என் மலர்
சினிமா செய்திகள்
பொன்மகள் வந்தாள், பெண்குயின் போன்ற படங்களை போல் யோகிபாபுவின் படமும் நேரடியாக ஓடிடி-யில் வெளியாக உள்ளது.
யோகிபாபு நாயகனாக நடித்துள்ள படம் `காக்டெய்ல்'. அறிமுக இயக்குனர் முருகன் இயக்கியுள்ளார். இதில் யோகிபாபுவுடன், சாயாஜி ஷிண்டே நகைச்சுவை கலந்த இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் மனோபாலா, மைம்கோபி, சாமிநாதன், யோகி பாபுவின் நணபர்களாக ரமேஷ், மிதுன், டி.வி. புகழ் பாலா குரேஷி ஆகியோரும் நடித்துள்ளார்கள். `காக்டெயில்' என்ற பறவையும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.
விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் நடித்த `மதுரை வீரன்' படத்தின் இயக்குனரும், லிசா, டேனி ஆகிய படங்களின் தயாரிப்பாளருமான பிரபல ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா, இந்த படத்தை தயாரித்துள்ளார்.
இப்படத்தை மார்ச் 20-ந் தேதி வெளியிட திட்டமிட்டு இருந்தனர். கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. இந்நிலையில், இப்படத்தை திரையரங்குக்கு பதிலாக நேரடியாக ஓடிடி-யில் வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் வருகிற ஜூலை 10-ந் தேதி ஜீ5 தளத்தில் வெளியாக உள்ளது.
#Cocktail premiers on zee5 frm 10th july@iyogibabu@Kawin_8483@Muthaiahg@tridentartsoffl@Pgmediaworks@Ravijayamurugan@Saibhaski@Mimegopi@itsjosephjaxson@SOUNDARBAIRAVI@johnmediamanagr@Laharimusicpic.twitter.com/i0bLjBniCW
— Maalai Malar News (@maalaimalar) June 27, 2020
அறிமுக இயக்குனர் முருகன் இயக்கத்தில் யோகிபாபு, சாயாஜி ஷிண்டே நடிப்பில் உருவாகி இருக்கும் காக்டெய்ல் படத்தின் முன்னோட்டம்.
யோகிபாபு நாயகனாக நடித்துள்ள படம் `காக்டெய்ல்'. அறிமுக இயக்குனர் முருகன் இயக்கியுள்ளார். இதில் யோகிபாபுவுடன், சாயாஜி ஷிண்டே நகைச்சுவை கலந்த இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் மனோபாலா, மைம்கோபி, சாமிநாதன், யோகி பாபுவின் நணபர்களாக ரமேஷ், மிதுன், டி.வி. புகழ் பாலா குரேஷி ஆகியோரும் நடித்துள்ளார்கள். `காக்டெயில்' என்ற பறவை முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.
விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் நடித்த `மதுரை வீரன்' படத்தின் இயக்குனரும், லிசா, டேனி ஆகிய படங்களின் தயாரிப்பாளருமான பிரபல ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா, இந்த படத்தை தயாரித்துள்ளார். `காக்டெயில்' படத்தை பற்றி அவர் கூறியதாவது: ``இந்திய சினிமாவில் முதல்முறையாக ஒரு பறவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறது. அந்த பறவையுடன் ஒரு முருகன் சிலையும் முக்கிய பங்கு வகிக்கிறது. யோகி பாபு, நாய்க்கு முடிவெட்டும் கடை நடத்துகிற வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஜி.வி.பிரகாசிடம் பணிபுரிந்த சாய் பாஸ்கர், இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆகியிருக்கிறார். ரவீண் ஒளிப்பதிவு செய்துள்ளார். கதைப்படி, யோகி பாபுவும், அவருடைய நண்பர்களும் செய்யாத கொலை வழக்கு ஒன்றில் எதிர்பாராதவிதமாக சிக்கிக் கொள்கிறார்கள். கொலையானது யார், அந்த கொலையை செய்தது யார், அதில் இருந்து யோகி பாபுவும், நண்பர்களும் எப்படி வெளியே வருகிறார்கள்? அதில் பறவையின் பங்கு என்ன? என்பதே கதை.'' என கூறினார்.
