என் மலர்tooltip icon

    சினிமா

    ஷ்ரத்தா ஸ்ரீநாத்
    X
    ஷ்ரத்தா ஸ்ரீநாத்

    பைக் ஓட்டி கீழே விழுந்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்... குவியும் பாராட்டு

    நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத், பைக் ஓட்டி கீழே விழுந்த வீடியோவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
    கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான யூடர்ன் படத்தின் மூலமாக பிரபலமானவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். அதன் பின் இவன் தந்திரன், விக்ரம் வேதா, கே-13 போன்ற படங்களில் நடித்தார்.  சென்ற வருடம் அஜித்துடன் நேர்கொண்ட பார்வை படத்தில் ஷ்ரத்தா நடித்து இருந்தார்.

      ஷ்ரத்தா ஸ்ரீநாத் தற்போது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதை அவர் பைக் ஓட்ட பழகி கீழே விழுகின்றார். வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    பொதுவாகவே நடிகைகள் சமூக வலை தளங்களில் தங்களது சூப்பரான போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை தான் வெளியிட விரும்புவார்கள். ஆனால் ஷ்ரத்தா ஸ்ரீநாத் தான் பைக் ஓட்ட முயன்று கீழே விழுந்த வீடியோவை மிக தைரியமாக வெளியிட்டுள்ளது பலரும் பாராட்டியுள்ளனர்.
    Next Story
    ×