என் மலர்
சினிமா

ஷாலு ஷம்மு
சினிமாத் துறையில் அது மட்டும் மாறினால் நன்றாக இருக்கும் - ஷாலு ஷம்மு
இருட்டு அறையில் முரட்டு குத்து 2 படத்தில் நடித்து வரும் ஷாலு ஷம்மு, சினிமாத் துறையில் அது மட்டும் மாறினால் நன்றாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் குடும்பப்பாங்கான வேடத்தில் நடித்து கவர்ந்த ஷாலு ஷாமு சமூகவலைதளங்களில் கவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். அடுத்து இருட்டு அறையில் முரட்டு குத்து 2 படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார்.
அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:- சினிமாத்துறை முன்பு இருந்ததைவிட இப்போது முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது. முன்பை காட்டிலும் இப்போது பெண்களுக்கு போட்டியும் அதிகமாக இருக்கிறது. ஆரோக்கியமும் அதிகமாக இருக்கிறது. நான் 'மீ டூ'வை பற்றி யதார்த்தமாக கூறிய கருத்து சர்ச்சைக்கு உள்ளானது.

அதேபோல், நான் ஆடிய நடன வீடியோவும் சர்ச்சைக்குள்ளானது. சினிமாத்துறையில் ஒருவர் சர்ச்சைக்கு ஆளானால் அவர்களை அப்படியே ஒதுக்கி விடுகிறார்கள். அவர் அவர்களுக்கு எது விருப்பமோ அதை செய்கிறார்கள். இதனால் அவர்களுக்கு கிடைக்கக் கூடிய வாய்ப்பும் தவறிவிடுகிறது.
எனக்கும் பல வாய்ப்புகள் நழுவியது. நடிப்பதற்கு திறமை இருக்கிறதா என்று மட்டும் பார்த்தால் போதும், நடிப்பவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று பார்க்க தேவையில்லை. ஆகையால், சினிமாத் துறையில் இந்த ஒரு விஷயம் மட்டும் மாறினால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்' என்றார்.
Next Story






