என் மலர்
சினிமா செய்திகள்
நடிகர், பாடகர், இசையமைப்பாளர் என்று பன்முக திறன் கொண்ட மலேசியா வாசுதேவனின் வாழ்க்கை படமாகிறது.
நடிகர், பாடகர், இசையமைப்பாளர் என்று பன்முக திறன் கொண்டவர் மலேசியா வாசுதேவன். மலேசியாவில் நாடகங்களில் நடித்த அனுபவத்துடன் சென்னை வந்த அவர் 16 வயதினிலே படத்தில் பாடிய ஆட்டுக்குட்டி முட்டையிட்டு கோழிகுஞ்சு வந்ததுன்னு பாடல் மூலம் பிரபலமானார். அதன்பிறகு பாடல் வாய்ப்புகள் குவிந்தன.
அவர் பாடிய இந்த மின்மினுக்கி கண்ணில் ஒரு மின்னல் வந்தது, ஆயிரம் மலர்களே மலருங்கள், கோயில் மணி ஓசைதன்னை கேட்டதாரோ, மலையோரம் மயிலே, வா வா வசந்தமே, ஒரு தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு, கோடை கால காற்றே, காதல் வந்திடுச்சு, பொதுவாக என்மனசு தங்கம், அள்ளிதந்த பூமி அன்னையல்லவா, தேவனின் கோயிலிலே, ஒரு கூட்டு கிளியாக, பூங்காற்று திரும்புமா என் பாட்டை விரும்புமா உள்பட பல பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தன.

சுமார் 8 ஆயிரம் பாடல்கள் பாடி உள்ளார். 85 படங்களில் நடித்துள்ளார். மலேசியா வாசுதேவன் வாழ்க்கை வரலாற்றை அவரது மகனும் நடிகருமான யுகேந்திரன் சினிமா படமாக எடுக்கபோவதாக அறிவித்து உள்ளார். மலேசியா வாசுதேவன் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி பொருத்தமாக இருப்பார் என்றும் கூறியுள்ளார்.
விஜய் சேதுபதி நடிப்பாரா என்று தெரியவில்லை. கொரோனா ஊரடங்கு முடிந்ததும் இதற்கான வேலைகளை தொடங்க அவர் திட்டமிட்டு உள்ளார். விஜய் சேதுபதி ஏற்கனவே இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை கதையில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பேட்ட, மாஸ்டர் போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகை மாளவிகா மோகனன், நயன்தாராவை விட அதிகம் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.
ரஜினிகாந்தின் பேட்ட' படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தவர் மாளவிகா மோகனன். தற்போது விஜய் ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். ஒருபடத்திலேயே விஜய்யுடன் நடிக்கும் அளவு உயர்ந்ததை சக நடிகைகள் பொறாமையாக பார்க்கின்றனர். மாஸ்டர் திரைக்கு வரும் முன்பே அவருக்கு பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன.
இந்தநிலையில் இந்தி படமொன்றில் நடிக்க மாளவிகா மோகனனை ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த படத்தை ரவி உத்யவார் இயக்குகிறார். இவர் மறைந்த ஸ்ரீதேவி நடித்த 'மாம்' படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தி படத்தில் மாளவிகா மோகனன் அதிரடி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும், இதற்காக கொரோனா ஊரடங்கில் சண்டை பயிற்சிகள் கற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

ஊரடங்கு முடிந்ததும் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர். இந்த படத்தில் நடிக்க மாளவிகா மோகனனுக்கு ரூ.5 கோடி சம்பளம் பேசி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழில் நயன்தாரா ஒரு படத்துக்கு ரூ.4 கோடி சம்பளம் வாங்குகிறார். அதை மாளவிகா மோகனன் முந்திவிட்டார் என்கின்றனர்.
கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு இல்லாததால் பிரபல நடிகர் ஒருவர் கருவாடு விற்பனையில் இறங்கியுள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. ஊரடங்கு போடப்பட்டுள்ளதால், பல்வேறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. இதில் சினிமா துறையும், சினிமா கலைஞர்களும் அடக்கம்.
இந்நிலையில் பிரபல நடிகர் ஒருவர் கருவாடு விற்பனையில் ஈடுபட்டு வருவது குறித்து தெரிய வந்துள்ளது. மராத்தி நடிகரான ரோஹன் பெட்னேக்கர் என்பவர், மராத்தியில் சூப்பர் ஹிட் அடித்த பாபாசாகேப் அம்பேத்கர் தொடரில் நடித்து பிரபலமானார்.
இவர் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக ஷூட்டிங் நிறுத்தப்பட்டு இருப்பதால், கருவாடு விற்பனையில் இறங்கியுள்ளார். மீண்டும் எப்போது நடிக்கும் வேலை வரும் என தெரியவில்லை, என் அப்பா இந்த வேலையை செய்தார். அதனால் எனக்கு இதில் கொஞ்சம் புரிதல் இருக்கிறது. இந்த வேலையை எனக்கு எந்த அவமானமும் இல்லை'' என தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் ஊரடங்கு நேரத்தில் ரூ.1 லட்சம் கரண்ட் பில் வந்திருப்பதாக நடிகை கார்த்திகா நாயர் கூறியுள்ளார்.
கோ படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை கார்த்திகா நாயர். இவர் நடிகை ராதாவின் மகள். கோ படத்திற்கு பிறகு மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்தார்.

