என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தமிழில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு பெண் போலீசுக்கு உதவுங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
    கொரோனா வைரஸ் உலகை முடக்கிப்போட்டிருக்கிறது. நோயை கட்டுப்படுத்த மனிதர்கள் அனைவரும் வீட்டிற்குள் அடைந்து கிடக்கிறார்கள். கொரோனாவிற்காக தங்களை தனிமைப்படுத்தி கொள்ளும் இந்த கால கட்டம், ஒரு வகையில் வெகு மோசமான பொருளாதார வீழ்ச்சியையும் ஏழைகளை பாதிப்பதாகவும் இருந்து வருகிறது.  இந்த சூழ்நிலையில் போலீஸ், மீடியா, மருத்துவர்கள் மட்டும் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். 

    இந்நிலையில் நடிகர் யோகி பாபு போலீசுக்கு உதவி செய்யுங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளார். வீட்டின் அருகில் போலீஸ் காவலர்கள் யாரேனும் கண்காணிப்பு பணியில் நின்றிருந்தால் குடிக்க தண்ணீர் கொடுத்து உதவுங்கள் என்றும், பெண்காவலர்கள் இருந்தால் அவர்களை உங்கள் வீட்டின் கழிப்பறையை பயன்படுத்திக் கொள்ளுமாறு சொல்லுங்கள் என்றும் அதுவே அவர்களுக்கு பேருதவியாக இருக்கும் என்றும் நடிகர் யோகிபாபு தனது தெரிவித்துள்ளார். 

    மக்களுக்காக பணி செய்யும் காவலர்களுக்கு பொதுமக்கள் கண்டிப்பாக உதவி செய்ய வேண்டும் என்ற நல்ல அறிவுரையை கூறிய நடிகர் யோகிபாவுக்கு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
    பிரபல இந்தி திரைப்பட பாடகி கனிகா கபூருக்கு 5-வது பரிசோதனையிலும் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்ய பட்டுள்ளது.
    பிரபல இந்தி திரைப்பட பாடகி கனிகா கபூர், லண்டனுக்கு சென்றுவிட்டு இந்தியா திரும்பிய நிலையில், வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளாமல் 3 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். நட்சத்திர ஓட்டலிலும் தங்கி இருந்தார். பின்னர் அவருக்கு உடல் நிலை குன்றியதால் ஆஸ்பத்திரியில் பரிசோதித்தபோது கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது. 

    இதையடுத்து லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட 100-க்கும் மேற்பட்டோரை தனிமைப்படுத்தி கண்காணித்து வருகிறார்கள். கனிகாவை கைது செய்ய வேண்டும் என்றும் சிலர் வற்புறுத்தினர். கொரோனா நோயாளிகளுக்கு 48 மணி நேரத்துக்கு ஒருமுறை பரிசோதனை நடத்தப்படும். கனிகாவுக்கு 4 முறை பரிசோதனை செய்தும் கொரோனா தொற்று இருப்பதையே உறுதிப்படுத்தியது. 

    தற்போது 5-வது தடவையாக பரிசோதனை செய்தனர். இப்போதும் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதையே முடிவுகள் வெளிப்படுத்தின. ஆனாலும், அவரது உடல்நிலை கவலைப்படும்படி இல்லாமல் சீராக உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
    பிரபல வில்லன் நடிகர் சாய் தீனா தனது சொந்த செலவில் 250 குடும்பங்களுக்கு உதவி இருக்கிறார்.
    கொரோனா வைரஸ் உலகை முடக்கிப்போட்டிருக்கிறது. வல்லரசு நாடுகளே திண்டாடி வருகின்றன. நோயை கட்டுப்படுத்த மனிதர்கள் அனைவரும் வீட்டிற்குள் அடைந்து கிடக்கிறார்கள். கொரோனாவிற்காக தங்களை தனிமைப்படுத்தி கொள்ளும் இந்த கால கட்டம், ஒரு வகையில் வெகு மோசமான பொருளாதார வீழ்ச்சியையும் ஏழைகளை பாதிப்பதாகவும் இருந்து வருகிறது.  எ

    எளியவர்கள் பலருக்கு வெளியில் நடமாட முடியாத சூழல் இருப்பதால்,  எந்த ஒரு பணியும்  இல்லை, கையில் பணமும் இல்லை. இதனால்  நம்  நாட்டிலும் பெருமளவு ஏழைகள் உணவிற்கே திண்டாடும் நிலையும் உருவாகி வருகிறது.  பிரபலங்கள் சிலர் தங்களால்  முடிந்த அளவிற்கு பொது மக்களுக்கு உதவி செய்து வருகிறார்கள். 