சாத்தன்குளத்தில் உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்சின் குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
சென்னை:
சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் ஊரடங்கு விதிகளை மீறியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
கோவில்பட்டியில் உள்ள கிளைச் சிறையில் விசாரணைக் கைதிகளாக அடைக்கப்பட்ட இருவரும் அடுத்தடுத்து மரணடைந்தனர். இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
தந்தை மற்றும் மகனான ஜெயராஜ், பென்னிக்சை சாத்தான்குளம் போலீசார் விசாரணை என்ற பெயரில் அடித்தே கொன்றுவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இருவரின் உயிரிழப்புக்கு காரணமான போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்து தண்டனை வழங்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கோரிக்கை எழுந்து வருகிறது. இந்த சம்பவத்தில் உயிரிழந்த தந்தை மற்றும் மகனின் குடும்பத்தினருக்கு அனைத்து தரப்பு மக்களும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு மரணமடைந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்சின் குடும்பத்தினரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
ஜெயராஜின் மனைவி, மகளை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு ரஜினிகாந்த் ஆறுதல் கூறியுள்ளார். இந்த தகவலை கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
காவல் துறையை பெருமைப்படுத்தி 5 படம் எடுத்ததற்காக மிக மிக வேதனைப்படுகிறேன் என்று இயக்குனர் ஹரி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கோவில்பட்டியில் உள்ள கிளைச் சிறையில் விசாரணைக் கைதிகளாக இருந்த சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் அடுத்தடுத்து மரணம் அடைந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது. ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்ததாக கூறி போலீசார் வழக்கு பதிவு செய்து, அடித்துக் கொன்றதாக உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

தந்தை, மகன் மர்மமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பாக திரைத்துறையை சேர்ந்த பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் இயக்குனர் ஹரி இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சாத்தான்குளம் சம்பவம் போல் இனி ஒரு கொடூரம் தமிழக மக்களுக்கு நடந்துவிட கூடாது. அதற்கு ஒரே வழி சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்குவதே. காவல்துறையில் உள்ள சிலரின் இந்த அத்துமீறல் அந்த துறையையே இன்று களங்கப்படுத்தி உள்ளது. காவல் துறையை பெருமைப்படுத்தி ஐந்து படம் எடுத்ததற்காக இன்று மிக மிக வேதனைப்படுகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
இயக்குனர் ஹரி காவல்துறையை மையப்படுத்தி சாமி, சாமி ஸ்கொயர், சிங்கம் படத்தின் மூன்று பாகங்களையும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை வனிதாவை, பீட்டர் பால் நேற்று திருமணம் செய்துகொண்ட நிலையில், அவரின் முதல் மனைவி போலீசில் புகார் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விஜய்யின் சந்திரலேகா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர் வனிதா. நடிகர் விஜயகுமாரின் மகளான இவர், பீட்டர் பால் என்பவரை நேற்று கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் பீட்டர் பால் மீது வடபழனி காவல் நிலையத்தில், அவரின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் புகார் அளித்துள்ளார். பீட்டருடன் திருமணமாகி தமக்கு 2 குழந்தைகள் இருக்கும் நிலையில் முறையாக விவாகரத்து அளிக்காமல், அவர் வனிதாவை திருமணம் செய்ததாக புகார் தெரிவித்துள்ளார்.

கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 7 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், வனிதாவை பீட்டர் திருமணம் செய்துள்ளதாகவும், முறையாக விவாகரத்து அளித்த பின்னரே வனிதாவை திருமணம் செய்து கொள்வேன் என பீட்டர் பால் ஏற்கனவே கூறியதாகவும், அவர் அதை பின்பற்றாமல் வனிதாவை திருமணம் செய்ததாகவும் எலிசபெத் ஹெலன் அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி கிரிக்கெட் உலக கோப்பை வென்று 37 ஆண்டு ஆனதை 83 படக்குழுவினர் கொண்டாடி உள்ளனர்.
கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி 1983-ல் கிரிக்கெட் உலக கோப்பையை வென்று சாதனை நிகழ்த்தியது. இந்த வரலாற்று நிகழ்வை மையமாக வைத்து ‘83’ என்ற பெயரில் புதிய படம் தயாராகிறது. ஏற்கனவே கிரிக்கெட் வீரர்கள் சச்சின் தெண்டுல்கர், டோனி ஆகியோர் வாழ்க்கை படமாக வெளிவந்து வரவேற்பை பெற்றன. அதுபோல் 83 படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
கபீர்கான் இயக்கியுள்ள இப்படத்தில் கபில்தேவாக ரன்வீர் சிங் நடித்துள்ளார். உலக கோப்பையை வென்ற அணியில் இருந்த தமிழக வீரர் ஸ்ரீகாந்த் வேடத்தில் ஜீவா நடித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் ரிலீசாக இருந்த இப்படம் கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளிப்போயுள்ளது.
இந்நிலையில்,கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி உலகக்கோப்பை வென்று 37 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி பிரபல தயாரிப்பு நிறுவனமான ரிலையன்ஸ் என்டர்டெயின்மெண்ட்ஸ் 83 படக்குழு சார்பில், சமூக வலைதளத்தில் ஒரு சிறப்பு வீடியோவை வெளியிட்டுள்ளது.
மலையாளம், கன்னடம், இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்துவரும் நடிகை பிரியா வாரியரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மலையாளத்தில் 2017-ல் வெளியான ஒரு அடார் லவ் படம் மூலம் பிரபலமானவர் பிரியா வாரியர். இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் காட்சியில் அவர் கண்ணடிப்பது சமூக வலைத்தளத்தை அதிர வைத்தது. இதனால் பிரியா வாரியர் ஒரே நாளில் நாடு முழுவதும் பிரபலமானார். தொடர்ந்து பட வாய்ப்புகளும் குவிந்தன. பிரியா வாரியர் நடித்துள்ள ஸ்ரீதேவி பங்களா படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என்று ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனால் அந்த படம் நீண்ட நாட்களாக திரைக்கு வராமல் முடங்கி உள்ளது. தற்போது இரண்டு இந்தி படங்களையும், ஒரு கன்னட படத்தையும் அவர் கைவசம் வைத்திருக்கிறார்.

இந்தநிலையில் மலையாள படம் ஒன்றில் நடிக்க பிரியா ஒப்பந்தமாகி உள்ளார். பிரபல இயக்குனர் வி.கே.பிரகாஷ் இயக்க உள்ள இப்படத்திற்கு 'நால்பதுகாரண்டே இருபத்தியொன்காரி' என பெயரிட்டுள்ளனர். கதாசிரியரும், குணச்சித்திர நடிகருமான அனூப் மேனன் இப்படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார். தலைப்பே படத்தின் கதையை சொல்லும் விதமாக அமைந்து இருக்கிறது. அதாவது ஒரு 40 வயது ஆணுக்கும், 21 வயது பெண்ணுக்குமான காதல் தான் படத்தின் கதையாம்.
சாத்தான்குளத்தில் தந்தை, மகன் மரணத்துக்கு காரணமானோரும், அதற்கு துணை போனவர்களும் விரைவில் தண்டிக்கப்பட்டு நீதி நிலைநிறுத்தப்பட வேண்டும் என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
சென்னை:
சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
சாத்தான்குளம் காவல் நிலையத்தில், இரு அப்பாவி உயிர்களுக்கு மரணம் ஏற்படுத்தும் அளவிற்கு நிகழ்ந்த போலீசாரின் 'லாக்கப் அத்துமீறல்' காவல் துறையின் மாண்பை குறைக்கும் செயல். 'இது ஏதோ ஒரு இடத்தில் தவறி நடந்த சம்பவம்' என்று கடந்து செல்ல முடியாது.
போலீசாரால் கொடூரமான தாக்குதலுக்கு ஆளான தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் இருவரையும் அரசு மருத்துவர் பரிசோதனை செய்து, 'நலமாக இருப்பதாக' சான்று அளித்திருக்கிறார். நீதியை நிலைநாட்ட வேண்டிய மாஜிஸ்ட்ரேட், பாதிக்கப்பட்டவர்களின் நிலையை பரிசோதிக்காமல், 'இயந்திர கதியில்' சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். சிறையில் நடத்தப்பட வேண்டிய சோதனைகளும் முறையாக நடக்கவில்லை. இத்தகைய 'கடமை மீறல்' செயல்கள், ஒரு குடிமகனின் உரிமையில் நம் 'அதிகார அமைப்புகள்' காட்டும் அலட்சியத்தை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. அதனால் இதுபோன்ற 'துயர மரணங்கள்' ஒரு வகையான 'திட்டமிடப்பட்ட குற்றமாக' (Organised Crime) நடக்கிறது.
