானால் அவர்களை அப்படியே ஒதுக்கி விடுகிறார்கள். அவர் அவர்களுக்கு எது விருப்பமோ அதை செய்கிறார்கள். இதனால் அவர்களுக்கு கிடைக்கக் கூடிய வாய்ப்பும் தவறிவிடுகிறது. 

    எனக்கும் பல வாய்ப்புகள் நழுவியது. நடிப்பதற்கு திறமை இருக்கிறதா என்று மட்டும் பார்த்தால் போதும், நடிப்பவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று பார்க்க தேவையில்லை. ஆகையால், சினிமாத் துறையில் இந்த ஒரு விஷயம் மட்டும் மாறினால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்' என்றார். 
    சிவகார்த்திகேயனின் ஹீரோ படமும், கார்த்தியின் தம்பி படமும் ரிலீசான சில மணி நேரத்தில் இணையத்தில் வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
    கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ், சவுகார் ஜானகி, நிகிலா போன்ற முன்னணி நடிகர்களின் நடிப்பில் நேற்று வெளியாகி இருக்கும் திரைப்படம் தம்பி. பாபநாசம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இந்த படத்தை இயக்கி உள்ளார். படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

    பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கல்யாணி பிரியதர்‌ஷன், அர்ஜுன், அபய் தியோல் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ஹீரோ படமும் நேற்று வெளியானது.

    சிவகார்த்திகேயன் - கார்த்தி

    2 படங்களும் வெளியான சில மணி நேரங்களிலேயே ஆன்லைன் பைரசி இணைய தளங்களில் திருட்டுத் தனமான வெளியாகி விட்டது. இதனால் 2 படக்குழுவினரும் அதிர்ச்சி அடைந்தனர். சனி, ஞாயிறு விடுமுறை நாட்களை நம்பித்தான் திரைப்படத்தின் வசூலே இருக்கிறது.

    அதற்கு முன்னரே, திரையரங்குகளில் ரிலீசான சில மணி நேரங்களிலேயே இணையத்திலும் வெளியானதால் விடுமுறை நாட்களில் படத்திற்கு போகலாம் என்ற எண்ணத்தில் இருப்பவர்களை வரவிடாமல் தடுப்பதாக அமைந்து விடும். இதனால் படங்களின் வசூல் பெரும் அளவில் பாதிக்கும் என்று திரைத்துறையினர் கவலை தெரிவித்தனர்.
    தமிழில் பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து பிரபலமான வடிவேலு, தன்னைப் பற்றி வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
    தமிழ் பட உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக கலக்கிய வடிவேலுக்கு வயதானவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைத்து வயதிலும் ரசிகர்கள் உள்ளனர்.

    இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க அவர் மறுத்ததால் இயக்குனர் ஷங்கர் அளித்த புகாரின் பேரில் வடிவேலுவை புதிய படங்களுக்கு ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது.

    இதனால் கடந்த சில வருடங்களாக படங்களில் வடிவேல் நடிக்கவில்லை. தயாரிப்பாளர் சங்கத்தின் தடையை மீறி அவருக்கு வாய்ப்பு அளிக்க பட அதிபர்கள் தயங்கினர். சில வாரங்களுக்கு முன்பு கமல்ஹாசனின் தலைவன் இருக்கின்றான் படத்தில் வடிவேல் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.

    வடிவேலு

    ஆனாலும் கமலின் அரசியல் பணிகள், இந்தியன்-2 பட வேலைகள் போன்றவற்றால் தலைவன் இருக்கின்றான் படப்பிடிப்பை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் ‘வெப்’ தொடர்களில் நடிக்க வடிவேலுக்கு அழைப்புகள் வருகின்றன. அதை ஏற்று ‘வெப்’ தொடருக்கு மாற வடிவேல் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியானது.

    இதுகுறித்து நடிகர் வடிவேலு கூறும்போது, நான் வெப் சீரிஸ் எதிலும் நடிக்கவில்லை. ஆனால் படம் தொடர்பான அறிவிப்பு ஜனவரி மாதத்தில் வெளிவரும் என்றார். 
    ×