என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தமிழில் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் விஷ்ணு விஷால், ‘அப்படியெல்லாம் இல்லை என்று சொன்னால், அது சுத்தப்பொய்’ என்று கூறியிருக்கிறார்.
    ‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி, படத்துக்கு படம் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து மெதுவாக வளர்ந்து வருபவர், விஷ்ணு விஷால். ‘ராட்சசன்’ படத்தின் மூலம் முன்னணி இளம் கதாநாயகர்களில் ஒருவராகி விட்டார். அந்த படத்தின் வெற்றி, விஷ்ணு விஷாலின் ‘மார்க்கெட்’ அந்தஸ்தை உயரே தூக்கிப் பிடித்தது.

    விஷ்ணு விஷால்

    பெரும்பாலான இளம் கதாநாயகர்களுக்கு உள்ள ஆசை இவருக்கும் வந்து இருக்கிறது. ஒரு அடிதடி படத்தில் நடிப்பதற்காக ‘6 பேக்’ உடற்கட்டுக்கு மாறியிருக்கிறார். இதுபற்றி விஷ்ணு விஷால் கூறுகையில், 

    “எல்லா கதாநாயகர்களும் காரை விட்டு இறங்கியதும், தன்னை ரசிகர்கள் சூழ்ந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அதிரடி கதாநாயகனாக வேண்டும் என்று விரும்புவார்கள். கொஞ்சம் வளர்ந்ததும் வர்த்தக ரீதியிலான அடிதடி படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசை வரும். அப்படியெல்லாம் இல்லை என்று சொன்னால், அது சுத்தப்பொய்” என்கிறார்.
    நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யா பற்றி சமூகவலைத்தளங்களில் அவதூறு பரப்புவதற்கு இயக்குனர் பாரதிராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.
    பிரபல தனியார் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை மீரா மிதுன். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்விலும் தனது நடவடிக்கையால் பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறார்.

    அண்மையில் தமிழ் சினிமாவில் நெப்போட்டிசம் பெரிய அளவில் உள்ளது என்றும் நடிகர்கள் விஜய், சூர்யா ஆகியோர் அனைவருமே நெப்போட்டிசத் தயாரிப்புகள் என்று மீரா மிதுன் கடுமையாக விமர்சித்திருந்தார். இதனால், கோபமடைந்த விஜய், சூர்யா ரசிகர்கள் மீரா மிதுனை சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சித்தனர். விஜய் ரசிகர்கள் நடிகை மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி காவல்துறையிடம் புகார் அளித்து வருகின்றனர்.

    மீரா மிதுனும் விஜய் ரசிகர்கள் மீது காவல்துறையில் புகார் அளிப்பேன் என்று கூறி தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் நடிகர்கள் குறித்து சமூக ஊடகங்களில் அதிகரிக்கும் அவதூறு பேச்சு குறித்து இயக்குநர் பாரதிராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    பாரதிராஜா

    இது தொடர்பாக இயக்குநர் பாரதிராஜா கூறியதாவது:-

    நடிகர் சங்கம் உள்பட எந்த சங்கமும் எதிர்ப்பு தெரிவிக்காதது வியப்பு அளிக்கிறது. நடிகர்கள் விஜய், சூர்யாவின் கண்ணியமான குடும்ப வாழ்க்கை நம் கண் முன்னே கண்ணாடி போல் நிற்கிறது.

    அழகிய ஓவியத்தின் மீது சிலர் சேறடிப்பது போல் பேசுவது கண்டனத்திற்குரியது. ஏழை குழந்தைகளுக்கு கல்வி கொடுக்கும் பணியை சூர்யா செய்து வருகிறார்.  மனிதாபிமான பணிகளை சத்தமே இல்லாமல் செய்து வருகிறார் நடிகர் விஜய். பல்வேறு அடித்தளங்கள் அமைத்து விஜய்யும் சூர்யாவும் உயரத்துக்கு வந்துள்ளனர்.

    இவ்வாறு பாரதிராஜா கூறியுள்ளார்.
    பிரபல தயாரிப்பாளரும், நடிகருமான வி.சாமிநாதன், கொரோனா தொற்றால் இன்று மதியம் காலமானார்.
    லட்சுமி மூவி மேக்கர்ஸ் பட தயாரிப்பு நிறுவனதின் மூன்று பங்குதாரர்களில் ஒருவர் வி.சாமிநாதன் (67). இவர் இன்று (திங்கட்கிழமை) மதியம் 2.30 மணிக்கு சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். இவரது உடல் அரசு வழக்கப்படி இறுதி சடங்கு நடைபெறும். 