ஒருவேளை இருவரின் மரணம் நிகழாமல் போயிருந்தால், போலீசாரின் இந்தக் கொடூர தாக்குதல் நம் கவனம் பெறாமலேயே போயிருக்கும். பாதிக்கப்பட்டவர்கள் சிறையிலிருந்து வெளியே வந்தாலும், 'போலீசாரை எதிர்த்தால் என்ன நடக்கும்' என்பதற்கான வாழும் சாட்சியாகி இருப்பார்கள். தங்கள் மரணத்தின் மூலம் தந்தை, மகன் இருவரும் இந்தச் சமூகத்தின் மனசாட்சியை உலுக்கி இருக்கிறார்கள்.
இந்த கொடூர மரணத்தில், தங்களுடைய கடமையை செய்யத் தவறிய அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துவது, நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது.
இதேபோல, 'தவறு செய்கிறவர்கள் யாராக இருந்தாலும் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது' என்கிற நம்பிக்கையை அரசாங்கமும், நீதி அமைப்புகளும் மக்களிடம் உருவாக்க வேண்டும். மாறாக, நமது 'அதிகார அமைப்புகள்' அவநம்பிக்கையையே ஏற்படுத்துகின்றன.
'இரண்டு உயிர் போவதற்கு காரணமானவர்களுக்கு இதுதான் தண்டனையா?' என்று எழுந்த விமர்சனத்துக்குப் பிறகே, சம்பந்தப்பட்ட போலீசார் 'பணியிடை நீக்கம்' செய்யப்பட்டனர். காவல்துறையில் அர்ப்பணிப்புடன் தன் கடமையை செய்கிற பலரை தனிப்பட்ட முறையில் நன்கு அறிவேன். ஒட்டுமொத்த நாடும் இயங்க முடியாமல் ஸ்தம்பித்து நிற்கிற இந்த நேரத்திலும் ஓய்வில்லாமல் மக்களின் நலனுக்காக காவல்துறையினர் உழைக்கின்றனர். 'கொரோனா யுத்தத்தில்' களத்தில் முன் வரிசையில் நிற்கிற காவல்துறையினருக்கு தலைவணங்குகிறேன். அதேநேரம், அதிகாரத்தை பொதுமக்களுக்கு எதிராக பயன்படுத்தும் காவல்துறையினருக்கு எனது கடும் கண்டனங்கள்.
அதிகார அத்துமீறல் வன்முறையால் ஒருபோதும் மக்களின் மனதை வெல்ல முடியாது. அன்பும், அக்கறையும் கொண்டு கடமையை செய்கிற காவல்துறையினரே மக்களின் மனதில் நிலைத்து நிற்கிறார்கள்.
ஒரே நேரத்தில் இரண்டு உயிர்கள் பலியாகி இருப்பது, ஒரு குடும்பத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. தந்தையையும், மகனையும் இழந்து வாடுகிற அந்த குடும்பத்தினரின் துயரத்தில் நானும் பங்கெடுத்துக் கொள்கிறேன்.
