என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ’மேன் வெர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சிக்காக கர்நாடக வனப்பகுதிக்கு சென்ற நடிகர் ரஜினிகாந்துக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    டிஸ்கவரி தொலைக்காட்சியில் ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சி உலக புகழ் பெற்றதாகும். இந்த நிகழ்ச்சியின் நாயகன் பியர் கிரில்ஸ், அடர்ந்த வனப்பகுதியில் ஆபத்தான சூழ்நிலைகளில் எவ்வாறு உயிர் பிழைத்திருப்பது, அங்கிருந்து எப்படி தப்பி வருவது என்பது குறித்து மக்களுக்கு கற்று தருகிறார்.

    இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டுள்ளார். கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள பந்திபுரா புலிகள் காப்பகத்தில் மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு நடந்துவருகிறது. இந்நிலையில், இந்த படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்துக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    உடனே ரஜினிக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. காயம் காரணமாக படப்பிடிப்பு பாதிக்கப்படுமா என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
    அந்த நடிகர் என்றால் இலவசமாக நடிப்பேன் என்று முன்னணி நடிகை ஒருவர் திட்டவட்டமாக கூறியிருக்கிறாராம்.
    தமிழ் திரையுலகில் இயக்குனராக இருந்து நடிகராக வலம் வரும் குமார நடிகருக்கு, ‘ராசியான கதாநாயகன்’ என்ற பெயர் கிடைத்து இருக்கிறதாம். அவர் நடிக்கிற படங்கள் அனைத்தும் வெற்றி பெறுவதால், அவருடன் ஜோடி போட பெரும்பாலான கதாநாயகிகள் விரும்புகிறார்களாம். அவர்களில், ‘அங்காடி’ நடிகையும் ஒருவராம்.

    இருவரும் ஜோடியாக நடித்து விரைவில் திரைக்கு வர இருக்கும் இரண்டாம் பாக படத்துக்கு வினியோகஸ்தர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறதாம். இதை கேள்விப்பட்ட ‘அங்காடி’ நடிகை, “குமார நடிகருடன் ஜோடி போட வாய்ப்பு வந்தால், சம்பளமே வாங்காமல், இலவசமாக நடிக்க தயார்” என்கிறாராம். 
    ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சர்வர் சுந்தரம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    சந்தானம் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘டகால்டி’. இப்படம் ஜனவரி 31ம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதே தேதியில் சந்தானம் நடிப்பில் உருவான மற்றொரு படமான ‘சர்வர் சுந்தரம்’ திரைப்படமும் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், சர்வர் சுந்தரம் திரைப்படம் பிப்ரவரி 14ம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ஆனந்த் பால்கி இயக்கியுள்ள சர்வர் சுந்தரம் படத்தில் சந்தானம் ஜோடியாக வைபவி சாண்டில்யா நடித்திருக்கிறார். பிஜேஷ், கிட்டி, மயில்சாமி, சண்முகராஜன், சுவாமிநாதன், ராதா ரவி, செஃப் தாமோதரன், வெங்கடேஷ் பாட், மாயா சுந்தரகிருஷ்ணன், பூனம் ஷா, பிரியங்கா ஷா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

    சர்வர் சுந்தரம்

    சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். 
    பட்டதாரி, களவாணி மாப்பிள்ளை படங்களில் நடித்த அதிதி மேனன், படக்குழுவினரிடம் அட்வான்ஸ் வாங்கிவிட்டு மாயமாகி இருக்கிறார்.
    ‘பட்டதாரி’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மலையாள நடிகை அதிதி மேனன். அட்டக்கத்தி தினேசுடன் ‘களவாணி மாப்பிள்ளை’ படத்தில் நடித்திருந்தார். நடிகர் அபி சரவணனுடன் ஏற்பட திருமண பிரச்சினையை அடுத்து சென்னையில் இருந்து கிளம்பி கேரளா சென்றுவிட்டார். 

