search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    பியர் கிரில்ஸ், ரஜினிகாந்த்
    X
    பியர் கிரில்ஸ், ரஜினிகாந்த்

    ரஜினி பங்கேற்கும் "மேன் வெர்சஸ் வைல்ட்" கர்நாடகாவில் நடத்தப்படுவது ஏன்?

    ரஜினி பங்கேற்கும் ’மேன் வெர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சி, கர்நாடக வனப்பகுதியில் நடத்தப்படுவது ஏன் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
    டிஸ்கவரி தொலைக்காட்சியில் ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சி உலக புகழ் பெற்றதாகும். இந்த நிகழ்ச்சியின் நாயகன் பியர் கிரில்ஸ், அடர்ந்த வனப்பகுதியில் ஆபத்தான சூழ்நிலைகளில் எவ்வாறு உயிர் பிழைத்திருப்பது, அங்கிருந்து எப்படி தப்பி வருவது என்பது குறித்து மக்களுக்கு கற்று தருகிறார்.

    உத்தரகாண்ட் மாநிலம் ஜிம் கார்பெட் தேசிய வன உயிரியல் பூங்காவில் பிரதமர் மோடி, வனவிலங்கு பாதுகாப்பை மையக்கருத்தாக கொண்டு, பிரபல நிகழ்ச்சித் தொகுப்பாளர் பியர் கிரில்சுடன் இணைந்து பங்கேற்ற ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சி, கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகி பெரும் வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள பந்திபுரா புலிகள் காப்பகத்தில் மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு நடந்துவருகிறது. 2 நாட்கள் நடக்கும் இந்த படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நிகழ்ச்சி தொகுப்பாளர் பியர் கிரில்ஸுடன் இணைந்து பங்கேற்கிறார்.

    பியர் கிரில்ஸ், ரஜினிகாந்த்

    இதற்காக நேற்று ரஜினி விமானம் மூலம் மைசூர் சென்றார். பந்திபூர் காட்டு பகுதியில் 2 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர். பந்திபூர் காட்டுப்பகுதி கர்நாடக - கேரள மாநிலங்களுக்கு இடையேயான எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது. இது புலிகள் பாதுகாப்பு சரணாலயமாக அறிவிக்கப்பட்ட பகுதி. 

    இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியிருப்பதாவது:- ரஜினி படப்பிடிப்பை நடத்திக்கொள்ள 2 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திங்கள், செவ்வாய் ஆகிய 2 நாட்கள் படப்பிடிப்பு நடக்கிறது. ஆனால் படப்பிடிப்புக்கு அனுமதி கோரும்போது ரஜினி நடிக்கும் படம் என்று குறிப்பிடவில்லை. பதிலாக ரஜினி சிறப்பு விருந்தினராக படப்பிடிப்புக்கு வருவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

    ரஜினி பந்திபூரில் உள்ள ஒரு ரிசார்ட்டில் தங்கி உள்ளார். மேலும் சில நாட்கள் இங்கே படப்பிடிப்பு நடைபெறும் என தெரிகிறது. படப்பிடிப்பு முடிந்த பிறகு படப்பிடிப்பு காட்சிகளை வனத்துறை அதிகாரிகள் பார்த்த பிறகே அதற்கான அனுமதி வழங்குவார்கள்’. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    ரஜினி படப்பிடிப்பை வடமாநில காட்டு பகுதிகளில் நடத்த முதலில் திட்டமிட்டதாகவும் அதற்கு இயற்கை ஆர்வலர் பிரசாந்த் எதிர்ப்பு தெரிவித்ததால் படப்பிடிப்பை மைசூரு காட்டு பகுதிக்கு மாற்றி உள்ளனர். ‘வனத்துறை இதுபோன்ற படப்பிடிப்புக்கு அனுமதி தருவதை நிறுத்த வேண்டும். வன விலங்குகளுக்கு இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுகிறது. சினிமா மட்டும் அல்ல ஆவண படங்களுக்கும் அனுமதி கொடுக்க கூடாது’ என்று பிரசாந்த் கூறினார்.
    Next Story
    ×