என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    சாத்தான் குளம் சம்பவத்தை ஜார்ஜ் ஃபிளாய்ட் சம்பவத்தோடு ஒப்பிட்டு பேசிய சுசித்ராவின் வீடியோ ஒரு மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.
    தமிழ் திரையில் மாறுபட்ட குரலால் பல பாடல்கள் மூலம் பெரும் எண்ணிக்கையிலான ரசிகர்களை பெற்றவர் பாடகி சுசித்ரா. பிரபல வானொலியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார்.

      அண்மைகாலமாக அவர் யோகா, சமையல் கலையில் ஆர்வம் காண்பித்து வந்த பாடகி சுசித்ரா, தற்போது தமிழக மக்களை அதிகம் பேச வைத்துள்ள சாத்தான் குளம் காவல் நிலையத்தில் இறந்து போன ஜெயராஜ் மற்றும் ஃபெனிக்ஸ் ஆகியோரை பற்றி பேசி உள்ளார்.



     சாத்தான் குளம் சம்பவத்தை அமெரிக்காவில் போலிசாரால் கொல்லப்பட்ட ஜார்ஜ் ஃபிளாய்ட் சம்பவத்தோடு ஒப்பிட்டு பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டை தாண்டி இந்த செய்தியை கொண்டு செல்ல ஆங்கிலத்தில் பேசியிருக்கிறார்.

     இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி ஒரு மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.
    இந்தி பட உலகினர் தமிழ் கதாநாயகிகளை தவறாக பார்ப்பதை நிறுத்த வேண்டும் என்று பிரபல நடிகை பேட்டி அளித்துள்ளார்.
    தமிழில் ‘தேரோடும் வீதியிலே’ படத்தில் நடித்தவர் பாயல் கோஷ். தெலுங்கில் ஓசரவல்லி படத்தில் ஜூனியர் என்.டி.ஆருடனும் இந்தியில் ரிஷிகபூர், பரேஷ் ராவலுடன் ‘படேல் கி பஞ்சாபி சாதி‘ படத்திலும் நடித்துள்ளார். 

     அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு: ‘தென்னிந்திய திரை உலகினர் நேர்மையானர்கள். நான் தேசிய விருது பெற்ற தென்னிந்திய இயக்குனர்கள் படங்களில் நடித்து இருக்கிறேன். என்னை நன்றாக பார்த்துக்கொண்டனர். தமிழ் தெலுங்கு படங்களில் நடிக்கும்போது எனக்கு எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. தமிழ், தெலுங்கு ரசிகர்கள் நடிகைகளை தெய்வமாக பார்க்கிறார்கள். மரியாதை கொடுக்கிறார்கள். 

     தமிழ் நாட்டில் சில நடிகைகளுக்கு கோவில் கட்டி வணங்கும் நிலையும் இருக்கிறது. நான் இந்தி படங்களில் வாய்ப்பு கேட்டபோது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய நடிகைகள் மீது தவறான எண்ணம் இருக்கிறது என்றும் எனவே இந்தி திரையுலகினரிடம் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்ததாக சொல்லாதே என்றும் சிலர் கூறினர். 

    பாயல் கோஷ்

     தென்னிந்திய மொழி படங்களில் நடித்து எதிர்காலத்தை கெடுத்திக்கொள்ளாதே என்றும் தெரிவித்தனர். நிஜத்தில் இந்தி சினிமா தென்னிந்திய படங்களைத்தான் நம்பி உள்ளன. அங்கிருந்துதான் பல படங்களை ரீமேக் செய்கிறார்கள். எனவே தமிழ், தெலுங்கு நடிகைகளை இந்தி பட உலகினர் தவறாக பார்ப்பதை நிறுத்த வேண்டும்.“ இவ்வாறு கூறினார்.
    நயன்தாரா, திரிஷா இல்லையென்றால் அந்த படம் எப்படி இருக்கும் என்று நடிகை மஞ்சிமா மோகன் கூறியுள்ளார்.
    அச்சம் என்பது மடமையடா, சத்ரியன், தேவராட்டம் படங்களில் நடித்தவர் மஞ்சிமா மோகன். தற்போது அவர் களத்தில் சந்திப்போம், துக்ளக் தர்பார், எப்.ஐ.ஆர் படங்களில் நடித்து வருகிறார். எந்த படத்தையும் ஹீரோயின் சப்ஜெக்ட் படம், பெண்கணை மையப்படுத்திய படம் என்று குறிப்பிடாதீர்கள் என்கிறார்.

     இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: பொன்மகள் வந்தாள், பெண்குயின் படங்களை பெண்களை மையப்படுத்திய படங்கள் என்று குறிப்பிடுகிறார்கள் இதில் எனக்கு உடன்பாடில்லை. கதையின் மைய புள்ளியாக பெண்கள் இருந்தாலோ அல்லது ஹீரோ என்று ஒருவர் இல்லாவிட்டாலோ மட்டும் அது பெண்களை மையப்படுத்திய படம் அல்ல.

     நானும் ரவுடிதான் படத்தில் நயன்தாராவும், விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் திரிஷாவும் இல்லை என்றால் அந்தப் படம் எப்படி முழுமை பெற்றிருக்கும். ஹீரோயின் மட்டுமே நடித்தால் அந்த படம் பெண்களை பெருமைப்படுத்தும் படமாகி விடாது. ஒரு படத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் சம பங்கு இருக்கிறது. என்றார்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் ஹாலிவுட் நடிகரை பின்பற்றி வருகிறார்.
    விஜய் ரசிகர்கள் அவரது ஸ்டைல் உடை என பல விஷயங்களை அப்படியே பின்பற்றுவது வழக்கமான ஒன்றுதான். அதுபோல மற்ற சினிமாத் துறைகளில் நட்சத்திரங்களாக இருக்கும் நடிகர்கள் செய்யும் விஷயங்களை நம் நாட்டில் உள்ள நடிகர்கள் பின்பற்றுவதும் ஆச்சரியமான விஷயம் அல்ல.

     தற்போது விஜய் சென்னை நீலாங்கரையில் பீச் ஹவுஸை மீண்டும் கட்டி வருகிறார். அந்த வீடு பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் வைத்துள்ள பீச் ஹவுஸ் போலவே கட்டப்பட்டு வருகிறது என கூறப்படுகிறது.

    விஜய், டாம் குரூஸ்

     ஒருமுறை அமெரிக்கா சென்ற விஜய், ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ்-ன் பீச் ஹவுஸை பார்த்து வியந்து உள்ளார். அதுபோலவே தற்போது தான் கட்டி வரும் வீட்டை வடிவமைக்க கூறியுள்ளார் விஜய் என்றும் சொல்லப்படுகிறது.
    அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் கோப்ரா படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகி வைரலாகி வருகிறது.
    விக்ரம் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் கோப்ரா.  அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இப்படத்தில் கதாநாயகிகளாக ஸ்ரீநிதி ஷெட்டி, மியா ஜார்ஜ் ஆகியோர் நடிக்கின்றனர். இர்பான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ஜான் விஜய் ஆகியோரும் உள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். லலித் குமார் தயாரித்துள்ளார். 

     கோப்ரா படத்துக்காக விக்ரம் முழுமையாக தனது தோற்றத்தை மாற்றி உள்ளார். இதில் 15 தோற்றங்களில் அவர் நடித்து இருப்பதாக கூறப்படுகிறது. படத்தில் சில காட்சிகள் மட்டுமே பாக்கி உள்ளது.

    கோப்ரா படத்தின் அழைப்பிதழ்

      இந்நிலையில் கோப்ரா படத்தின் முதல் பாடல் தும்பி துள்ளல் ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது. ஜூன் 29 ஆம் தேதி மாலை 5 மணிக்கு பாடலை வெளியிட உள்ளனர். இதற்கான அழைப்பிதழ் தற்போது வெளியாகியுள்ளது. இது ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    பிரபல தயாரிப்பாளர், விநியோகிஸ்தர் தனஞ்செயன் அவர்களின் சகோதரர் கொரோனாவால் பலியாகியுள்ளார்.
    கோலிவுட் திரையுலகின் பிரபல தயாரிப்பாளர், விநியோகிஸ்தர் தனஞ்செயன். இவரின் மூத்த சகோதரர் கொரோனாவால் பலியான செய்தி கோலிவுட் திரையுலகை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

    தனஞ்செயன் அவர்களின் மூத்த சகோதரர் மற்றும் அவரது மனைவி, மகன் ஆகியோர்களுக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஐந்து நாட்கள் மட்டுமே ஆன நிலையில் தனது சகோதரர் கொரோனாவுக்கு பலியாகிவிட்டதாகவும், அவருடைய மனைவி, மகன் ஆகியோர் சிகிச்சையில் இருப்பதாகவும் தனஞ்செயன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

    தனஞ்ஜெயன்

     மேலும் தனது சகோதரரின் குடும்பத்திற்கு உயரிய சிகிச்சை அளிக்க முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் உதவி செய்ததாகவும் அவர்களுக்கு தனது நன்றி என்றும் தனஞ்செயன் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா எனும் கொடிய நோய் தொற்றாமல் இருக்க அனைவரும் கவனமாக இருக்கவும் என்றும், முடிந்தவரை வீட்டுக்குள்ளேயே இருக்கவும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    நான் இப்படி செய்ய என் கணவர்தான் காரணம் என்று தமிழ், தெலுங்கில் பிரபல நடிகையாக இருக்கும் சமந்தா கூறியுள்ளார்.
    தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக கலக்கி வருபவர் சமந்தா. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் ரசிகர்களை கவர்ந்து அசத்தி வருகிறார். இவர் தமிழில் அடுத்து விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோருடன் இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார்.