    சமீபத்தில் வெளியான பிக் பிரதர் படத்தில் மோகன்லாலுடன் மிர்னா மேனன் என பெயர் மாற்றி நடித்தார். இந்நிலையில் கட்டம் போட்ட சட்டை என்ற படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்கள் அதிதி மேனனை வலை வீசி தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.

    அதிதி மேனன்

    கடந்த ஆண்டு ஒரு லட்சம் ரூபாய் முன்பணம் கொடுத்து, அதிதி மேனனை தங்கள் படத்தில் ஒப்பந்தம் செய்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு வாரம் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து விட்டு, பின்னர் கேரளா சென்ற அதிதியை, அதன் பிறகு தொடர்புகொள்ள முடியவில்லை என தெரிவித்துள்ளனர்.

    சமூக வலைதளங்கள் மூலம் அதிதியை தொடர்பு கொள்ள முயன்றதாகவும், ஆனால் அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட சங்கங்களில் புகார் அளிக்க உள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
    மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் ‘தளபதி 65’ படம் பற்றிய முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
    பிகில் படத்தை தொடர்ந்து விஜய் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இப்படத்தில் விஜய்யுடன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், விஜய்யின் அடுத்த படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யின் 65வது படத்தை சுதா கொங்காரா இயக்க இருப்பதாகவும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

    விஜய்

    விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    பட்டாஸ் படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கர்ணன் படத்தின் புகைப்படம் ஒன்று வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    தனுஷ் நடிப்பில் தற்போது பட்டாஸ் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தை அடுத்து தற்போது ‘கர்ணன்’ என்னும் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இப்படத்தை இயக்கி வருகிறார்.

    தாணு தயாரித்து வரும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

    கர்ணன் படத்தின் புகைப்படம்

    மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் தயாராகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு நெல்லையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கையில் ஆயுதத்துடன் மலை மேல் தனுஷ் நிற்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 
    அந்த காட்சியில் நடித்தபோது மிகவும் பதட்டமாக இருந்தது என்று நடிகை சிருஷ்டி டாங்கே சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
    சாய் ராஜ்குமார் இயக்கத்தில் சேரன், சிருஷ்டி டாங்கே நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் ராஜாவுக்கு செக். எஸ்டிசி நிறுவனம் வெளியிட்ட இந்த படத்தில் சிருஷ்டி டாங்கே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் கதாபாத்திரத்தில் துணிச்சலாக நடித்து இருந்தார். ஒரு காட்சியில் நிர்வாணமாகவும் நடித்து இருந்தார். அவரது இந்த அர்ப்பணிப்புக்கு பாராட்டுகள் கிடைத்து வருகிறது. 

    அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: சாய்ராஜ்குமார் அந்த சர்ச்சைக்குரிய காட்சியும் சொன்னார். நான் தயங்கினேன். அந்த காட்சி கதைக்கு எந்த அளவுக்கு முக்கியம் என்பதையும் எப்படி எடுக்க இருக்கிறோம் என்பதையும் அவர் விளக்கியதால் சம்மதித்தேன். அந்த காட்சியில் நடித்தபோது மிகவும் பதட்டமாக இருந்தது. ஆனால் படத்தில் மிக முக்கியமான காட்சியாக அதை பார்க்கும்போது நடித்ததன் முக்கியத்துவம் புரிந்தது. 

    சிருஷ்டி டாங்கே

    ராஜாவுக்கு செக் படம் பேசும் பெண்கள் பாதுகாப்பு என்பது இன்றைக்கு மிகவும் முக்கியமான, அவசியமான ஒரு விஷயம். பெண்களுக்கு நடக்கும் தாக்குதல்கள், பலாத்காரங்களுக்கு ஆண்கள் தானே காரணம். அவர்களை தான் நாம் கண்டிக்க வேண்டும். பதிலாக பெண்களை தான் நாம் குறை சொல்கிறோம். அது தவறு. 

    பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். அப்போதுதான் பெண்களை அவள் அனுமதி இல்லாமல் தொட பயப்படுவார்கள். சமீபத்தில் கூட 8ஆம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியரே பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார். இதை எல்லாம் பார்த்தால் வருத்தமாக இருக்கிறது. பெண்கள் தங்களுக்கு நடக்கும் இதுபோன்ற கொடுமைகளை துணிச்சலாக வெளியில் பேச முன்வரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
    தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் பிரபாஸ், அனுஷ்காவுடன் நடிக்க மறுத்த செய்தி தற்போது வெளியாகியுள்ளது.
    'சாஹோ' படத்திற்கு பிறகு ராதா கிருஷ்ண குமார் இயக்கும் படத்தில் பிரபாஸ் நடித்து வருகிறார். காதல் கதையாக உருவாகி வரும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு இத்தாலியில் நடந்தது. பிரபாஸிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். தற்போது அவர்களின் ரொமான்ஸ் காட்சிகள் ஐதராபாத்தில் படமாக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பிரபாஸ் - பூஜா ஹெக்டேயின் கெமிஸ்ட்ரி சிறப்பாக வந்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது என ராதா கிருஷ்ண குமார் டுவீட் செய்துள்ளார். மேலும், இப்படத்தில் முதலில் பிரபாசுக்கு ஜோடியாக அனுஷ்காவைத் தான் நடிக்க வைக்க திட்டமிட்டார் ராதா கிருஷ்ண குமார். 

    அனுஷ்கா - பிரபாஸ்

    ஆனால் பாகுபலி படங்களுக்கு பின் அவர்களை இணைத்து காதல் கிசுகிசு, திருமண வதந்திகள் பரவியதால், அனுஷ்காவிற்கு பதிலாக வேறு நடிகையை தேர்வு செய்யும் படி பிரபாஸே கூறினாராம். இதையடுத்தே பூஜா ஹெக்டேவை ஒப்பந்தம் செய்திருக்கிறார். இந்த செய்தி இப்போது தெரிய வந்துள்ளது.
    மேயாத மான் படம் மூலம் புகழ் பெற்ற நடிகை பிரியா பவானி சங்கர், தனது காதலர் யார் என்பதை தற்போது அறிவித்திருக்கிறார்.
    சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்த நடிகை பிரியா பவானி சங்கர், 'மேயாத மான்' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற வெற்றி படங்களில் நடித்தவர் இப்போது, 'பொம்மை, வான், மாஃபியா, குருதி ஆட்டம்' உட்பட அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார். 

    டிவியில் நடிக்கும் போது சரி, அதற்கு பின்னரும் சரி இவரை சுற்றி காதல் செய்திகள் இறக்கை கட்டி பறந்தன. சமீபத்தில் கூட இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா உடன் காதல் கிசுகிசுவில் சிக்கினார். ஆனால் இதை மறுத்து சூர்யா பதிவிட்டார். பிரியா பவானி சங்கர், நீண்ட காலமாகவே தனது கல்லூரி கால நண்பரை காதலிப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அதை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இருப்பினும் அவருடன் இருக்கும் போட்டோக்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார். 