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக மின்சார கட்டணத்தை கணக்கிடுவதில் சிக்கல் எழுந்தது. அதன் பின் போடப்பட்ட மின் கட்டணம் மிகவும் அதிக அளவில் இருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் கார்த்திகா நாயர் அதிக மின் கட்டணம் தொடர்பாக டுவிட்டரில் கோபத்துடன் தெரிவித்துள்ளார். ஆனால் இது தமிழ்நாட்டில் இல்லை மும்பையில். இதுபற்றி அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில் கூறியிருப்பதாவது..

"என்ன விதமான மோசடியை மும்பையில் செய்து கொண்டிருக்கிறார்கள். ஜூன் மாத மின் கட்டணம் மட்டும் ஒரு லட்சம்.. (அவர்களால் மீட்டர் ரீடிங் செய்ய முடியாத நிலையில், அவர்களின் தோராய கணக்கு படி) மும்பையில் இருக்கும் மற்ற பலரிடம் இருந்தும் இதுபோன்ற புகார்களை நான் கேட்கிறேன்" என கார்த்திகா நாயர் அந்த குறிப்பிட்டுள்ளார்.
நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத், பைக் ஓட்டி கீழே விழுந்த வீடியோவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான யூடர்ன் படத்தின் மூலமாக பிரபலமானவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். அதன் பின் இவன் தந்திரன், விக்ரம் வேதா, கே-13 போன்ற படங்களில் நடித்தார். சென்ற வருடம் அஜித்துடன் நேர்கொண்ட பார்வை படத்தில் ஷ்ரத்தா நடித்து இருந்தார்.
ஷ்ரத்தா ஸ்ரீநாத் தற்போது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதை அவர் பைக் ஓட்ட பழகி கீழே விழுகின்றார். வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பொதுவாகவே நடிகைகள் சமூக வலை தளங்களில் தங்களது சூப்பரான போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை தான் வெளியிட விரும்புவார்கள். ஆனால் ஷ்ரத்தா ஸ்ரீநாத் தான் பைக் ஓட்ட முயன்று கீழே விழுந்த வீடியோவை மிக தைரியமாக வெளியிட்டுள்ளது பலரும் பாராட்டியுள்ளனர்.
12 வருடத்திற்கு பிறகு எந்திரன் படப்பிடிப்பின்போது நடந்த ரகசியத்தை ஒளிப்பதிவாளர் தற்போது கூறியுள்ளார்.
ரஜினிகாந்த் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவான ’எந்திரன்’ திரைப்படம் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கும் நாளன்று கம்ப்யூட்டர் கிராபிக்ஸில் ரஜினிகாந்த் ஸ்டில் ஒன்று வெளியானது. கையில் ரோஜா வைத்தபடி எந்திரன் வேடத்தில் இருக்கும் அந்த ஸ்டில் இணையதளங்களில் அப்போது வைரலானது.

இந்த நிலையில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் இல்லாமல் ஒரிஜினலாக ரஜினியை வைத்து எடுத்த இதே புகைப்படம் ஒன்றை தற்போது இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம் நாதன் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். கடந்த 2008 ஆம் ஆண்டு ’எந்திரன்’ படப்பிடிப்பு தொடங்கும் போது இந்த புகைப்படத்தை தான் எடுத்ததாகவும், இந்த புகைப்படம் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் புகைப்படம் இல்லை என்றும் உண்மையாகவே ரஜினிகாந்த் அவர்கள் தனது உடல் முழுவதும் சில்வர் கலர் பெயின்ட் அடித்துக்கொண்டு சில்வர் கலர் தொப்பி மற்றும் சில்வர் கலர் கண்ணாடி அணிந்து கொண்டு கையில் ரோஜாவுடன் இருக்கும் இந்த புகைப்படம் இதுவரை வெளியாகவில்லை என்றும் தற்போது தான் வெளியிட்டதாகவும் கூறியுள்ளார்.
மேலும் ரஜினி இந்த புகைப்படத்தின் போட்டோஷூட்டின்போது இதற்காக அதிகபட்ச ரிஸ்க் எடுத்துள்ளார் என்பது யூனிட்டில் உள்ளவர்களுக்கு மட்டுமே தெரியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 12 ஆண்டுகளுக்கு முன் எடுத்த ‘எந்திரன்’ புகைப்படமும், அதன் தகவல்களும் தற்போது வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் மாளவிகா மோகனன் ஆக்ஷன் நாயகியாக களமிறங்கியிருக்கிறார்.
ரஜினிகாந்த் நடித்த ’பேட்ட’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் மாளவிகா மோகனன். அதன் பின்னர் விஜய் நடித்த ’மாஸ்டர்’ படத்தில் நாயகி ஆனார். இந்த படம் வெளியாகும் முன்னரே அவருக்கு பல வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது பாலிவுட் திரைப்படம் ஒன்றில் நடிக்க மாளவிகா மோகனன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஸ்ரீதேவி நடித்த ‘மாம்’ படத்தை இயக்கிய ரவி உத்யவார் இந்த படத்தை இயக்க உள்ளார்.