    இவர் லட்சுமி மூவி மேக்கர்ஸ் சார்பில் கே.முரளிதரன், ஜி.வேணுகோபால் ஆகியோருடன் இணைந்து அரண்மனை காவலன், வேலுச்சாமி, மிஸ்டர் மெட்ராஸ்,  கோகுலத்தில் சீதை, தர்மசக்கரம், பகவதி, பிரியமுடன், உன்னை நினைத்து, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், வீரம் வெளஞ்ச மண்ணு, உன்னருகே நானிருந்தால், உனக்காக எல்லாம் உனக்காக, உன்னைத்தேடி, அன்பே சிவம், தாஸ், ஒருவன், சிலம்பாட்டம், புதுப்பேட்டை, ஆட்டநாயகன், சகலகலா வல்லவன் உட்பட இருபத்தி ஐந்துக்கும் மேல் பிரமாண்டமன படங்களை தயாரித்துள்ளார். மேலும் சில படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார்.


    இவர் கடந்த பத்து நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி மற்றும் அசோக், அஸ்வின் (கும்கி) ஆகிய மகன்களும் உள்ளனர். அன்னாரது மறைவுக்கு திரை பிரபலங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

    மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் சஞ்சய் தத் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
    மும்பை:

    பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்-க்கு கடந்த 8 ஆம் தேதி திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மும்பையில் உள்ள பிரபல லிலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    மூச்சுத்திணறல் தொடர்பாக மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், நடிகர் சஞ்சயைக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டது.

    பரிசோதனை முடிவில் அவருக்கு நெகட்டிவ் என வந்தது. ஆனாலும், 
    தொடர்ந்து 2 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், சஞ்சய் தத்தின் உடல்நிலை தற்போது சீரடைந்ததையடுத்து அவர் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

    நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ், தனது டுவிட்டர் பக்கத்தில் அரசியல் என்ற தலைப்பில் பதிவிட்டுள்ளார்.
    டான்ஸ் மாஸ்டர், நடிகர், இயக்குனர் என திரையுலகில் பன்முகத்திறமை கொண்டவர் ராகவா லாரன்ஸ். இவர் ஆதரவற்ற குழந்தைகளுக்காக ஆசிரமம் நடத்தி வருகிறார். சமூக நலப்பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். கொரோனா காலத்தில் பலருக்கு உதவினார். இந்நிலையில், ராகவா லாரன்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘அரசியல்’ என்ற தலைப்பில் பதிவிட்டுள்ளார். 

    லாரன்ஸின் டுவிட்டர் பதிவு

    அதில் அவர் கூறியிருப்பதாவது: “நான் அரசியலுக்கு வந்து பதவி பெற்று, ஏழை மக்களுக்கு அது செய்வேன், இது செய்வேன் என்று சொல்லி நேரத்தை வீணடிப்பதைவிட, அமைதியாக இருந்து எந்தவித எதிர்பார்ப்புமின்றி சமூகத்துக்குச் சேவை செய்வதே நல்லது. என்னால் 200 குழந்தைகள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அரசியலுக்கு வராமலும் இதனை செய்யலாம். சேவையே கடவுள்”. இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் சாந்தனு, கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகி வரும் ‘இராவண கோட்டம்’ படத்தின் முன்னோட்டம்.
    `மதயானை கூட்டம்' படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாறன், சுமார் 6 ஆண்டுகளுக்கு பிறகு `இராவண கோட்டம்' என்ற படத்தை இயக்குகிறார். சாந்தனு நாயகனாக நடிக்கும் இந்த படத்தை கண்ணன் ரவி தயாரிக்கிறார். இப்படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடிக்கிறார். முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகும் இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். 

    லாரன்ஸ் கிஷோர் இப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். படத்தின் கதை தட்பவெப்பநிலையைப் பொறுத்தது. ஆதலால், வருடத்துக்கு 3 மாதங்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்த முடியும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது. முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. 
    தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளாக இருக்கும் சமந்தாவும், ராஷ்மிகா மந்தனாவும் ஒரே படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
    கர்நாடகாவை சேர்ந்த ராஷ்மிகா மந்தனா கன்னட படமான கிரிக்பார்ட்டி மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். அவர் தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. தெலுங்கு திரையுலகில் வேகமாக வளர்ந்து வருகிறார் ராஷ்மிகா. அடுத்ததாக அல்லு அர்ஜுன் ஜோடியாக புஷ்பா படத்தில் நடிக்கிறார். அதேபோல், பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் ‘சுல்தான்’ படம் மூலம் தமிழில் அறிமுகமாக உள்ளார். 