    பிரியா பவானி சங்கர்

    இந்நிலையில் அந்த நண்பருடன் இருக்கும் போட்டோவை பதிவிட்டு பிறந்தநாள் வாழ்த்து கூறியிருக்கும் பிரியா, கூடவே நட்பு, காதல் கலந்த ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அதில், 10 ஆண்டுகளுக்கு முன் கல்லூரி காலத்தில் மகிழ்ச்சியான, நம்பிக்கை உள்ள, கவர்ச்சி இல்லாத சுமாரான அழகுடன் இருந்த என்னை, நீ காதலித்த போது எனக்கு ஆச்சர்யாக இல்லை. ஆனால் இப்போதும் அதே அன்புடன் நீ என்னுடன் இருப்பது ஆச்சர்யமாக உள்ளது. உடைந்து போன ஒன்றை ஒன்று சேர்ப்பது என்பது வேடிக்கையான உற்சாகமான விஷயம் அல்ல. நீ, நான் கேட்க மறந்த இசை. எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தா அவள் வாழ்க்கைல உன்னை மாதிரி ஒரு ஆண் இருக்கனும்னு நான் கடவுளை கேட்டுக்கிறேன். நட்சத்திரங்கள் நிறைந்த என் உலகில் நீதான் என் சூரிய ஒளியாக இருக்கிறாய். பிறந்தநாள் வாழ்த்துகள் மா... இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
    ரஜினி பங்கேற்கும் ’மேன் வெர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சி, கர்நாடக வனப்பகுதியில் நடத்தப்படுவது ஏன் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
    டிஸ்கவரி தொலைக்காட்சியில் ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சி உலக புகழ் பெற்றதாகும். இந்த நிகழ்ச்சியின் நாயகன் பியர் கிரில்ஸ், அடர்ந்த வனப்பகுதியில் ஆபத்தான சூழ்நிலைகளில் எவ்வாறு உயிர் பிழைத்திருப்பது, அங்கிருந்து எப்படி தப்பி வருவது என்பது குறித்து மக்களுக்கு கற்று தருகிறார்.

    உத்தரகாண்ட் மாநிலம் ஜிம் கார்பெட் தேசிய வன உயிரியல் பூங்காவில் பிரதமர் மோடி, வனவிலங்கு பாதுகாப்பை மையக்கருத்தாக கொண்டு, பிரபல நிகழ்ச்சித் தொகுப்பாளர் பியர் கிரில்சுடன் இணைந்து பங்கேற்ற ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சி, கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகி பெரும் வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள பந்திபுரா புலிகள் காப்பகத்தில் மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு நடந்துவருகிறது. 2 நாட்கள் நடக்கும் இந்த படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நிகழ்ச்சி தொகுப்பாளர் பியர் கிரில்ஸுடன் இணைந்து பங்கேற்கிறார்.

    பியர் கிரில்ஸ், ரஜினிகாந்த்

    இதற்காக நேற்று ரஜினி விமானம் மூலம் மைசூர் சென்றார். பந்திபூர் காட்டு பகுதியில் 2 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர். பந்திபூர் காட்டுப்பகுதி கர்நாடக - கேரள மாநிலங்களுக்கு இடையேயான எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது. இது புலிகள் பாதுகாப்பு சரணாலயமாக அறிவிக்கப்பட்ட பகுதி. 

    இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியிருப்பதாவது:- ரஜினி படப்பிடிப்பை நடத்திக்கொள்ள 2 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திங்கள், செவ்வாய் ஆகிய 2 நாட்கள் படப்பிடிப்பு நடக்கிறது. ஆனால் படப்பிடிப்புக்கு அனுமதி கோரும்போது ரஜினி நடிக்கும் படம் என்று குறிப்பிடவில்லை. பதிலாக ரஜினி சிறப்பு விருந்தினராக படப்பிடிப்புக்கு வருவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