இந்த படத்தில் மாளவிகா மோகனன் ஆக்ஷன் நாயகியாக நடிப்பதாகவும் இந்த படத்தில் அவருக்கு ஸ்டண்ட் காட்சிகள் இருப்பதாகவும் இதற்காக அவர் மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சி எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்தவுடன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரபல நடிகை பூர்ணாவிற்கு மிரட்டல் விடுத்த நான்கு பேர், போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகை பூர்ணா. இவரது இயற்பெயர் ஷாம்னா காசிம். கேரளாவைச் சேர்ந்த இவர் சமீபத்தில் வெளியான கொடிவீரன், சவரக்கத்தி உள்ளிட்ட தமிழ் படங்களிலும், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் பூர்ணாவுக்கு மிரட்டல் விடுத்ததாகவும், பணம் கேட்டு மிரட்டுவதாகவும் அவரது தாயார் கொச்சி நகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். அதில், நடிகை பூர்ணாவின் வீட்டுக்கு திருமணம் தொடர்பாக 4 பேர் பேச வந்ததாகவும், அவர்கள் தங்களை மணமகன் தரப்பு உறவினர்கள் என்று கூறி வீட்டை புகைப்படம் எடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஏப்ரல் மாதம் முதல் பூர்ணாவிடம் ரூ.1 லட்சம் கேட்டு வருவதாகவும், கொடுக்கவில்லை என்றால் தீர்த்துக் கட்டிவிடுவோம் என்று மிரட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து விசாரணை நடத்திய போலீஸ் வடநபில்லியைச் சேர்ந்த ரபீக் (30), கடவன்னூரைச் சேர்ந்த ரமேஷ் (35), கைபமங்கலத்தைச் சேர்ந்த ஷரத் (25), சேட்டுவாவைச் சேர்ந்த அஷ்ரப் (52) ஆகிய 4 பேரை கைது செய்துள்ளனர். கைதான இந்த 4 பேர் மீது ஏற்கெனவே பல குற்ற வழக்குகள் வந்திருப்பதாகவும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தற்போது இந்த நால்வரும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
உலக புகழ்பெற்ற பேட்மேன் படங்களை இயக்கிய ஜோயல் ஸ்குமாச்சர் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
‘பேட்மேன்‘ படங்களை இயக்கி உலக புகழ்பெற்ற இயக்குனர் ஜோயல் ஸ்குமாச்சர் மரணம் அடைந்தார். அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் குடும்பத்துடன் வசித்து வந்த இவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 80. ஜோயல் ஸ்குமாச்சர் ‘பேட்மேன் பார் எவர்‘ மற்றும் ‘மேட்மேன் அண்ட் ராபின்‘ ஆகிய படங்களை இயக்கி 1990-களில் முன்னணி இயக்குனராக இருந்தார்.

இளம் நடிகர்களுக்கு படங்களில் வாய்ப்பு அளிப்பதில் முதன்மையானவர் என்ற பெருமையும் ஜோயல் ஸ்குமாச்சருக்கு உண்டு. இவர் 1970-ல் ஹாலிவுட்டில் ஆடை வடிவமைப்பாளராக இருந்தார். ஸ்லீப்பர், இண்டீரியர் உள்பட பல படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி உள்ளார். 1985-ல் செண்ட் எல்மோஸ் பயர் என்ற படத்தின் மூலம் இயக்குனரானார். தொடர்ந்து ஏராளமான படங்களை இயக்கினார். ஜோயல் ஸ்குமாச்சர் மறைவு பேட்மேன் பட ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
நாஞ்சில் இயக்கத்தில் ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள கா படத்தின் முன்னோட்டம்.
ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் ‘கா’. இதில் ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கொடிய மிருகங்கள் வாழும் காட்டுப் பகுதிகளுக்கு சென்று அவற்றின் வாழ்க்கை முறைகளையும் மற்றும் குணாதிசயங்களையும் பதிவு செய்யும் வைல்ட் லைஃப் போடோகிராபர் கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ளார்.
முழுக்க முழுக்க கதாநாயகியை முன்னிலைப் படுத்தி கதை உருவாக்கப்பட்டுள்ளது. சலீம்கோஸ் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அறிவழகன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அம்ரிஷ் இசையமைத்துள்ளார்.