    இந்த நிலையில் பிரபல வில்லன் நடிகர் சாய் தீனா உதவி செய்துள்ளார்.  தனது சொந்த செலவில் L.F.E.அமைப்பு மூலமாக 5 கிலோ அரிசி, 1 கிலோ கோதுமை மாவு, சாம்பார் பருப்பு ஆகிய பொருட்களை, 250 குடும்பங்களுக்கு  கொடுத்து உதவியுள்ளார் சாய் தீனா.
    ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத், அரவிந்த் சாமி நடிப்பில் உருவாகி வரும் தலைவி படத்தின் முன்னோட்டம்.
    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ’தலைவி’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. ஏ.எல்.விஜய் இயக்கும் இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத் நடிக்கிறார். எம்ஜிஆர் வேடத்தில் அரவிந்த் சாமி நடிக்கிறார். மேலும், பூர்ணா, மதுபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

    அரவிந்த் சாமி

    தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். விப்ரி நிறுவனம் சார்பில்  விஷ்ணு இந்தூரி இப்படத்தை தயாரிக்கிறார்.  விஜேந்திர பிரசாத் கதை எழுதியுள்ள இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இப்படம் இந்தாண்டு ஜூன் 26-ந் தேதி ரிலீசாக உள்ளது. 
    பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத், போதைக்கு அடிமையாகி பின்னர் மீண்டது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
    பிரபல இந்தி நடிகையான கங்கனா ரணாவத், தற்போது ‘தலைவி’ படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடித்து வருகிறார். வீடியோ ஒன்றில் இளமை கால வாழ்க்கையை நினைவு கூர்ந்து அவர் பேசி இருப்பதாவது:- “எனக்கு 15 அல்லது 16 வயது இருக்கும்போது வீட்டைவிட்டு ஓடினேன். நட்சத்திரத்தை பிடித்துவிட முடியும் என்று அப்போது நினைத்தேன். அதன்பிறகு சினிமாவில் நடிக்க ஆரம்பித்தேன். போதை பழக்கம் ஏற்பட்டது. ஒன்றரை ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரை போதைக்கு அடிமையாக இருந்தேன். 

    கங்கனா ரணாவத்

    சில வகையான மனிதர்கள் வந்தனர். அவர்களிடம் இருந்து மரணத்தால் மட்டுமே என்னை காப்பாற்ற முடியும் என்ற நிலை இருந்தது. இந்த கஷ்டங்கள் எனது ‘டீன் ஏஜ்’ வாழ்க்கையில் நடந்தன. அதன் பிறகு நல்ல நண்பர் ஒருவர் வந்து யோகாவை சொல்லி கொடுத்தார். ராஜயோகா புத்தகம் ஒன்றையும் வழங்கினார். சுவாமி விவேகானந்தரை குருவாக ஏற்று என்னை வளர்த்துக்கொண்டேன். 

    எனது வாழ்க்கையில் அந்த சவாலான நேரங்கள் வராமல் இருந்திருந்தால் கூட்டத்தோடு காணாமல் போய் இருப்பேன். எனக்கு மன உறுதியும், திறமையும் உருவாக ஆன்மிகம் வழிகாட்டியது. மோசமான நேரங்கள்தான் உண்மையில் நல்ல நேரங்கள்”. இவ்வாறு வீடியோவில் பேசி உள்ளார்.
    அருவா படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், நடிகை பூஜா ஹெக்டே அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
    சூர்யா நடித்து முடித்துள்ள சூரரை போற்று படம் தற்போது ரிலீஸுக்கு தயாராக உள்ளது. ஏப்ரல் மாத இறுதியில் அல்லது மே துவக்கத்தில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப் படுகிறது. இப்படத்தை அடுத்து  ஹரி இயக்கத்தில் அருவா என்ற படத்தில் நடிக்கவுள்ளார். சூர்யாவின் 39வது படமாக உருவாகும் இதன் ஷூட்டிங் ஏப்ரல் மாதம் துவங்கும் என அறிவிக்கப்பட்டது. 

    ஆனால் அது தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக தடைபட்டுள்ளது.  இயக்குனர் ஹரி தற்போது நடிகர் நடிகைகளை தேர்வு செய்யும் பணிகளில் பிசியாக இருக்கிறார்.  இதனிடையே அருவா படத்தில்  சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின.