    சமந்தா

     இந்நிலையில் நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார். கைகளை தரையில் ஊன்றி, அந்தரத்தில் பறந்தவாறு அவர் செய்யும் யோகா புகைப்படத்தை பகிர்ந்துள்ள சமந்தா, ''கார்டனிங்கிற்கு பிறகு நான் என்ஜாய் செய்யும் இன்னொரு விஷயம் இந்த யோகா. இதற்கு காரணம் என் கணவர்தான். நானும் அவரும் சேர்ந்துதான் இப்படி யோகா செய்து வருகிறோம்'' என பதிவிட்டுள்ளார். சமந்தாவின் இந்த புகைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. 
    கொரோனா அச்சுறுத்தல் ஏற்படுத்திய தடைகளின் இடையே படங்களை வெளியிடுவதில் ஒரு வழியை ராம்கோபால் வர்மா கண்டறிந்துள்ளார்.
    கொரோனாவால் திரைத்துரைக்கு ஏற்பட்டுள்ள தடைகளை பொருட்படுத்தாமல், ராம்கோபால் வர்மா தொடர்ந்து தன்னால் முடிந்த அளவு சிறப்பான ட்ரெண்ட் செட்டிங் படங்களை உருவாக்கி அவற்றை வெளியிட்டு வருகிறார்.

      ராம்கோபால் வர்மா, இந்த கொரோனா அச்சுறுத்தல் ஏற்படுத்திய தடைகளின் இடையே படங்களை வெளியிடுவதில் இயக்குநர்களுக்கு ஒரு வழியை கண்டறிந்துள்ளார்.

     சமீபத்தில் வெளியான அவரது க்ளைமாக்ஸ் படம் ஷ்ரேயாஸ் ஈடியில் முதன்முறையாக ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த ATT (Any Time Theatre) தளம் ஷ்ரேயாஸ் குழுவால் தொடங்கப்பட்டுள்ளது.

    ராம் கோபால் வர்மா

      இந்த ஏடிடி தளம், வெறும் 50,000 பார்வைகளை மட்டுமே எதிர்பார்த்தது, ஆனால் பிரம்மாணடமான 2,75,000 லாகின்களும், 1,68,596 கட்டணம் செலுத்திய பார்வைகளும் படம் வெளியான 12 மணி நேரத்தில் கிடைத்தன. ஒட்டுமொத்தமாக 2,89,565 பார்வைகள் கிடைத்துள்ளது. க்

    கிளைமாக்ஸ் படத்தின் பெரும்வெற்றியை தொடர்ந்து, இயக்குநர் ராம்கோபால் வர்மா தனது அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படமான நேக்டு நங்கா நக்னம் படத்தை இதே தளத்தில் வரும் ஜூன் 27 அன்று வெளியிடவுள்ளார்.

     நேக்டு நங்கா நக்னம், ஏடிடி தளத்தில் நேரடியாக வெளியாகும் இரண்டாவது ராம்கோபால் வர்மா திரைப்படமாகும். ராம்கோபால் வர்மா படங்கள் தவிர்த்து, 302, சிவன் உள்ளிட்ட பல தெலுங்கு படங்களின் நேரடி வெளியீட்டை மற்ற 10 மல்டிப்ளெக்ஸ்களும் காணவுள்ளன. நயன்தாரா நடிக்கும் தமிழ் திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பும் நேரடியாக ஷ்ரேயாஸ் இடியின் மூலம் வெளியாகவுள்ளது. 
    சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், திரைப்பிரபலங்களும் அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
    கோவில்பட்டியில் உள்ள கிளைச் சிறையில் விசாரணைக் கைதிகளாக இருந்த சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் அடுத்தடுத்து மரணம் அடைந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது. ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்தாக கூறி போலீசார் வழக்கு பதிவு செய்து, அடித்துக் கொன்றதாக உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். 