    ராஷ்மிகா, சமந்தா

    இந்நிலையில், நடிகை ராஷ்மிகா தெலுங்கு படம் ஒன்றில் சமந்தாவுக்கு தங்கையாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பெண்களை மையப்படுத்தி இருக்கும் இப்படத்தின் கதை சமந்தா, ராஷ்மிகா இருவருக்கும் பிடித்துப்போனதால் அதில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் இருவரும் ஒரே படத்தில் அக்கா, தங்கையாக நடிக்க உள்ளது பலரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளது. 

    நடிகை சமந்தா அடுத்ததாக தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கும்  ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடிக்க உள்ளார். பின்னர் கேம் ஓவர் படத்தின் இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கும் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். கொரோனா ஊரடங்கால் வீட்டிலேயே இருக்கும் சமந்தா பல்வேறு இயக்குனர்களிடம் கதை கேட்டு வருவதாக கூறப்படுகிறது.
    தென்னிந்திய திரையுலகில் பிசியான நடிகராக வலம்வரும் விஜய் சேதுபதி, ஹாலிவுட் படத்தின் டீசரை வெளியிட உள்ளார்.
    இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பன்முகத்திறமை கொண்டவர் ஜி.வி.பிரகாஷ். இவர் ‘டிராப் சிட்டி’ எனும் படம் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். ரிக்கி ப்ரூச்சல் இயக்கியிருக்கும் இப்படத்தை கைபா எனும் ஹாலிவுட் பட நிறுவனம் சார்பாக டெல் கணேசன் தயாரித்துள்ளார். நெப்போலியனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஏழ்மையில் வாடும் ஒரு ராப்  பாடகனின் கதைதான் டிராப் சிட்டி.

    சுவாரசியமான கதையம்சம் கொண்ட இப்படம் அமெரிக்காவில் உள்ள நேஷவில் என்னுமிடத்தில் படமாக்கப்பட்டிருக்கிறது. படப்பிடிப்பு முடிந்து படத்தை வெளியிடுவதற்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் முடிவுக்கு வந்த பின் படத்தை வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.

    போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் டீசர் வெளியீட்டு தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதன்படி நாளை (ஆகஸ்ட் 11) மாலை 5.30 மணிக்கு இப்படத்தின் டீசர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. நடிகர் விஜய் சேதுபதி இதன் டீசரை வெளியிட உள்ளார். 
    தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ் பாபு, நடிகர் விஜய்க்கு சமூக வலைதளம் வாயிலாக சவால் விடுத்துள்ளார்.
    சமூக வலைதளங்களின் வாயிலாக புதிய புதிய சேலஞ்ச்கள் அவ்வப்போது உருவாக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது இந்தியாவில் திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் மரம் நடுவதை சவாலாக விடுத்து வருகின்றனர். தெலங்கானா எம்.பி சந்தோஷ் குமார் உலக சுற்றுச் சூழல் தினத்தன்று மரம் நடும்  ‘கிரீன் இந்தியா சேலஞ்ச்’ என்ற ஒன்றை தொடங்கி வைத்தார்.

    மகேஷ் பாபு

    இந்த சேலஞ்சை பிரபாஸ், நாகர்ஜுனா, சமந்தா, ராஷ்மிகா மந்தனா, ராஷி கண்ணா உள்ளிட்ட தெலுங்கு திரையுலக பிரபலங்கள் செய்தனர். நேற்று பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் மகேஷ் பாபுவும் இந்த சேலஞ்சை செய்தார். மேலும் இந்த சவாலை செய்யுமாறு நடிகர் விஜய், தெலுங்கு நடிகர் ஜுனியர் என்.டி.ஆர், நடிகை சுருதிஹாசன் ஆகியோரை அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மகேஷ் பாபுவின் சவாலை விஜய் ஏற்பாரா என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
    தமிழ், மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ள நடிகை மியா ஜார்ஜ் திருமண குழப்பத்தில் உள்ளாராம்.
    தமிழில் அமரகாவியம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் மியா ஜார்ஜ். நேற்று இன்று நாளை, வெற்றிவேல், ஒரு நாள் கூத்து , ரம், எமன் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். தற்போது விக்ரமுடன் கோப்ரா படத்தில் நடித்து வருகிறார். மலையாளத்திலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். மியா ஜார்ஜுக்கும் கட்டுமான நிறுவனம் நடத்தும் அஸ்வின் பிலிப் என்பவருக்கும் ஏற்கனவே திருமண நிச்சயதார்த்தம் முடிந்தும் கொரோனாவால் திருமண தேதியை முடிவு செய்யமுடியாத தவிப்பில் குடும்பத்தினர் உள்ளனர்.