     பூஜா ஹெக்டே

    இந்நிலையில், பூஜா ஹெக்டே அதுகுறித்து டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது: நான் தமிழ் படத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வளம் வருகின்றன. ஆனால் நான் இதுவரை எதிலும் கையெழுத்திடவில்லை. கதைகள் தான் கேட்டு வருகிறேன். தமிழ் படத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். எல்லாம் சரியாக நடந்தால் இந்தாண்டு தமிழ் படத்தில் நடிப்பேன் என கூறியுள்ளார்.
    நடிகர் விஜய் சேதுபதி வில்லன் தோற்றத்தில் இருக்கும் புகைப்படத்தை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
    விஜய் சேதுபதி இமேஜ் பார்க்காமல் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்த திருநங்கை கதாபாத்திரத்துக்கு பாராட்டுகள் கிடைத்தன. சீதக்காதியில் வயதானவராக வந்தார். விக்ரம் வேதா, ரஜினிகாந்தின் பேட்ட படங்களில் வில்லன் வேடம் ஏற்றார். இந்த படங்களுக்கு பிறகு அவருக்கு வில்லன் வாய்ப்புகள் குவிகின்றன. 

    தற்போது விஜய்யின் மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். அடுத்து பிச்சிபாபு சனா இயக்கத்தில் உருவாகும் உப்பெனா என்ற தெலுங்கு படத்திலும் வில்லனாக நடித்து இருக்கிறார். இதில் கதாநாயகனாக வைஷ்ணவ் தேஜ் நடித்துள்ளார். நாயகியாக கீர்த்தி ஷெட்டி வருகிறார். கதாநாயகிக்கு தந்தையாகவும், வில்லனாகவும் விஜய் சேதுபதி வருகிறார். ஏற்கனவே சிரஞ்சீவியின் சைரா நரசிம்ம ரெட்டி தெலுங்கு படத்தில் விஜய் சேதுபதி நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    விஜய் சேதுபதி

    உப்பெனா படத்தின் விஜய் சேதுபதி தோற்றத்தை படக்குழுவினர் ஏற்கனவே வெளியிட்ட நிலையில், தற்போது மேலும் ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளனர். சிகரெட் பிடித்தபடி நாற்காலியில் கால்மேல் கால்போட்டு விஜய் சேதுபதி அமர்ந்திருப்பது போன்ற அந்த புகைப்படம்  சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. விஜய் சேதுபதி நடித்துள்ளதால் தமிழிலும் டப்பிங் செய்து வெளியிட ஏற்பாடுகள் நடக்கிறது.
    பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டா, தானும் விஷ்ணு விஷாலும் டேட்டிங் செய்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளார்.
    வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால். ஜீவா, ராட்சசன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். விஷ்ணுவிஷால் 2018-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட ரஜினி நட்ராஜ் என்பவரை கருத்து வேறுபாட்டினால் விவாகரத்து செய்து விட்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இதனை தொடர்ந்து பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டாவும் விஷ்ணு விஷாலும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியானது.

    விஷ்ணு விஷால், ஜுவாலா கட்டா

    ஆனால் இருவரும் அதுகுறித்து கருத்து தெரிவிக்காமல் மவுனம் காத்து வந்தனர். இந்நிலையில் ஜுவாலா கட்டா சமீபத்திய பேட்டியில் தனது காதல் குறித்து மனம்திறந்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது: நாங்கள் டேட்டிங் செய்து வருவது உண்மைதான். நான் ஏற்கனவே சொன்னது போல, இதில் மறைக்க வேண்டியது ஏதுமில்லை. நாங்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளவும் இருக்கிறோம். தேதி முடிவானதும் அறிவிப்போம். இதுபற்றி மேலும் தெரிவிக்க ஏதும் இல்லை' என்று கூறியுள்ளார். திருமணம் பற்றி விஷ்ணு விஷால், ஏதும் தெரிவிக்காத நிலையில்,  ஜுவாலா கட்டா பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
    மொட்டைமாடியில் போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களை கவர்ந்த ரம்யா பாண்டியனின் புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
    ராஜூ முருகன் இயக்கத்தில் தேசியவிருது வாங்கிய 'ஜோக்கர்', சமுத்திரக்கனி நடித்த 'ஆண் தேவதை' உள்ளிட்ட படங்களில் நடித்தவர், ரம்யா பாண்டியன். இவர், கடந்தாண்டு தன் வீட்டு மொட்டைமாடியில் எடுத்த போட்டோ ஷூட் வைரலானது. இதன்பின் பல்வேறு பட வாய்ப்புகள் வந்தும், தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சியில்  கவனம் செலுத்தி வந்தார். அதன்முலம் அவருக்கு தனி ரசிகர் பட்டாளம் உருவானது.