படம் குறித்து இயக்குனர் நாஞ்சில் கூறியதாவது: ‘முழுக்க முழுக்க காட்டை மையமாக வைத்து இந்த படத்தை உருவாக்கி உள்ளோம். ரிஸ்க் எடுத்து நிறைய காட்சிகளை படமாக்கியிருக்கிறோம். 30 நாட்கள் அடர்ந்த வனப்பகுதிக்குள் இதுவரை யாரும் செல்ல முடியாத இடங்களுக்கு வன அலுவலகத்தில் அனுமதி பெற்று படப்பிடிப்பை நடித்தியிருக்கிறோம். அந்த காட்களை திரையில் பார்க்கும்போது மிகவும் பிரமிப்பாக இருக்கும்’ என்றார்.
எம்.எஸ்.ஆனந்த் இயக்கத்தில் விஷால், ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ள சக்ரா திரைப்படம் தமிழ் உள்பட நான்கு மொழிகளில் வெளியாக உள்ளது.
விஷால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் ‘சக்ரா’. எம்.எஸ்.ஆனந்த் இயக்கியுள்ள இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். மேலும் ரெஜினா, ரோபோ சங்கர், சிருஷ்டி டாங்கே, மனோபாலா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
பழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயா நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஷால் இப்படத்தில் ராணுவ அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தை விஷால் பிலிம் பேக்டரி சார்பில் விஷால் தயாரித்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 4 மொழிகளில் வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. பொதுவாக விஷால் படம் தெலுங்கில் மட்டுமே டப் செய்து வெளியிடப்படும். தற்போது சக்ரா படம் மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளும் டப்பிங் செய்து வெளியிடப்பட உள்ளது.
இப்படத்தின் டிரெய்லரை வருகிற 27-ந் தேதி வெளியிட உள்ளனர். தமிழ் டிரெய்லரை ஆர்யா மற்றும் கார்த்தி வெளியிட உள்ளனர். மலையாள டிரெய்லரை மோகன்லாலும், தெலுங்கு டிரெய்லரை ராணாவும், கன்னட டிரெய்லரை யாஷும் வெளியிட உள்ளனர்.
நடிகர் விஜய்யை வைத்து படம் இயக்கும் வாய்ப்பை நழுவவிட்டது குறித்து இயக்குனர் சேரன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
விஜய்யை வைத்து படம் இயக்கும் வாய்ப்பை நழுவவிட்டது குறித்து இயக்குனர் சேரன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது: "ப்ரார்த்தனா தியேட்டரில் படம் பார்த்துவிட்டு போனில் விஜய் அவர்கள் பாராட்டியதை மறக்க முடியாது. அதற்கு பின் அவர் என்னோடு சேர்ந்து படம் செய்யவும் ஒத்துக்கொண்டார். நான் தான் தவமாய்தவமிருந்து படம் முடிக்காமல் இருந்ததால் இயக்க முடியாமல் போயிற்று.
அந்த தவறை நான் செய்திருக்க கூடாது. இந்த தயாரிப்பாளர் பாதிக்கப்படுவாரே என நினைத்து விஜய் படத்தை அன்று கைவிட்டது எவ்வளவு பெரிய தவறு என இப்போது உணர்கிறேன். இந்த தவறுக்கான வருத்தத்தை விஜய் அவர்களை பார்த்து நேரில் சொல்லிவிட நினைக்கிறேன். ஆனால் நேரில் சந்திக்கும்போது தெரிவிப்பேன்.

அவரிடம் ஆட்டோகிராஃப் கதை சொன்ன 3 மணி நேரம் மறக்கமுடியாதது.. ஒரு அசைவின்றி ஒரு போன் இன்றி என் முகத்தை மட்டும் பார்த்து கதை கேட்ட அந்த தன்மை. வாவ்... கிரேட். இடையில் அவர் கேட்ட ஒரே வார்த்தை தண்ணீர் வேணுமா அண்ணா மட்டும்தான். அவ்வளவு டெடிகேஷன். அதுவே இன்று அவரின் உயரம்". இவ்வாறு சேரன் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.