இனிமேலும் இதுபோன்ற 'அதிகார வன்முறைகள்' காவல்துறையில் நிகழாமல் தடுக்க, தேவையான மாற்றங்களை, சீர்திருத்தங்களை அரசும், நீதிமன்றமும், பொறுப்புமிக்க காவல் அதிகாரிகளும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். குற்றம் இழைத்தவர்களும், அதற்கு துணை போனவர்களும் விரைவாக தண்டிக்கப்பட்டு 'நீதி நிலைநிறுத்தப்படும்' என்று பொதுமக்களில் ஒருவனாக நானும் காத்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
சாத்தான்குளம் ஜெயராஜ் - பெனிக்ஸ் மரணம் குறித்து மனித உரிமை ஆணையத்தில் நடிகை சனம் ஷெட்டி புகார் அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகியாக கலக்கி வருபவர் சனம் ஷெட்டி. இவர் தமிழில் அம்புலி படத்தின் மூலம் அறிமுகமானார். இதையடுத்து இவர் கதம் கதம், சவாரி, சிபிராஜ் நடித்த வால்டர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் ஹன்சிகா, சிம்பு நடித்து வரும் மஹா படத்தில் இவர் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை சனம் ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சாத்தான்குளத்தில் போலீஸ் காவலில் உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் ஃபெனிக்ஸ்க்கு ஆதரவாக வீடியோ பதிவில் தனது கருத்துக்களை தெரிவித்தார். இது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆனது. மேலும் அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இதையடுத்து தற்போது சனம் ஷெட்டி, இச்சம்பவம் குறித்து மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்திருக்கும் தவலை தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து அனைவரும் மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்க வேண்டும், அப்போது தான் அழுத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நடிகையும் பிக்பாஸில் கலந்துகொண்டு பிரபலமானவருமான வனிதாவிற்கு இன்று திருமணம் நடைபெற்றது.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை வனிதா. இவர் விஜய்யுடன் சந்திரலேகா என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

இந்நிலையில் நடிகை வனிதா, பீட்டர் பால் என்பவரை ஜூன் 27ஆம் தேதி திருமணம் செய்ய இருப்பதாக அறிவித்தார். அதன்படி வனிதா திருமணம் இன்று சிறப்பாக நடைபெற்றது.

இவர்களது திருமணத்தில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
சிவகார்த்திகேயன் படத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாக வந்த செய்திக்கு நடிகை ரகுல் பிரீத் சிங் காட்டமாக பதில் அளித்துள்ளார்.
இன்று நேற்று நாளை பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், இஷா கோபிகர், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் படம் அயலான்.
அயலான் படப்பிடிப்பில் கலந்து கொள்ள ரகுல் பிரீத் சிங் மறுப்பதாகவும், கொரோனாவைக் காரணம் காட்டி அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மறுப்பதாகவும், அதனால் படத்திலிருந்து அவரை வெளியேற்ற படக்குழு முடிவு செய்திருப்பதாகவும் செய்திகள் வெளியானது. அதற்கு இயக்குநர் மற்றும் ரகுல் பிரீத் சிங் இருவரும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
Thankyou so much for the kind words 🙏🏻🙏🏻yessss can’t wait to start shoot soon 💪🏻💪🏻 https://t.co/ceLigQztbP
— Rakul Singh (@Rakulpreet) June 26, 2020
ரகுல் பிரீத் சிங் தனது ட்விட்டர் பதிவில், இப்போது யார் படப்பிடிப்பு நடத்துகிறார்கள் என்று என்னிடம் சொல்லுங்கள். நான் படப்பிடிப்புக்கு செல்ல மிகவும் ஆவலாக உள்ளேன் என்றும், வதந்தி பரப்புவோருக்கு காட்டமாகவும் பதிலளித்துள்ளார்.
அயலான் இயக்குநர் ரவிக்குமார் தனது சமூகவலைதள பதிவில், ஷூட்டிங்கில் மிகவும் சரியாக நடந்து கொள்வோரில் ரகுல் பிரீத் சிங்கும் ஒருவர். வதந்திகளை வெளியிட வேண்டாம். மீண்டும் ரகுல் பிரீத் சிங் உடன் இணைந்து படப்பிடிப்பை தொடங்க அனைவரும் ஆவலாக உள்ளோம்” என்று கூறியுள்ளார்.
நடிகர்கள் ரஜினி மற்றும் அஜித் எடுத்த முடிவை தற்போது சூர்யா பின்பற்றி புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ரஜினியின் அண்ணாத்த’, அஜித் நடித்து வரும் ’வலிமை’ உள்பட பல திரைப்படங்களின் படப்பிடிப்புகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில் ஒரு கொரோனா வைரஸ் நோயாளி கூட இல்லை என்ற நிலை வந்த பின்னரே ’அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பில் தான் கலந்துகொள்ள இருப்பதாக ரஜினியும், இதே முடிவை அஜித்தும் எடுத்துள்ளதாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் தற்போது சூர்யாவும் தன்னுடைய அடுத்த திரைப்படமான ’அருவா’ படத்தின் படப்பிடிப்பை அடுத்த ஆண்டுக்கு ஒத்தி வைத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

படக்குழுவினர்களின் பாதுகாப்பை முன்னிட்டே சூர்யா இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. எனவே அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் தான் ’அருவா’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