    சூர்யா, ரம்யா பாண்டியன்

    சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் ரம்யா பாண்டியன் சமீபத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் அடுத்த படம் குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ரம்யா பாண்டியன், சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ள படத்திலும், சி.வி.குமார் தயாரிக்கவுள்ள புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகப் கூறினார். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகமாகி உள்ளனர்.
    திரையுலகில் ஹீரோயின்கள் கோடி கோடியாய் சம்பாதித்தும் உதவ மனமில்லாமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளதாக பிரபல நடிகர் சாடியுள்ளார்.
    கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு அமல்படுத்தி உள்ள ஊரடங்கால் திரையுலகம் முற்றிலுமாக முடங்கி உள்ளது. சினிமா தொழிலாளர்கள் வேலை இழந்து பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு உதவ தமிழ், தெலுங்கு பட உலகில் நிதி திரட்டப்படுகிறது. தமிழ் திரைப்பட தொழிலாளர்களுக்கு உதவ முன்னணி கதாநாயகர்கள் பலர் பெப்சி அமைப்புக்கு நிதி கொடுத்து உள்ளனர்.

    அரிசி மூட்டைகளும் வழங்கப்படுகின்றன. துணை நடிகர்-நடிகைகள் மற்றும் நாடக நடிகர்களுக்கு உதவ நடிகர் சங்கத்துக்கும் நிதி வழங்கி வருகிறார்கள். தெலுங்கு நடிகர்களும் அங்குள்ள தொழிலாளர்களுக்கு நிதி உதவி செய்து வருகிறார்கள். ஆனால் கதாநாயகிகள் பணம் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    பிரம்மாஜி

    இதுகுறித்து பிரபல தெலுங்கு நடிகரும் தமிழில் ஸ்ரீகாந்துடன் ஜூட், சிம்புவின் சரவணா, பிரசாந்துடன் சாகசம் ஆகிய படங்களில் நடித்துள்ளவருமான பிரம்மாஜி கூறும்போது, ‘தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய படங்களில் நடிக்க கோடி கோடியாக சம்பளம் வாங்கிய மும்பை கதாநாயகிகள் சினிமா தொழிலாளர்களுக்கு உதவ முன்வராதது வியப்பாக உள்ளது. லட்சங்களை கொடுக்க வேண்டும் என்று இல்லை. சில ஆயிரம் ரூபாய்களையாவது கொடுத்து உதவி இருக்க வேண்டும். அதிக சம்பளம் வாங்கிய அவர்களுக்கு உதவ மனம் இல்லாதது ஆச்சரியமாக உள்ளது’ என்றார்.
    நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து மீண்டும் அஜித்துடன் இணைந்துள்ள எச்.வினோத், வலிமை தான் அடுத்த மங்காத்தா என தெரிவித்துள்ளார்.
    சதுரங்க வேட்டை படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எச்.வினோத். இதையடுத்து இவர் இயக்கிய தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதுவே அவருக்கு அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்று தந்தது. அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கி வெற்றி கண்ட எச்.வினோத், மீண்டும் அவரை வைத்து வலிமை படத்தை இயக்கி வருகிறார். இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்படும் படமாகவும் அது அமைந்துள்ளது.

    அஜித், எச்.வினோத்

    வலிமை படம் குறித்து எந்தவித தகவலையும் வெளியிடாமல் ரகசியம் காத்து வந்த இயக்குனர் எச்.வினோத், முதன்முறையாக அப்படம் குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: அஜித் நடித்ததிலேயே எனக்கு மிகவும் பிடித்த படம் மங்காத்தா. அஜித் ரசிகர்களே அடுத்த மங்காத்தாவான வலிமையை காண தயாராகுங்கள் என குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு அஜித் ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.
    தமிழில் சகுனி, மாஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிரணிதா, ஊரடங்கால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உதவ முன்வந்துள்ளார்.
    கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இந்த ஊரடங்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பலர் தினசரி உணவுக்கு கஷ்டப்படுகின்றனர். இதற்காக பல்வேறு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர்.

    பிரணிதா

    அந்த வகையில் தமிழில் சகுனி, மாஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிரணிதா தனது அறக்கட்டளை மூலம் உதவ முன்வந்துள்ளார். இதற்காக நிதி திரட்டும் முயற்சியில் இறங்கி உள்ளார். அறக்கட்டளை மூலம் 40 சதவீதம் நிதியை திரட்டிவிட்டார். மீதித்தொகையையும் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்த தொகையை வைத்து ஏழை எளிய மக்களுக்கு உணவும், உதவி பொருட்களும் வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளார். பிரணிதாவின் இந்த செயலுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
    ×