    தந்தை, மகன் மர்மமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பாக திரைத்துறையை சேர்ந்த பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதன் தொகுப்பு பின்வருமாறு:

    இயக்குனர் சேரனின் டுவிட்
    ஊமை விழிகள், கேப்டன் பிரபாகரன் உள்பட 150 படங்களுக்கு மேல் படத்தொகுப்பாளராக பணியாற்றிய ஜெயச்சந்திரன் மாரடைப்பால் மரணமடைந்தார்.
    சினிமா படத்தொகுப்பாளர் ஜி.ஜெயச்சந்திரன் மாரடைப்பால் நேற்றுமரணம் அடைந்தார். அவருக்கு வயது 58. விஜயகாந்த் நடித்து, திரைப்பட கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய 'ஊமை விழிகள்' படத்தில், படத்தொகுப்பாளராக ஜெயச்சந்திரனை, தயாரிப்பாளர் ஆபாவாணன் அறிமுகம் செய்தார். 

    அந்த படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து 'உழவன் மகன்', 'பூந்தோட்ட காவல்காரன்', 'உரிமை கீதம்', 'புதுப்பாடகன்', 'புலன் விசாரணை', "கேப்டன் பிரபாகரன்' உள்பட 150 படங்களுக்கு மேல் படத்தொகுப்பாளராக ஜெயச்சந்திரன் பணியாற்றினார்.

    அவர் சென்னை மேடவாக்கத்தில் உள்ள வீட்டில் இருந்தபோது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவருக்கு தேவி என்ற மனைவியும், அருள்முருகன், பாலமுருகன் என்ற 2 மகன்களும் இருக்கிறார்கள். அவருடைய உடல் தகனம் மடிப்பாக்கத்தில் உள்ள மயானத்தில் நேற்று மாலை 5 மணிக்கு நடந்தது.
    தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகத்தில் சுந்தர் சி - வடிவேலு கூட்டணி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    'உள்ளத்தை அள்ளித்தா’, அருணாச்சலம், அன்பே சிவம், வின்னர், கலகலப்பு உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர் சுந்தர்.சி. இவர், ‘தலைநகரம்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை சுராஜ் இருந்தார். இப்படத்தில் இடம்பெறும் வடிவேலுவின் காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றன.

    இந்நிலையில், தலைநகரம் படத்தின் 2-ம் பாகம் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்திலும் சுந்தர் சி நாயகனாக நடிப்பார் என கூறப்படுகிறது. இப்படத்தை இயக்குனர் வி.இசட்.துரை இயக்க உள்ளார். இவர் தற்போது அமீரின் நாற்காலி படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு பின் தலைநகரம் 2-ம் பாகத்தை இயக்க அவர் திட்டமிட்டுள்ளார். இப்படத்தில் வடிவேலுவை நடிக்க வைக்க முயற்சி நடக்கிறது.

    வடிவேலு, சுந்தர் சி

    சுந்தர் சி-யின் இருட்டு படத்தை வி.இசட்.துரை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஏற்கனவே அஜித்தை வைத்து ‘முகவரி’, சிம்புவின் ‘தொட்டி ஜெயா’, பரத்தின் ‘நேபாளி’, ஷாமின் ‘6 மெழுகுவர்த்திகள்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
    சுஷாந்த் கடைசியாக நடித்த 'தில் பெச்சாரா' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.
    பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் ஜூன் 14-ந் தேதி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சுஷாந்த் சிங் தற்கொலை வாரிசு நடிகர்கள் கொடுத்த மன அழுத்தத்தினால் நடந்துள்ளது என்ற சர்ச்சைகளும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    சுஷாந்த் கடைசியாக நடித்த படம் 'தில் பெச்சாரா'. இப்படத்தை மே மாதம் வெளியிட திட்டமிட்டிருந்தனர். கொரோனா ஊரடங்கு காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இதனிடையே இப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்தது. ஆனால் சுஷாந்தின் ரசிகர்கள் அவரது கடைசி படத்தில் திரையரங்குகளில் வெளியிட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஏ.ஆர்.ரகுமான், சிம்பு உள்ளிட்ட பிரபலங்களும் இதற்கு ஆதரவு தெரிவித்தனர். 

    ஹாட் ஸ்டாரின் டுவிட்டர் பதிவு

    இருப்பினும் ஓடிடி வெளியீடு உறுதியானதால், நேரடியாக ஹாட்ஸ்டாரில் வெளியிட உள்ளனர். ஜூலை 24-ந் தேதி வெளியாக உள்ள இப்படத்தை அனைத்து ரசிகர்களும் எந்தவித கட்டணமின்றி இலவசமாக காணலாம் என ஹாட் ஸ்டார் நிறுவனம் அறிவித்துள்ளது. முகேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தில் பெச்சாரா' படத்தில் சுஷாந்த் சிங், சைப் அலி கான், சஞ்சனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.
    ×