    குடும்பத்தினருடன் மியா ஜார்ஜ்


    இதுபற்றி மியா ஜார்ஜ் கூறியதாவது: “எனது திருமண நிச்சயதார்த்தத்தை குடும்பத்தினர் முடித்துள்ளனர். கொரோனா பரவல் முடிந்ததும் திருமணத்தை நடத்த திட்டமிட்டோம். ஆனால் அது தீவிரமடைந்து வருகிறது. இதனால் என்ன செய்வது என்று புரியவில்லை. நண்பர்கள், உறவினர்களை அழைத்து திருமணத்தை விமரிசையாக நடத்தலாமா? எளிமையாக நடத்தலாமா? அல்லது கொரோனா பரவல் முடிந்த பிறகு திருமணத்தை நடத்தலாமா? என்ற குழப்பத்தில் இருக்கிறோம். என் வருங்கால கணவருடன் போனில் அடிக்கடி பேசி வருகிறேன்.” இவ்வாறு அவர் கூறினார்.
    திரைப்பயணத்தின் 45 ஆண்டுகள் நிறைவு பெறும் நாளில், நீங்கள் இல்லாமல் நான் இல்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்த் அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் தொடங்கி 45 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ளதை ரசிகர்கள் கொண்டாட துவங்கி உள்ளனர். வரும் ஆகஸ்ட் 15ம் தேதி அபூர்வ ராகங்கள் படம் ரிலீசாகி 45 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது.

    அதனை கொண்டாடும் விதமாக, மோகன் லால் முதல் ஸ்ரேயா வரை பல திரை பிரபலங்களை வைத்து காமன் டிபியை ரஜினி ரசிகர்கள் 
    வெளியிட்டு #45YearsOfRajinismCDP ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

    ரஜினிகாந்தின் 45 ஆண்டுகால திரை வாழ்க்கையை கொண்டாடும் விதமாக அவரது ரசிகர்கள் பலவிதமான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். 
    அதன் முதல் கட்டமாக 45 வருட கொண்டாட்ட காமன் டிபியை தற்போது தென்னிந்திய திரை பிரபலங்களை வைத்து வெளியிடுகின்றனர்.

    இன்று (ஆகஸ்ட் 9) ரஜினியின் 45 ஆண்டுகள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, 
    மோகன்லால், மம்மூட்டி, சிவகார்த்திகேயன் தொடங்கி முன்னணி நடிகர்கள் ஒன்றிணைந்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

    இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது டுவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ள பதிவில்,

    ’என்னுடைய திரையுலகப் பயணத்தின் நாற்பத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெறும் இந்நாளில், என்னை வாழ்த்திய நல் இதயங்களுக்கும், 
    என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும், என்னுடைய இதயம் கனிந்த நன்றி. 🙏🏻

    #நீங்கள்_இல்லாமல்_நான்_இல்லை 🤘🏻’ என தெரிவித்துள்ளார்.

    நடிகர் ரஜினியின் டுவிட்டையடுத்து #நீங்கள்_இல்லாமல்_நான்_இல்லை என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரண்ட் ஆகி வருகிறது.

    பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால், கீர்த்தி சுரேஷ், மஞ்சு வாரியர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படத்தின் முன்னோட்டம்.
    16-ம் நூற்றாண்டில் கேரளாவில் வாழ்ந்த கடற்படை தலைவர்கள் குஞ்சலி மரைக்காயர் என்று அழைக்கப்பட்டனர். இவர்களில் 4-வது குஞ்சலி மரைக்காயர் வீர தீரம் நிறைந்தவராக போற்றப்பட்டார். அவரது வாழ்க்கையை மையமாக வைத்து  ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ என்ற படம் தயாராகிறது. ரூ.100 கோடி செலவில் தயாராகியுள்ள இப்படத்தை பிரியதர்ஷன் இயக்கியுள்ளார்.

    மோகன்லால்

    இதில் குஞ்சலி மரைக்காயர் வேடத்தில் மோகன்லால் நடித்துள்ளார். இதுவரை அவர் ஏற்றிராத கதாபாத்திரமாக இது இருக்கும் என்கின்றனர். அவருடன் கீர்த்தி சுரேஷ், மஞ்சு வாரியர், அர்ஜுன், சுனில் ஷெட்டி, அசோக் செல்வன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் தயாராகி உள்ளது.
    ×