    ரஜினி பந்திபூரில் உள்ள ஒரு ரிசார்ட்டில் தங்கி உள்ளார். மேலும் சில நாட்கள் இங்கே படப்பிடிப்பு நடைபெறும் என தெரிகிறது. படப்பிடிப்பு முடிந்த பிறகு படப்பிடிப்பு காட்சிகளை வனத்துறை அதிகாரிகள் பார்த்த பிறகே அதற்கான அனுமதி வழங்குவார்கள்’. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    ரஜினி படப்பிடிப்பை வடமாநில காட்டு பகுதிகளில் நடத்த முதலில் திட்டமிட்டதாகவும் அதற்கு இயற்கை ஆர்வலர் பிரசாந்த் எதிர்ப்பு தெரிவித்ததால் படப்பிடிப்பை மைசூரு காட்டு பகுதிக்கு மாற்றி உள்ளனர். ‘வனத்துறை இதுபோன்ற படப்பிடிப்புக்கு அனுமதி தருவதை நிறுத்த வேண்டும். வன விலங்குகளுக்கு இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுகிறது. சினிமா மட்டும் அல்ல ஆவண படங்களுக்கும் அனுமதி கொடுக்க கூடாது’ என்று பிரசாந்த் கூறினார்.
    தனிகை, குவின்ஸி, வேல்முருகன் நடிப்பில் நியூட்டன் ஜி, தயாரித்து இயக்கும் "கருப்பு கண்ணாடி" படத்தின் முன்னோட்டம்.
    அணி கிரியேஷன்ஸ் சார்பில் அறிமுக இயக்குனர் நியூட்டன் ஜி, தயாரித்து இயக்கும் படம் "கருப்பு கண்ணாடி". இப்படத்தில் கலைஞர் டிவி தொகுப்பாளர் தனிகை கதாநாயகனாகவும், புதுமுக நடிகை குவின்ஸி கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். மேலும் சரண் ராஜ், நடிகர் கஜரஜ், பாடகர் வேல்முருகன், நடிகை சுபாஷினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

    கருப்பு கண்ணாடி திரைப்படம் சைக்கோ த்ரில்லர் வகையை சார்ந்தது. சம்சாத் ஒளிப்பதிவை கவனிக்க, சித்தார்த்தா பிரதீப் இசை அமைக்கிறார். எழுமின், உருமி ஆகிய திரைப்படங்களின் படத்தொகுப்பாளராக பணியாற்றிய கார்த்திக் ராம் இப்படத்திற்கு படத்தொகுப்பாளர் ஆகவும், மெட்ரோ மகேஷ் இப்படத்திற்கான சண்டை காட்சிகள் வடிவமைப்பாளர் ஆகவும் பணியாற்ற உள்ளனர்.
    பாலிவுட்டில் முன்னணி நடன இயக்குனராக இருக்கும் கணேஷ் ஆச்சாரியா, தன்னை ஆபாச வீடியோ பார்க்க வற்புறுத்துவதாக பெண் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
    பாலிவுட்டில் முன்னணி நடன இயக்குனராக இருப்பவர் கணேஷ் ஆச்சாரியா. இவர் தமிழில் ஜீவா-ஸ்ரேயா நடிப்பில் வெளியான ரெளத்திரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சில பாலிவுட் படங்களையும் இயக்கியுள்ளார். 

    இந்நிலையில், கணேஷ் ஆச்சார்யா மீது 33 வயது பெண் ஒருவர், மராட்டிய பெண்கள் ஆணையம் மற்றும் அம்போலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் தனது புகாரில் நடன இயக்குனர் தனது வருமானத்திலிருந்து கமிஷன் கேட்டதாகவும், ஆபாச வீடியோக்களைப் பார்க்க கட்டாயப்படுத்தியதாகவும் கூறி உள்ளார். இது பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கணேஷ் ஆச்சாரியா

    முன்னதாக, நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா, தன்னைப் பற்றி வதந்திகளை பரப்பியதாகவும், நற்பெயரைக் கெடுத்ததாகவும் நடிகை தனுஸ்ரீ தத்தா கடுமையாக குற்றம்சாட்டி இருந்தார். ஏற்கனவே மூத்த நடன இயக்குனர் சரோஜ் கான், கணேஷ் ஆச்சார்யா தனது நடனக் கலைஞர்களை சுயலாபத்திற்கு பயன்படுத்துவதாகவும். சினிமா டான்சர்ஸ் அசோசியேஷனை (சிடிஏ) கேவலப்படுத்துவதாகவும் குற்றம்சாட்டி இருந்தார்.
    ×